கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கோவை மாவட்டம், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களின் பட்டியல்.. வெல்வோம் ஒன்றாக..
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#கோவை_தெற்கு#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#DravidianModel திட்டங்களை மண்ணில் புதைக்கும் துணிச்சல் யாருக்கு உண்டு?
உரிமைத்தொகை, விடியல் பயணம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட #DravidianModel திட்டங்கள் உள்ளவரை இந்த ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்!
களத்தில் நமது சாதனைகளைப் பெருமையோடும் - வாக்குறுதிகளை நம்பிக்கையோடும் மக்களே சொல்கிறார்கள். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தரமின்றி அவதூறுகளை அள்ளித்தெளிக்கிறார்கள்.
Wait and See… #JudgmentDay-வில் அரசியல் அழுக்குகள் துடைத்தெறியப்படுவார்கள்.
#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #KanchipuramWithDMK #ChengalpattuWithDMK
மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான NDA அரசு நாடாளுமன்றத்தின் அடிப்படை அமைப்பையே திட்டமிட்டுச் சீர்குலைக்கிறது. விவாதங்களுக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் பதில் கூறுவதற்குமான தளமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றமானது, உறுப்பினர்கள் தங்கள் தொகுதி, மாநில மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்குக் கூட போதிய நேரமளிக்காத வெற்றுச் சம்பிராதய அவையாகச் சுருக்கப்பட்டு வருகிறது.
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான முன்மொழிவு, “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்” என்ற அவர்களின் சொந்த முழக்கத்துக்கே எதிரானதாக அமைந்துள்ளது. இந்த முடிவினால் செலவுதான் கூடும், மக்களின் வரிப்பணம் வீணாகும், நாடாளுமன்றச் செயல்பாடுகளின் தரம் குறையும்.
மேலும், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியமாக வரையறுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1-க்கும் இது எதிரானது. மாநிலங்களின் குரலைப் புறக்கணித்துவிட்டு, முறையான கலந்தாலோசனையும் செய்யாமல் தவிர்த்துவிட்டுச் செயல்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானது. இது இந்தியாவின் பன்முக, கூட்டாட்சித் தன்மையைச் சிறுமைப்படுத்தும் ஒற்றைத்துவ எல்லைமீறலாகும்.
இதற்கெல்லாம் மேலாக, இந்தத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையானது பா.ஜ.க. ஆதிக்கம் செலுத்தும் வட மாநிலங்களுக்கு ஆதரவாக வலுவூட்டி, தென்மாநிலங்களின் குரலை நெரிக்கும். மூத்த தலைவர் திரு. சித்தராமையா அவர்கள் சீற்றத்தோடு கூறியதுபோல, இது நடுநிலையான நடவடிக்கை அல்ல, இது அரசியல் நோக்கம் கொண்ட திட்டமிட்ட கட்டமைப்பு மாற்றம். வட மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை இருமடங்காகும் அதேவேளையில் தென்மாநிலங்களின் அளவு 24 விழுக்காட்டிலேயே தேங்கி நிற்கிறது. இது மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களைத் தண்டிப்பதாகும்.
இந்த நடவடிக்கையால் கூட்டாட்சி சிதைக்கப்பட்டு, அதிகாரம் ஒருசில பகுதிகளில் மட்டுமே குவிக்கப்படும் என்று திரு. சித்தராமையா, திரு. பினராயி விஜயன் மற்றும் திரு. ரேவந்த் ரெட்டி ஆகிய தென் மாநில முதலமைச்சர்கள் மிகச்சரியாக எச்சரித்துள்ளனர்.
இது அவசரகதியில் தற்போது செய்யப்படுவதும் நம் அச்சத்தை அதிகமாக்குகிறது. பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தும் இத்தகைய முக்கிய நடவடிக்கையை மாநிலத் தேர்தல்களுக்கிடையே திணிக்க வேண்டிய அவசியம் என்ன? தேர்தல் சார்ந்த கதையாடல்களை வடிவமைக்கவும், பெண் வாக்காளர்களிடம் செல்வாக்கு பெறுவதற்காகவும் 2024 நாடாளுமன்ற மக்களைவைப் பொதுத்தேர்தலின்போது செய்த முந்தைய முயற்சிகளைப் போலவே இதுவும் அமைந்துள்ளது.
பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நாங்கள் முழுமனதோடு ஆதரிக்கிறோம். அதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. ஆனால், பொறுப்போடு செயல்பட்ட மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்காமலேயே, அதை நடமுறைப்படுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் கோருகிறோம். அவர்களின் நோக்கம் உண்மையானதாக இருந்தால், இப்போதுள்ள தொகுதி அளவிலேயே மகளிருக்கான 33 இட ஒதுக்கீட்டை வழங்குவதை எதுவும் தடுக்கவில்லையே?
இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கு ஆதரவான சமூகநீதிக் காவலர் என்று ஒன்றிய அரசு தங்களை அழைத்துக்கொள்வதும் வெற்று முழக்கம்தான். ‘வளர்ந்த இந்தியா’ என ஒருபுறம் சொல்லிக்கொண்டே பல ஆண்டுகளாகக் கிரீமி லேயர் உச்சவரம்பை 8 லட்சம் ரூபாயில் இருந்து மாற்றாமல் வைத்திருந்து ஓ.பி.சி. மக்களுக்கு அவர்களுக்குரிய பங்கீடு கிடைக்காமல் வஞ்சித்தார்கள். இதர பிற்படுத்தப்பட்ட மகளிரின் பிரதிநிதித்துவத்துக்கான எந்தவித உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலம் முதல்முறையாக நாம் அறியவுள்ள சாதிவாரி எண்ணிக்கை முடிவுகளைக் கூட பரிசீலிக்காமல் அவசரமாக அவர்கள் செயல்படுவது இதில் அவர்களுக்கு உண்மையான அக்கறை இல்லை என்பதை அம்பலப்படுத்துகிறது. இது அதிகாரமளித்தல் அல்ல, புறக்கணிப்புக்கு மாறுவேடம் போட்டுச் சீர்திருத்தம் என்கிறார்கள்.
மேலும், தொகுதி மறுவரையறைக்கான அடிப்படையாகக் கொள்ளப்போவது எது என்பதிலும் கொஞ்சம் கூட வெளிப்படைத்தன்மை இல்லை. 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப் போகிறார்களா அல்லது மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முந்தைய காலமான 1971-ஆம் ஆண்டு எண்ணிக்கையின் அடிப்படையில் செய்யப் போகிறார்களா? மாற்றி மாற்றிப் பேசுவதும், வெற்று உத்தரவாதங்களும் நம் ஐயத்தை மேலும் அதிகரிக்கவே செய்கின்றன.
மொத்தத்தில் இந்த நடவடிக்கை மாநிலங்களின் மீது பெரும் நிதிச்சுமையை ஏற்றும், சட்டமன்றங்களை விரிவாக்கம் செய்ய அல்லது புதிதாகக் கட்டும் நிலைக்குத் தள்ளும். இவை அனைத்தும் முறையான கலந்தாலோசனை எதுவுமின்றி நடக்க இருக்கிறது. இது கூட்டுறவுக் கூட்டாட்சியியல் மீதான நேரடித் தாக்குதல் ஆகும்.
இவர்கள் செய்ய நினைப்பது சீர்திருத்தமே அல்ல, இது அதிகாரத்தை ஓரிடத்தில் குவித்து, நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்தி, தென்னகத்தை விளிம்புநிலைக்குத் தள்ளி, சமூகநீதியைச் சிறுமைப்படுத்துவதற்கான தன்னிச்சையான அரசியல் சதித் திட்டம்!
ஏன் இந்த அவசியமற்ற அவசரம்? ஏன் மாற்றி மாற்றிப் பேசுகிறீர்கள்? இதனால் உண்மையாகப் பயனடையப் போவது யார்? எனும் கேள்விகளுக்கு நாட்டு மக்கள் முறையான விளக்கத்தைக் கோருகிறார்கள்.
சென்னை என்றாலே வளர்ச்சி எனும் அளவுக்கு, திரும்பிய பக்கமெல்லாம் திராவிட மாடல் அரசின் சாதனைகள், பாலங்களாக, சாலைகளாக பூங்காக்களாக, தொழில் நிறுவனங்களாக, கல்வி நிறுவனங்களாக வானுயர்ந்து நிற்கின்றன. திராவிட மாடல் 2.o-விலும் இன்னும் பல வளர்ச்சித்திட்டங்களுடன், மென்மேலும் வளமான சென்னையை உருவாக்க, உதயசூரியனுக்கு வாக்களிப்போம்! தலைநகரில் மீண்டும் உதிக்கட்டும் உதயசூரியன்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK
சென்னையின் பாரம்பரிய அடையாளங்களுள் ஒன்றான சைதாப்பேட்டை தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் -மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @Subramanian_ma அவர்களுக்கு வாக்கு சேகரித்தோம்.
கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டலில் மக்கள் நல்வாழ்வுத்துறையில் மகத்தான சாதனைகள் செய்து தமிழ்நாட்டின் மருத்துவக்கட்டமைப்பை உறுதியுடன் நிலைக்கச் செய்ததோடு, தன் சைதை தொகுதியின் வளர்ச்சிக்கும் அயராது உழைத்து வரும் அண்ணன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென மக்களிடம் அன்புடன் கேட்டுக் கொண்டோம்.
தமிழ்நாட்டை கூறுபோட துடிக்கும் பாசிசவாதிகளையும், அவர்களுக்கு பல்லக்கு தூக்கும் அடிமை கூட்டத்தையும் தோற்கடித்து வெல்வோம் ஒன்றாக!
#DMK4TN #VoteForDMK
விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளரான அன்புச் சகோதரர் @PrabhakarRaja88 அவர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம்.
முரட்டு அடிமைகளுக்குப் பின்னால் மறைந்து கொண்டு தமிழ்நாட்டை அபகரிக்க முயலும் பாசிச சக்திகளின் சதிகளையும்,அவற்றை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்கூறினோம்.
மதவாதிகளிடமிருந்து தமிழ்நாட்டைக் காக்க மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin தலைமையிலான ஆட்சி தொடர கழக கூட்டணிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
தலைவர் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்.
#DMK4TN #VoteForTN
சென்னை, தியாகராய நகர் தொகுதியில் போட்டியிடும் - இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் அன்புச் சகோதரர் @raja_anbazhagan அவர்களுக்கு இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம்.
ஒன்றிய அரசு நிதி நெருக்கடி கொடுத்தபோதும் இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் திராவிட மாடல் முதல்வரால் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தோம்.
இதுவரை பாதம் தாங்கி பழனிசாமியாக இருந்து தற்போது ‘பால்டாயில்’ பழனிசாமியாக Promote ஆகி இருக்கும் டெல்லியின் முரட்டு அடிமைகளை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம்.
ஆதிக்கத்தை வீழ்த்தி,அடிமைகளை விரட்டுவோம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர், ஆற்காட்டார் ஆகியோர் நின்று வென்ற பெருமைமிகு தொகுதியான அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதியில் இன்று மாலை கழகத்தின் வெற்றி வேட்பாளர் @nchitrarasu அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் பிரச்சாரம் மேற்கொண்டோம்.
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட தமிழ்நாட்டை தன் விடியல் ஆட்சி மூலம் ஏற்றம் பெறச் செய்த மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் சாதனை திட்டங்களை எடுத்துக்கூறினோம்.
திரளாக கூடி அன்பு நிறை வரவேற்பை வழங்கிய அண்ணாநகர் மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொண்டோம்.
தலைவர் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
சுயமரியாதை மண்ணான தமிழ்நாட்டை டெல்லியில் இருந்து Remote Control-ல் இயக்க துடிக்கும் பாசிஸ்டுகளையும் அதற்குத் துணை போகும் முரட்டு அடிமைகளையும் அம்பலப்படுத்தி, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் சகோதரர் மருத்துவர் @Dr_Ezhilan அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டோம்.
5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் செய்த சாதனைகளையும் மக்களிடம் எடுத்துக் கூறினோம்.
ஆயிரம் விளக்கு தொகுதி தொடர்ந்து ஒளிமயமாகத் திகழ்ந்திட கழகத்தின் வெற்றி சின்னமான உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொண்டோம்.
மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
ஜெயிக்கப்போவது உதயசூரியன் தான். நம் தலைவர் தான் என்ற உறுதியோடு களப்பணியாற்றுவோம்!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான, மதநல்லிணக்கத்திற்கு எதிரான ஆதிக்க சக்திகளை நமது வாக்குகளின் மூலம் வீழ்த்திக்காட்டுவோம்!
#Vote4DMK#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்
முதியோர் உதவித்தொகை ரூ. 1200- லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என்று வாக்குறுதி வழங்கியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கோவை மாவட்டம், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, சிவானந்தா காலனி பகுதி, காந்திபுரம் ஆறாவது தெரு பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது..
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#கோவை_தெற்கு
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 1500- லிருந்து ரூ. 2500 ஆக உயர்த்தப்படும் என்று கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கோவை மாவட்டம், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, சிவானந்தா காலனி பகுதி, டாடாபாத் பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது..
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#கோவை_தெற்கு
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்