எதையும் சாதிக்கும் திறன் கொண்ட இளைய தலைமுறையினரே வணக்கம்!
கடந்த கால ஒப்பந்தங்கள் எதையும் மதிக்காமல் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகளை கட்டிய கர்நாடகம், இப்போது நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்காமல் மேகதாது அணையைக் கட்டத் துடிக்கிறது.
மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா வளமாக இருக்காது வறட்சியாக மாறும்.
வளமான டெல்டாவையும், 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரங்களையும் பாதுகாக்கவே ஜூலை 1 முதல் 4 வரை தமிழ்நாட்டில் காவிரி தொடங்கும் பிலிகுண்டுலு முதல் கடலில் கலக்கும் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறேன்.
மாற்றங்களை ஏற்படுத்தும் இளைஞர்களே....
இந்தப் பயணத்தில் என்னுடன் இணையுங்கள்,
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்போம்!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் க.சரவணன் அவர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும், அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சு.ரவி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும் ஆதரித்து சோளிங்கரில் தேர்தல் பரப்புரை செய்த போது.!
#election2026 | #PMK | #NDA
இந்தம்மா எந்தெந்த ஊருக்கு போகுதோ
அந்த ஊர்களில் உள்ள @AIADMKITWINGOFL நண்பர்கள் இந்த வீடியோவை வாட்ஸ்அப் மூலம் அதிகம் ஷேர் பண்ணுங்க...
ரிசல்ட் செம்மையாக இருக்கும் 😁
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ; கவுரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வும் அம்போ- மோசடிகளின் மொத்த உருவமே திமுக அரசு தான்!
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து விட்டதாக தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அதன் பின் மூன்று மாதங்களாகியும் இன்னும் அத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. மார்ச் மாதம் நிறைவடைந்து ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவர்களில் தகுதியுடையவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை வழங்கப்படவில்லை. அரசு ஊழியர்களை திமுக அரசு தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஏமாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 2003&ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜனவரி 3&ஆம் தேதி அறிவித்தார். அதன்பின் அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையை ஜனவரி 10&ஆம் தேதி திமுக அரசு வெளியிட்டது. இவை அனைத்தையும் கடந்து உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து விட்டதாகவும் அரசு அறிவித்தது. ஆனால், அது இன்று வரை நடைமுறைக்கு வராமல் வெறும் அறிவிப்பாகவே உள்ளது.
அதேபோல் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைப்படி , ஊதியத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கவுரவ விரிவுரையாளர்கள் போராடி வந்த நிலையில் அவர்களின் ஊதியம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அவர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் உயர்த்தி வழங்கப்படவில்லை. மார்ச் மாதத்திலாவது ஊதிய உயர்வு கிடைக்கும் என கவுரவ விரிவுரையாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், இந்த மாதமும் அவர்களுக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைத்திருக்கிறது.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாததற்கும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு இரு மாதங்களாக வழங்கப்படாததற்கும் சிறப்புக் காரணங்கள் எதுவும் இல்லை. அரசு ஊழியர்களையும், கவுரவ விரிவுரையாளர்களையும் ஏமாற்ற வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் எண்ணமும், சதியும் தான் காரணம் ஆகும். திமுக அரசு நினைத்திருந்தால், இந்த இரு அறிவிப்புகளையும் முறையே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடமுறைப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அதற்கு ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லை.
ஐந்தாண்டு கால ஆட்சியில் திமுக செய்தது எல்லாம் வானத்தை வில்லாய் வளைப்போம் என்று வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றுவது தான். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் மட்டுமின்றி அனைத்துத் துறையினரையும் திமுக அரசு திட்டமிட்டு ஏமாற்றியிருக்கிறது. இதை அவர்கள் எவரும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.
கஞ்சா வணிகர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாலியல் குற்றவாளிகள், சந்துக் கடைகளில் சட்டவிரோதமாக மது வணிகம் செய்பவர்கள் போன்றோர் தான் திமுக ஆட்சியில் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கிறார்கள். ஆட்சியாளர்களை வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்கள் எவரும் மகிழ்ச்சியாகவும் இல்லை, மனநிறைவாகவும் இல்லை. காரணம்.... மோசடிகளின் மொத்த உருவமாக திமுக அரசு திகழ்வது தான்.
திமுக ஆட்சியாளர்களின் மோசடிகளையும், துரோகங்களையும் தமிழக மக்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். இன்னும் 3 வாரங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் கடுமையான தண்டனையை வழங்குவார்கள். அது திமுகவால் மறக்க முடியாத தண்டனையாக இருக்கும்.
மருத்துவர் சின்னையா ஆசி பெற்ற வேட்பாளர் 💙💛♥️🔥🔥
தனது சித்தப்பாவிற்காக களத்தில் இறங்கிய கனல்,
#ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் வெற்றி வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர் கூட்டத்திற்கு வருகை தந்த #குருகனல்#GVaithi#PMK#பாமக
தி.மு.க தேர்தல் அறிக்கை ரெடி பண்ணது ஒரு பெண்தானே.. மதுஒழிப்பு பத்தி ஒரு வார்த்தையாச்சும் இருக்கா? - கனிமொழிக்கு அன்புமணி கேள்வி
#Chennai | #Anbumani | #PMK | #Election | #PolimerNews
திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல... காமெடியன்: 63 வாக்குறுதிகள் மீண்டும் இடம் பெற்றது தோல்வியின் அடையாளம்!
2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கான எந்தத் திட்டமும் இல்லை; மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்யும் சதுரங்க வேட்டை வாக்குறுதிகள் தான் இடம் பெற்றுள்ளன. மொத்தத்தில் திமுக தேர்தல் அறிக்கை என்பது இந்தத் தேர்தலின் கதாநாயகனும் அல்ல... கதாநாயகியும் அல்ல. மாறாக வில்லனாகவும், காமெடியனாகவும் தான் உள்ளது.
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 505 வாக்குறுதிகளை அளித்த திமுக, அவற்றில் வெறும் 66-&-ஐ மட்டும் தான் நிறைவேற்றியது, 439 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தியிருந்தேன். இப்போது திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 517 வாக்குறுதிகளில் 63 வாக்குறுதிகள் முந்தைய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தவை தான். அவற்றுக்கு வேறு நாமகரணங்களைச் சூட்டி புதிய வாக்குறுதிகளைக் காட்டி மோசடி செய்ய திமுக முயன்றிருக்கிறது. இது தோல்வியின் அடையாளம்.
2021-&ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் இடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த திமுக, 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கியது. ஆனால், இப்போது ஒன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாகுமாம்; அப்போது அந்த இடங்கள் உடனடியாக நிரப்பப்படுமாம். ஏற்கனவே காலியாக உள்ள 6 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பத் துப்பில்லாத திமுகவுக்கு இப்படி ஒரு வாக்குறுதி அளிக்க எந்தத் தகுதியும் இல்லை.
தனியார் துறைகளில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும்; தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75 விழுக்காட்டை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அத்தகைய சட்டத்தையும் நிறைவேற்றவில்லை; 50 லட்சம் பேருக்கு வேலையும் வழங்கவில்லை. ஆனால், இப்போது 50 லட்சம் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வழங்கப்படும் என்ற பழைய வாக்குறுதியையே மீண்டும் அளித்து ஏமாற்ற முயல்கிறது திமுக. இத்தகைய மோசடிகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.
ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கானது என்று வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றித் தான் கடந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், நீட் தேர்வை ரத்தும் செய்யாமல், தமிழ்நாட்டிற்கு விலக்கும் பெறாததால் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், கொஞ்சம் கூட தோல்வி உணர்வும், குற்ற உணர்வும் இல்லாமல், நீட் என்ற பெயரை மட்டும் தவிர்த்து விட்டு, மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வலியுறுத்துவோம் (வாக்குறுதி எண் 1 (9)) என்று வாக்குறுதி அளித்திருக்கிறது திமுக.
அதேபோல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவோம் என்ற வாக்குறுதியை கடந்த 50 ஆண்டுகளில் 20-ஆம் முறையாக திமுக அளித்திருக்கிறது. 18 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக அதற்காக துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை. தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாகவும், கட்டாய பயிற்றுமொழியாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு வக்கில்லாத திமுக, தமிழையும், எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள பிற 21 மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சி மொழியாக்கப் போவதாக அறிவித்திருப்பது வெட்கக்கேடான நகைச்சுவையாகும்.
தமிழ்நாட்டின் உணவு தானிய உற்பத்தி 125 லட்சம் டன்னாக உயர்த்தப்படும் என்பதை தேர்தல் வாக்குறுதியாக திமுக அறிவித்திருக்கிறது. உண்மையில் கடந்த 2023-24ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டின் உணவு உற்பத்தியை 125 லட்சம் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அப்போதைய வேளாண் துறை இயக்குனரும், இப்போதைய வேளாண் துறை செயலாளருமான தட்சிணாமூர்த்தி அறிவித்திருந்தார். அதன்பிறகு மூன்று ஆண்டுகளாகியும் அந்த இலக்கை எட்ட முடியாத திமுக அரசு, இப்போது அடுத்த ஐந்தாண்டுகளில் எட்டுவதற்கான வாக்குறுதியாக அந்த இலக்கை அறிவித்திருப்பது தோல்வியின் வாக்குமூலம் ஆகும்.
எந்த வகையில் பார்த்தாலும் திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களுக்கு பயனளிக்கக் கூடியதோ, வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடியதோ அல்ல. ஏற்கனவே 505 வாக்குறுதிகளை அளித்து அவற்றில் 87% வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் துரோகம் செய்த திமுகவின் வாக்குறுத்க்களை மக்கள் நம்ப மாட்டார்கள். வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்த தமிழ்நாட்டு மக்கள் உறுதி பூண்டிருப்பதால் அதன் தேர்தல் அறிக்கை யாருக்கும் பயன்படாத ஆணி தான். @CMOTamilnadu
திமுக கூட்டணிக்கு வன்னியர் ஒட்டு தேவையில்லை
பண்ருட்டி வேட்பாளர் அறிவிப்பு...
இங்கே சிறுபான்மையினர் போர்வையில் கட்சிகள் கடந்து வன்னியருக்கு எதிராக களமிறங்கும் திமுக கூட்டணிகள்...
வன்னியருக்களே அடுத்த TRV ரமேஷ் யை உருவாக்காதீர்கள்
ஒரு ஜாதிக்கு என்று புத்தி இருக்கும் என்று கண்டறிந்த டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்....
ஆகையால் வன்னியர் சமூகம் இவரை வாக்கு கேட்க கூட அவர்களின் ஊருக்குள் விடாமல் துரத்தி அடிப்பது நல்லது