ஈரோடு மாவட்டத்தின் இருவேறு இடங்களில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைகள், சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், தமிழினத்தின் உரிமைகளுக்காகவும், சமூக நீதியை நிலைநிறுத்தி ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்விற்காகவும் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். நவீன தமிழகத்தின் சிற்பியாகப் போற்றப்படும் ஒரு மாபெரும் தலைவரின் சிலைகளை அவமதித்திருப்பது, தமிழ் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் கோழைகளின் செயலாகும்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலியோ இல்லாத சமுதாயத்தை நிலைநிறுத்தும் நோக்கில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடைபெற்றது.
இதனையொட்டி, கல்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமில் பங்கேற்று, குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கினேன்.
இளந்தளிர்களின் ஆரோக்கியமே நாளைய சமூகத்தின் அடித்தளம்! தவறவிட்ட குழந்தைகளுக்கும் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படுவதை உறுதி செய்வோம்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாகவும், திராவிட இயக்கத்தின் அறிவுச்சுடராகவும் திகழ்ந்த அண்ணன் முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாள் இன்று.
தமிழ்நாட்டின் நலனுக்காக அவர் ஆற்றிய அரும்பணிகளும், கழக வளர்ச்சிக்கான அவரது உழைப்பும் நம் நெஞ்சங்களை விட்டு என்றும் நீங்காது.
அவரின் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!
சென்னையில் இன்று நடைபெற்ற சன் குழும நிறுவனர் மரியாதைக்குரிய திரு. கலாநிதி மாறன் அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று, மணமக்கள் அனிருத் - காவ்யா ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
நூற்றாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், சமூகநீதியின் விடியலுக்காகவும் வித்திட்ட திராவிட இயக்கத்தின் தாய் மடியான 'நீதிக்கட்சி' (தென்னிந்திய நல உரிமைச் சங்கம்) தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இன்று!
வகுப்புவாரி பிரதிநிதித்துவம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பெண்களுக்கு வாக்குரிமை எனப் பல புரட்சிகரச் சட்டங்களை இயற்றி, நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட சர் பிட்டி.தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் சி. நடேசனார் உள்ளிட்ட பெருந்தகைகளின் முற்போக்கு சிந்தனையையும் தொலைநோக்குப் பார்வையையும் இந்நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்.
நீதிக்கட்சி ஏற்றிய சமூகநீதிச் சுடரை எக்காலத்திலும் அணையாமல் காப்போம்!
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் மறைவுற்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அவரது திடீர் மறைவு வேதனையளிக்கிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தவெக இயக்கத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தைப் படிப்படியாக முடக்குவதற்கு அரசு திட்டமிடுகிறதா என்ற சந்தேகம் தமிழ்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஆக உரிமைத்தொகையை உயர்த்தி வழங்கப்போவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது ஏற்கெனவே கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 பெற்று வரும் தகுதியுள்ள பெண்களுக்குக்கூட எந்தக் காரணமுமின்றி அந்தத் தொகையை நிறுத்த முற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடியதாகும்.
எனவே, பயனாளிகளுக்கு குறைந்தபட்சம் வழங்க வேண்டிய ரூ.1,000 உரிமைத்தொகையையாவது தொடர்ந்து வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். உரியவர்களுக்கான தொகை நிறுத்தப்பட்டிருப்பின் அதற்கான காரணத்தையும் அரசு உடனடியாக விளக்க வேண்டும்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்குத் தெரியாமல் தவெகவினர் தன்னிச்சையாகத் திறந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நீர்வளத்துறை அதிகாரிக்ளுக்கே தெரியாமல், அணையின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், அணையைத் திறப்பது என்பது எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் பொறுப்பற்ற செயல் என்பதை அறியமாட்டார்களா?
அரசியல் விளம்பரத்திற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்கள் ஆயிரக்கணக்கான மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை அல்லவா?
தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான அணை ஒன்றின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இந்த அபாயகரமான நிலைக்குக் காரணமானவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது?
செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், விடுதலைப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில், அவர் நாட்டிற்கு ஆற்றிய தன்னலமற்ற தியாகத்தை போற்றி வணங்குகிறேன்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் வணிக ஆதிக்கத்தை எதிர்த்து அவர் இயக்கிய சுதேசி கப்பல் நாட்டின் விடுதலை உணர்வை கூர்மைப்படுத்தியது. அந்த மாமனிதரின் வீரமும், தியாகமும் தமிழ் மண்ணில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
Heartening to see the Cabinet Secretary of India, Dr. T.V. Somanathan, fondly recall his four years working closely with Muthamizharignar Kalaignar as his Secretary.
When senior civil servants speak of the governance lessons they picked up under Kalaignar’s watch, it says everything about his grasp of administration and eye for detail. His style of leadership continues to be a benchmark for anyone in public service.
MS Dhoni was never an outsider; he became one of our own, bringing together generations with his calm leadership and unmatched grace. He gave Chennai more than just victories; he gave us unforgettable memories and an unbreakable bond with cricket.
Thank you, Dhoni, for the memories that will forever live in the hearts of Tamil Nadu. Best wishes on your new journey as CSK's mentor!
@msdhoni
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : https://t.co/YKsoHYE51A
#WhistlePodu
குழந்தைகள்தான் அன்பின் ஊற்று, சமூகத்தின் பெருஞ்செல்வம்.
ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் வளர்வதை உறுதி செய்வதே நாம் அவர்களுக்குத் தரும் மிகச்சிறந்த பரிசு. ஒவ்வொரு குழந்தையின் கனவும் மெய்ப்படச் சிறந்த சூழலை உருவாக்கிடுவோம்.
இனிய குழந்தைகள் நாள் நல்வாழ்த்துகள்!
அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வித் திட்டத்தின் கீழ் அயல்நாடுகளில் பயின்று வரும் மாணவர்கள் பலருக்கும் கல்வி உதவித்தொகையை விடுவிக்காமல் அரசு வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது. பட்டியலின,பழங்குடியின மாணவர்களின் உயர்கல்விக் கனவைச் சிதைக்கும் வகையில் தவெக அரசு செயல்படக் கூடாது; அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட உதவித்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு?
உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?
இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது.
மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது?
இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்?
#DravidianModel அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே!
@TOIChennai
கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ள கழக மறுசீரமைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இன்றையக் கூட்டத்தில் கழக விவசாய அணி, வழக்கறிஞர் அணி உடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இவ்வணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு அணிகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்கள்.
இக்கூட்டத்தில் என்னுடன் கழக மறுசீரமைப்புக் குழு உறுப்பினர்களும் விளக்கங்களைக் கேட்டறிந்தனர்.
@mkstalin@r_sakkarapani@skpkaruna@TamilarasiRav@murasolimp
கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ள கழக மறுசீரமைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இன்றையக் கூட்டத்தில் கழக ஆதிதிராவிடர் நலக் குழு, அமைப்புசாரா ஓட்டுநர் அணி மற்றும் தொழிலாளர் அணி உடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இவ்வணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு அணிகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்கள்.
இக்கூட்டத்தில் என்னுடன் கழக மறுசீரமைப்புக் குழு உறுப்பினர்களான திரு. சக்கரபாணி எம்.எல்.ஏ., திருமிகு. தமிழரசி ரவிக்குமார்,திரு முரசொலி எம்.பி, திரு. எஸ்.கே.பி. கருணா, ஆகியோரும் விளக்கங்களைக் கேட்டறிந்தனர்.
@mkstalin@r_sakkarapani@skpkaruna@murasolimp@TamilarasiRav
இந்தியத் திரைவானில் தன் அசாத்திய கலை ஆளுமையாலும் புத்தாக்கச் சிந்தனைகளாலும் உலகளவில் தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்திய கலைஞானி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், மதிப்பிற்குரிய திரு. @ikamalhaasan அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
கலையுலகிலும், பொதுவாழ்விலும் சளைக்காத ஆற்றலோடு தொடர்ந்து இயங்கும் தாங்கள், நல்ல உடல்நலத்தோடும் நீடித்த ஆயுளோடும் பணிகளைத் தொடர மனதார வாழ்த்துகிறேன்!
விருதுநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியில், மாவட்டத் துணை அமைப்பாளராகப் பணியாற்றிய அன்புச் சகோதரர் திரு. விஜயகுமார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
கழக தகவல் தொழில் நுட்ப அணியில் பணியாற்றிய காலங்களில் சிறப்பாகத் தன் பணிகளை ஆற்றியவர். தம்பி விஜயகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"தமிழா அறிவு கொள்!
பகுத்தறிவைப் பயன்படுத்து!
அறிவுதான் இறுதியில் வெல்லும்; உறுதியாய் வெல்லும்!" என்று சொன்ன பெரியாரின் #அறிவுலகம்-தான் இன்றும் என்றும் தேவை.
#PeriyarArivulagam#Kovai#Library