திருச்சி மாவட்டம் லால்குடியில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்று சிறப்புரையாற்றினேன்.
தமிழினத்தின் ஒப்பற்ற தலைவராக கலைஞர் ஆற்றிய பணிகளும், நவீன தமிழ்நாட்டை தன் செயல்திட்டங்களால் செதுக்கியதையும் இந்த கூட்டத்தில் எடுத்துக் கூறினேன். அதேபோல், தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றிகளைக் கண்ட நம் கலைஞரின் சிறப்புகளையும், தமிழினத்தின் பால் அவர் கொண்ட அன்பையும் நம் கழக செய்தி தொடர்புக்குழு துணைத் தலைவர் திரு. மருது அழகுராஜ் அவர்கள் பொது மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.
கலைஞரின் பிறந்த நாளை கொண்டாடும் இவ்வேளையில் நம் கழக ஆட்சி மீண்டும் அமைய அயராது உழைப்போம்..!
கலைஞரின் புகழை காலமெல்லாம் போற்றுவோம்..!
#KalaignarForever
திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் திருவானைக்காவல் பகுதியில் நடைபெற்ற நம் தமிழ்நாட்டின் தன்னிகரில்லா தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்று உரையாற்றினேன்.
திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் திரு. @Suba_Vee அவர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் - நம் தமிழ் மக்கள் முன்னேற்ற���்திலும் கலைஞர் கொண்டு வந்த மாற்றங்களையும், ஏற்படுத்திய புரட்சிகளையும் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்.
அதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பயனாளிகளை வாழ்த்தினேன்.
பேச்சிலும், எழுத்திலும் மட்டுமல்லாமல் உண்மையான சமூக நீதியை தன் செயல்பாட்டினால் நிலைநாட்டிய நம் கலைஞரை காலம் முழுவதும் போற்றுவோம்..!
#KalaignarForever
#Kalaignar103
@anbazhagandmk #TrichyDMK #Thiruvanaikkaval #KNNehru #DMKForever
நிர்வாக திறமையின்மை..
மக்களுக்கு பாதுகாப்பின்மை..
கட்டுப்பாடில்லாத ஒரு கட்சியை வழி நடத்துவது
குழந்தைகளாலே ஆட்சிக்கு வந்ததை பெருமையாக கருதும் தற்போதைய அரசின் ஆட்சி காலத்தில் அந்த குழந்தைகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை..
திமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது
Virtual Abusers மூலம் பொய் செய்திகளை பரப்புவது
அமைச்சர்கள் முதல் Virtual Abusers வரை தினமும் எத்தனை ரீல்ஸ் போட்டோம் என ரிலீஸ் வெறியை ஏத்தி விடுவது
MLA களை விலைக்கு வாங்குவது
என தமிழ்நாடு போன்ற ஒரு வளர்ந்த மாநிலத்தின் ஆட்சியை கேலிக்கூத்தாக்கி கொண்டிருக்கிறது இந்த அரசு.
மொத்தத்தில் தவெகவிற்கும் அதன் தலைவர்களுக்கும் தெரிந்த இரண்டே விஷயம்
ஒன்னு திமுக மேல பழிய போடுறது
இன்னொன்னு அவதூறு பரப்புறது
எப்போ Reels உலகத்தி��் இருந்து Real உலகத்திற்கு வர போறீங்க CM சார்..?
#TVKFails #TNAssembly
தொடர் மின்வெட்டு - தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைகள் - சட்டம் ஒழுங்கு சீர்கேடு - விவசாயிகள் பி���ச்சனை - தினமும் பெருகும் வன்முறை கலாச்சாரம்...
என தமிழ்நாட்டில் நிலவும் எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லாமல் தமிழ்நாடு அரசின் செயல்பாடு சந்தி சிரிக்க புதிதாக Reels Cut உரையை வாசித்திருக்கிறார் ஆளுநர் அவர்கள்...
மாற்றம் அல்ல மாபெரும் ஏமாற்றம்..!
#TNAssembly
#TVKFails
ஜெர்மனி நாடாளுமன��றத்தில் நடைபெற்ற இந்தியா - ஜெர்மனி நட்புறவு குறித்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய நம் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @ArunNehru_DMK அவர்கள்.
இந்தியா - ஜெர்மனி உறவில் முக்கிய பங்காற்றி வரும் நம் தமிழ்நாட்டில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளவும், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான நம் மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிக்கவும் அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
#IndoGermanFriendship
#GermanParliament #Bundestag #TamilNadu #Perambalur #IndiaGermany
நவீன தமிழ்நாட்டின் தந்தை நம் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்தநாள் விழா திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் நடைபெற்ற நிலையில் இன்று அதில் பங்கேற்றேன்.
இந்த விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள், மிதிவண்டிகள், தையல் மெஷின், ஹாட் பாக்ஸ், புடவைகள், வேஷ்டிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினேன்.
அதைத்தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு உணவு வழங்கி கலைஞரின் பிறந்தநாள் விழா மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்.
கலைஞர் காட்டிய வழியில் நம் கடமையை ஆற்றுவோம்..!
#KalaignarForever
ஆட்சி அதிகாரம் எந்தப் பக்கம் இருந்தாலும் கொள்கையில் உறுதிமிக்கோர் எப்போதும் தி.மு.க. பக்கம்தான்!
தமிழ்நாட்டின் உரிமைகளைத் தி.மு.க.தான் காப்பாற்றும் என்ற உறுதியோடு, செங்கல்பட்டு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. கஜேந்திரன் அவர்கள் தலைமையில் தாய்க்கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட அனைவரையும் வரவேற்கிறேன்.
தந்தை பெரியாரின் மாணவராக, பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக சமூக நீதிப் பாதையில் தமிழ்நாட்டை என்றென்றும் வழி நடத்தும் நம் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
இதை முன்னிட்டு ஒவ்வொரு உடன்பிறப்பின் தலைமைச் செயலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் திரு உருவ சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருக்கும் அவரது திருவுருவப்படத்திற்கு நம் கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள் தலைமையில் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.
அதைத் தொடர்ந்து முரசொலி அலுவலக வளாகத்தில் உள்ள கலைஞரின் திருவுருவ சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கும் ��ம் தலைவர் தலைமையில் புகழ் வணக்கம் செலுத்தினோம்.
கலைஞர் காட்டிய வழியில் பயணித்து, நம் உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டை சூழ்ந்துள்ள இருளை அகற்றுவோம். நம் தலைவர் தலைமையில் மீண்டும் வெற்றிக் கொடி நாட்டுவோம்.
#KalaignarForever
ஆட்சி அமைக்கும் போதெல்லாம் தமிழ்நாட்டை அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேற்றிய தன்னிகரில்லாத தலைவர் நம் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் உள்ள கலைஞரின் திருவுருவ சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திரு உருவப்படத்திற்கு நம் கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்��ள் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.
அனைத்து தரப்பு மக்களின் உயர்வுக்காக பாடுபட்ட கலைஞரின் புகழ் ஓங்கட்டும்..!
#KalaignarForever
மக்கள் பணியில் நம்மையெல்லாம் வளர்த்தெடுத்த��� என்றும் நம்மை வழிநடத்தும் என் அன்புத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள எனது இல்லத்தில் நம் கலைஞரின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
உடன்பிறப்பே என்னும் ஒற்றை வார்த்தையால் உலகத் தமிழர்களை கட்டிப்போட்ட நம் கலைஞரின் புகழ், காலம் உள்ளவரை நிலைத்திருக்கும்..!
#KalaignarForever
தமிழ்நாடு மட்டுமல்ல அரை நூற்றாண்டு காலம் இந்திய அரசியலையே தன் ஆளுமையால் கட்டிப்போட்ட தமிழின தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நம் கலைஞரின் நினைவிடத்தில் நம் கழகத�� தலைவர் திரு. @mkstalin அவர்கள் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.
கலைஞர் நமக்கு கற்றுத் தந்த பாடத்தை நெஞ்சில் ஏந்தி தோல்வி கண்டு துவளாமல் மீண்டும் ஒரு வரலாற்று வெற்றியை பதிவு செய்ய இந்த நாளில் உறுதி ஏற்போம்.
தமிழர்களை காக்க உதயசூரியனே ஒரே தீர்வு என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபணம் செய்வோம்..!
வாழ்க கலைஞர்..!
#KalaignarForever
#Kalaignar103
தலைமுறைகளைக் கடந்த தன்னிகரில்லா தலைவர், தமிழ்��ாட்டின் சிற்பி நம் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள் இன்று.
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி கட்டண சலுகை - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர், அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கி இளைஞர்களுக்கான சமமான வேலை வாய்ப்புகளை உருவாக்கியது - பொறியியல் படிப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வை ரத்து செய்தது - இந்தியாவிலேயே முதன்ம��தலாக பெண்களுக்கு சொத்தில் உரிமை கொடுத்தது - முதன்முதலாக பெண்களை காவல்துறையில் பணியமத்தியது - மாணவர்களுக்கான இலவச பேருந்து பயணம் வழங்கியது என இளைஞர்களுக்காகவும், மகளிர்க்காகவும் கலைஞர் செய்த திட்டங்களும், தியாகங்களும் ஏராளம். இதனால் ஏராளமான கிராமப்புற இளைஞர்கள், இளம் பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டினார் நம் கலைஞர் அவர்கள்.
இன்றைய 80s, 90s, 2k கிட்ஸ் என்னும் தலை முறைகளின் வ��தியான வாழ்க்கைக்கும், அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் இருந்த தடைகளை அகற்றிய Real நாயகன் நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் என்பதே எவராலும் மறக்க முடியாத வரலாற்று உண்மை.
அப்படிப்பட்ட நம் கலைஞரின் பிறந்த நாளே நமக்கு ஊக்கமும் - உற்சாகமும் அளிக்கும் திருவிழாவாகும். மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களுக்கு பயனுள்ள வகையில் நம் தலைவர் டாக்டர் கலைஞரின் பிறந்த நாளை ஒவ்வொர��� ஊரிலும் கொண்டாடுவோம். கலைஞரின் சாதனைகளை இனி வரும் ஒவ்வொரு தலைமுறைக்கும் அர்ப்பணிப்புடன் கொண்டு செல்வோம்.
Reel ஹீரோவாக அல்லாமல் Real ஹீரோவான கலைஞரைப் போற்றுவோம்...!
கலைஞரின் புகழ் ஓங்குக..!
#KalaignarForever
#DMKForever
புகையிலையின் தீங்கு குறித்தும் புற்றுநோய் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தொடங்கி ��ைத்தேன். திருச்சி மத்திய பேருந்து நிலையம் முதல் திருவாரூர் வரை நிகழவுள்ள இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் பங்கு பெற்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ள இளைஞர்களை வாழ்த்தினேன். போதையின் பாதை என்றுமே தீங்கை தரும் என்பதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்..! #TobaccoCancerAwarenessCycleRally
அன்பு உடன்பிறப்புகளே,
https://t.co/IYC924jbDY இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்���துதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும்.
இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன். எனவே மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை https://t.co/IYC924jbDY இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.
கழக மாநிலப் பொறுப்பாளர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் Whatsapp குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட கழக செயல் வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்�� நிலையில், நமது எதிர்கால செயல்பாடுகள் குறித்து இன்று உரையாற்றினேன்.
நமக்கும் எதிர்தரப்புக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் வெறும் 17 லட்சம். 27 தொகுதிகளில் 2000 க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றியை தவற விட்டிருக்கிறோம். எனவே முன்பை விட நாம் தீவிரமாக பணியாற்ற வேண்டிய காலகட்டம் இது என்பதை இந்த கூட்டத்தில் எடுத்துக் கூறினேன்.
மேலும், நம் மக்களுக்காக களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், சமூக வல��தளங்களை மிக தந்திரமாக பயன்படுத்தி தவெக போன்ற புதிய வரவுகள் வாக்குகளை பெற்றுள்ளனர்.
பொழுதுபோக்குக்காக பார்க்கப்படும் விஷயங்களை உண்மை என நம்ப வைக்கும் அவர்களின் இந்த தந்திரம் பல குடும்பங்களின் வாக்குகளை பிரித்துள்ளது என்பதை அறிந்து முழுமூச்சாக பணியாற்ற வேண்டிய பொறுப்பு நம் நிர்வாகிகளுக்கு உள்ளது.
இதைவிட இக்கட்டான சூழலை எல்லாம் கடந்து வெற்றி வாகை சூடிய இயக்கம் நம் திரா��ிட முன்னேற்றக் கழகம். எனவே நமக்கு எதிரான சதிகளை முறியடித்து அனைத்து தளங்களிலும் இனி அசுர வேகத்தில் பணியாற்ற வேண்டும் என கூட்டத்தில் உரையாற்றினேன்.
மேலும், ��ழகத்தின் வலிமையான ஆயுதமே நம் கலைஞர் அவர்கள் தான். தமிழ்நாட்டின் ஒரு தலைமுறையையே முன்னேற்றிய கலைஞரின் சாதனைகளையும், புகழையும் அனைத்து தரப்பிடமும் கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தேன்.
#DMKForever
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற திருச்சி வடக்கு மற்றும் மத்திய மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டேன்.
எனது தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,
ஜூன் - 3 ஆம் தேதி நம் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி மக்களுக்கு பயனுள்ள வகையில் கொண்டாடுவது...
Reel Hero வாக இல்லாமல் Real Hero வான நம் கலைஞரின் சாதனைகளையும், அனைத்து மக்களின் உயர்வுக்காக அவர் கொண்டு வந்த திட்டங்களையும் இளம் தலைமுறைகளிடம் கொண்டு சேர்ப்பது.
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்ச���த் தலைவராக பொறுப்பேற்றுள்ள நம் கழக இளைஞரணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பது.
கடந்த தே��்தலில் நம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த திருச்சி மாவட்ட மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
#DMKForever
அண்மையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மேலப்புதூரில் உள்ள புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் கல்லக்குடியைச் சேர்ந்த மாணவி எஸ்.கனிஷ்கா அவர்கள் 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
மாணவியும் அவரது பெற்றோரும் நம்மை நேரில் சந்தித்த நிலையில், மாணவிக்கு பாராட்டுகளை ��ெரிவித்ததோடு, கல்வியில் மேலும் உயர்ந்து எதிர்காலத்தில் நம் திருச்சி மாவட்டத்திற்கு பெருமை தேடித்தர வாழ்த்துகளை தெரிவித்தேன்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடை அருகே உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் திருவுருவ சிலைக்கு கழகத்தினருடன் இணைந்து இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
#TrichyDMK