தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, இன்று (10.07.2026, வெள்ளிக்கிழமை), கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், காதப்பாறை, கொங்கு கல்வி அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட அட்லஸ் கலையரங்க வளாகத்தில், மதியம் 12.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்
(ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்)
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
"கரூரில் நடந்த துயர சம்பவத்தை வச்சி இழிவா பேசி காமெடி பண்ணி இருக்காரு.. இப்படி பேசுவது சரி அல்ல.." - ஸ்டாண்ட் அப் காமெடியன் மீது காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வழக்கறிஞர் புகார்
#Karur | #Police | #PolimerNews
"எம்.ஜி.ஆர் பிறகு த.வெ.க தான்.." வரும் பொங்கலுக்கு வெள்ளி, தங்க நிற ஜரிகையுடன் தரமான இலவச வேட்டி-சேலைகள்.. எம்.ஜி.ஆர் காலத்திற்கு பிறகு இப்போது தான் உயர் தர வடிவமைப்பு..! தமிழக அரசுக்கு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் நன்றி..
#TNGovt | #TVK | #CMVijay | #PolimerNews
அறநிலையத்துறை வரலாற்றில் முதல் முறையாக ரூ.100 கோடியாக பழனி கோவில் ஓராண்டு வருமானம் உயர்ந்துள்ளாதாக அதிகாரிகள் தகவல்
#Palani | #Temple | #HRCED | #Income | #PolimerNews
#JustNow || முறையாக வாதாடவில்லை என்றால் திமுக வழக்கை தள்ளுபடி செய்வோம்..
முதலமைச்சரை அக்யூஸ்ட் என கூறி நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றுகிறீர்கள் - உச்சநீதிமன்றம்
#CMJosephVijay | #Karur | #SupremeCourt | #PolimerNews