காவல்துறையின் இந்த அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது!
நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களை அவதூறாக பேசிய திரு. ஆ.ராசாவை கண்டித்து போராடிய பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை கைது செய்திருப்பது அராஜகத்தின் உச்சம்.
காவல்துறையின் அராஜகப்போக்கால் சிவகங்கை இளைஞர் திரு. அஜித் குமார் பலியான நிலையில், அதைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல், இன்று காலை பாஜக நிர்வாகி திரு.பிரவீன் ராஜ் அவர்களையும், மாலையில் அறவழியில் போராடிய நமது மாநிலத் துணைத் தலைவர் திரு. நாராயணன் திருப்பதி அவர்களையும் கைது செய்துள்ளது @arivalayam அரசு. சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தும் இந்த திமுக ஆட்சியின் அதிகார மமதையே 2026-இல் அவர்களை வீட்டிற்கு அனுப்பும்.
𝐀 𝐇𝐢𝐬𝐭𝐨𝐫𝐢𝐜 𝐒𝐩𝐢𝐫𝐢𝐭𝐮𝐚𝐥 𝐆𝐚𝐭𝐡𝐞𝐫𝐢𝐧𝐠 𝐢𝐧 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮!
The ‘Muruga Bakthargal Manadu’ – a grand spiritual conference of Lord Murugan devotees – was held yesterday, on 22nd June 2025, in Madurai.
Organised by Hindu Munnani, the event witnessed an unprecedented spiritual awakening, with over 5 lakh devotees visiting the beautifully recreated models of the Aaru Padai Veedu (the 6 sacred abodes of Lord Muruga) over the past five days.
On the day of the conference alone, around 2.5 lakh devotees gathered in devotion and unity, making it the first spiritual event of this magnitude in Tamil Nadu. The massive crowd was seamlessly managed by the selfless service of over 3,000 volunteers from Hindu Munnani and other Sangh Parivar organisations.
This was not just a spiritual congregation — it was a reaffirmation of Tamil Nadu’s deep-rooted Hindu culture, devotion, and collective strength.
Murugan’s grace was felt. Sanatana Dharma stood tall. 🙏
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த ஒரு வயதான தம்பதியினர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள, செய்தியை அறிந்து கடும் அதிர்ச்சியுற்றேன்.
தமிழகத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை வழக்கிலேயே இன்னும் எவ்வித தடயத்தையும் @arivalayam அரசு கண்டுபிடிக்காத நிலையில் கொங்குப் பகுதியில் மீண்டும் மீண்டும் அரங்கேறி வரும் இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் நம்மை அச்சத்தில் உறைய வைப்பதோடு, திராவிட மாடல் ஆட்சியில் சிறு குழந்தைகள் முதல் வயதானோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை என்ற கசப்பான உண்மையையும் நமக்கு உணர்த்துகிறது.
எனவே, தமிழகத்தில் இத்தனை துணிச்சலாக அதிகரித்து வரும் கொலை, கொள்ளைக் குற்றங்களால் பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கின் மீதான நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்து விடும் அபாயம் உள்ளதால், இந்தக் கொடும் குற்றத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து கைது செய்வதுடன், சீர்கெட்டுப் போய் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கையும் தாமதிக்காமல் நெறிப்படுத்த வேண்டுமென தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களை வலியுறுத்துகிறேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"காலடி”யில் பிறந்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஆன்மிக பயணம் செய்து, சநாதன தர்மத்தை ஒளிபெறச் செய்து, அத்வைத தத்துவத்தை நிலைநிறுத்திய ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தியில் அவரை போற்றி வணங்குவோம்.
சாதி வேறுபாடுகளைக் கடந்து பக்தி மார்க்கத்தின் மூலம் அனைவரும் இறைவனை அடையலாம் என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்திய ஸ்ரீ ராமானுஜரின் ஜெயந்தி நாளான இன்று சமூகத்தில் சமதர்மத்தை நிலைநாட்டப் பாடுபடுவோம் என உறுதி ஏற்போம்.
நடிப்பு, கார் பந்தயம், துப்பாக்கி சுடுதல், ட்ரோன் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் தனது திறமையாலும், கடின உழைப்பாலும் முத்திரை பதித்து, உலக மேடைகளில் நமது மூவர்ணக் கொடியை தூக்கி பிடித்து, நாட்டின் உயரிய “பத்ம பூஷண்” விருதை பெற்று நமையெல்லாம் தொடர்ந்து பெருமைப் படுத்திக்கொண்டிருக்கும் என் அன்பிற்குரிய திரு. அஜித் குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!
மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் சேர்த்து எடுக்கப்படும் என்ற நமது மத்திய அமைச்சரவைக் குழுவின் அறிவிப்பை மனதார வரவேற்கிறேன்.
சாதிவாரி கணக்கெடுப்பை மையமாக வைத்து நாட்டில் குழப்பத்தை உண்டு செய்ய நினைத்தவர்களின் அரசியல் சதியை உடைத்தெறிந்த நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடியின சமூக மக்களின் உரிமைகளை வெறும் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தும் கட்சிகளுக்கு மத்தியில், பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் மட்டும் தான் மெய்யான சமூகநீதியின் காவலராக விளங்குகிறார் என்பது மீண்டுமொருமுறை உறுதியாகியுள்ளது.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்படாததால், ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரின் எதிர்காலமும் சிதைந்து வருகிறது. அதனைத் தடுக்க உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் திரு @mkstalin அவர்களை வலியுறுத்துகிறேன்.
ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட காஞ்சி சங்கர மடத்தின் 71- வது இளைய மடாதிபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட ஶ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் சந்யாச தீட்சை வழங்கும் விழாவிற்கு நேரில் சென்று பங்கேற்றதில் மிக்க மகிழ்ச்சி.
பழமை வாய்ந்த சங்கர மடத்தின் பாரம்பரியத்தையும் வேத ஒழுக்கத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவிருக்கும் அவருக்கு எனது நல் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது பாரதம் தர்மகர்ம பூமியாகத் திகழ்வதும், அதன் புண்ணியம் காக்கப்படுவதும் சந்யாசிகள் மற்றும் நம் ஞான குருக்களின் ஆசீர்வாதத்தினாலேயே!
It was a great joy to personally attend the anointment of Sri Sathya Chandrasekharendra Saraswati Swamigal, the 71st Acharya of the Kanchi Kamakoti Peetham, founded by the great teacher Adi Shankaracharya.
I extend my respectful greetings to him as he prepares to carry forward the timeless parampara of the Mutt to the next generation.
Our great nation continues to shine as a Dharmakshetra due to the blessings of our sannyasis and jnana gurus.
Hon. BJP National President and Union Minister Shri @JPNadda Ji's Public Programs in Tamil Nadu on 3rd May 2025.
Watch Live-
📱https://t.co/8W84hmDhpW
📱https://t.co/qpljG4G7Jz
📱https://t.co/NPs3aOvCXh
உளுந்தூர்பேட்டை அருகே, மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள் சென்ற வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதாக வெளியான தகவலறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.
உடனடியாக தொலைபேசி வாயிலாக மதுரை ஆதீனம் சுவாமிகள் அவர்களைத் தொடர்பு கொண்டு அவரது நலம் குறித்து விசாரித்த போது, லேசான காயங்களுடன் தான் நலமாக இருப்பதாக அவர் தெரிவித்த பிறகே நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது.
தமிழகத்தில் மிகப்பழமையான சைவ மடங்களில் ஒன்றாகவும், ஞானசம்பந்த பெருமானால் புனரமைக்கப்பட்டதுமான மதுரை ஆதீனத்தின் சமயப் பணி என்பது அளவிட முடியாதது. மதுரையின் அடையாளங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் பீடாதிபதி இப்படி ஒரு விபத்தில் சிக்கியது மிகுந்த மன வேதனையளிக்கிறது.
மேலும், அவரது வாகனத்தை விபத்துக்குள்ளாக்கி விட்டு, நிற்காமல் சென்ற அந்த வாகனம் யாருடையது என்பதையும் அதில் இருந்ததாக கூறப்படும் இரண்டு மர்ம நபர்கள் யார் என்றும் உடனே கண்டுபிடித்து, தீர விசாரித்து தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
கோடை காலத்தினை முன்னிட்டு கோவை தெற்கு தொகுதி வார்டு எண் 66 ராமநாதபுரம் கிட்னி சென்டர் பேருந்து நிலையம் அருகில் பொது மக்களின் தாகம் தீர்க்க அமைக்கப்பட்ட நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தலினை கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து திறந்து வைத்தேன்.
#ValarchiwithVanathi#kovaisouth
வக்ஃப் விவகாரத்தில் எதிர்கட்சிகள் நாட்டின் முஸ்லீம்களை தவறாக வழி நடத்துகின்றன. அவர்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
- மத்திய உள்துறை அமைச்சர் திரு.@AmitShah அவர்கள்