Warm birthday wishes to the Honourable President of India, Smt. Draupadi Murmu Avl, Your tireless dedication to serving our country is truly inspiring. Wishing you good health and continued strength in your noble journey.
சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெறும் "ஒரே நாடு ஒரே தேர்தல்" கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனசேனா கட்சித் தலைவரும், ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வருமான மாண்புமிகு திரு. @PawanKalyan அவர்களை சென்னையில் மகிழ்ச்சியுடன் வரவேற்றோம்.
சென்னையி��் இன்று நடைபெற்ற MR Function ஹாலின் திறப்பு விழாவில் கலந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சி! இந்த அற்புதமான தருணத்தில், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை சிறப்பித்தார்.
இந்தியாவின் எடிசன் என்று போற்றப்படும் ஐயா ஜி.டி.நாயுடு அவர்கள் பிறந்த தினம் இன்று.
பொதுமக்களுக்குப் பயன்படும் அரிய கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாது, வருங்காலத் தலைமுறையினருக்குப் பயன்ப��ுவதற்காகக் கல்வி நிறுவனங்களை உருவாக்கி, சமுதாயத்தில் எந்திரவியல் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஐயா ஜி.டி.நாயுடு அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
It was a pleasure to throw insights on the topic “Youths for One Nation One Election” among the scintillating young students of Jain University, in Bengaluru today along with eminent guests Thiru Jitendra Mishra avl, Registrar, Jain University, Thiru @CKRBJP avl, Jayanagar MLA, Thiru Ashwathanarayan Gowda avl, Former MLC, and Thiru @NImmabhaskar22 avl, Retd. IPS.
Had the opportunity to share with the young crowd on ONOE their inevitable role in changing the political dynamics of India, similar to the changing political dynamics in European countries such as the US, Italy, and Germany, which have seen a tectonic shift in political course because of the power of the youth and their altered political choices disrupting conventional political landscapes.
நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ ரூபாய் சின்னமான '₹' ஐ நீக்கியுள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது.
திமுகவிற்கு (@arivalayam) உண்மையிலேயே '₹' உடன் பிரச்சனை இருந்தால், 2010 ஆம் ஆண்டு @INCIndia தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ், மத்தியில் ஆளும் கூட்டணியில் ��ிமுக இருந்தபோது, இந்த சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?
'₹' - இந்தச் சின்னத்தை முன்னாள் திமுக எம்எல்ஏ என். தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் வடிவமைத்தார். இப்போது அதை அகற்றுவதன் மூலம், திமுக ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், ஒரு தமிழக இளைஞரின் படைப்பையும் முற்றிலும் புறக்கணிக்கிறது.
மேலும், ரூபாய் என்ற வார்த்தை 'வெள்ளியால் செய்யப்பட்ட' அல்லது 'வேலைப்பாடு நிறைந்த வெள்ளி நாணயம்' என்று பொருள்படும் 'ருப்யா' என்ற சமஸ்கிருத வார்த்தையில் தொடர்பு கொண்டுள்ளது. இந்தச் சொல் பல நூற்றாண்டுகளாக தமிழ் வர்த்தகம் மற்றும் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது, இன்றும் கூட, 'ரூபாய்' என்பது தமிழ்நாடு மற்றும் இலங்கையில் நாணயப் பெயராகவே உள்ளது.
இந்தோனேசியா, மாலத்தீவுகள், மொரிஷியஸ், நேபாளம், சீஷெல்ஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் அதிகாரப்பூர்வமாக 'ரூபாய்' அல்லது அதன் சமமான பெயர்களை தங்கள் நாணயப் பெயராகப் பயன்படுத்துகின்றன.
'ரூபாய்' என்ற சொல், சமஸ்கிருதத்தில் தோன்றியதால், தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் பகிரப்பட்ட கலாச்சார, பொருளாதார மரபாகும் என்பது தெளிவாகிறது.
ரூபாய் சின்னம் '₹' என்பது சர்வதேச அளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நிதிப் பரிவர்த்���னைகளில் இந்தியாவின் அடையாளமாக செயல்படுகிறது. UPI ஐப் பயன்படுத்தி எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் நேரத்தில், நாம் நமது தேசிய நாணய சின்னத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டுமா?
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும், தேசத்தின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விதமாக அரசியலமைப்பின் கீழ் உறுதிமொழி எடுக்கிறார்கள். மாநில பட்ஜெட் ஆவணங்களில் ‘₹’ போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது அந்த உறுதிமொழிக்கு எதிரானதாகும், மேலும் இது தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது.
இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல - இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது. முற்றிலும் தவிர்க்க வேண்டிய, மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரண���ாகவும் இது உள்ளது.
இன்றைய தினம், தென்காசி மாவட்ட @BJP4Tamilnadu சார்பாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில், பெரும் திரளாகக் கூடி, பேரன்பினை வெளிப்படுத்திய மக்கள் மத்தியில் பேசும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. கூட்டத்தில், @BJP4Tamilnadu மாநிலத் துணைத் தலைவரும், சட்டமன்றக் குழுத்தலைவருமான அண்ணன் திரு @NainarBJP அவர்கள், மாநிலப் பொதுச்செயலாளர் திரு @ponbalabjp, கூட்டத்தினை வெகுசிறப்பாக ஏற்பாடு செய்திருந்த, தென்காசி மாவட்டத் தலைவர் திரு @AnanthAyyasamy உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் வெகுசிறப்பாக உரையாற்றினர். (1/6)
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி @nsitharaman அவர்கள் தாக்கல் செய்த, 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டங்களை, தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் @BJP4Tamilnadu நடத்தவிருக்கிறது. அதன் முதல் கூட்டம், இன்று மாலை, சென்னை திருவான்மியூரில், திரளெனக் கூடியிருந்த பொதுமக்கள் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது. (1/5)
மன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் திரு ராம மோகன ராவ் அவர்கள் பாஜக மாநில பொதுச் செயலாளர் திரு ராம சீனிவாசன், நான் மற்றும் சமுதாய தலைவர்கள் மகால் வளாகத்தில் அன்னதானத்தை துவங்கி வைத்த தருணம் 🎉👏
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாமன்னர் திருமலை நாயக்கருக்கு மரியாதை செலுத்துவதற்கு கூட அனுமதி கொடுக்க திமுக அரசுக்கு மனமில்லை.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்தவுடன் இதே கோவில்பட்டியின் முக்கிய வீதிகளில் கோலாகலமாக பால்குடம் எடுத்���ு மாமன்னர் திருமலை நாயக்கருக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மரியாதை செலுத்துவோம். அவருடைய புகழை திமுக ஒரு போதும் இருட்டடிப்பு செய்து விட முடியாது.
நாட்டின் துரதிஷ்டம் என்னவென்றால், இப்போதெல்லாம் சிலர் Urban Naxals பேசுவதை போல வெளிப்படையாக பேசுகிறார்கள். Urban Naxals எதையெல்லாம் பேசுவார்களோ, “இந்தியாவிற்கு எதிராக முடிவெடுப்போம்” என்பது போன்ற Urban Naxals வார்த்தைகளை பேசுபவர்களால், இந்தியாவிற்கு எதிராக போராட அறைகூவல் விடுப்பவர்களால், அரசியலமைப்பை புரிந்துகொள்ள முடியாது, நமது நாட்டின் ஒருமைப்பாட்டை புரிந்துகொள்ள முடியாது - பாராளுமன்றத்தில் இன்று நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள்
Delighted to have had the opportunity to attend former Vice President of India Thiru Venkaiah Naidu Garu’s family wedding today in Chennai and wished the newlywed couple Selvan Vishnu & Selvi Satvika a happy & prosperous life.