₹1 இட்லி பாட்டி... 2019 முதல் தொடரும் எங்களின் பங்களிப்பு!
உண்மை நிலையைத் தெளிவுபடுத்த ஒரு சிறிய விளக்கம்...
கோவை வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த கமலாத்தாள் பாட்டியின் ₹1 இட்லி சேவை 2019-ல் நாடு முழுவதும் கவனம் பெற்றது.
திரு. ஆனந்த் மஹிந்திரா அவர்கள் பாட்டியின் சேவையைப் பாராட்டி LPG வசதி ஏற்படுத்த விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அன்றைய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்களின் கவனத்திற்கும் இவ்விஷயம் சென்றது.
BPCL அதிகாரிகளின் வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்புடன், 11.09.2019 அன்று எங்களது ThaiShakthi BharatGas Agency சார்பில் பாட்டிக்கு LPG இணைப்பு, சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கினோம்.
அதோடு எங்களது பங்களிப்பு நின்றுவிடவில்லை.
₹1 இட்லி சேவைக்கு எரிவாயுச் செலவு ஒரு சுமையாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில், பாட்டிக்குத் தேவையான 19 கிலோ Commercial LPG சிலிண்டர்களை பாட்டியிடமிருந்தோ அல்லது வேறு யாரிடமிருந்தோ எந்தத் தொகையும் பெறாமல், எங்களது சொந்த செலவில் தொடர்ந்து வழங்கி வந்தோம்.
இது சமீபத்தில் தொடங்கிய உதவி அல்ல. 2019 முதல் சுமார் 6–7 ஆண்டுகளாகத் தொடரும் பங்களிப்பு.
இதில் ஒரு சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
பாரத பிரதமரின் உஜ்வாலா/PMUY திட்டத்தின் கீழ் வீட்டு உபயோக சிலிண்டருக்கான கனெக்சன் மட்டுமே டெபாசிட் இல்லாமல் வழங்கப்படுகிறது. அதிலும் கூட மாதாந்திர ரீஃபில் இலவசம் கிடையாது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பாட்டிக்கு சிலிண்டர் வழங்கப்படவில்லை என்பதோடு மட்டுமல்லாமல் அவ்வாறு வழங்கவும் திட்டப்படி வாய்ப்பில்லை.
மேலும், ஒரு ரூபாய் இட்லி தயாரிப்பு என்றாலும், இதுபோன்ற வணிகப் பயன்பாட்டிற்கு மாதந்தோறும் இலவசமாக 19 கிலோ Commercial LPG சிலிண்டர்களை வழங்குவதற்கான திட்டம் மத்திய அல்லது மாநில அரசுகளிடம் எதுவும் இல்லை.
2026 பிப்ரவரி இறுதியில் மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்த போர் சூழலால் Commercial LPG விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட காலத்தில், பாட்டிக்கு வழங்கி வந்த இலவச சிலிண்டர் உதவியிலும் ஒரு கட்டத்தில் இடைவெளி ஏற்பட்டது.
அந்த இடைப்பட்ட காலத்தில் நாங்களே தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, வீட்டு உபயோக LPG சிலிண்டரைப் பயன்படுத்தி வருவதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் Commercial LPG தேவை குறித்து எங்களுக்கு எந்தக் கோரிக்கையும் வரவில்லை.
தற்போது பாட்டி LPG தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த செய்தி ஊடகங்கள் மூலமாக எங்கள் கவனத்திற்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து 21.09.2026 அன்று மூன்று 19 கிலோ Commercial LPG சிலிண்டர்களை மீண்டும் முற்றிலும் இலவசமாக வழங்கியுள்ளோம்.
2019-ல் இந்த உதவியைத் தொடங்கியபோது இருந்த எண்ணம் ஒன்றுதான் —
கமலாத்தாள் பாட்டியின் ₹1 இட்லி சேவை தொடர்ந்து நடைபெற வேண்டும்.
இன்றும் எங்களது விருப்பம் அதுவே.
— கவின் கமல்குமார்
ThaiShakthi BharatGas Agency
#KamalathalPaati #IdliPaati #ThaiShakthiBharatGas #BharatGas #Coimbatore #SocialResponsibility
சேலம் மாநகர் மாவட்ட பயிற்சி முகாம் ஏற்காட்டில் இன்று நடைபெற்றது அதில் சோசியல் மீடியா மற்றும் மீடியா மேனேஜ்மென்ட் வகுப்பு எடுத்தேன்.
இது நான் இளைஞரணி மாநில தலைவராக இருந்தபோது 2015-இல் இளைஞர் அணி மாநில செயற்குழு நடைபெற்ற அதே இடம். நல்ல நினைவுகளுடன்...
பாரதிய ஜனதா கட்சி, அதன் தலைமை மற்றும் அமைப்பு குறித்து சமூக வலைதளங்களில் யாரும் தவறான கருத்துகளையோ, கண்ணியக் குறைவான விமர்சனங்களையோ பதிவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அரசியல் மற்றும் பொது விவாதங்கள் எப்போதும் நாகரிகமாகவும்,மரியாதையுடனும் இருக்கட்டும்.
🇮🇳 உலகின் Semiconductor சக்தியாக உருவெடுக்கும் இந்தியா!
“India positioned to lead global semiconductor drive from the front” — Intel.
உலகளாவிய Chip Design & VLSI workforce-ல் சுமார் 20% இந்தியாவின் பங்களிப்பு.
85,000+ professionals | 355+ universities | 250+ chips developed by Indian educational institutions.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சந்தை என்பதிலிருந்து, Design செய்து, உற்பத்தி செய்து, உலகை வழிநடத்தும் இந்தியா என்ற அடுத்த கட்டத்தை நோக்கிய பயணம்! 🇮🇳
Designed in India • Made in India • Viksit Bharat
#SemiconductorIndia #SEMICONIndia2026 #MakeInIndia #ViksitBharat #Technology #Innovation
சாலையோர வழிப்பறி போனது; Hi-tech வழிப்பறி காலம் துவங்கியது!
Deepfake video மூலம் financial fraud நடப்பது சாதாரண online fraud அல்ல; வரும் கால techno crime-களுக்கான தொடக்கம்.
AI deepfake, fake voice, digital impersonation-ஐ எதிர்கொள்ள தமிழக அரசுக்கு வலுவான hi-tech e-police team உடனடி தேவை.
#TamilNadu #CyberCrime #Deepfake #DigitalSafety
தடைகளை அகற்றி வெற்றிக்கு வழிகாட்டும் முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமானை பக்தியுடன் வணங்குவோம். 🙏
இந்த புனித விநாயகர் சதுர்த்தி நாளில், எல்லோரின் இல்லங்களிலும் நலன், வளம், மகிழ்ச்சி பெருகட்டும்.
நமது பாரதத்தின் ஒற்றுமை வலுப்பெற்று, தமிழகம் நல்லாட்சியுடனும் வளர்ச்சியுடனும் முன்னேற விநாயகப் பெருமான் அருள்புரியட்டும். 🇮🇳
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்! 🚩
#VinayagarChaturthi #GaneshChaturthi #தமிழகம் #நல்லாட்சி #வளர்ச்சி
🇮🇳 சுதந்திரம் என்பது நமது உரிமை மட்டுமல்ல; பொறுப்பும் கூட.
தேசத்தின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த
அனைத்து தியாகிகளையும் நன்றியுடன் நினைவுகூர்வோம்.
வலிமையான பாரதம்… வளர்ச்சியடைந்த பாரதம்…
நமது தலைமுறையின் பொறுப்பு. 🇮🇳
அனைவருக்கும் இனிய 80வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
ஜெய்ஹிந்த்! 🇮🇳
#IndependenceDay #IndependenceDay2026 #ViksitBharat
மாணவர்களை தவறாக வழிநடத்துவது சாதாரண அரசியல் விளையாட்டு அல்ல; தேச துரோகம்.
Reels, edited videos, பாதி உண்மைகள் மூலம் இளைஞர்களை தூண்டுவது அரசியல் அல்ல — நாட்டின் எதிர்காலத்துக்கு எதிரான செயல்.
மாணவர்கள் political toolkit அல்ல.
#TamilNadu#Students#NationFirst#Misinformation
மக்கள் வாக்கு சந்தைப் பொருள் அல்ல; சேவைக்கான அனுமதி.
கட்சிமாற்றம் மனசாட்சியின் முடிவாக இருக்கலாம். ஆனால் அதிகாரம், பதவி, பணம், அழுத்தம் மூலம் மக்கள் தீர்ப்பு மாற்றப்படுகிறதென சந்தேகம் எழுவது ஜனநாயகத்திற்கு ஆபத்து.
#TamilNadu#Democracy#GoodGovernance
Tamil Nadu needs real governance, not shadow governance.
Private influence must never replace constitutional accountability in government decision-making.
Cabinet meetings are not private advisory rooms. They are institutions of public responsibility.
#TamilNadu #GoodGovernance #Accountability
Public office is not a reward; it is a responsibility to the people.
Major appointments must not create an impression of personal closeness, cinema links, or political payback.
Tamil Nadu needs politics for the deserving, not the favoured.
Not power-sharing. Responsible governance.
#TamilNadu #GoodGovernance
The drug culture is not just a law-and-order issue.
It is a social threat that can destroy the future of an entire generation.
The new government must not stop with blaming the previous regime. It must act immediately to break drug networks, strengthen awareness in schools and colleges, and expand rehabilitation systems.
Development that fails to protect our youth is not real development.
#TamilNadu #YouthSafety #LawAndOrder
A child should not be born into a debt burden.
The White Paper on Tamil Nadu’s finances must not end as just a political blame document. It should become the starting point for fiscal discipline, responsible governance and long-term economic correction.
Welfare schemes are necessary. But they must be backed by sustainable revenue, job creation, industrial growth, investment, tax discipline and control over wasteful expenditure.
What we leave for the next generation should not be debt, but a stronger economy and responsible governance.
தமிழகம் • நல்லாட்சி • வளர்ச்சி
#TamilNadu #GoodGovernance #FiscalResponsibility
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு ஆளும் அரசின் முதன்மையான பொறுப்பே.
குற்றம் நடந்த பின் நடவடிக்கை அவசியம்.
ஆனால் குற்றம் நடக்காத பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே நல்லாட்சி.
பெண்களும் குழந்தைகளும் பயமின்றி வாழும் சூழலை உருவாக்குவது தான் உண்மையான வளர்ச்சி.
தமிழகம் • நல்லாட்சி • வளர்ச்சி
#WomenSafety #ChildSafety #TamilNadu
ஜனநாயகத்தில் ஆட்சியை விமர்சிப்பது என்பது அடிப்படை உரிமை.
கருத்து தவறானது அல்லது அவதூறானது என அரசு கருதினால், சட்டப்படி பதிலளிக்க வழிகள் உள்ளன.
ஆனால் கைது போன்ற நடவடிக்கைகள், அரசியல் விமர்சனக் குரல்களை அச்சுறுத்தும் கருவியாக மாறக்கூடாது.
விமர்சனத்தை எதிர்கொள்ளும் சகிப்புத்தன்மையும் நல்லாட்சியின் அடையாளமே!
தமிழகம் • நல்லாட்சி • வளர்ச்சி
#FreedomOfExpression #TamilNadu #GoodGovernance
ஒரு கட்சியின் உண்மையான பலம், ஒரு தலைவரின் ஈர்ப்பில் அல்ல; அதன் சித்தாந்தம், அமைப்பு ஒழுக்கம் மற்றும் தொண்டர்களின் நம்பிக்கையில் இருக்க வேண்டும்.
சிலர் குறிப்பிட்ட தலைவர் மீதான ஈர்ப்பால் வரலாம், செல்லலாம்.
சிலர் வாய்ப்புக்காக நகரலாம்.
சிலர் மனக்கசப்பால் விலகலாம்.
ஆனால் BJP-யின் வளர்ச்சி, தனிநபர் மைய அரசியலில் அல்ல; சித்தாந்தம், அமைப்பு, தொண்டர்களின் மரியாதை மற்றும் செயல்படும் வாய்ப்புகளில் தான் உள்ளது.
தலைவர்கள் வரலாம், செல்லலாம்.
ஆனால் சித்தாந்தம் நிலைத்திருக்க வேண்டும்.
தொண்டர்கள் மதிக்கப்பட வேண்டும்.
அமைப்பு மேலும் வலுப்பட வேண்டும்.
இந்த சூழலை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, உத்வேகத்துடன் பணிபுரிந்து, தமிழகத்தில் வெற்றி பெறுவோம். நல்லாட்சி அமைப்போம்!
தமிழகம் • நல்லாட்சி • வளர்ச்சி
#BJP #TamilNadu #GoodGovernance
ஆட்சி என்பது மக்கள் சேவைக்கான பொறுப்பு, பதவி பகிர்வுக்கான பரிமாற்றம் அல்ல.
கூட்டணி என்பது அரசியலில் இயல்பானது. ஆனால் அது மக்கள் சேவைக்கான ஒத்துழைப்பாக இருக்க வேண்டும்; பதவிக்கான நிபந்தனையாக மாறக்கூடாது.
இன்று ராஜ்யசபா இடத்தில் தலைவணங்கியுள்ளது என்றால், நாளை கொள்கை முடிவுகளில் மக்களின் நலன் முன்னிலை வகிக்குமா?
தமிழகம் • நல்லாட்சி • வளர்ச்சி
#TamilNadu #GoodGovernance
ஒரு சாலை பயணத்தின் வெற்றியை அதன் தூரத்தாலும், நேரத்தாலும் மட்டும் அளவிட முடியாது.
அந்த சாலையில் பயணிக்கும் மக்கள் பாதுகாப்பாக வீடு திரும்புகிறார்களா என்பதுதான் உண்மையான அளவுகோல்.
வளர்ச்சி என்பது வேகமான பயணத்தை மட்டும் குறிக்காது; பாதுகாப்பான பயணத்தையும் குறிக்க வேண்டும்.