என் கையைப் பிடித்துக் கொண்டு அவர் கண்ணீர் சிந்தியதை கண்ட நான் மட்டுமின்றி அந்த மேடையில் இருந்த அத்தனை பேரும் நெகழ்ந்து போய் விட்டோம். இதுதான் ஒரு தந்தை தன் பெண்மீது கொண்டுள்ள அளவிட முடியாத அன்பு போலும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்த அன்பரசி என்ற மாணவி பரிபூரணா நீட் கோச்சிங் அகாடமியில் படித்து தேர்வு பெற்று என்னிடம் ஸ்டெதஸ்கோப் வாங்கிய பொழுது, உண்மையிலேயே தன் பெண் மருத்துவராகிவிட்ட மகிழ்ச்சியில்
என்னுடன் அவர் பங்கு கொண்ட நிகழ்ச்சியில் அவருடைய பேச்சாற்றலையும் அடக்கத்தையும் கண்டு நான் வியந்த தருணங்கள் உண்டு அன்னாரது மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்க கடமைப்பட்டிருப்பதோடு அவருடைய குடும்பம் இந்தத் துயரத்தில் இருந்து மீண்டு வாழ்க்கையை எதிர் கொள்ள இறைவனை இறைஞ்சுகிறேன்.
சமீபத்தில் மறைந்த நடிகர் திரு. மயில்சாமி அவர்கள், நான் அதிகம் படிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே, படித்தவர்களை விட அற்புதமான கருத்துக்களை மேடையில் அள்ளித் தெளிக்க கூடிய பிறருக்கு உதவுவதை வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த மனிதநேயம் உள்ள ஒரு மாபெரும் மனிதர்.
எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அருமை நண்பர் திரு. சிவக்குமார் அவர்களுடைய இல்லத்தில் அவருடைய கம்ப ராமாயணம் மகாபாரதம் திருக்குறள் உரைகளை மணிக்கணக்காக அமர்ந்து கேட்டு ரசித்த பிறகு எங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டு தாய் தமிழால் இணைந்த தருணம்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
முனைவர்.
அ.கலியமூர்த்தி த.கா.ப
முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர்
என் இதயபூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
எதிர் வரும் 2023 ஆம் ஆண்டு, நீங்கள் எல்லா வளமும், நலமும் பெற்று சிறப்புடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்
என்றும் மாறாத அன்புடன்,
அ.கலியமூர்த்தி
https://t.co/X9USMEJ8JR
OUR BODIES MAY BE LIMITED , BUT IT'S OUR SPIRIT THAT'S UNSTOPPABLE. My daughter's writing in Medium on ageing. Hope it's a treat to your soul.
என் இதயத்திற்கு இனிய அனைத்து நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
Dr.அ. கலியமூர்த்தி SP(r)
பாரிஸ் நகரத்தில் நானும், INDIAN AMBASSADOR TO FRANCE, MAYOR OF PARIS, MEMBER OF PARLIAMENT PARIS மற்றும் பாரிஸ் தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் ஆகியோரும் இணைந்து தமிழர்களால் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மறக்க முடியாத மாபெரும் தருணம்.
என் நெஞ்சம் நிறைந்த அன்பு உள்ளங்களுக்கு எனது இதயபூர்வமான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நீங்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன். என்றும் மாறாத அன்புடன்
அ. கலியமூர்த்தி.