நீங்கள் விரும்பியது உங்களுக்கு கிடைத்தால் நினைவில் கொள்ளுங்கள், அல்லாஹ் உங்களை நேசிக்கிறான் என்று..!
நீங்கள் விரும்பியது உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நினைவில் கொள்ளுங்கள், அல்லாஹ் உங்களை பாதுகாக்கிறான் என்று...!❤🔥
இமாம் அலி இப்னு அபீ தாலிப் அவர்களின் பொன்மொழி:
> "உடலின் நிம்மதி குறைவான உணவில் உள்ளது.
> ஆன்மாவின் நிம்மதி குறைவான பாவங்களில் உள்ளது.
> உள்ளத்தின் நிம்மதி (தேவையற்றவற்றில்) குறைவான அக்கறை கொள்வதில் உள்ளது.
> மற்றும் நாவின் நிம்மதி குறைவான பேச்சில் உள்ளது
"மிக அழகான முப்பது இரவுகள் நெருங்கி வருகின்றன, பூமியின் மிக அழகான நாட்களின் நறுமணங்கள் வந்துவிட்டன. யா ரப்பே, நாங்களும், எங்கள் அன்புக்குரியவர்களும் மற்றும் எங்கள் குடும்பத்தினரும் ஆறுதலுடனும் அமைதியுடனும் இந்த ரமழானை அடைய உன்னிடம் மன்றாடி வேண்டுகின்றோம்."
_அவனுக்கே புகழனைத்தும்!_
நீங்கள் விரும்பாதபோதும், எத்தனை முறை உங்களுக்காக நன்மையைத் தேர்ந்தெடுத்திருக்கிறான்!
நீங்கள் அறியாதபோது, சோதனைகளுக்குள் அருட்கொடைகளை மறைத்து வைத்திருக்கிறான்!
ஹலால் நிறைந்த அன்பின் உண்மை வரிகள்_________💞
நண்பனுக்கு பயந்து அல்ல
பிள்ளைக்கு பயந்து அல்ல
பெற்றோருக்கு பயந்து அல்ல
ஊருக்கு பயந்து அல்ல
இறைவனுக்காக மாத்திரம் உன் மீது உண்மையான
அன்பை பரிசளிக்கிறேன்.
அவன் எறும்புகளின் காலடிச்சத்தத்தைக் கூட கேட்கிறான்.நீங்கள் மெதுவாக கேட்கும் துஆக்களை அவன் கேட்கவில்லை என்று நினைக்கிறீர்களா?இருண்ட இரவில் ஒரு திடமான பாறையில் ஒரு கருப்பு எறும்பின் காலடிச் சத்தம் கூட அவனுக்குக் கேட்கிறது அப்போ எப்படி உங்களுடைய துஆக்கள் அவனுக்கு கேட்காமல் போகும்
நீங்கள் ஒரு மனிதனுக்கு தர்மம் செய்த பின்பு எங்களுக்காக துஆ செய்யுங்கள் என்று அவரிடம் சொல்லாதீர்கள்!
தர்மம் செய்தால் அல்லாஹ்வுக்காக செய்யுங்கள் அல்லாஹ்விடம் வெகுமதியை எதிர்பாருங்கள்!
-இமாம் இப்னு தைமிய்யா
நூல் : மஜ்மூஉல் பஃதாவா