60 ஆண்டுகால திமுக, அதிமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 2026-ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியின் தலைவர் சி. ஜோசப் விஜய் (தளபதி விஜய்) பதவியேற்றார்.
சிங்கப்பெண் அதிரடிப்படை உருவாக்கப்படும் னு தேர்தல் வாக்குறுதி ல சொன்னார், அதை Kick Start பண்ணி ஒரே மாசத்துல செயல்படுத்திட்டார் with Official GO
அதனால ஏற்ப்பட்ட Impact என்ன னு
with Official Datas
Crimes against Women, 2024-2025 ல எவ்ளோ, 2029-2030 ல எவ்ளோ னு NCRB Dataவோட பாப்போம்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட“சிங்கப்பெண்” திட்டத்தின் தொடக்க விழா நிகழ்வின் சிறப்புத் தருணங்கள்
Glimpses from the Inaugural Launch of Singappen by the Hon’ble Chief Minister
https://t.co/rzpOXOQPos
#CMJosephVijay#Singappen#TNPolice#DGPTamilNadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (10.06.2026) உடல் நலக்குறைவால் காலமான இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.!
தமிழகப் பெண்களின் பாதுகாப்பே முதன்மை!
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை அரசின் முதன்மை இலக்காகக் கொண்டு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவங்கி வைத்துள்ளார்கள்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும், அவர்களுக்கு அச்சமற்ற மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதிலும், இந்த சிறப்பு அதிரடிப்படை முக்கியப் பங்காற்றும் என்பது உறுதி.
பெண்களின் பாதுகாப்பே தமிழக அரசின் முதன்மை நோக்கம் என்ற உயரிய எண்ணத்துடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இந்த தொலைநோக்கு முயற்சி, சமூக நீதியையும் பெண்களின் பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது.
இந்த “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” மக்களின் நம்பிக்கையைப் பெற்று, தமிழகப் பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய சகாப்தத்தை உருவாக்கும். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழித்து, அதனை வேரோடு பிடுங்கி எறிவோம்.. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொன்னது போல பல ஆண்டுகளாக இந்த போதைப்பொருள் நடமாட்டத்தை கண்டு கொள்ளாமல் விட்டது தான் குற்றங்களுக்கு காரணமாக அமைகிறது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்! போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்!
தொடர்ந்து மக்களுக்கான திட்டங்களை கொண்டு செல்வோம்!
டாக்டர். TK. பிரபு,
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்.
கடந்த ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற நிர்வாகத்தால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் நடந்து வந்ததை பார்த்தோம்.
பெண்களை, குழந்தைகளை வெளியில் அனுப்பி வைத்துவிட்டு ஒரு அச்சத்துடனும் பதட்டத்துடனும் குடும்பத்தினர் இருந்த நிலையை கவனித்தோம்.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு . ச ஜோசப் விஜய் அவர்கள் அவர்கள் பொறுப்பேற்ற போது, முதல் கையெழுத்திலேயே இட்ட ஆணைக்கிணங்க பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான 'சிங்கப்பெண்' சிறப்பு படை இன்று துவங்கப்பட்டது.
#SingappenTaskForce-ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒரு தெளிவான செய்தியை வழங்கியுள்ளார் —
அந்த அச்சத்திற்கு இனி தமிழ்நாட்டில் இடமில்லை.
பெண்களின் பாதுகாப்பிற்கான சிறப்புப் படை. விரைவான நீதி. குற்றங்களுக்கு எதிரான உறுதியான - விரைவான நடவடிக்கை.
ஒவ்வொரு பெண் குழந்தையும் பாதுகாப்புடனும், சுதந்திரமாகவும், கண்ணியத்துடனும் வளர்வதே ஒரு முற்போக்கான சமூகத்தின் அடையாளமாகும்.
இனி பெண்கள் பயப்பட வேண்டியதில்லை; குற்றவாளிகள்தான் பயப்பட வேண்டும்.
#SingappenTaskForce #CMJosephVijay #TamilNadu
தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது.
மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு!
ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#PressFreedom
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
அரசு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பிலிருந்து @polimernews, @NewsTamilTV24x7, @TamilJanamNews உள்ளிட்ட செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகள் தவெக அரசால் நீக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
@CMOTamilnadu@TVKVijayHQ
செய்தித்தொலைக்காட்சிகளை முடக்குவது என்பது சனநாயகத்தின் குரல்வளையை அதிகார கொடுங்கரங்களால் நெரிப்பதற்கு ஒப்பானது. இதற்கு பெயர்தான் சனநாயகமா? இதுதான் சனநாயகன் ஆட்சியா?
செய்தியாளர்களை சந்திக்கத்தான் முதல்வர் விஜய் அவர்களுக்கு துணிவில்லை. செய்திகளை சந்திக்கவும் துணிவில்லையா? செய்தி தொலைக்காட்சிகளை முடக்கினால் அன்றாடம் நடக்கும் ஆட்சியின் அவலங்களை மறைத்துவிடலாம் என்று நினைப்பது, கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்று நம்புவதை போன்று அறிவுக்கு புறம்பானது.
உண்மைச் செய்திகள் மக்களிடம் சேராமல், அரசு கேபிளிலிருந்து செய்தித் தொலைக்காட்சிகளை இருட்டடிப்பு செய்வதில் காட்டும் வேகத்தையும், ஆர்வத்தையும் உங்கள் ஆட்சியில் விடிய விடிய தலைநகர் சென்னையில
இருட்டில் தவிக்கும் மக்களை காப்பதில் சிறிதேனும் காட்டுங்கள் முதல்வர் அவர்களே!
அதுதான் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற குறைந்தபட்ச நன்றியாக இருக்கும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (9.6.2026) சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
#CMJosephVijay