தஞ்சை மத்திய மாவட்ட திமுக - திருவையாறு சட்டமன்றத் தொகுதி சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்தநாள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு
பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன் MLA தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் பெ.செல்வேந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்,
முன்னாள் ஒன்றிய இணையமைச்சர் திரு.எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், முன்னாள் அமைச்சர்கள் திரு.கோவி.செழியன் MLA, திரு.ஆர்.வைத்தியலிங்கம் MLA, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எம்.ராமச்சந்திரன், திரு.எம்.ரெங்கசாமி, திரு.டி.கே.ஜி.நீலமேகம், திரு.சி.ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.து.செல்வம், மாநகர செயலாளர் திரு.சண்.ராமநாதன், பொறுப்பு மேயர் திருமதி.அஞ்சுகம் பூபதி மற்றும் மாநில - மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர், பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டோம்.
திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பூதலூர் ஊராட்சி ஒன்றியம் - கோவிலடி ஊராட்சி, சுக்காம்பார் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன் MLA அவர்களுடன் திறந்து வைத்தோம்.
உடன் ஒன்றிய கழக செயலாளர்கள் திரு.கல்லணை செல்லக்கண்ணு, பேரூர் செயலாளர் திரு.ஜெயராமன், பேரூர் மன்ற தலைவர் திரு.மெய்யழகன் மற்றும் அரசு அலுவலர்கள், ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பூதலூர் ஊராட்சி ஒன்றியம் - புதுப்பட்டி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோகம் அங்காடி கட்டிடத்தை தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன் MLA அவர்களுடன் திறந்து வைத்தோம்.
உடன் ஒன்றிய கழக செயலாளர்கள் திரு.கல்லணை செல்லக்கண்ணு, திரு.முருகானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள், ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கில் எதிர்பாராத விதமாக தீ பற்றிய செய்தி அறிந்து நேரில் சென்று பார்வையிட்டு விரைந்து தீயை அணைக்க தீயணைப்பு அதிகாரிகளிடத்தில் அறிவுறுத்தினோம்.
இதில் மாநகராட்சி பொறுப்பு மேயர் அவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் உடனிருந்தனர்.
தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் எழுதிய இடதுகுரல் நூல் வெளியீட்டு விழா மற்றும்
2025 - சாகித்ய அகாடமி விருதுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்ட போது.
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி,
தொல்காப்பியர் சதுக்கம் - அண்ணா காலனி பழ.திருநாவுக்கரசு நூலகம் மற்றும் பயிலகத்தின் சார்பில் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்த இயலாத பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டோம்.
பேராவூரணி சட்டமன்ற தொகுதி, மல்லிப்பட்டினம் MFC அணியினரால் நடத்தப்படும் மூன்றாம் ஆண்டு கால்பந்து போட்டியை தொடங்கி வைத்தோம்.
உடன் ஒன்றிய கழக செயலாளர்கள் திரு.முத்துமாணிக்கம், திரு.அன்பழகன், திரு.ரவிச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பள்ளியைத் தேடி தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முன்னெடுப்பின் கீழ்,
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட - மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் (2025-2026)ஆம் கல்வி ஆண்டில் அரசு பொதுத் தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சார்ந்த 42 மாணவ - மாணவிகளுக்கும் மற்றும் 100% தேர்ச்சியை வழங்கிய 15 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு
பாராட்டு விழா நடத்தி வாழ்த்து தெரிவித்தோம்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜமாணிக்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.தலையாமங்கலம் பாலு, ஒன்றிய கழக செயலாளர்கள் திரு.முத்துவேல், திரு.கவியரசு, திரு.சித்தேரி சிவா, நகர செயலாளர் திரு.வீரா கணேசன், நகர்மன்ற தலைவர் திரு.சோழராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் குருங்களூர் அருகே அணுகுசாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் கள ஆய்வு மேற்கொண்டோம்.
சுமார் 15 கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களின் நீண்டநாள் கோரிக்கையைத் தொடர்ந்து, சாத்தியக்கூறு அறிக்கையை விரைவாகத் தயாரித்து வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினோம்.
மக்களின் கோரிக்கைகளை வளர்ச்சித் திட்டங்களாக மாற்றி செயல்படுத்துவதையே திராவிட முன்னேற்றக் கழகம் தனது பணியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் சங்க பொன்விழா ஆண்டு தலைமை செயற்குழு கூட்டத்தில் தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன் MLA அவர்களுடன் கலந்து கொண்டோம்.
இந்நிகழ்வில் தொ.மு.ச. பொதுச் செயலாளர் திரு.சண்முகம் https://t.co/McyEEzb8n3., மற்றும் தொ.மு.ச. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி, வடுவூர் தென்பாதி ஊராட்சி - புதுக்கோட்டை கிராமத்தில் தீ விபத்து ஏற்பட்டு வீடு சேதமடைந்த செய்தி அறிந்து இன்று நேரில் சென்று பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அளித்தோம்.
இதில் திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் திரு.பூண்டி கே.கலைவாணன் MLA, ஒன்றிய செயலாளர் திரு.கவியரசு மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி, காரக்கோட்டை கிராமத்தில் சாலை விபத்து ஏற்பட்டு மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து நேரில் சென்று மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தோம்.
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி, நீடாமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பொது மக்களின் பிரச்சனையான வீட்டு மனை பட்டா குறித்து இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டோம்.
மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் மற்றும் மாண்புமிகு இளந் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இராமநாதபுரம் - தூத்துக்குடி - தென்காசி மாவட்டங்களுக்கு உட்பட்ட 14 சட்டமன்றத் தொகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கையினை இன்று கழகத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்தோம்.
திருவையாறு சட்டமன்றத் தொகுதி, அந்தளி கிராம பொதுமக்கள் துக்க நிகழ்வுக்காக திருப்பந்துருத்தி நோக்கி சென்ற போது வாகன விபத்து ஏற்பட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தி அறிந்து தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன் MLA அவர்களுடன் நேரில் சென்று பார்வையிட்ட போது.