மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (5.6.2026) தலைமைச் செயலகத்தில், முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (5.6.2026) சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர்ப்போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்
கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர்ப்போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#CMJosephVijay
உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் இன்று எடுக்கும் முடிவுகள்தான் நம் நாளைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதை இந்நாள் நமக்கு நினைவூட்டுகிறது.
இந்நாளில், மரக்கன்றுகளை நட்டு, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நெகிழிப்பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட உறுதியேற்போம். நமது சிறிய முயற்சிகளே நாளைய தலைமுறைக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் பசுமையான உலகை உருவாக்கும்.
இயற்கையைக் காப்போம்;
நம் எதிர்காலத்தை வளமாக்குவோம்!
#WorldEnvironmentDay
#NowForClimate
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (5.6.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட திருமதி இரா. சாந்தி அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
#CMJosephVijay
மங்கோலியா நாட்டின் தலைநகரான உலான்படோரில் நடைபெற்ற 21-வது ஆசிய தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2026-ல் தங்கப் பதக்கம் வென்றதோடு, 2027 FIDE மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அனைத்து முயற்சிகளுக்கும் இந்த அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#CMJosephVijay
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள்.
#CMJosephVijay
#NorwayChess2026
@rpraggnachess