தவெக ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? முதலமைச்சர் விஜய் பாரவுந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணத்திற்கு மன்னிப்பு கேட்கப்போகிறாரா? நீதிப்பெற்றுத்தரப்போகிறாரா?
@CMOTamilnadu@TVKVijayHQ
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காகச் சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரவுந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் அவர்கள் காவல் நிலையத்திற்குள்ளேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
விசாரணைக்காக காவல்நிலையம் சென்ற எளிய மனிதர் உயிரோடு வீடு திரும்ப முடியாத கொடுமை நிகழ்ந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
காவல் நிலையம் என்பது மக்களின் குறைகளைத் தீர்க்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் உயிரைப் பறிக்கும் இடமாக மாறிவிடக்கூடாது! மக்களின் உயிரைப் பாதுகாக்க முடியாத காவல்துறையால் சட்டம்-ஒழுங்கை எப்படிப் பாதுகாக்க முடியும்?
தான் ஓட்டிச் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்தது தொடர்பான விசாரணைக்காகக் காவல் நிலையம் சென்ற பாலகிருஷ்ணன் அவர்கள், காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை கூறுவது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது. விசாரணைக்குச் சென்றவரை இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தங்க வைத்தது ஏன்? காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த ஒருவர் காவல் நிலையத்திற்குள்ளேயே உயிரிழக்கும் அளவிற்கு என்ன நடந்தது? அவரது உயிரைப் பாதுகாக்கத் தவறியது யார்? இக்கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டாமா?
கடந்த திமுக ஆட்சியில் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் கொல்லப்பட்டபோது, அவரது தாயாரிடம் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மன்னிப்புக் கேட்டதை விமர்சித்து, அஜித்குமார் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதுமா? என்று கேள்வி எழுப்பி 'Sorry வேண்டாம்; நீதி வேண்டும்' என்ற இன்றைய முதலமைச்சர் விஜய் அவர்கள், இன்று தம்முடைய ஆட்சியில் காவல் நிலையத்திற்குள்ளேயே ஓர் உயிர் பறிபோயிருப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாலகிருஷ்ணன் மரணத்திற்கு
என்ன நீதியை பெற்றுத்தரப்போகிறார்?
எதிர்க்கட்சியாக இருந்தபோது தான் கேட்ட கேள்விகளுக்கு, ஆளுங்கட்சியாக வந்த பிறகு பதில் சொல்ல வேண்டிய கடமை தனக்கு இருக்கிறது என்பதை முதலமைச்சர் விஜய் அவர்கள் மறந்துவிடக்கூடாது! அன்று கேட்ட நீதி, இன்று ஆட்சிக்கு வந்ததும் மறந்துபோகலாமா? ஆட்சி மாறினாலும் காவல் நிலைய மரணங்கள் மட்டும் மாறாமல் தொடர்வதுதான் நீங்கள் சொன்ன ஆட்சி மாற்றமா?
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு குற்றங்களில் சிக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அறிவுரையோடு அனுப்பிவைக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள், இந்தக் காவல் நிலைய மரணத்திற்கு காரணமான காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ததோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. பாலகிருஷ்ணன் காவல் நிலைய மரண வழக்கு விசாரணை எவ்வித அரசியல் தலையீடுமின்றி நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். காவல் நிலையக் கண்காணிப்பு பதிவுகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதோடு, நீதித்துறை விசாரணையின் மூலம் பாலகிருஷ்ணன் மரணத்தில் உள்ள அனைத்து ஐயங்களுக்கும் விடை காணப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்து, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
மேலும், குடும்பத்தின் வாழ்வாதாரமாக விளங்கிய பாலகிருஷ்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு உரிய துயர்துடைப்பு நிதி வழங்குவதோடு, குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
மக்கள் பணத்தை தொட மாட்டோன்.. அப்ப இது என்ன?
- மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் அண்ணன் செந்தமிழன் சீமான்
திரள் நிதி அளிக்க: https://t.co/FxznFqvMgT
@thennagamvishnu Super aaa tvk க்கு செம்பு அடிக்கிறாய் தம்பி . கொடுத்த காசுக்கு மேல கூவுறியே டா... வைத்து பிழைப்புக்கு இப்படியெல்லாமா உழைக்க வேண்டி இருக்கு?..
@apjagadesan ஆக தலைவராக ஆசைப்பட்டு அண்ணன் உறவைத்துண்டாடிவிட்டு புது கதை விடுகிறார் களஞ்சியம் பாரிசாலன் கூட்டணி கணக்கு சரிதான். களமாடி வெற்றி பெற்று வளர வாழ்த்துக்கள்... இந்த ஜெய்சா பாண்டியன் போல வயித்துல விசம்கக்கும் பாம்புகள் ஆகாகமல் இருந்தால் சரி
நாம்தமிழ்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் வீர விளையாட்டு மீட்புக் கழகம் தலைவருமான ஜல்லிக்கட்டு ராஜேஷ் அவர்களின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு குறித்த சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா அவர்களின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது .
நன்றி மாண்புமிகு சபாநாயகரே !@JCDPrabhakar
ஒரே நிமிடத்தில் தமிழ் எழுத்துகள் அனைத்தையும் கத்துக்க முடியும். குழந்தைகளுக்கு உபயோகமாயிருக்கும்.
என் மகன் பத்தாவது படிக்கிறான். இந்த விடுமுறையிலாவது தமிழ் சொல்லிக் கொடுக்கனும். 🙂
தங்கள் வாழ்வாதாரம் காக்க போராடும் தூய்மைபணியாளர்களை இழிவுபடுத்த ஆரம்பித்திருக்கிறான் சவுக்கு !
தூய்மைப்பணி தனியார் வசமிருந்தால் வேலை ஒழுங்காக நடக்குமாம் . அரசு ஊழியர்களும் ஒழுங்காக வேலை செய்யவில்லை அவர்களையும் தனியார் வசம் கொடுத்துவிடலாமா? மருத்துவமனையில் சரியாக மருத்துவர்கள் வருவதில்லை அதையும் மொத்தமாக தனியாரிடம் கொடுத்துவிடலாமா ?
தங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை தூய்மைப்பணியாளர் கேட்டால் அவர்கள் Tnpc தேர்வு எழுதி வர வேண்டும் என்கிறார் இந்த குழந்தை தொழிலாளி !
சாக்கடையை உன் வீட்டில் ஊத்தியிருக்க கூடாது உன் வாயில் ஊற்றியிருக்க வேண்டும் .