INTERSTELLAR - பட விளக்கம்
ஸ்பாய்லர் & பெரிய போஸ்ட்
இந்த படத்தை பற்றி நிறைய குழப்பம் இருக்கிறது. அதனால் டைம்லைன் இமேஜ் வச்சு ரொம்ப அறிவியலுக்குள் போகாமல் எனக்கு புரிந்ததை எளிமையாக விளக்க முயற்சி பண்ணி இருக்கேன்.
முதலில் இந்த இமேஜ்ல இருக்குற ஒவ்வொன்றை பற்றியும் பார்ப்போம்.
இமேஜ்ல இடது பக்கம் மேலே இருந்து ஆரம்பிங்க..
Endurance - இது ஒரு வட்ட வடிவில் இருக்கும் விண் கப்பல். பெரும்பாலான நேரங்களில் இதில் தான் பல்வேறு பயணங்கள் நடைபெறும். ஒரு கிரகத்தில் இறங்க வேண்டும் என்றால் உயரத்தில் இதை நிறுத்தி விட்டு அதில் கழட்டி மாட்டும் வகையில் உள்ள சின்ன விண்கலத்தை யூஸ் பண்ணி தரைக்கு வந்து மீண்டும் Endurance ல இணைத்து கொள்வார்கள்.
Worm Hole :
இது விண்வெளியில் உள்ள ஒரு குறுக்குப் பாதை என்று வைத்துக் கொள்ளுங்கள். பல மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிரகங்களை குறைந்த நேரத்தில் அடைய இது யூஸ் ஆகும்.
Miller's Planet:
இந்த கிரகத்தில் பெரும்பாலும் தண்ணி தான் இருக்கும். இந்த கிரகத்தில் 1 மணி நேரம் இருந்தால் நம்ம பூமியில் 7 வருஷத்துக்கு சமம்.
Dr. Mann's Planet:
இது பனிக்கட்டியால் சூழப்பட்ட ஒரு கிரகம்.
Gargantua:
இது மர்மமான ஒரு கருந்துளை. இதில் ஈர்ப்பு விசை ரொம்ப அதிகமாக இருக்கும். இதுக்குள்ள ஒரு ஏரியாவை தாண்டினால் உள்ளே இழுத்துக் கொள்ளும். இதிலிருந்து வெளியே வர முடியாது. இந்த ஈர்ப்பு விசையால் நேரமும் இங்கே தாறுமாறாக ஓடும்.
Edmund's Planet: இது கிட்டத்தட்ட பூமி மாதிரி உயிரினங்கள் வாழ ஏற்ற ஒரு கிரகம்.
Earth, Tesseract & Books Shelf:
நடுல மேல இருக்குறது பூமி. அதுக்கு கீழே வர்ற கோடுகள் தான் டைம் லைன். இதுல Extra Dimension Forms இருக்கும்.
Tesseract - இத பத்தி ரொம்ப குழப்ப வேண்டாம் . இதுக்குள்ள போய்ட்டா எந்த காலத்துக்கு வேண்டுமானாலும் போகலாம். ஆனா அங்க உள்ளவர்களுடன் பேச முடியாது. ஈர்ப்பு விசை உபயோகித்து மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்.
Saturn: நம்ம கேலக்ஸியில் உள்ள சனிக்கிரகம்.
Copper Station:
மக்கள் பூமியில் இருந்து இடம்பெயர்ந்து விண்வெளியில் வாழும் இடம்.
இப்ப படத்துக்குள்ள வருவோம்.
எதிர்காலத்தில் பூமியில் ஏதோ ஒரு பிரச்சினையால் பசி பஞ்சம் ஏற்படுகிறது. நாடுகள் எல்லாம் ஒன்னுக்கு ஒன்னு அடிச்சுகிட்டு கடைசியாக விவசாயம் பண்ணா தான் சோறு என்று நாசா, மிலிட்டரி என எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிடுறாங்க. ஒவ்வொரு பயிரா அழிந்துட்டு வருது. இப்படியே போனால் சாப்பாட்டு வழி இல்லாமல் உலகம் அழியும்.
திறமையான நாசா பைலட்டான ஹீரோ மகன், மகள் மற்றும் மாமனாருடன் விவசாயம் பார்த்து வருகிறார்.
மகளோட ரூம்ல உள்ள புத்தக அலமாரியில் அப்ப அப்ப புக் எல்லாம் கீழ விழுகுது. மகள் இதை Ghost என்று சொல்கிறாள். ஒரு கட்டத்தில் அந்த ரூமில் இருந்து Co-ordinates கிடைக்கிறது.
அப்பாவும் மகளும் மேப்பில் அந்த இடத்துக்கு போறாங்க.அங்க ரகசிய நாசா ஆராய்ச்சி நிலையம் இருக்கிறது.
அங்க உள்ள பேராசிரியர் மனித இனத்தை காக்க ஆராய்ச்சி பண்றதாகவும். இதற்காக வேற கேலக்ஸியில் உள்ள 12 கிரகங்களுக்கு ஆட்களை அனுப்பி விட்டு இருப்பதாகவும் அதில் 3 கிரகத்தில் இருந்து சிக்னல் வருது என்றும் கூறுகிறார். உலகத்தை காக்க இரண்டு திட்டங்கள் வைத்து இருப்பதாக கூறுகிறார்.
Plan A: ஹீரோ மற்றும் விஞ்ஞானிகள் குழு Worm Hole வழியாக பயணித்து இந்த 3 கிரகங்களுக்கும் சென்று அங்கே உள்ளவர்கள் திரட்டி வைத்து இருக்கும் டேட்டாவை ஆராய்ந்து எங்க சென்று வாழலாம் என்று கண்ணுபிடித்து திரும்ப வருவது.
இவர்கள் திரும்ப வருவதற்குள் பேராசிரியர் தன்னுடைய ஈர்ப்பு விசை பற்றிய பார்முலாவை கண்டுபிடித்து மக்களை கூட்டமாக விண்வெளிக்கு அனுப்பும் டெக்னிக்கை வைத்து அந்த கிரகத்துக்கு அனுப்பி விடுவது.
Plan B:
இந்த குழு மிஷன் தப்பாக ஆனால் கொண்டு போற கருமுட்டைகளை வைத்து மூன்று கிரகங்களில் நல்ல கிரகத்தை தேர்ந்தெடுத்து அங்கே மனித இனத்தை முதலில் இருந்து ஆரம்பிப்பது.
இப்ப ஹீரோ & co பூமியில் இருந்து Endurance ல கெளம்பி 2 வருஷம் பயணம் பண்ணி சனிக்கிரகத்தை கடந்து Worm Hole ல நுழையுறாங்க.
முதலில் மில்லர் கிரகத்துல டேட்டாவ எடுக்க போறாங்க அங்க நடக்கும் கலவரத்துல பூமில 23 வருஷம் போய்டுது.
அதுக்கு அப்புறம் Dr Mann's கிரகத்துக்குல சில சம்பவங்கள் நடந்து விண் கப்பலில் கோளாறு ஏற்படுகிறது மற்றும் எரிபொருள் பற்றாக்குறை. அதனால் மூன்றாவதாக Edmund Planet க்கு போக முடியாத சூழ்நிலை.
இதுக்கு நடுவுல Garagantua என்கிற கருந்துளை யின் ஈர்ப்புவிசை இவர்களை உள்ளே இழுக்கிறது.
தொடர்கிறது 👇🏼
#INTERSTELLAR - தமிழ் டப்பிங் வந்திருக்கு...
டப்பிங்கில் பார்க்க நினைக்கும் மக்களே...
இந்த நோலன் படங்கள் எல்லாம் மூளையை கசக்கி பிழிஞ்சு நம்மள டயர்டாக்கும் ரகமாய் தான் இருக்கும்...
அதுவும் இந்த படமெல்லாம் ஆளுக்கு ஒரு கதை சொல்ற மாதிரி இருக்கும் போல...
அதுனாலேயே நோலன் படங்களின் பக்கம் நாம போறது இல்ல.
போகனும்னு நினைக்கிறவங்க அதுக்கு முன்னாடி இதை படிச்சுட்டு போங்க...
இல்ல பாத்துட்டு புரியலையா, திரும்ப வந்து படிச்சுட்டு போங்க 🙌
அண்ணன் ஆணி வேரா, அக்கு வேரா பிரிச்சு மேஞ்சு விட்டிருக்கார் ✌️
ஸ்பாய்லர்னு தான் போட்டிருப்பார், படிச்சுட்டு போய் பாத்தாலும் படம் திரும்ப சுத்தல்ல விட்டாலும் விடும் 😜
என்ஜாய் பண்ணிட்டு வாங்க 🙌
அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே ரிலீஸ் ஆக இன்னும் ஓரு 4 மாசம் இருக்கு கிட்ட தட்ட ல், எல்லா மார்வெல் படம் சீரிஸ் ஆஹ் மறுபடியும் பாக்க நினைக்கிற ஆட்களுக்கும், இல்லை புதுசா பாக்கணும் நினைக்கிற ஆட்களுக்கும் ஒரு 88 நாட்கள் அதாவது 3 மாசம் ல பாக்குறதுக்கு ஒரு ஆர்டர்
இந்த லிஸ்ட் ல MCU திரைப்படங்கள் மட்டும் அல்ல. Marvel One-Shots, Disney+ Series, Netflix Defenders Universe, Agents of S.H.I.E.L.D., Fox X-Men Universe, Sony Spider-Verse, Animated Series என மார்வெலின் பெரும்பாலான எல்லாமே கவர் ஆகும்
Phase 1 – Infinity Saga (Day 1 – Day 7)
பயணம் Captain America: The First Avenger-ல் இருந்து தொடங்குகிறது.
அதன் பிறகு:
Captain Marvel
Iron Man Trilogy
Thor
The Avengers
Captain America Trilogy
Guardians of the Galaxy
Doctor Strange
Spider-Man: Homecoming
Black Panther
Thor: Ragnarok
Avengers: Infinity War
Avengers: Endgame
Phase 2 – Agents of S.H.I.E.L.D. Saga (Day 8 – Day 23)
MCU-வில் மறைந்து இருக்கும் மிகப்பெரிய கதைகளில் ஒன்று Agents of S.H.I.E.L.D.
இதில்:
Agent Carter Season 1 & 2
Agents of S.H.I.E.L.D. Season 1–7
Slingshot Web Series
இகுமான்ஸ்
S.H.I.E.L.D. அமைப்பின் வளர்ச்சி, Hydra-வின் தாக்கம், Inhumans மற்றும் பல மறைக்கப்பட்ட MCU சம்பவங்கள் இதில் இடம்பெறுகின்றன.
Phase 3 – The Defenders Saga (Day 24 – Day 40)
Marvel Netflix Universe முழுவதையும் இந்த கட்டத்தில் பார்க்கலாம்.
இதில்:
Daredevil
Jessica Jones
Luke Cage
Iron Fist
The Defenders
The Punisher
Phase 4 – Teenage Angst Saga (Day 41 – Day 46)
இளம் ஹீரோக்களை மையமாகக் கொண்ட கதைகள்.
இதில்:
Cloak & Dagger
Runaways
Helstrom
Phase 5 – Multiverse Saga ஆரம்பம் (Day 47 – Day 50)
Avengers: Endgame-க்கு பிறகு MCU புதிய Multiverse காலத்திற்கு செல்கிறது.
இதில்:
Loki Season 1
What If...? Season 1
WandaVision
The Falcon and the Winter Soldier
Shang-Chi
Eternals
Phase 6 – Fox X-Men Universe (Day 50 – Day 53)
Fox X-Men Timeline முழுவதும்
X-Men
X2
The Last Stand
Wolverine Trilogy
First Class
Days of Future Past
Apocalypse
Dark Phoenix
Deadpool
Logan
The New Mutants
Phase 7 – Marvel Legacy Universe (Day 54 – Day 57)
MCU-க்கு வெளியே வெளியான பழைய Marvel படங்கள்.
இதில்:
Fantastic Four
Blade Trilogy
Blade Series
Punisher Movies
Ghost Rider
Hulk (2003)
Howard the Duck
Phase 8 – Marvel Animation Saga (Day 58 – Day 70)
Marvel Animation ரசிகர்களுக்கான முழு தொகுப்பு.
இதில்:
X-Men Animated Series
Spider-Man (1967)
Spider-Man Animated Series
Spectacular Spider-Man
Spider-Man Unlimited
Spider-Man and His Amazing Friends
Phase 9 – Spider-Verse Saga (Day 71 – Day 74)
இதில்:
Spider-Man Trilogy (Sam Raimi)
Amazing Spider-Man 1 & 2
Venom Trilogy
Morbius
Spider-Man: No Way Home
Into the Spider-Verse
Across the Spider-Verse
Doctor Strange in the Multiverse of Madness
Phase 10 – தற்போதைய Multiverse Saga (Day 75 – Day 88)
MCU-வின் தற்போதைய காலக்கட்டம்.
இதில்:
Hawkeye
Echo
Moon Knight
Thor: Love and Thunder
She-Hulk
Ms. Marvel
Black Panther: Wakanda Forever
Ant-Man and the Wasp: Quantumania
Secret Invasion
The Marvels
Ironheart
Werewolf by Night
Guardians of the Galaxy Vol. 3
Agatha All Along
Loki Season 2
What If...? Season 2 & 3
X-Men '97
Deadpool & Wolverine
Your Friendly Neighborhood Spider-Man
Daredevil: Born Again
Wonder Man
Captain America: Brave New World
Fantastic Four: First Steps
Thunderbolts*
Spider-Man: Brand New Day
மார்வெல் ரசிகர்கள் ஒருமுறையாவது இந்த Watch Order-ஐ பின்பற்றி பார்த்தால், Marvel Universe-இன் ஒவ்வொரு கதாபாத்திரமும், ஒவ்வொரு Timeline-மும், Multiverse-மும் எவ்வாறு ஒன்றோடொன்று இணைகிறது என்பதை முழுமையாக புரிந்துகொள்ள முடியும்.
#BreakingBad சீரியல் பார்க்காத நபர்கள் ஆங்கிலத்தில் இருக்கு பாருங்க அப்படி இல்லை எனக்கு தமிழில் தான் வேண்டும் என்றால் இந்த 20 வீடியோ Playlist பாருங்க சூப்பரா சொல்லி இருப்பார் என் நண்பன் பார்த்துட்டு சொன்னான் நல்லா இருக்குனு நீங்களும் பாருங்கள்
ஆனா இத பார்த்துட்டு அப்புறம் ஆங்கிலத்தில் பாருங்க மக்களே
கண்டிப்பா எல்லோரும் பார்க்க வேண்டிய சீரியஸ்
இது பார்த்துட்டு தான் Addicted ஆகி தான் நான் Walter White 🤍 Name & DP வைத்தேன்
லிங்க் உங்களுக்கு
https://t.co/g2ISIxqTgJ
Web Series Recommendations.
✅ If Wishes Could Kill 🩸🔥
✅ The Wonderfools 😂👌
✅ Teach You a Lesson 🔥🔥🔥
3 months.!
3 web series.!
3 Different genres.!
3 absolute bangers. 🔥🔥🔥
All are streaming on Netflix and highly recommended.🤝
Have you watched any of them ?
சாமானியனுக்கு ஒரு சட்டம்? போலீசுக்கு ஒரு சட்டமா? 🤔
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஹெல்மெட் அணியாமல், அதுவும் 11 ஆண்டுகளாக இன்சூரன்ஸ் (காப்பீடு) இல்லாத வாகனத்தில் பறந்த காவலர்கள்!
ஏற்கனவே இந்த வாகனத்தின் மீது 6 டிராஃபிக் வழக்குகள் நிலுவையில் இருப்பது கூடுதல் அதிர்ச்சி! பொதுமக்கள் வண்டி எடுத்தால் மூலைக்கு மூலை நின்று அபராதம் விதிக்கும் காவல்துறை, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது? ⚖️
சட்டம் எல்லாருக்கும் பொதுவானதா இல்ல பொதுமக்களுக்கு மட்டும்தானா? உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 👇 கமெண்ட்ல சொல்லுங்க.....!!
Chengalpattu police traffic violation
Tamil Nadu police no helmet video
Chengalpattu news today
செங்கல்பட்டு டிராபிக் போலீஸ் வீடியோ
Police without helmet Chengalpattu
TN 72 AS 4657 police bike
11 years no insurance police bike
@tnpoliceoffl@tnpdial100@cmo
EPFO 3.0 | UPI மூலம் பணத்தை எடுக்கும் வசதி🙏🏼
ஊழியர்கள் முன்னாடி PF பணம் எடுக்கணும்னா 7–10 நாட்கள் ஆகும். ஆனா இப்போ சில விநாடிகளிலே பணம் எடுக்க முடியும் மாதிரி update பண்ணிருக்காங்க.
ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல பணம் எடுக்கும்போது documents இல்லன்னு reject ஆகுறது, delay ஆகுறது மாதிரி problems இருந்தது, அதை இந்த EPFO 3.0 ல fix பண்ணிட்டாங்க.
இப்போ updated service மூலம், உங்களுக்கு எவ்வளவு amount withdraw பண்ணலாம் என்று UMANG app-ல கிளியரா காட்டும். அதுல இருந்து டைரக்ட்டா உங்க bank account-க்கு பணம் ட்ரான்ஸ்பர் பண்ணிக்கலாம்.
மேலும், UPI support இருக்கும் ATM-ல கூட இந்த PF பணம் withdraw பண்ணிக்கலாம்.
ஒரு முக்கிய விஷயம் என்னனா, உங்க pension savings safe-ஆ இருக்கணும்னு, total amount-ல 25% எப்பவும் PF account-லவே இருக்கும்.
மீதமுள்ள balance-ல இருந்து 50% முதல் 75% வரைக்கும் தான் UPI அல்லது ATM மூலம் இப்போ withdraw பண்ண முடியும்.
திருமணத்திற்குப் பிறகு ஆதாரில் பெயர் மாற்ற வேண்டுமா? ஈ-சேவை மையங்களுக்கு அலையத் தேவையில்லை! 🛑
உங்கள் மொபைலிலேயே ஆன்லைனில் மாற்றிக்கொள்ளலாம்:
1️⃣ அதிகாரப்பூர்வ UIDAI தளத்திற்குச் சென்று, ஆதார் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் உள்நுழையவும்.
2️⃣ "Update Aadhaar Online" என்பதைத் தேர்ந்தெடுத்து, புதிய விவரங்களை உள்ளிடவும்.
3️⃣ தெளிவான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.
4️⃣ விண்ணப்பித்தவுடன் கிடைக்கும் SRN எண்ணைக் கொண்டு நிலையை ட்ராக் செய்யலாம் (7 - 10 நாட்களில் அப்டேட் ஆகிவிடும்).
முக்கிய குறிப்பு: ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் செயல்பாட்டில் இருப்பது கட்டாயம்! 📲
#AadhaarCard #DigitalIndia #UsefulInfo #GovernmentSchemes #Tamil
சிறந்த மருத்துவ காப்பீடு எது?
ICICI lombard elevate
Vs
Nivabupa Reassure 3.0
Vs
Super star Flexi preferred
ICICI lombard elevate பாலிசியில் மகப்பேறு கவர் உள்ளது ( rider)
OPD+ rider வெளி நோயாளி கவர்
Infinity care ஒரு முறை அளவில்லா கவர் உள்ளது மேலும் அளவில்லா காப்பீடு கவர் உள்ளது
Niva Bupa reassure 3.0 வில்
Nivabupa one - கிளைம் செய்யும் போது விரைவான சேவை
Wel consult- வெளி நோயாளி கவர்
Lock the clock வசதி மூலம் பாலிசி எடுக்கும் வயதை அப்படியே வைக்க முடியும் கிளைம் செய்யும் வரை
அளவில்லா காப்பீடு கவர் மற்றும் முன்பே இருக்கும் 145 நோய்களுக்கு Day 1 கவர் வசதி உள்ளது.
Super star Flexi preferred-ல்
அளவில்லா போனஸ், 5 வருடம் செய்யாமல் இருந்தால் முதல் வருடம் கட்டிய பிரிமியம் திரும்ப பெறும் வசதி
ரைடர் மூலம் மகப்பேறு கவர், ஒருமுறை முறை அளவில்லா கிளைம், வருங்கால கணவர் மனைவிக்கு இப்போதே பாலிசி எடுக்கும் வசதி பெறலாம்.
உங்களுக்கு ஏற்ற மருத்துவ காப்பீடு எடுக்க DM செய்யவும் அல்லது Bio-வில் உள்ள எண்ணுக்கு WhatsApp செய்யவும்.
#kapeetuthalam #claim #healthinsurance #insurance #insuranceAgent #Nivabupa #Icicilombard #Elevate
#Reassure3 #SuperStar #Starhealth
100 வருட பழமையான கர்ப்பகால இரகசியங்கள் என்ற தலைப்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சில பாரம்பரிய அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் ஆரோக்கியம், உணவு மற்றும் மனநிலை சார்ந்த விஷயங்கள் அடங்கியுள்ளன.
அவற்றின் விரிவான விளக்கத்தை இங்கே காணலாம்:
1. உணவு மற்றும் ஊட்டச்சத்து
ஆரஞ்சு பழங்கள்:
தினமும் இரண்டு ஆரஞ்சு பழங்களைச் சாப்பிடுவது குழந்தையின் தோல் பளபளப்பாக உதவும் என்று கூறப்பட்டுள்ளது. ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் C, தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், குழந்தையின் திசுக்களின் வளர்ச்சிக்கும் (Collagens) நல்லது.
உப்பு குறைப்பு:
உணவில் உப்பைக் குறைப்பது பிரசவத்தின் போது ரத்த அழுத்தப் பிரச்சினைகள் (Preeclampsia) ஏற்படாமல் தடுக்க உதவும். இது மருத்துவ ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முக்கியமான ஆலோசனையாகும்.
தேங்காய் மற்றும் தயிர்:
பச்சையாகத் தேங்காய் மற்றும் தயிர் சாப்பிடுவது குழந்தையின் முடி மற்றும் கண்கள் அழகாக இருக்க உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உள்ள நல்ல கொழுப்புகள் மற்றும் புரோபயாடிக்குகள் செரிமானத்திற்கும், கருவின் வளர்ச்சிக்கும் நன்மை பயக்கும்.
இளநீர்:
காலையில் இளநீர் குடிப்பது நெஞ்செரிச்சல் (Acidity) மற்றும் உடல் சூட்டைத் தணிக்கும். இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான அஜீரணக் கோளாறுகளுக்குச் சிறந்த தீர்வாகும்.
தேன் தண்ணீர்:
தேன் கலந்த நீர் ரத்தக் குறைபாடு (Anemia) வராமல் தடுக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது. தேனில் உள்ள இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ரத்தத்தை சுத்திகரிக்க உதவும்.
2. மனநிலை மற்றும் செயல்பாடு
மெதுவான இசை (மசானா):
மென்மையான இசையைக் கேட்பது தாய்க்கு மன அமைதியைத் தரும். தாய் அமைதியாக இருந்தால், அது குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தூண்டி, குழந்தையைச் சுறுசுறுப்பாகவும் புத்திசாலியாகவும் மாற்றும்.
நினைவாற்றல்:
கர்ப்ப காலத்தில் இசை கேட்பது குழந்தையின் நினைவாற்றலை (Memory power) அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
புனித நூல்கள் வாசித்தல்:
நல்ல கருத்துக்கள் கொண்ட புத்தகங்கள் அல்லது ஆன்மீக நூல்களைப் படிப்பது தாய்க்கு நேர்மறை எண்ணங்களை (Positive vibes) உருவாக்கும். இது பிறக்கும் குழந்தை நல்ல பண்புகளுடனும், ஞானத்துடனும் வளர ஒரு அடித்தளமாக அமையும் என்று கருதப்படுகிறது.
முக்கிய குறிப்பு:
இந்தத் தகவல்கள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் பொதுவான ஆரோக்கியக் குறிப்புகளின் அடிப்படையில் அமைந்தவை.
ஆலோசனை:
கர்ப்ப காலத்தில் எந்தவொரு புதிய உணவு முறையைப் பின்பற்றுவதற்கு முன்னும், உங்கள் உடலின் நிலையைப் பொறுத்து உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் (Gynecologist) கலந்தாலோசிப்பது மிகவும் பாதுகாப்பானது. குறிப்பாக உங்களுக்கு சர்க்கரை நோய் (Gestational Diabetes) அல்லது வேறு ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தால் கூடுதல் கவனம் தேவை.