கேட்பதே எவ்வளவு பெரிய விஷயம்! மக்கள் தான் அதிகாரம் என்பதை உணர்த்தும் தருணம் இது 👌👌
மதுரையில் இனி எல்லா தொகுதிகளிலும் TVK வெல்லும் அளவுக்கு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் வேலை பாருங்க💪🔥
சூப்பர் bro @VijayAnban_offl 👏👏
மாணவர்களின் நலனைக் கருதி உடனடியாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் ஒரு தற்காலிகத் தீர்வு மட்டுமே இது!
இப்பகுதியில் சாலை குண்டும் குழியுமாக இருந்ததன் காரணமாக மழைநீர் அதிகளவில் தேங்கி, தினசரி பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் நமது மாணவ-மாணவியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனை முழுமையாகச் சரிசெய்யும் வகையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டோம். மாணவர்கள் எந்தவித இடர்ப்பாடுகளும் இன்றி பாதுகாப்பாகத் தங்கள் கல்வி நிலையங்களுக்குச் சென்று வர ஏதுவாக, இப்பகுதியில் மிக விரைவில் தரமான புதிய தார்ச்சாலை அமைத்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம்.
@CMOTamilnadu | @BussyAnand@KallanaiMLA | @TVKITWingMaduri@TVKVijayHQ | @TVKHQ_Madurai
இன்று (19.10.2026) மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட புதூர் பகுதி, ராம வர்மா நகர் மற்றும் சங்கர் நகர் 2வது தெருவில் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடித் தேங்கி நின்றதால், அப்பகுதிப் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாகப் புகார்கள் வந்தன.
மக்களின் இந்தத் துயரத்தை அறிந்த உடனேயே, மாநகராட்சி உயர் அதிகாரிகள் மற்றும் உதவிப் பொறியாளர் (AE) ஆகியோரை நேரில் அழைத்துச் சென்று அந்தப் பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
தாய்மார்கள் மற்றும் பொதுமக்களிடம் “இன்னும் ஓரிரு தினங்களுக்குள் இப்பகுதியில் தேங்கும் கழிவுநீரை முழுமையாக அகற்றி உடனடித் தற்காலிகத் தீர்வு செய்து தரப்படும்.” மேலும்
“அடுத்த 10 தினங்களுக்குள் இப்பிரச்சனைக்கு முழுமையான நிரந்தரத் தீர்வு காணப்படுவதோடு, புதிய தார்ச்சாலையும் முழுமையாக அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்” என உறுதியளித்தேன்.
— விஜய் அன்பன் கல்லாணை
சட்டமன்ற உறுப்பினர், மதுரை வடக்கு தொகுதி
மாவட்டக் கழகச் செயலாளர், மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்
@CMOTamilnadu | @BussyAnand@KallanaiMLA | @TVKHQITWingOffl@TVKITWingMaduri | @TVKHQ_Madurai
#TVKMadurai #FieldAction #Pudur #MLAMaduraiNorth #CivicAction
இன்று(19.10.2016) நமது மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட மாட்டுத்தாவணி 120 அடி சாலையில் இருந்து சர்வேயர் காலனி செல்லும் பாதையில், சாக்கடை கழிவுநீர் சாலையில் தேங்கி நின்றதால், அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
தகவல் அறிந்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் உதவிப் பொறியாளர்களை நேரடியாக அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று எப்போதும் களத்தில் அர்ப்பணிப்புடன் உழைக்கும் நமது மாநகராட்சிப் பணியாளர்களின் உதவியுடன் அதிநவீன கழிவுநீர் உறிஞ்சும் வாகனத்தைக் கொண்டு தேங்கிய கழிவுநீர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.
இனி அப்பகுதியில் கழிவுநீர் கசிந்து சாலையில் தேங்கி நிற்காத வகையில் உரிய வழிவகை செய்யப்பட்டு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.
— விஜய் அன்பன் கல்லாணை
சட்டமன்ற உறுப்பினர், மதுரை வடக்கு தொகுதி
மாவட்டக் கழகச் செயலாளர், மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்
@CMOTamilnadu | @BussyAnand@KallanaiMLA | @TVKITWingMaduri
#FieldWork #MaduraiNorthMLA #VijayAnbanKallanai #TVKMadurai
உழைப்பின் உன்னதத்தையும், தொழிலின் நேர்த்தியையும் கொண்டாடும் புனிதம் நிறைந்த ஆயுத பூஜை மற்றும் புதிய தொடக்கங்களுக்கு வழிகோலும் விஜயதசமி நன்னாளை முன்னிட்டு..
இன்று மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் அதன் வளாகத்தில் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் இயங்கி வரும் இ-சேவை மையத்திலும், மக்கள் பணிகளுக்குத் துணையாக நிற்கும் சாதனங்களை வணங்கி எளிய முறையில் வழிபாடு செய்தோம்.
நமது மக்கள் முதல்வர் தலைவர் தளபதி அவர்களின் பொற்கால வழிகாட்டலில், நாம் தொடும் காரியங்கள் யாவும் வெற்றியாக மாறட்டும்; மக்களின் வாழ்வில் நலமும் அமைதியும் நிலைக்கட்டும்!
@CMOTamilnadu | @BussyAnand@KallanaiMLA | @TVKITWingMaduri
#AyuthaPooja #Vijayadashami #MaduraiNorth #மதுரை #மதுரைவடக்கு
அதிகாரிகளின் மேஜையில் உங்கள் மனுக்கள் தூங்காது; மக்களின் குறைகளை வெறும் மனுவாகப் பார்க்காமல், அவர்களின் உரிமைக்கான குரலாகக் கொண்டு தீர்வு காண்பதே எங்கள் தளபதியின் வழி!
- @VijayAnban_offl ❤️
@CMOTamilnadu | @BussyAnand@KallanaiMLA | #மதுரை
நமது மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட புதூர், கற்பக நகர் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் 6 வார்டுகளுக்குரிய பிரதான மையமாக இயங்கி வருகிறது. இந்த 6 வார்டுகளின் கழிவுநீரும் பம்பிங் ஸ்டேஷனைச் சென்றடையும் பிரதான மெயின் குழாயில் (Main Pipeline) திடீரென உடைப்பு ஏற்பட்டு அப்பகுதியில் பெரிய பள்ளம் உருவானது.
பொதுமக்கள் தொடர்ந்து தெரிவித்த புகார்களை கவனத்தில் கொண்டு, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டேன்.
சுமார் 26 அடி ஆழத்தில் உள்ள மூன்று பிரதான குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு, கடந்த 3 நாட்களாக மாநகராட்சி ஊழியர்களால் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
களத்தில் நின்ற ஊழியர்களிடம் பணிகளின் தீவிரத்தைக் கேட்டறிந்து, இது போன்று எதிர்பாராமல் ஏற்படும் பாதிப்புகளால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதை உணர்ந்து பணிகளை முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டேன்.
பொதுமக்களுக்கு எவ்வித சுகாதாரக் கேடும் ஏற்படாமல், இப்பிரச்சனைக்கு மிக விரைவில் நிரந்தரத் தீர்வு காணப்படும்!
பொதுமக்களுக்கு எவ்வித சுகாதாரக் கேடும் ஏற்படாமல், இப்பிரச்சனைக்கு மிக விரைவில் நிரந்தரத் தீர்வு காணப்படும்!
— விஜய் அன்பன் கல்லாணை
சட்டமன்ற உறுப்பினர், மதுரை வடக்கு தொகுதி
மாவட்டக் கழகச் செயலாளர், மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்
@CMOTamilnadu | @BussyAnand@KallanaiMLA | @TVKITWingMaduri
#MaduraiNorth #Pudur #FieldInspection #KarpagaNagar #PumpingStation
லஞ்சம் தவிர்!!
நெஞ்சம் நிமிர்!!
தமிழக முதல்வர் தலைவர் தளபதி அவர்களின் எண்ணத்தை செயலாக்கும் முயற்சியில்!!
மதுரை வடக்கு தொகுதியில் அரசு துறைகளில் லஞ்சமற்ற ஊழலற்ற மக்கள் சேவையை கட்டமைக்க உறுதியேற்போம்!!
மதுரை விஜய் அன்பன்
#AntiCorruption#PeopleCM#ThalapathyCmVijay
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதி அவர்கள் நல்லாசியுடன்,
இன்று பிறந்தநாள் காணும் எனது குரு தளபதியாரின் நம்பிக்கை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அன்பிற்கினிய பொதுச்செயலாளர் N. ஆனந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அழகிய தருணம்!
@CMOTamilnadu | @BussyAnand
@VijayAnbanMLA | @tvkitwingmaduri
#தமிழகவெற்றிக்கழகம் #மதுரை
மாண்புமிகு முதல்வர் தலைவர் தளபதி அவர்களின் நல்லாசியுடன்
இன்று பிறந்தநாள் காணும்
கழகமே பேச்சாக!!
தளபதியே மூச்சாக!!! வாழும்
அண்ணன்
தளபதியாரின் @TVKVijayHQ முதன்மைத் தொண்டரே!! @BussyAnand
வாழ்க வாழ்க வாழ்கவே!!
மதுரை விஜய் அன்பன்
இன்று அதிகாலை மதுரை கொட்டாம்பட்டி அருகே அரசுப் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் விபத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நேரில் சென்று நலம் விசாரித்து அவர்களுக்கு உரிய உயரிய சிகிச்சை வழங்குவதாக கூறி ஆறுதல் தெரிவித்ததோடு மேற்படி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவோம் எனவும் உறுதியளித்தோம்.
@CMOTamilnadu | @BussyAnand
@VijayAnbanMLA | @tvkitwingmaduri
#Madurai #Melur #Busaccident
தனது இரண்டு மாத சட்டமன்ற உறுப்பினர் ஊதியத்தை முழுமையாக “தளபதி விஜயின் கல்விக் கரம்” என்ற கல்வி உதவித் திட்டத்தை முழியமாக மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு விஜய் அன்பன் கல்லானை அவர்கள் இன்று மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்❤️
#TVKVijay#MLAOfMaduraiNorth#TvkForTN
“கல்வியே ஒரு தலைமுறையின் எதிர்காலம்!”
நமது மதுரை வடக்கு தொகுதியில் பெற்றோரை இழந்த மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளின் கல்விக் கனவுகளை நனவாக்க, “தளபதி விஜயின் கல்விக் கரம்” கல்வி உதவித் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தேன்.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, எனது 2 மாத சட்டமன்ற உறுப்பினர் ஊதியத்தை முழுமையாக கல்வி உதவிக்காக வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மாணவர்களின் கல்விக்கு என்றும் துணையாக நிற்போம்! 📚🤝
(1/2)
@CMOTamilnadu | @BussyAnand@TVKVijayHQ | @VijayAnbanMLA
#MLAOfMaduraiNorth #TVK
#தமிழகவெற்றிக்கழகம் #மதுரை
இன்று (09.07.2026) மதுரை வடக்கு தொகுதி 37வது வார்டுக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ மகேஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு அம்மனின் பேரருளைப் பெற்றதோடு, தொடர்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்வையும் தொடங்கி வைத்து, அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து நல்உணவு உட்கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!🙏🏽
(1/2)
@CMOTamilnadu | @BussyAnand
#MLAOfMaduraiNorth #Madurai
#மதுரைவடக்கு #கும்பாபிஷேகம்
இன்று மதுரையில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பாக செயல்படுத்தி வரும் செயல்படுத்தப்போகும் திட்டங்களை மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு ராஜ்குமார் அவர்களுடன் ஆய்வு செய்த போது.
@CMOTamilnadu | @BussyAnand
@VijayAnbanMLA | @tvkitwingmaduri
#MLAOfMaduraiNorth #TVK
#தமிழகவெற்றிக்கழகம் #மதுரை