தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பி��மும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொ��ியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
பேரவையில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் நடக்கும் எந்த நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து 2'வது இடத்திற்கு தள்ளிப்போக நாம்விடக்கூடாது!
- மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
நாம் இங்கே ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என எதிர் எதிர் வரிசையில் அமர்ந்திருந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியென வரும்போது நாம் அனைவரும் ஒரே வரிசையில் நின்று உழைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்!
- மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
தி.மு.கழகம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிரிக் கட்சியாக இல்லாமல், ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நிச்சயம்செயல்படும். எங்கள் கழகத் தலைவர் சொல்வதைப் போல நாங்கள் என்றைக்கும் ஒரு ஆக்க சக்தி தான்.
- மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
சட்டப்பேரவையில் மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் திரு @Udhaystalin அவர்கள் ஆற்றிய உரை
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை வாழ்த்தி, சட்டப்பேரவையில் மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை :
"மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! துணைத் தலைவர் அவர்களே! முதலமைச்சர் அவர்களே!
17-வது சட்டமன்றப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக எனது முதல் உரை இது.
பகுத்தறிவுப் பகலவன் தந்த��� பெரியார், தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா, நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், இந்தியாவுக்கே வழிகாட்டிய திராவிட மாடல் ஆட்சியைத் தந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என எங்களுடைய தலைவர்களை எல்லாம் வணங்கி என்னுடைய இந்த உரையைத் தொடங்குகிறேன்.
முதலில் என்னை இரண்டாவது முறைய��கத் தேர்ந்தெடுத்து இந்தச் சட்டமன்றத்திற்கு அனுப்பிய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு என்னுடைய நன்றியை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல எங்கள் தலைவர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகளைத் தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் எங்களுடைய கூட்ட��ி சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றிக்காக உழைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளுக்கும், தோழமை இயக்கத் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த அவையில் என் கூட நின்று எனக்கு வழிகாட்டக்கூடிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அண்ணன் திரு. கே.��ன்.நேரு அவர்களுக்கும், எங்களுடைய கொறடா அண்ணன் வேலு அவர்களுக்கும், துணை கொறடா அண்ணன் திரு. கோவி.செழியன், செயலாளர் அண்ணன் திரு. தங்கம் தென்னரசு, பொருளாளர் அண்ணன் திரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும், கழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்றத்தில் நேற்று நாம் அத்தனை பேரும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டோம். அதன் பின்பு இன்று முத��் நடவடிக்கையாகப் பேரவை��் தலைவரை இன்றைக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சட்டப் பேரவையில் மாண்புமிகு பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய உங்களுக்கும், துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கக்கூடிய திரு. ரவிசங்கர் அவர்களுக்கும் எங்கள் தலைவர் சார்பாகவும், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! இங்கே ஏற்கனவே எல்லோரும் குறிப்பிட்டதைப் போல நீங்கள் எப்பொழுதுமே சிரித்த முகத்திற்குச் சொந்தக்காரர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுமட்டுமல்ல எல்லோரிடமும் மிகுந்த அன்போடு பழகக்கூடியவர் என்று பலர் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இதே சட்டப் பேரவையில் 1980-ஆம் ஆண்டுத் தேர்தலிலும் 2011 சட்டமன்றத் தேர்தலிலும் நீங்கள் வெற்றி பெற்ற��� ஒரு சிறந்த சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி இருக்கிறீர்கள். எனவே பேரவையின் மரபுகளும் விதிகளும் உங்களுக்குப் புதியது கிடையாது.
நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று முறையும் ஆளுங்கட்சி உறுப்பினராகச் சட்டமன்றத்திற்குள் வந்திருக்கிறீர்கள்.
இந்த முறை எதிர்க்கட்சிகளையும் அரவணைத்துச் செயல்படுகின்ற ஒரு பேரவைத் தலைவராக நீங்கள் பொறுப்பேற்று இருக்கிறீர்கள். அந்தப் பொறுப்பி��் மிகச் சிறப்பாக நடுநிலைமையோடு செயல்படுவீர்கள் என்பதுதான் எங்கள் அத்தனை பேருடைய எதிர்பார்ப்பு.
அதேபோல ஒரு எளிய பின்��ணியில் இருந்து வந்து முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்று இருக்கக்கூடிய, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய மாண்புமிகு ரவிசங்கர் அவர்கள் பேரவையின் துணைத் தலைவராக உங்களுக்கு உறுதுணையாக இருந்து இந்த அவையை வழிநடத்துவார் என்று நாங்கள் அத்தனை பேரும் நம்புகிறோம்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேற்று எங்களுடைய தலைவருடைய வீடுகளுக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கும் சென்று வாழ்த்துகள் பெற்றுக்கொண்டு சென்றார். அந்த அரசியல் நாகரிகம் இந்தப் பேரவையிலும் தொடர வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம், எதிர்பார்ப்பு.
ஏற்கனவே நான் சொல்லி இருந்தாலும் மறுபடியும் சொல்ல விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சட்டப் பேரவையில் எதிரி கட்சியாக இல்லாமல் ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நிச்சயம் செயல்படும். எங்கள் தலைவர் அவர்கள் சொன்ன மாதிரி திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்குமே ஒரு ஆக்க சக்திதான்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! இந்தப் பேரவைக்கென்று ஒரு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் பண்பாட்டு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தமிழ்நாடு சிறப்பாக முன்னேறி இருக்கிறது என்றால் இந்தப் பேரவையில் நடந்த விவாதங்கள��, எடுக்கப்பட்ட முடிவுகள், இயற்றப்பட்ட சட்டங்கள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இவையெல்லாம்தான் காரணம்.
பிற மாநிலங்களுக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக, வழிகாட்டக்கூடிய வகையில் செயல்பட்டு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த சட்டமன்றப் பேரவை இந்தத் தமிழ்நாட்டு சட்டமன்றப் பேரவை. அப்படிப்பட்ட இந்தப் பேரவையில் ஆரோக்கியமான ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு இடம் கொடுத்து ஜனநாயக மாண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேரவைத் தலைவர் அவர்கள் என்றைக்கும் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம்.
நாம் இங்கே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று எதிரெதிர் வரிசையில் உட்கார்ந��து இருந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்று வரும் பொழுது நாம் அனைவரும் ஒரே வரிசையில் முன் வரிசையில் நின்று உழைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.அதைத்தான் தமிழ்நாட்டு மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், விரும்புகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகமும் அதைத்தான் விரும்புகிறது.
எங்களுடைய தலைவர் அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அடிக்கடி சொல்கின்ற ஒரு வார்த்தை, "இது எனது அரசு அல்ல நமது அரசு" என்று எங்களுடைய தலைவர் அவர்கள் அடிக்கடி சொல்வார். அதை நிரூபித்தும் காட்டியிருக்கிறார். சென்ற திராவிட மாடல் அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டும் இல்லாமல் வாக்களிக்காத மக்களுக்குமான அரசாகத்தான் செயல்பட்டு வந்தது.
ஆகவே இந்தப் புதிய அரசும் அனைவருக்குமான அரசாக, உங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்குமான அரசாகச் செயல்பட வேண்டும் என்று நான் விரு��்புகிறேன்.
இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற நானும் ஒரே கல்லூரியில் படித்த பழைய மாணவர்கள். ஒரே கல்லூரியில் நாம் படித்திருந்தாலும் அரசாங்க��்தை நடத்துவதில் தி.மு.க தான் சீனியர் பேட்ச், அது உங்களுக்குத் தெரியும். 1967-லேயே ஆட்சிக்கு வந்தது தி.மு.க. நாங்கள் தான் சீனியர்ஸ். அந்த அடிப்படையில் எங்களின் அறிவையும் அனுபவத்தையும் நாங்கள் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். அதை ஏற்றுக்கெள்ள நீங்களும் தயாராக இருங்கள். ஏனென்றால் நமக்கு எப்போதுமே தமிழ்நாட்டு மாநிலத்தின் நலன்தான் மிக மிக முக்கியம்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அ���ர்களே! நீங்கள் போட்டியின்றித் தேர்வாகி இருக்கிறீர்கள். மாண்புமிகு முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரான நானும் அவை முன்னவரும் உங்களை இந்த இருக்கையில், அமர வைத்திருக்கிறோம். இன்றைக்கு உங்கள் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறோம். இனி எங்கள் இரண்டு தரப்பையும் நீங்கள் தான் கையைப் பிடித்து அரவணைத்து கோபம் இல்லாமல், கோபப்படாமல் - நீங்கள் கோபப்பட மாட்டீர்கள் என்று தெரியும் - உங்களைக் கோபப்படுத்துகின்ற மாதிரி எந்தச் செயலையும் நாங்கள் செய்ய மாட்டோம். இரண்டு தரப்பையும் நீங்கள் வழிநடத்த வேண்டும்.
சட்டமன்ற ஜனநாயகத்தில் ஆளுங்கட்சி காதுகளாகவும் எதிர்க்கட்சி குரலாகவும் இருக்க வேண்டும். அதில் தான் இந்த அவையின் பெருமை நிச்சயம் அடங்கி இருக்கிறது. பொதுவாக இதற்கு முந்தைய சட்டமன்றப் பேரவையை எடுத்துக் கொண்டால் ஆளுங்கட்சி வரிசையில் ��திக உறுப்பினர்களும் எதிர்க்கட்சி வரிசையில் அதைவ��டக் குறைவான உறுப்பினர்களும் இருப்பார்கள். ஆனால் இந்த முறை கிட்டத்தட்ட ஆளுங்கட்சிக்கு இணையான எதிர்க்கட்சி வரிசை வலிமையாக இன்றைக்கு அமைந்திருக்கிறது. அதுதான் இந்தப் பேரவையின் இன்னொரு கூடுதல் சிறப்பு.
இதன் மூலமாக தமிழ்நாட்டு மக்கள் ஒரு முக்கியமான செய்தியை நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். அது என்னவென்றால், எதிர்க்கட்சி வரிசை மிக மிக வலிமையாக இருந்து இந்த அரசை, புதிய அரசை வழிநடத்த வேண்டும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என்று மக்கள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஆகவே மக்களுடைய எண்ணத்தைப் பிரதிபலிக்கின்ற மாதிரி எங்களுடைய பணிகள் நிச்சயம் இருக்கும்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! இந்த அரசு பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் நடந்த ஒரு நிகழ்வை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏற்கனவே சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அதை எதிர்க்கட்சிகள் எல்லோரும் விமர்சித்திருக்கிறோம். அதற்கு ஆளுங்கட்சியும் ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள், நானும் பார்த்தேன். எங்களது கருத்து என்னவென்றால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய மேற்குவங்க மாநிலத்தில் பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்படவில்லை. ஆனால் இங்கே தமிழ்நாட்டில் அது பாடப்பட்டிருக்கிறது.
மேற்குவங்கத்தில் இன்றைக்கு யார் ஆளுநராகச் சென்று உட்கார்ந்து இருக்கிறார் என்று உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் இங்கே ஆளுநராக இருந்தபோது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என்று பேரவையின் மரபையே மாற்றச் சொன்னவர்தான் இன்றைக்கு மேற்குவங்கத்தில் ஆளுநராக இருக்கிறார். அதை நாங்கள் உறுதியாக, எங்களது தலைவர், அப்போதைய முதலமைச்சர் உறுதியாக மறுத்தார். அதனால் 2023-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று வருடம் அவர் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டுச் சென்ற காட்சிகளை எல்லாம் நீங்களும் பார்த்திருப்பீர்கள்.
இதன் மூலமாக நாங்கள் சொல்ல வருவது, அடுத்து விரைவிலேயே இந்தப் பேரவையில��� ஆளுநர் உரை நிகழ்த்தவிருக்கிறார். ஆகவே ஏற்கனவே உங்கள் அரசின் பதவியேற்பு விழாவில் நடந்த அந்தச் சம்பவம், அந்தத் தவறு மீண்டும் இந்தப் பேரவையில் நடப்பதற்கு நீங்கள் அனுமதிக்கக்கூடாது, நாங்களும் அனுமதிக்க மாட்டோம்.
பேரவையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தா��் வாழ்த்து என்றைக்கும் இரண்டாவது இடத்திற்கு நாம் தள்ளிப்போக விடக்கூடாது. இந்த அரசு ��தற்கு அனுமதிக்கக்கூடாது என்று நான் இங்கே கேட்டுக்கொள்கின்றேன்.
மிகவும் விழிப்போடு இருந்து நம்முடைய உரிமையை, மரபைப் பாதுகாக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் வலியுறுத்தி நான் கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வண்டிக்கு பிரேக் எப்படியோ, ஒரு காளைக்கு மூக்கணாங்கயிறு எப்படியோ, அப்படித்தான் ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சி என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் நமக்கு���் சொல்லி இருக்கிறார்.
ஆகவே பேரறிஞர் அண்ணா சொன்ன வழியில் ஆளுங்கட்சியின் செயல்பாட்டை உற்று நோக்கி உங்களின் நிறைகளை, குறைகளைச் சுட்டிக்காட்டுகின்ற ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நாங்கள் நிச்சயமாகச் செயல்படுவோம்.
இந்த அவைக்குப் புதியவர்கள், முதல் முறை சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைய பேர் வந்திருக்கிறீர்கள். அதில் மிகுந்த மகிழ்ச்சி. அதேபோல நீண்ட வருடங்களுக்குப் பிறகு நி��ைய பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கே இடம் பெற்று இருக்கிறீர்கள். அதில் எங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி. அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகள்.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், வளர்ச்சிக்காகவும் நாம் எல்லாரும் சேர்ந்து ஒன்றாகப் பயணிப்போம். எது எப்படியானாலும் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைப்படி எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதை உறுதி செய்கின்ற வகையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து நாங்கள் நிச்சயம் செயல்படுவோம்.
நடந்து முடிந்த தேர்தலில் ஆட்சி அமை��்பதற்கான பெரும்பான்மையை ஆளுங்கட்சிக்கு மக்கள் வழங்காமல் போனாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தேர்தலைச் சந்தித்து வென்ற தோழமை இயக்க சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கக்கூடிய புதிய அரசிற்கும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கும், பேரவைத் துணைத் தலைவர் அவர்களுக்கும் என்னுடைய நன்றி. உங்களுடைய பணிகள் சிறக்கட்டும். மீண்டும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்.
வெல்க தமிழ், வாழ்க தமிழ்நாடு! மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்.
நன்றி, வணக்கம்.
***
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு வந்த கோரும் எங்கள் திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#BANNEET
தவெக ஆட்சி அமைக்க வேண்டும் என்று பெருபான்மையான மக்கள் வாக்களிக்கவில்லை. 65% மக்களால்
நிராகரிக்கப்பட்ட தவெக ஆட்சி மீது எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே கொஞ்சம் கொஞ்சமாக ���ம்பிக்கை குறைந்து வருகிறது.
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly #TVKFails
Change, Changeனு சொன்னீங்க.. ஆனால், அதுக்கு பின்னால் மிகப்பெரிய Exchange இருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
மதச்சார்பற்ற ஆட்சி தருவோம் என்று சொல்லிவிட்டு உங்கள் கொள்கை எதிரி என சொன்ன பாஜக கூட்டணியில் வென்ற ஒருவரை த���ெக ஆட்சிக்கு ஆதரவு தர வைத்துள்ளீர்கள்.
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TVKFails
புதிதாக அமைந்திருக்கின்ற ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் முன் சட்டப்பேரவையில் மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை
புதிதாக அமைந்திருக்கின்ற ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் முன் சட்டப்பேரவையில் மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்���ிய உரை
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, புதிதாக அமைந்திருக்கின்ற இந்த ஆட்சியின் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கப் போகிறது.
அதற்கு முன்பு வாக்கு எண்ணிக்கை தொடங்கி கடந்த 10 நாட்களாக ஒவ்வொரு நாளும் என்னென்ன நடந்திருக்கிறது என்பதை எதிர்க்கட்சியாக சில விமர்சனங்களோடு இங்கு வைக்க விரும்புகிறேன்.
முதலில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பெரும்பான்மையா�� மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் சுமார் 4 கோடியே 93 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்கள். தற்போதைய ஆளுங்கட்சிக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை எவ்வள��ு தெரியுமா? 1 கோடியே 72 லட்சத்து 26 ஆயிரம் தான். மீதம் இருக்கின்ற சுமார் 3 கோடியே 21 லட்சம் பேரும், உங்கள் கட்சிக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது கிட்டத்தட்ட 65 சதவிகிதம் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு ஆட்சியின் மேல் எங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து வருகிறது.
அடுத்து மிக முக்கியமான ஒன்று மெஜாரிட்டிக்கான நம்பர்ஸ். நம் சட்டமன்றம் 234 உறுப்பினர்களைக் கொண்டது. மேஜிக்கல் நம்பர் என்று சொல்வார்கள். 118 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியோ கூட்டணியோ தான் ஆட்சிக்கு வர முடியும். இப்போது நம்பிக்கை கூறுகின்ற உங்கள் கட்சிக்கு அந்த நம்பர்ஸ் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை.
108 இடங்கள் தான் இருக்கிறது. அதுவும் அந்த கட்சியின் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள��� தன் வெற்றி குறித்த நம்பிக்கை இல்லாத காரணத்தினால் இரண்டு இடங்களில் போட்டியிட்டு, அதில் ஒரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்திருக்கிறார்.
இன்னும் அந்த தொகுதி மக்களை நேரில் சந்தித்தோ அல்லது ஒரு அறிக்கை மூலமாகவோ ஒரு நன்றியைக் கூட இன்னும் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமல்ல நேற்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் மாண்புமிகு உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளக் கூடாது என்று நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறார்கள். அதனால் இப்பொழுது ஆளுங்கட்சிக்கு வெறும் 106 இடங்கள்தான் இருக்கிறது.
ஆனாலும் தேர்தலில், தனக்கு எதிராக எங்கள் தலைவர் அமைத்த கூட்டணியில் போட்டியிட்ட தலைவர்களை எல்லாம் இன்று சேர்த்துக் கொண்டு, பெரு���்பான்மைக்கான கடிதத்தை, ஆளுநருக்கு கொடுத்து இன்றைக்கு இந்த ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கு இன்றைக்கு ஆதரவு தெரிவித்து இருக்கக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த மதிப்பிற்குரிய தலைவர்கள் எல்லாம், இந்த ஆட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம் என்பதற்கு சொன்ன காரணம், ���ுடியரசு தலைவர் ஆட்சி அமைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் இன்னொன்றையும் சொன்னார்கள். இப்பொழுதும் எங்கள் தலைவர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தொடர்வோம் என்று சொல்லி இருக்கிறார்கள். உங்களுக்கு ஆதரவு கொடுக்கும்போது, அவர்கள் சொன்ன இன்னொரு காரணமும் இருக்கு அத��யும் நாம் நினைவில் வைத்துக் கொ��்ள வேண்டும். மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் இப்பொழுது இங்கு என்ன நடந்திருக்கிறது?
உங்கள் கொள்கை எதிரி என்று சொன்ன பாஜக தலைமையிலான என் டி ஏ கூட்டணியில், போட்டியிட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரை அந்தக் கட்சி தலைவருக்கே தெரியாமல் இந்த ஆட்சிக்கு ஆதரவு தர வைத்திருந்தீர்கள். இப்போது நான் சொல்வது மிகவும் டீசண்டான வெர்ஷன்.
அந்தக் கட்சித் தலைவர் திரு டி.டி.வி தினகரன் சொல்லும்போது என்ன தெரியுமா சொன்னார்? ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று சொன்னார். நேற்று சொல்லி இருக்கிறார். 'மாற்றம் மாற்றம் என்று சொன்னீர்கள். இது மாற்றமில்லை. துர்நாற்றம்' என்று சொல்லி இருக்கிறார்.
அடுத்து அதே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய பெரிய கட்சியான அதிமுக கிட்டத்தட்ட இரண்டாகப் பிளவு பட்டிருக்கிறது. ப��ளவுபட்ட ஒரு அணி உங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அடுத்து நடந்த இன்சிடென்ட் தான் ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட். பிளவு பட்ட குரூப்பில் இருக்கக்கூடிய ஒரு தலைவரின் வீட்டிற்கு ஒரு புது சோபா செல்கிறது. சோபா பின்னாடியே புது முதலமைச்சரும் செல்கிறார். புதுமையாக ஆட்சி நடத்துவீர்கள் என்று பார்த்தால், 'புஷ்பா' படம் போல் ஆட்சி நடத்துகிறீர்கள். தேர்தல் நேரத்தில் ஊழல் சக்தி என்று சொன்���ீர்கள். ஆனால் இன்றைக்கு சோஷியல் மீடியாவில் ��க்கள் உங்களைப் பார்த்து கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
என்ன கேட்கிறார்கள் தெரியுமா. அந்த ஊழல் சக்தியோடு சேர்ந்து இருக்கின்ற ஆளுங்கட்சியை இப்போது என்ன சக்தி என்று கூறப்போகிறீர்கள்? க்ளீன் கவர்மெண்ட் என்று சொன்னீர்கள் இதுதான் உங்கள் கிளீன் கவர்மெண்ட்டின் லட்சணமா என்று மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
இப்படி நீங்கள் கூவத்தூரையும் மிஞ்சுகின்ற அளவிற்கு, அடிக்கி���்ற கூத்தைப் பார்க்கும்போது இந்த அரசு எத்தனை நாளைக்கு நீடிக்க போகிறது என்று மக்களுக்கு சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. முதல் கோணலே முற்றிலும் கோணல் என்பது மாதிரி உங்கள் நடவடிக்கைகள் எல்லாமே இன்றைக்கு எல்லை மீறி நடந்து கொண்டிருக்கிறது.
இப்படி எம் எல் ஏக்களை எல்லாம் கடன் பெற்று நடத்துகின்ற முதலமைச்சர் தான் அளித்துள்ள போலி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தவுட��், முந்தைய அரசு அதாவது எங்களுடைய அரசு வளர்ச்சிக்காக பெற்ற கடன் குறித்து தவறான கருத்துக்களைத் தந்து, மக்களை இன்றைக்கு திசை திருப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
பெரும்பான்மையும் இல்லாத, அரசியலில் அடிப்படை நேர்மையும் அல்லாத இந்த அரசு நல்லாட்சி தரும், தமிழ்நாட்டு மக்களின் உரி��ைக்காக போராடும் இன்று மக்களுக்கு துணியும் நம்பிக்கை இல்லை. முக்கியமான ஒரு விஷயத்தை இங்கு பதிய வைக்க நான் விரும்புகிறேன்.
உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களே, நடப்பதை எல்லாம் பார்த்துவிட்டு ஒரு பெரிய தவறை செய்து விட்டோமே என்று இன்று வருத்தப்பட ஆரம்பித்து விட்டார்கள். மக்களின் அந்த உணர்வை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் திராவிட முன்னேற்ற கழக உறுப்பின��்கள் நாங்கள் வெளிநடப்பு செய்யப் போகிறோம்.
நாங்கள் வெளிநடப்பு செய்தாலும், அதனால் பேரவையின் எண்ணிக்கை அளவு குறைந்து, நீங்கள் நிச்சயம் இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெறத்தான் போகிறீர்கள். அப்படி வெற்றி பெற்ற பிறகாவது மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுகின்ற வகையில் உங்களின் பணிகள் இருக்க வேண்டும்.
எங்களின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், கடந்த ஐந்து வருடமாக, ஒவ்��ொரு குடும்பத்துக்கும் பார்த்து பார்த்து திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்தார். அந்தத் திட்டங்களை எல்லாம் நீங்கள் தொடர வேண்டும். தயவுசெய்து அதில் அரசியல் செய்ய வேண்டாம்.
ஏனென்றால் இந்த மாதம் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக ஒரு கோடியே 31 லட்சம் மகளிர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஆயிரம் ரூபாய் வருமா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரி புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் கல்லூரிக்குச் செல்கின்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் வருகின்ற கல்வி ஊக்கத்தொகை, ஏழாம் தேதி கொடுத்திருக்க வேண்டும். இதுவரை வரவில்லை. அவர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது பள்ளி இல்லை என்றாலும் ஜூன் மாதம் பள்ளிகளைத் திறக்கப் போகிறார்கள். அப்போது காலை உணவு திட்டத்திற்காக பள்ளி மாணவர்கள் எல்லாம் காத்துக் கொண்டிர��க்கிறார்கள்.
இப்படி பல்வேறு திட்டங்கள் இருக்கிறது. நான் முதல்வன் திட்டம், தாயுமானவர், அன்பு கரங்கள் என்று பல்வேறு திட்டங்களின் பயனாளிகள் எல்லாம் ஆவலோடு இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால் நான் உங்களிடம் கேட்டுக் கொள்வது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதவியேற்ற போது தன் முதல் உரையில் அவகாசம் வேண்டும் என்று கேட்டீர்கள், நிச்சயம் அவகா���ம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் காத்துக் கொண்டிருக்கின்ற அனைவரையும் நீண்ட காலம் காக்க வைத்து விடாதீர்கள்.
அது மட்டுமல்ல தேர்தலுக்கு முன்பு பல கவர்ச்சியான வாக்குறுதிகளையும் நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். மக்கள் அதையும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.
மகளிருக்கு மாதம் 2500 ரூபாய், ஆண்டுக்கு 6 சிலிண்டர், தங்கச் செயின், மோதிரம், பட்டுப் புடவை, வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை என்று அந்தப் பட்டியலும் நீண்டு கொண்டிருக்கிறது.
அதில் ஒரு சில வாக்குறுதிகளையாவது முதல் கையெழுத்தில் நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். நீங்கள் வாக்குறுதிகளைச் சொல்லும் பொழுது நடைமுறைக்கு சாத்தியமானவற்றை மட்டும் தான் சொல்கிறேன் என்று எல்லா கூட்டத்திலும் திரும்பத் திரும்பச் சொல்லி இருக்கிறீர்கள். எனவே அதை விரைந்து செய்து காட்டுங்கள��.
இந்த நேரத்தில் எங்கள் திராவிட மாடல் ஆட்சியைப் பற்றி ஒன்றை ஒன்று மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது 2021 கோவிட் பெருந்தொற்று காலம் இருந்தது. அப்போது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு தெரியுமா? வெறும் 0.7 சதவிகிதம். அந்த நிலைமையிலும் எங்கள் தலைவர் முதலமைச்சர் அவர்கள் முதல் கையெழுத்திலேயே மகளிர்க்கு விடியல் பயணம் திட்டத்தைக் கொடுத்தார். முதல் நாளே எல்லா குடும்பங்களுக்கும் 4000 ரூபாய் கொரோனா நிவாரணத் தொகையை முதலமைச்சர் கொடுத்தார்.
ஆவின் பால் விலை குறைப்பு வரை, முதல் நாளே ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். ஒரே மாதத்தில் தேர்தல் அறிக்கையில் சொன்னது மாதிரி பெட்ரோல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பதற்கான உத்தரவையும் எங்கள் முதலமைச்சர் போட்டார். இப்படி கடுமையாக உழைத்ததால் தான் ஐந்தாண்டு முடிவில் இன்றைக்கு இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை எங்களுடைய தலைவர் மாற்றிக் காட்டியிருக்கிறார்.
நாங்கள் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றி விட்டுத்தான், ஆட்சியை விட்டுச் சென்றிருக்கிறோம். உங்கள் ஆட்சியைப் பொருத்தவரைக்கும், வெறும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல், ரியல் ஆட்சியாக நடத்துங்கள். அது மட���டும் தான் மக்களின் கோரிக்கை.
எங்களின் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் கட்டளையின்படி நீங்கள் ஆட்சியைத் தொடர, நாங்கள் தடையாக இருக்க விரும்பவில்லை. அந்த வகையில் பேரவையிலிருந்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.
நன்றி, வணக்கம்.
உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா? இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா? எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு.
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#TVKFails
மாண்புமிகு முதல்வர் அவர்களே, உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க.
- கழகத் தலைவர், திரு @mkstalin அவர்கள்
#TVKFails
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத��ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சி, உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்ச���தான் அது!
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#DMK
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்களின் நன்றியறிவிப்பு அறிக்கை
எந்த நிலையிலும் மக்கள் நலனுக்காகவும், மாநிலத்தின் உரிமைக்காகவும், தன் பயணத்தைத் தொய்வின்றித் தொடரும் அரசியல் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் 2019-ஆம் ஆண்டிலிருந்து 2 நாடாளுமன்றத் தேர்தல்கள், 2 சட்டமன்றத் தேர்தல்கள், ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர��ப்புற உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல்கள் எனத் தொடர்ந்து பங்கெடுத்து வரும் தோழமைக் கட்சியின் மதிப்புக்குரிய தலைவர்கள் – நிர்வாகிகள் - தொண்டர்கள் அனைவருக்கும் தி.மு.கவின் தலைவர் என்ற முறையில் என் நன்றியினை உரித்தாக்குகிறேன்.
2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் இணைந்து, மாநில நலனுக்கான குரலை ஓங்கி ஒலித்ததையும் நன்ற��யுடன் நினைவுகூர்கிறேன். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பங்கெடுத்துத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள், போட்டியிட முடியாமல் போன - போட்டியிட விருப்பமில்லாத -தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட கட்சிகள் - இயக்கங்கள் ஆகியவற்றின் தலைவர்கள் அனைவரும் என் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், தேர்தல் களத்தில் வழங்கிய ஒத்துழைப்பையும் என்றும் மறக்க மாட்டேன்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை அவர்கள், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன் திரு. வைகோ அவர்கள், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ. அவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் சகோதரர் திரு. தொல். திருமாவளவன் எம்.பி. அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் திரு. மு. வீரபாண்டியன் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூன���ஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் திரு. பெ. சண்முகம் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் திரு. கே.எம். காதர் மொகிதீன் அவர்கள், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் திரு. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் திரு. ஈ.ஆர். ஈஸ்வரன் அவர்கள், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் திரு. தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ அவர்கள், முக்குலத்தோர் புலிப்படை நி��ுவனத் தலைவர் திரு. கருணாஸ் அவர்கள், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர் திரு. வி.எம்.எஸ். முகமது முபாரக் அவர்கள், தமிழ்த்தேசம் கட்சி நிறுவனத் தலைவர் திரு. கே.கே. செல்வகுமார் அவர்கள், கிறித்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் திரு. இனி��ோ இருதயராஜ் அவர்கள் ஆகிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தேர்தல் களத்தில் போட்டியிட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குவதுடன், தேர்தல் களம் காணாத நிலையிலும் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய தலைவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.
93 வயதிலும் தமிழ்நாடு முழுவதும் பயணித்துப் பரப்புரை மேற்கொண்ட, நம் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்��ின் தலைவர் ஆசிரியர் அய்யா திரு. கி. வீரமணி அவர்கள், போட்டியிடத் தொகுதிகள் தேவையில்லை; தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வெற்றியே குறிக்கோள் என நேரில் தெரிவித்துப் பணியாற்றிய மக்கள் நீதி மய்யம் தலைவர் நண்பர் திரு. கமல்ஹாசன் எம்.பி. அவர்கள், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் திரு. பொன். குமார் அவர்கள், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் திரு. எர்ணாவூர் நாராயணன் அவர்கள், மக்கள��� விடுதலைக் கட்சித் தலைவர் திரு. முருகவேல் ராஜன் அவர்கள், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் திரு. அதியமான் அவர்கள், புதிய திராவிட கழகம் நிறுவனத் தலைவர் திரு. கே.எஸ். ராஜ்குமார் அவர்கள், திராவிடத் தமிழர் கட்சி தலைவர் திரு. வெண்மணி அவர்கள், ஆதித்தமிழர் கட்சி தலைவர் திரு. கு. ஜக்கையன் அவர்கள், தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. நாகை திருவள்ளுவன் அவர்கள். தமிழ் மாநில தேசிய லீக் பொதுச்செயலாள��் திரு. திருப்பூர் அல்தாப் அவர்கள், அகில இந்திய வல்லரசு பார்வர்டு ப்ளாக் நிறுவனத் தலைவர் திரு. பி.என். அம்மாசி அவர்கள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செலயாளர் திரு. சுப. வீரபாண்டியன் அவர்கள், கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் திரு. உ. தனியரசு அவர்கள் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள், த��குதி ஒதுக்கீடுகள், ஒப்பந்தங்கள், பரப்புரைப் பணிகள் அனைத்திற்கும் பொறுப்பினை ஏற்று, செயல்பட்டவன் என்ற முறையில், தேர்தல் அரசியல் களத்திற்கேயுரிய தன்மையினால் எந்தவொரு கட்சித் தலைவருக்கோ, அதன் நிர்வாகிகளுக்கோ சிறிதளவு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தாலும் அதற்கும் பொறுப்பானவனாக என் வருத்தத்தையும் பதிவு செய்து, தங்கள் அனைவரின் உழைப்புக்கும் ஒத்துழைப்புக்கும் மீண்டும் நன்றியைத் ���ெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டை முன்னேற்றப்பாதையில் தொடர்ந்து கொண்டு செல்லவும், மாநில உரிமைகள் பறிபோகாமல் தடுக்கவும் ஒருங்கிணைந்து செயல்பட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுமையான வெற்றியைப் பெற முடியாமல் போனாலும், வலிமை குன்றாத வகையில் 1 கோடியே 54 இலட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகளைப் பெற்று, 72 தொகுதிகள��ல் வெற்றி பெற்றிருப்பது, தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையையே வெளிப்படுத்துகிறது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பெரும்பாலான தோழமைக் கட்சிகள் கொள்கைத் தோழமையுணர்வு மாறாமல், தி.மு.க.வுடன் தொடர்ந்து பயணிப்பதை வெளிப்படையாகத் தெரிவித்திருப்பது கழகத்தின் மீது தோழமைக் கட்சித் தலைவர்கள் வைத்துள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. அதற்கேற்ப, நாம் கொள்கை உறுதிமிக்க அரசியல் கட்சிகளாக ஒன்றுபட்டு நின்று, மக்கள் நலனுக்காகவும், மாநில உரிமைக்காகவும் நம் பயணத்தை எப்போதும் போல தொடர்ந்து மேற்கொள்வோம். தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்.
***
#DMK