Must Read!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறை சம்பவத்தை வைத்து பல புரளிகளையும் வதந்திகளையும் சங்கி ஊடகங்களும், சாம்சங்கி பத்திரிகையாளர்களும், எதிர்க்கட்சியினரும் பரப்பிய நிலையில் சென்னை மாநகர கமிஷனர் அருண் IPS அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு என்பது மிக தெளிவான விளக்கங்களோடு வதந்திகளை முற்றிலும் தவிடுபிடியாக்கியது. வதந்தி பரப்பியவர்கள் சட்டநடவடிக்கைக்கு பயந்து நடுங்கினர். தேவையற்ற பதட்டத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்த நினைத்தவர்களின் நினைப்பில் மண்ணை கொட்டியது. வாயடைத்துப் போனார்கள்!
அதுவே சங்கிகளுக்கும். அதன் ஆதரவாள்ர்களுக்கும் அருண் IPS மீது எரிச்சலை கொடுத்தது. நீதிமன்றத்தின் வழியாக அவர்கள் சிலதை சாதித்திருக்கலாம்
ஆனால் இந்த விவகாரமாகட்டும், ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்காகட்டும் மிகவும் திறம்பட செயல்பட்ட சென்னை மாநகர ஆணையர் திரு அருண் IPS அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்..💐💐💐
#StandWithArunIPS