சிறந்த தமிழறிஞரும், எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான, ஐயா ம.பொ.சி. அவர்களின் பிறந்த தினம் இன்று.
மொழிவாரி மாநில மறுசீரமைப்பின்போது, சென்னை, திருத்தணி உள்ளிட்ட பகுதிகள் தமிழகத்தின் அங்கமாகத் திகழ, முக்கியப் பங்காற்றியவர். வரலாற்றில் முதன்முறையாக சிலப்பதிகார மாநாட்டை நடத்தி, 'சிலம்புச் செல்வர்' என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றவர்.
தமிழும் தமிழர் பண்பாடும் நிலைத்திருக்கும் வரை, ஐயா ம.பொ.சி. அவர்களின் புகழும் நிலைத்திருக்கும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
Best wishes to Shri HD Deve Gowda Ji on his birthday. He has made an outstanding contribution to our nation during his long years in public life. He is known for his deep understanding of policy-related issues and passion towards serving the marginalised. Praying for his long and healthy life.
@H_D_Devegowda
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு எங்களது நன்றி. மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்குப் பாராட்டுகள்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், அதன் மக்கள் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.
இன்றைய தினம் கோவையில், தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சிப் பேரவை சார்பில் நடைபெற்ற, 16 ஆம் ஆண்டு தெலுங்கு யுகாதி பண்டிகை, ஶ்ரீ ரேணுகாதேவி திருக்கல்யாணம், ஶ்ரீ சுயம்வர கலா பார்வதி ஹோமம் என ஒருசேர நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்று இறையருள் பெற்றதை எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன்.
பல காலமாக தமிழகத்தின் வளர்ச்சிக்கு வலுசேர்த்து, தொழில், வணிகம், வேளாண்மை என, உழைப்பின் உறவுகளாய் தமிழகத்திற்கு தோள் கொடுத்து துணை நிற்கும் நம் தெலுங்கு பேசும் சொந்தங்களோடு இந்நிகழ்வில் கலந்து கொண்டது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
கல்வியில் சிறக்க ஹயக்ரீவர் ஹோமம், தொழில் சிறக்க சுதர்சன ஹோமம், ஆரோக்கியம் பெருக தன்வந்திரி ஹோமம் என அனைத்து மக்களும் பயன்பெறும் வண்ணம் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும், வளமும் பெருகி நிறைந்திட எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டிக்கொண்டேன்.
@balaji_utham
உலகெங்குமுள்ள தெலுங்கு மற்றும் கன்னட சகோதர சகோதரிகளுக்கு, இனிய உகாதி புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இனிய நாளில், அனைவரின் வாழ்விலும் புதிய தொடக்கங்கள், நல்ல ஆரோக்கியம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி நிரம்பவும், இறைவன் அருளினால் அனைத்து வளங்களும் நிறைந்திருக்கவும் வேண்டிக் கொள்கிறேன்.
ஆங்கிலத்தில், illusion என்றொரு வார்த்தை உண்டு. இருப்பதை இல்லாதது போலும், இல்லாததை இருப்பது போலும் கற்பனை செய்து கொள்வது என்பது இதற்குப் பொருள்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியத் திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்கள். யாராலுமே எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருப்பவர் அவர். அந்த இடம், அவருக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. ஐம்பது ஆண்டுகளாக, தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், தனது கலைத் திறனாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து, மக்களால் கொடுக்கப்பட்ட இடம்.
அவரது கலைப்பயணத்தில், அவர் எதிர்கொண்ட அரசியல், சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். அவற்றைக் கடந்து, ஐம்பது ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது என்பது, சாதாரணமாக அனைவருக்கும் சாத்தியப்படுவதல்ல. அதற்கு, மிகுந்த 'மனவலிமை' வாய்த்திருக்க வேண்டும்.
தன்னுடன் நடிக்கும் கலைஞர்களின் திறமை குறித்து அவர் அச்சப்பட்டதுமில்லை. அவர்களை ஒதுக்கியதுமில்லை. மிகச்சிறந்த கலைஞர்களைத் தன் திரைப்படங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கான முழு வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார். அதனால்தான் அவர் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டார்.
அத்தகைய மனிதரின் 'மனவலிமை' குறித்து, தனக்கென தனி அடையாளம் இல்லாமல், மாமனாரின் பணத்தை வைத்து, பல கட்சிகள் மாறி ஒரு அடையாளம் தேடிக் கொண்டிருப்பவர்கள் பேசுவதையும், illusion என்று கூறலாம்.
திமுக ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் அதிகரித்து விட்ட பாலியல் வன்கொடுமைகள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய கையாலாகாத திமுக அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை மீட்டெடுக்கவும், நாளைய தினம், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
தமிழகத்தில், பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை இருக்கிறது. போதைப் பொருள்கள், நமது இளைஞர்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்து போய்விட்டது.
இந்த நிலையை மாற்ற தமிழக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது. நமது சகோதரிகளின் பாதுகாப்பிற்காகவும், நமது இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பாதுகாப்பான தமிழகத்தை மீட்டெடுப்பதற்காகவும் நடைபெறவுள்ள இந்த ஜனநாயகப் போராட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறோம்.
The I.N.D.I. Alliance is one confused lot.
They’ll change the alliance’s name in Tamil Nadu, here it’s called the SPA (Secular Progressive Alliance).
Congress would have no complaints sharing the stage with Communists in TN, would even campaign for communist candidates in TN and the All India leaders of congress would hobnob with communist leaders on stage. Just after they cross the border, in Kerala, they will call for the arrest of the Communist CM.
The only thing consistent about the I.N.D.I. Alliance is its inconsistency.
தமிழக பத்திரிகை துறையில் தனக்கென தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பிடிஐ செய்தி நிறுவனத்தின் முன்னாள் மண்டல மேலாளருமான திரு. S. ராமசாமி அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
1978 முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பத்திரிகை துறையில் சேவையாற்றிய திரு.ராமசாமி அவர்கள், தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் மாற்றங்களை பதிவு செய்தவர். முன்னாள் முதல்வர்கள் முதல் மூத்த அரசியல் தலைவர்கள் வரை அனைவருடனும் நட்புறவு கொண்டவர். பத்திரிகை வட்டாரத்தில் 'SR’ என அன்போடு அழைக்கப்படும் திரு. S. ராமசாமி அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
We are committed to building a modern and Viksit Delhi. The projects launched today will strengthen infrastructure, improve connectivity and enhance the ease of living for people of the city.
https://t.co/BrUJqDQj50
On the eve of Women’s Day, delighted to have attended the “Women Farming Initiative 2026” in Pollachi, organised by We the Leaders Foundation along with Iyal farms, an initiative dedicated to strengthening the voice, visibility and leadership of women farmers and recognising them as true pillars of our country’s agrifood system.
Women are the backbone of Indian agriculture, accounting for nearly 65% of the workforce, yet they own only 2% of the land, a challenge that needs to be addressed over the next few decades.
Today, TN ranks 13th in the country for area under organic farming, and we eagerly look forward to a day when many panchayats in TN adopt organic farming as the standard agri practice, and it is in the hands of our youngsters to make Nammazhvar Ayya’s dream a reality.
Our Hon PM Thiru @narendramodi avl recently visited Coimbatore to promote organic farming in TN. The United Nations has designated 2026 as the International Year of the Woman Farmer, aiming to highlight and empower women as key drivers of sustainable, organic, and resilient agri-food systems.
The global community is steadily moving in one direction: strengthening organic farming while celebrating the indispensable role of women within it. We the Leaders Foundation, along with many like-minded organisations across our country, remain committed to advancing this vision and contributing meaningfully to a more sustainable and inclusive agricultural future. (1/2)
குடும்பத்தையும், சமூகத்தையும், நாட்டையும் முன்னேற்றும் அனைத்து தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், எனது இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்கள் சக்தி தான் சமூகத்தின் அடித்தளம். தமிழகத்தின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் பெண்களின் பங்கு அளப்பரியது.
பெண் சக்தி உயர்ந்தால் தான் சமூகம் உயர்ந்ததாகும். பெண்கள் பாதுகாப்பாகவும், சுயமரியாதையுடன் வாழ்வதை உறுதி செய்யும் சமூகத்தை உருவாக்குவோம். பெண்களின் பாதுகாப்பு, கல்வி, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றிற்குத் துணை நிற்போம்.
அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்.
நேற்றைய தினம் மாலை, பொள்ளாச்சியில் உள்ள அம்பராம்பாளையத்தில், @BJP4TamilNadu மத்திய அரசுத் திட்ட பிரிவின் மாநில செயலாளர் திருமதி. விஜயலக்ஷ்மி அவர்கள் நடத்தி வரும் மக்களுக்கான CSC இ-சேவை மையத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும், அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் உழைத்து வருவது போற்றுதலுக்குரிய பணியாகும்.
இதுவரை, பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 10,000 பேர், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 5000 பேர், பிரதமரின் முத்ரா திட்டத்தில் 125 பேர் என பல்வேறு திட்டங்களில் சுமார் 1 லட்சம் மக்களுக்கு மத்திய அரசுத் திட்டங்களின் பலன்கள் சென்று சேர்வதை உறுதி செய்துள்ளார் சகோதரி விஜயலக்ஷ்மி அவர்கள். பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது 35,000 பயனாளிகளை இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க உதவியுள்ளார் சகோதரி விஜயலக்ஷ்மி. சமூக நலன் காக்க வேண்டும் என்ற அவரது உறுதிப்பாடு இதன்மூலம் தெரிகிறது.
உலக மகளிர் தினத்தையொட்டி, தன்னலம் கருதாமல் பொதுநலம் காக்கும் பணியை முன்னெடுத்துள்ள திருமதி. விஜயலக்ஷ்மி அவர்களை சந்தித்ததில் எனக்கு மிகுந்த பெருமை. அவரது மக்கள் நலப்பணி மென்மேலும் சிறப்புற மனதார வாழ்த்துகிறேன்.
Others spend sleepless nights trying to crack the algorithm.
Our Hon PM Thiru @narendramodi avl doesn’t crack it, he is the algorithm. 😎
He defines. The world follows.
100 MILLION followers on Instagram for our Hon PM!