இன்று சென்னையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
தமிழகம் முழுவதும் கழக செயல் வீரர்கள் அனைவரும், தொடர்ந்து நடைபெறும் கிராமசபை கூட்டம் மற்றும் சிறப்பு முகாம்களில் முழுக்கவனம் செலுத்திட வேண்டும்!
உள்ளாட்சி தேர்தலைக்கூட சந்திக்க தெம்பில்லாத அதிமுக அரசு இடைத்தேர்தலில் போட்டியிட்டால் மக்களால் விரட்டியடிக்கப்படுவோம் என்கிற அச்சத்தில், தலைமைச் செயலாளரை வைத்து தேர்தலை தள்ளி வைத்திருப்பதன் மூலம் ஆளுங்கட்சியின் ஊதுகுழல்களாக இருவரும் செயல்பட்டிருப்பது நிரூபணமாகி உள்ளது!
சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் 5 மாநிலங்களுக்கும், இடைத்தேர்தலைச் சந்திக்கும் கர்நாடகாவுக்கும் தேர்தல் தேதிகளை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம், ஜனநாயகத்துக்கு விரோதமாக திருப்பரங்குன்றம் - திருவாரூர் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்காததன் உள்நோக்கம் என்ன?
@GunasekaranMu தேவையில்லாமல் டெங்சன் .ஆளும் அரசு கொள்ளையடிச்ச பணத்தை தண்ணிரா இறச்சு .ஒட்டு வாங்கி இல்லாத செல்வாக்கை இருக்கிறமாதி பில்டப் பண்ணி .அப்புறம் ஒட்டு கொடுத்த பணத்தை ,மீண்டும் சம்பாரிக்க மக்கள் வரி பணத்தை கொள்ளையடிக்க ,இல்லாத திட்டத்திற்கு பணம் ஒதுக்குவாங்க .வேண்டாம் இ(எ)டைத் தேர்தல் .
@KasthuriShankar நாடகம் எல்லாமே நாடகம்.சின்னமா ,டி டி வி ,ஒபிஎஸ் ,இபிஎஸ் .எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போடுராங்களா , அதை தமிழக மக்கள் நம்பனுமாம் .நடத்துங்க நாடகம் நல்லா நடத்துங்க .எத்தனை நாளோ ??
கழகத் தலைவர் மாண்புமிகு தளபதியார் @mkstalin அவர்களின் ஆணைக்கினங்க சேலம் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் அதிமுக அரசைக் கண்டித்து நடைப்பெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் கழகத் தேர்தல் பணிக் குழு செயலாளர் திரு.கம்பம்.பெ.செல்வேந்திரன்.Ex.M.P அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.
இன்று மாலை 6:00மணிக்கு அண்ணாநகர் எம்.எம்.டி.ஏ காலனியில் அண்ணன் தயாநிதி மாறன் அவர்களும் செயல்மிகு சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் @JAnbazhagan MLA அவர்கள் சிறப்புரையாற்றுகிறார் கழக நிர்வாகிகள் கழக முன்னோடிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்து
கொண்டு சிறப்பிக்கவும்...
போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்களும், அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கூட்டமைப்பினரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிற போதெல்லாம் கைது செய்வதை மட்டும் குறிக்கோளாக வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசின் அராஜக நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது.
மக்களின் உரிமைகளை பறித்து தமிழகத்தையே போராட்டக்களமாக மாற்ற முயற்சிக்கும் முதல்வர், "அதிமுக அரசு அணையப்போகும் தீபம்" என்பதை உணர வேண்டும்!
இனியும், போராடுபவர்களை விரட்டி அடிக்காமல் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்!