சேலம் - Dr.சுந்தர்ராஜன் மருத்துவமனையில், CATH LAB - GE IGS 330 (இதய வடிகுழாய் ஆய்வகம்) திறந்து வைத்து உரையாற்றிய போது. உடன் மருத்துவர் சுந்தர்ராஜன், விருதை வள்ளல் மருத்துவர் ஆர்.கோவிந்தசாமி மற்றும் ஆர்.ஜி.மகேந்திரன் அவர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுமத்தினர்.!
கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் இருந்து பூம்புகார் வரை நடைபெறும் நான்கு நாட்கள் பயணத்தில், 2000 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி ஆற்றின் குறுக்கே கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட உலகிலேயே மிகப் பழமையான நான்காவது நீர் மேலாண்மை திட்டமான கல்லணையை பார்வையிட்ட போது.!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu #PMK
கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் இருந்து பூம்புகார் வரை நடைபெறும் நான்கு நாட்கள் பயணத்தில், 2000 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி ஆற்றின் குறுக்கே கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட உலகிலேயே மிகப் பழமையான நான்காவது நீர் மேலாண்மை திட்டமான கல்லணையை பார்வையிட்ட போது.!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu #PMK
காவிரி காக்க கைகோர்ப்போம்.... வாருங்கள் இளைஞர்களே!
தீமைகளைத் தடுக்கும் திறனும், உரிமைகளைக் காக்கும் உணர்வும் கொண்ட உங்களைத் தான் நான் நம்பியிருக்கிறேன்.
காவிரியில் கர்நாடகம் கட்டத் துடிக்கும் மேகதாது அணை என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, கர்நாடகத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும். 12500 ஏக்கர் வனப்பகுதிகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் என மேகதாது அணையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எல்லையில்லாதவை.
சில லட்சம் பேரின் குடிநீருக்காக இவ்வளவு பெரிய பேரழிவை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
இந்தப் பேரழிவைத் தடுக்கும் முயற்சிகளுக்கு நான் வழிகாட்டுகிறேன்.... ஆனால், அதை தடுத்து நிறுத்தும் திறன் உங்களுக்குத் தான் உண்டு. உலக வரலாற்றில் இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளும் உண்டு.
அதனால் தான் உங்களை அழைக்கிறேன்..... வாருங்கள் இளைய தலைமுறையினரே, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடையை தகர்த்தைப் போல மேகதாது அணை சதியையும் தகர்ப்போம்!
உங்களுக்காக பிலிகுண்டுலுவில் காத்திருப்பேன்...!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu
ஆவின் பால் கொள்முதல் வீழ்ச்சியால் வினியோகம் பாதிப்பு: வாங்கும் விலையை
உயர்த்தி கொள்முதலை அதிகரிக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் பெருமளவில் வீழ்ச்சி அடைந்திருப்பதால் சந்தையில் ஆவின் பாலுக்கு பெரும் தட்டுப்பாட்டு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் வினியோகம் 3 லட்சம் லிட்டர் குறைந்திருப்பதாகவும், சென்னையில் மட்டும் 2.5 லட்சம் லிட்டர் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் தேவையான பால் வினியோகத்தில் ஆவின் நிறுவனம் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.
சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தினமும் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது 13.50 லட்சம் லிட்டராக குறைந்து விட்டது. ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் தினமும் 28 லட்சம் லிட்டர் என்ற அளவுக்கு முறைந்து விட்டது தான் ஆவின் பால் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு காரணம் ஆகும்.
கோடைக்காலம் என்பதால் தான் ஆவின் பால் கொள்முதல் குறைந்திருப்பதாக ஆவின் நிறுவனம் கூறுகிறது. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாகவே ஆவின் பால் கொள்முதல் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 2021-ஆம் ஆண்டில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் தினமும் 41 லட்சம் லிட்டராக இருந்தது. 2022-ஆம் ஆண்டில் 38 லட்சம் லிட்டர், 2023-ஆம் ஆண்டில் 30 லட்சம் லிட்டர் என குறைந்த ஆவின் பால் கொள்முதல் இப்போது 28 லட்சம் லிட்டராக குறைந்து விட்டது.
ஆவின் பால் வினியோகம் குறைந்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அரசுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால் விலைக்கும், தனியார் நிறுவன பால் விலைக்கும் இடையே லிட்டருக்கு ரூ.16 முதல் ரூ.24 வரை அதிகம் ஆகும். தனியார் நிறுவன பாலை அதிக விலை கொடுத்து வாங்க முடியாத மக்களுக்கு வரப்பிரசாதமாக ஆவின் பால் அமைந்துள்ளது. பால் வினியோகத்தைக் குறைந்து அந்த மக்களை ஆவின் தண்டிக்கக்கூடாது.
ஆவின் பால்கொள்முதல் 13 லட்சம் லிட்டர் குறைந்திருப்பதற்கு காரணம் அதன் கொள்முதல் விலைகள் உயர்த்தப்படாதது தான். பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35 , எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 என்ற அளவில் ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலையுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் அதை விட லிட்டருக்கு 12 வரை கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றன. அதற்கு இணையாக ஆவின் நிறுவனமும் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் அதன் கொள்முதலை அதிகரிக்க முடியாது.
ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை அதிகரிப்பதற்காக அதன் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு 1 லிட்டருக்கு ரூ.45. எருமை பாலுக்கு ரூ.54 என உயர்த்துவதற்கும், அதன் மூலம் அதிக அளவிலான பாலை கொள்முதல் செய்து நியாயமான முறையில் மக்களுக்கு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
உதவிப் பேராசிரியர்கள் தேர்வில் சிலரது மதிப்பெண்களில் மட்டும் வண்ண அடையாளம் ஏன்? புதிது புதிதாக வெளிவரும்
சர்ச்சைகள் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கே இன்னும் விளக்கம் அளிக்கப்படாத நிலையில், சில தேர்வர்களின் மதிப்பெண்களில் வண்ண அடையாளங்கள் இடம்பெற்றிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் தொடர்பான விஷயத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பின்றி நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.
ஆங்கிலப் பாட உதவிப் பேராசிரியர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான மதிப்பெண் பட்டியலில், சில இடங்களில் நீலம், சில இடங்களில் மஞ்சள் வண்ணங்களில் குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. அவர்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ மதிப்பெண்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம் என்று தேர்வர்கள் சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஐயங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் போக்க வேண்டும்.
இதே பணிக்கான போட்டித் தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளை பாட்டாளி மக்கள் கட்சி தான் முதலில் அம்பலப்படுத்தியது. உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வுகளில் முதல் தாளில் அதுவும் விருப்பப்பாடத்தில் 111 மதிப்பெண் எடுத்த ஒருவர், இரண்டாம் தாளில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுப்பதும், முதல் தாளில் 54, அதாவது 36% மதிப்பெண் எடுத்த ஒருவருக்கு, இரண்டாம் தாளில் 49, அதாவது 98% மதிப்பெண் பெறுவதும் சாத்தியமற்ற ஒன்றாகும்.
உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுவது ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அழகல்ல. ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் தேர்வர்கள் பங்கேற்கும் தேர்வுகளை நடத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் அவற்றில் குளறுபடிகள், முறைகேடுகள் நடக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் ஐயங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக்குகளுக்கு விரிவிரையாளர்களை தேர்வு செய்வதில் 2017-ஆம் ஆண்டில் நடந்த முறைகேடுகளையும், அது தொடர்பாக இப்போதும் விசாரணை நடத்தப்பட்டு வருவதையும் தமிழ்நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை. தவறான காரணங்களுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் அதன் மீதான நன்னம்பிக்கையையும், நன் மதிப்பையும் இழந்து வருகிறது.
உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக அடுத்தடுத்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும். ஏதேனும் முறைகேடுகள் நடந்திருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
காவிரி காக்க கைகோர்ப்போம்.... வாருங்கள் இளைஞர்களே!
தீமைகளைத் தடுக்கும் திறனும், உரிமைகளைக் காக்கும் உணர்வும் கொண்ட உங்களைத் தான் நான் நம்பியிருக்கிறேன்.
காவிரியில் கர்நாடகம் கட்டத் துடிக்கும் மேகதாது அணை என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, கர்நாடகத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும். 12500 ஏக்கர் வனப்பகுதிகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் என மேகதாது அணையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எல்லையில்லாதவை.
சில லட்சம் பேரின் குடிநீருக்காக இவ்வளவு பெரிய பேரழிவை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
இந்தப் பேரழிவைத் தடுக்கும் முயற்சிகளுக்கு நான் வழிகாட்டுகிறேன்.... ஆனால், அதை தடுத்து நிறுத்தும் திறன் உங்களுக்குத் தான் உண்டு. உலக வரலாற்றில் இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளும் உண்டு.
அதனால் தான் உங்களை அழைக்கிறேன்..... வாருங்கள் இளைய தலைமுறையினரே, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடையை தகர்த்தைப் போல மேகதாது அணை சதியையும் தகர்ப்போம்!
உங்களுக்காக பிலிகுண்டுலுவில் காத்திருப்பேன்...!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களின் மேகதாது அணை எதிர்ப்பு 4 நாட்கள் நடைபயண பிரச்சாரத்திற்கான பட்டியல்..!
#AnbumaniRamadoss#sowmiyaanbumani#PMK
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களின் மேகதாது அணை எதிர்ப்பு 4 நாட்கள் நடைபயண பிரச்சாரத்திற்கான பட்டியல்..!
#AnbumaniRamadoss#sowmiyaanbumani#PMK
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களின் மேகதாது அணை எதிர்ப்பு 4 நாட்கள் நடைபயண பிரச்சாரத்திற்கான பட்டியல்..!
#AnbumaniRamadoss#sowmiyaanbumani#PMK
மண்டல் ஆணையத்திற்கு வழி வகுத்த வே. ஆனைமுத்து
அவர்களின் 102-ஆம் பிறந்த நாள்: அவரது சமூகநீதிப்
போராட்டத்தை பாடநூலில் சேர்க்க வேண்டும்!
தந்தைப் பேரியாரின் பெருந்தொண்டரும், மண்டல் ஆணையம் அமைக்கப்பட்டு, மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு காரணமாக இருந்தவருமான பெரியவர் வே. ஆனைமுத்து அய்யா அவர்களின் 102-ஆம் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சமூகநீதி முன்னோடியான அவருக்கு நான் எனது வணக்கங்களை செலுத்துகிறேன்.
ஆனைமுத்து அய்யா அவர்களின் சமூகநீதி போராட்ட வரலாறு மிகவும் நீண்டது. தமது தோழர்கள் சிலருடன் 27.04.1978-ஆம் நாளில் தில்லிக்கு புறப்பட்ட ஆனைமுத்து அய்யா அவர்கள் தான் பிகார், உத்தரப்பிரதேசம், தில்லி உள்ளிட்ட வட இந்தியாவை தமது போராட்டக் களமாக மாற்றி மண்டல் ஆணையம் அமைக்கப்படுவதற்கும், பின்னாளில் அதனடிப்படையில் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கும் காரணமாக இருந்தார். அவரது நூற்றாண்டு நிறைவை பாட்டாளி மக்கள் கட்சி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தது.
பிகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்தவர். ஆனால், அவரது சமூகநீதி வரலாறு உரிய முறையில் இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்படவில்லை என்பது தான் வருத்தமான உண்மை. இந்தக் குறையை போக்கும் வகையிலும், அவரது போராட்டங்களை போற்றும் வகையிலும் அவற்றை பாடநூல்களில் சேர்க்க வேண்டும்.
அதே நேரத்தில் தந்தைப் பெரியாரும், அவர் வழியில் ஆனைமுத்து அய்யாவும் வலியுறுத்திய மக்கள்தொகை அடிப்படையிலான 100% வகுப்புவாரி இடப்பங்கீட்டை சாத்தியமாக்குவதற்காக தொடர்ந்து சமூகநீதிப் போராட்டங்களை முன்னெடுக்கவும் இந்த நாளில் உறுதி ஏற்போம்.
#SocialJustice
நீட் மறுதேர்வு அச்சத்தால் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து இருவர் தற்கொலை: நீட் தேர்வை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த மாதம் 3-ஆம் தேதி நடத்தப்பட்டு ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு இன்று மதியம் நடைபெறும் நிலையில், நீட் தேர்வு அச்சம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அடுத்தடுத்து ஒரு மாணவியும், ஒரு மாணவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த எண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி ரோஷ்னி 12-ஆம் வகுப்பை இரு ஆண்டுகளுக்கு முன் நிறைவு செய்து விட்டு, நீட் தேர்வில் வென்று மருத்துவப் படிப்பில் சேருவதற்காக கடந்த இரு ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தார். இந்த முறையும் அதே நிலை தான் ஏற்படுமோ என்ற அச்சம் தான் அவரை இந்த முடிவை எடுக்கத் தூண்டியுள்ளது.
அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வெற்றியானந்தம் என்ற மாணவர் 12-ஆம் வகுப்புத் தேர்வை முடித்து விட்டு, கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி வந்தார். ஆனால், அதில் அவரால் போதிய மதிப்பெண்களை எடுக்க முடியாத நிலையில் நடப்பாண்டிலும் அதே நிலை தான் ஏற்படுமோ என்ற அச்சத்தால் இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு மாணவர்களைக் கொல்லும் தேர்வு என்பதற்கு இவை தான் மோசமான எடுத்துக்காட்டு.
ஏற்கனவே, கடந்த 17-ஆம் தேதி கோவையை சேர்ந்த மாணவி அனுகீர்த்தனா, 19-ஆம் தேதி சேலம் எடப்பாடியைச் சேர்ந்த கோபிகா என இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த இரு நிகழவுகளையும் சேர்த்து 4 நாள்களில் 4 மாணவ, மாணவிகளை நீட் தேர்வுக்கு பலி கொடுத்திருக்கிறோம். இந்தக் கொடுமை தொடரக்கூடாது. அதற்காக நீட் தேர்வை தேசிய அளவில் ரத்து செய்யவோ அல்லது தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கவோ மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@PMOIndia@CMOTamilnadu
தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில், "மேகதாது அணை மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி" உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து சென்னையில் நடைபெற்ற அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தை தலைமையேற்று நடத்தி, ANI ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு நேர்காணல் அளித்த போது.!
#MekedatuDam #AnbumaniRamadoss #PMK