தெலுங்கர் - கன்னடர் – மலையாளிகள் தமிழர்களைப் படுகொலை செய்கிறார்கள்!தமிழர்களே இன உணர்ச்சியே தற்காக்கும்!
===================================
ஐயா பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
===================================
சென்னை மாநகரத்தில் இயக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளுக்கான ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப உதவியாளர்கள் என 1,797 பணி இடங்களுக்கு, நாட்கூலி அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்தித் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்க்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான டெண்டர் தி.மு.க. ஆட்சியில் போடப்பட்டது. இப்போது செயல்பாட்டிற்கு வருகிறது.
உ.பி.யிலிருந்து ஒப்பந்தக் கூலிகளாக இந்திக்கார ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப உதவியாளர்களை அமர்த்தும் பணியில் இப்போதுள்ள த.வெ.க. ஆட்சி இறங்கியுள்ளது. கடந்த 7.8.2026 முதல் உ.பி.காரர்களை சென்னையில் வேலைக்கு அமர்த்தும் பணி தொடங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத் தொழிலாளிக்கு ஒரு நாள் ஊதியம் 700 ரூபாயாம்!
இந்தச் செய்தி தெரிந்தவுடன் சி.பி.எம். கட்சியின் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தினர் 18.8.2026 அன்று சென்னை மாநகரில் - போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி, இந்திக்காரர்களை வேலைக்கு அமர்த்தும் திட்டத்தைக் கைவிடக் கோரியுள்ளனர்.
"தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள பணி இடங்களில் தமிழர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்" என்று சி.பி.எம். கட்சியின் சி.ஐ.டி.யு. கோரிக்கை வைத்துள்ளது. (தினமலர் 19.8.2026). "தமிழர்" என்று பேசினாலே "இனவாதம்", "பிரிவினைவாதம்" என்று பேசும் சி.பி.எம். கட்சியினர் தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று கோரிப் போராடியிருப்பது பாராட்டிற்குரியது.
தமிழ்நாட்டில் இந்திக்காரர்களை முதலாளிகளாகவும் தொழிலாளிகளாகவும் தி.மு.க. ஆட்சி திணித்து வந்துள்ளது. அதை அப்படியே செயல்படுத்த தி.மு.க. ஆட்சி தொடர் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திக்காரர்களைத் திணிப்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு (அதி.மு.க. பொதுச் செயலாளர்) மாறுபட்ட கருத்து வேறு எதுவும் இருக்காது.
தமிழ்நாட்டில் செழித்திருப்பது போன்ற இனத்துரோக அரசியல் வேறு எந்த மாநிலத்திலும் இருக்காது. இந்தியன் - பாரதீயன் என்ற ஆரியத்துவ மேலாதிக்கக் கற்பனை இனப் பெயர் - தமிழ்நாட்டில் வேர் விட்டிருப்பது போல் வேறு எந்தத் தென் மாநிலத்திலும் இல்லை. கர்நாடகத்தில் காங்கிரசு ஆண்டாலும் பாசக ஆண்டாலும் கன்னட இனவெறி கோலோச்சும்.
கர்நாடகத்தில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தமிழர்கள் மண்ணின் மக்களாகத் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். அங்கே ஹனூர் காட்டுப் பகுதியில், காணாமல் போன தங்கள் மாடுகளைத் தேடிப்போன அப்பாவித் தமிழர்கள் மூன்று பேரைக் கர்நாடக வனத்துறையினர் சுட்டுக் கொன்றுவிட்டனர். அந்தத் தமிழர் படுகொலையைக் கண்டித்துத் தமிழ்நாடு முதலமைச்சரும் எதிர்க்கட்சியினரும் அறிக்கை வெளியிட்டார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த கர்நாடகக் காங்கிரசு முதலமைச்சர் டி.கே. சிவகுமாரும் கர்நாடக வனத்துறை அமைச்சர் இராமலிங்க ரெட்டியும், கர்நாடகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டிக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு உரிமை இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். கர்நாடகத்தின் மாநில விவகாரத்தில் தமிழ்நாடு தலையிடக் கூடாது. சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தமிழர்களாக இருந்தாலும் அவர்கள் கன்னடர்கள் - அவர்களுக்கு ஆதரவாகப் பேச தமிழ்நாடு முதலமைச்சர் உட்பட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறியுள்ளார்கள்.
கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டால், தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் கண்டிக்கக் கூடாது; இந்திய அரசு எப்பொழுதுமே கண்டிக்காது. இதன் பொருள் என்ன? இந்தியாவில் தமிழர்கள் அரசியல் அநாதைகளாக இருக்கிறோம். அது தொடர வேண்டும் என்பதே கன்னட அரசியல்வாதிகளின் விருப்பம்.
காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்கால அறிக்கை செல்லும் என்று இந்திய அரசு அறிவித்ததற்காகக் கர்நாடகத்தில் 1991 நவம்பரில் காலம் காலமாக அங்கு வாழும் தமிழர்களை ஏராளமாக இனப்படுகொலை செய்தவர்கள் கன்னடர்கள். தமிழர்களின் கடைகளைச் சூறையாடினார்கள், வீடுகளை இடித்துத் தகர்த்து எரித்தார்கள். இரண்டு இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் - தமிழ்நாட்டிற்கு அகதிகளாக ஓடி வந்தார்கள்.
தமிழினப் பாதுகாப்பும் - தமிழினச் சார்பும் இல்லாத அரசியல் தமிழ்நாட்டில் கோலோச்சுவதால் - தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் அனாதைகள் ஆகியுள்ளோம்.
ஏற்கெனவே, ஆந்திர வனத்துறையினர் பேருந்தில் பயணம் செய்த தமிழ்நாட்டுத் தமிழர்கள் 20 பேரை இறக்கிக்கொண்டு போய் – செம்மரம் கடத்த வந்ததாகப் பொய்க் குற்றம் சாட்டி சுட்டுக் கொன்று படம் எடுத்துப் போட்டுக் களியாட்டம் செய்தார்கள்.
முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதற்காகக் கேரளத்தில் மலையாளிகள் தமிழர்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் நடத்தினார்கள். ஒரு தமிழர் மீது வெந்நீர் ஊற்றிக் கொன்றார்கள்.
ஈ.வெ.ரா - அண்ணாத்துரை - கருணாநிதி ஆகியோர் தமிழ்நாட்டில் திராவிட இனம் என்ற அயல் இனத்தைத் திணித்து, தெலுங்கர், கன்னடர், மலையாளி அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டினார்கள்.
தமிழனே, தமிழச்சியே - நீங்கள் பாரதீயர் அல்லர், திராவிடர் அல்லர்; தமிழர்கள்! உங்களை அரவணைத்தும் அழிப்பார்கள், பகைத்தும் அழிப்பார்கள் மேற்படியார்!
தமிழின உணர்ச்சியே தற்காப்பு ஆற்றல்! அரசியல் வேறுபாடுகளை அடுத்த இடத்துக்குத் தள்ளித் தமிழினத் தற்காப்புணர்ச்சி கொள்! ஒருங்கிணை! பகைவர்களை எதிர்கொள்!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 9840848594, புலனம் : 9841949462
முகநூல் : https://t.co/Rm3OTXafKD
ஊடகம் : https://t.co/kYqtmUASQD
இணையம் : https://t.co/IZDxchd0Lf
சுட்டுரை : https://t.co/9LNpr25XDb
காணொலிகள் : https://t.co/XVc9CRqVmh
===============================
*மலேசியாவில் தமிழ்ச்சமய மாநாட்டில் ஐயா பெ. மணியரசன் பங்கேற்பு!*
==============================
மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை சார்பில், நேற்று 16.09.2025 அன்று எழுச்சியோடு நடைபெற்ற ஐந்தாம் தமிழ்ச் சமய மாநாட்டில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ. மணியரசன் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
மலேசியாவின் சிலாங்கூரிலுள்ள பத்து மலை முருகப் பெருமாள் திருக்கோயில் திருமண மண்டபத்தில் நேற்று 16.09.2025 செவ்வாய் காலை முதல் மாலை வரை நடைபெற்ற இம்மாநாட்டில் “தமிழ்ச் சமய இறையாண்மை” என்ற தலைப்பில் ஐயா பெ. மணியரசன் அவர்கள் சிறப்புரையாற்றினர். ஐயா மணியரசன் அவர்களின் செயல்பாடுகளைப் போற்றும் வகையில் மலேசியா வாழ் தமிழர்கள் ஐயாவுக்கு சிறப்பு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டனர்.
தமிழ்நாட்டிலிருந்து கோவை பேரூர் ஆதினம் திருப்பெருந்திரு. சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் அவர்களும், தமிழிய வரலாற்று ஆய்வாளர் திரு. இரா. மன்னர்மன்னன் அவர்களும், நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. புகழ். நல்லரசன் அவர்களும் இம்மாநாட்டில் உரையாற்றினர்.
பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், அதில் சிறந்து விளங்கியோருக்குப் பரிசளிப்பு மற்றும் பாராட்டும் வழங்கப்பட்டது.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : https://t.co/Rm3OTXafKD
ஊடகம் : https://t.co/kYqtmUASQD
இணையம் : https://t.co/IZDxchd0Lf
சுட்டுரை : https://t.co/9LNpr25XDb
காணொலிகள் : https://t.co/XVc9CRqVmh
==============================
Tamil Nadu is the powerhouse of India’s industrial workforce!
திராவிடத்தால் வாழ்கிறோம்!
திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும்!
திரு. அமித் ஷா முதல் திரு. பழனிசாமி வரை தி.மு.க. ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசே தந்துள்ள 'நெத்தியடி பதில்' இதோ!
சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் - போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது!
#DravidianModel ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்! அரசியல் காழ்ப்புணர்வில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள்!
🗳️ The BJP has turned the Election Commission into its poll rigging machinery. What happened in #Bengaluru's #Mahadevapura is not an administrative lapse, it is a calculated conspiracy to steal the people’s mandate.
🗳️ The #VoteTheft evidence presented by my brother and LoP Thiru. @RahulGandhi exposes the scale of this fraud. Today, as Thiru. #RahulGandhi leads MPs of the #INDIA bloc in a march from Parliament House to the #ECI, we demand
👉🏾 The immediate release of complete machine readable voter roll for every State,
👉🏾 An end to politically driven deletions, and
👉🏾 An independent probe into this subversion of our democracy.
👨🏿🤝👨🏿 #DMK stands shoulder to shoulder in this fight. We will not watch in silence while the BJP robs India’s democracy in broad daylight.
#VoteChori #RahulExposesVoteChori
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் அறிவரங்கம் நிகழ்ச்சி - “தமிழரின் தொன்மையும், தொடர்ச்சியும் - தொடர் கூட்டம்”, துவக்க விழாவில் ஐயா பெ. மணியரசன் மற்றும் திரு. மன்னர் மன்னன்.
ஆரியத்தின் அடியாள் படையாக நிற்கிறது திராவிடம்!
==============================
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் 12.07.2025 அன்று நடைபெற்ற “கூட்டரசுக் கோட்பாடு"* விளக்கக் கூட்டத்தில்...
_தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ஐயா_ கி. வெங்கட்ராமன்* அவர்களின் உரை!
தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://t.co/lPeMe9cmze
===============================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================
இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி இரண்டாம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள்.
இந்தித் திணிப்புக்கு எதிராகச் சகோதரர் #UddhavThackeray அவர்கள் தலைமையில் இன்று மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது.
"உத்தர பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன?" என்றும், "இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன - இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள்?" என்றும் திரு. #RajThackeray அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற ஒன்றிய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை நன்றாக அறிவேன்.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி - சமஸ்கிருதத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்ஷா அபியான்) நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழ்நாட்டைப் பழிவாங்கும் போக்கை ஒன்றிய அரசு மாற்றிக் கொள்ளுமா? தமிழ்நாட்டுப் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகச் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமா?
இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது! தர்க்கப்பூர்வமானது! இந்தியாவின் பன்மைக் கலாசாரத்தை பாதுகாப்பதற்கானது! வெறுப்பின்பாற்பட்டது அல்ல!
இந்தித் திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை இந்தி நாடாக்கும் செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமலும், "இந்தி படித்தால் வேலை கிடைக்கும்" என்ற பசப்பு வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைகளைப் போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர், இனியாவது திருந்த வேண்டும். மராட்டியத்தின் எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்!
தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவம் நீடிக்க விட மாட்டோம். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும் அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்!
ஒன்றிணைவோம் வா!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#StopHindiImposition
கர்நாடகத்தில் கன்னடர் வெறியாட்டம்
தமிழர்களோ அரசியல் அனாதைகள்!
=====================================
கர்நாடகத்தில் கன்னட வெறியர்கள் நடத்தும்
கமலகாசன் எதிர்ப்பு தமிழர் எதிர்ப்பு வெறியாட்டத்தைக் கண்டித்து
தஞ்சையில் 29-5-2025 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில்
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் உரை!
=====================================
தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://t.co/gBrQBeISnt
=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
====================================
*கர்நாடகத்தில் கன்னடர் வெறியாட்டம்*
*தமிழர்களோ அரசியல் அனாதைகள்!*
=====================================
கர்நாடகத்தில் கன்னட வெறியர்கள் நடத்தும்
கமலகாசன் எதிர்ப்பு தமிழர் எதிர்ப்பு வெறியாட்டத்தைக் கண்டித்து
தஞ்சையில் 29-5-2025 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில்
*தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்*
*பெ. மணியரசன் உரை!*
=====================================
தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://t.co/gBrQBeJqd1
=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
====================================
சோழர்கள் மீதான திராவிட அவதூறுகள்!
=====================================
வரலாற்று ஆய்வாளர்
இரா. மன்னர் மன்னன் உரை!
=====================================
தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://t.co/AUfXO9gqez
=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
====================================
பாத்துட்டு நல்ல கதறுங்கடா...!
200உபிகள் + சங்கிகள் + சினிமா உலகத்தில் வாழும் அணில்கள் 🤡
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை..!✊🏻💥
#நாம்தமிழர்கட்சி#தமிழ்தேசியம்
தமிழின அரசியல் தமிழ்நாட்டில் இருந்திருந்தால்
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நடந்திருக்காது!
==============================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ.மணியரசன் பேச்சு!
தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://t.co/HriwuWIsUO
==============================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
சீமான் அவர்கள் பங்கேற்பது
காலை 11 மணி
- - -----------------------------------
மாலை 3 மணி அல்ல. நேரம் மாற்றப்பட்டுள்ளது.
20.04-25 ஞாயிறு அன்று
காலை 11-மணிக்கு, பேராயர் சாம் ஏசுதாஸ் அவர்கள் தலைமையில்,
நாம், தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கலந்து கொண்டு, பேராசான் பெ.மணியரசன் அவர்களை வாழ்த்தி சிறப்புரையாற்றுகிறார்.
உணவு இடைவெளிக்கு பிறகு மதியம் 3 மணிமுதல் மாலை 6 - மணி வரை ஐயா பெ.ம.வுடன் ராவணாவுக்கான சிறப்பு நேர்காணல் அங்கேயே நடைபெறும்.
ஐயா, பெ.மணியரசன் அவர்களிடம் கேள்வி கேட்க விரும்பும் இளைஞர்கள்
தமிழ்த் தேசிய அரசியல் களம் குறித்து உங்களுக்கான கேள்விகளை
பேராசானிடம் கேட்கலாம்.
பிரபல வார இதழ்களில் ஓவியராக இருக்கும் பாரதிராஜாவின் இரண்டு சிறப்பு ஓவியங்கள், பேராசான் அவர்களுக்கும், அரசியல் களத்தில் தவிர்க்கவே முடியாத ராஜாளிப் பறவை செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் அளிக்கப்பட உள்ளது.
உறவுகளோடு கலந்து கொண்டு சிறப்பிக்க,
நீங்களும் வாங்க...
இடம்: எண் 10. வ.உ.சி.தெரு.
முத்தமிழ் நகர் - பம்மல்
சென்னை - 600 075.
*தொடர்புக்கு -+919445713586*
மாநிலத்தை மாநகராட்சி ஆக்குது பாசக!
மாநில சுயாட்சிக்கு காங்கிரசும் எதிரியே!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன்
தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://t.co/Z2jf4enDd8
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594