மாண்புமிகு அறநிலையத் துறை அமைச்சர் திரு . @RameshOffcl அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்! 🙏
முதலில் நீங்கள் ஒரு முறை
திருவண்ணாமலை கோவிலுக்கு நேரில் சென்று பாருங்கள் சத்தியமாக பொதுத் தரிசனத்தில் செல்லும் மக்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
நேற்று காலை 7 மணிக்கு உள்ளே சென்றவர்கள் சாமி தரிசனம் பார்க்கவே மதியம் 2:30 ஆகிவிட்டது. தேவையில்லாமல் மக்களை அடைத்து வைத்து கஷ்டப்படுத்துகிறார்கள்.
₹50 special darshan-ல கூட
4 முதல் 5 மணி நேரம் ஆகிறது.
ஏன் இவ்வளவு தாமதம்?” என்று உள்ளே சென்ற பிறகுதான் புரிந்தது…
Special darshan-ல் கருவறைக்கு அருகில் இருக்கும் gate பகுதியில் ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்களிடம் ஒருவருக்கு ₹500 வாங்கி உள்ளே வேலை செய்யும் சில ஊழியர்களே அனுப்புகிறார்கள். இது எல்லாம் நிர்வாகத்திற்கு தெரிந்தே நடக்கிறது.
மனநிம்மதிக்காக கோவிலுக்கு சென்றால் ஏன் இங்கு வந்தோம்?” என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது.
குறிப்பாக ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்களிடம் பெரிய அளவில் scam நடைபெறுகிறது.
இதையெல்லாம் தயவுசெய்து தடுத்து, பொதுமக்களுக்கு நிம்மதியான தரிசனம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! 🙏
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழக முதல்வரும், கழக தலைவருமான திரு.C. ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க,
பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையில், சாலைகளில் கூட்டமாக கூடி வரவேற்பு அளிப்பதையும், என்னை வரவேற்கும் நோக்கில் ப்ளக்ஸ் பேனர்கள் மற்றும் பதாகைகள் வைப்பதையும் கட்டாயமாக தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், ஏழை எளிய மக்களுக்கான எளிமையான ஆட்சியை முன்னெடுக்கும் நமது கழகத்தின் கொள்கைக்கு இணங்க, மாலை அணிவித்தல், பூங்கொத்து வழங்குதல், சால்வை அணிவித்தல் போன்ற மரியாதை நிகழ்வுகளை தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதற்கு பதிலாக, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு துணை நிற்கும் வகையில் நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் போன்ற கல்வி உபகரணங்களை வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
“மக்கள் சேவையே முதன்மை ; எளிமையே நமது அடையாளம்”
ஏழை எளியோரின் பசியைப் போக்க, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கரங்களால் தமிழ்நாடு முழுவதும் திறந்து வைக்கப்பட்ட 620 அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைத்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புமிகு பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.ஜே.சி.டி.பிரபாகர் @JCDPrabhakar அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்த போது
இப்படிக்கு,
R.சபரிநாதன் DME., https://t.co/INpFGqtRgp., MLA
அரசு தலைமைக் கொறடா
விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்
வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார்.
மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும்.
வாழ்த்துகள்.
@CMOTamilnadu
Congratulations to the Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru C Joseph Vijay. Our very best wishes to the incoming administration in fulfilling the aspirations of the citizens of this wonderful state. -Sg @TVKVijayHQ
I extend my sincere gratitude to the Hon'ble Prime Minister Thiru @narendramodi Avl for his kind wishes on my assumption of office as the Chief Minister.
Our sole objective is the welfare and progress of our people. We look forward to the active support and cooperation of the Union Government for the continued growth of Tamil Nadu.
My heartfelt thanks to the Leader of Opposition in Lok Sabha, Thiru @RahulGandhi ji, for gracing my swearing-in ceremony with his presence. Your support and kind wishes are truly appreciated as we embark on this journey to serve the people.
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே. இதுகுறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக உள்ளன. தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் திரு.விஜய் அவர்களை மக்கள் முதலமைச்சர் என்று முடிவுசெய்திருக்கிறார்கள்.
மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல.
மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு இந்த அளவிற்கு அரசியலும், அரசியல் சாசன விதிகளும் தெரியும் என்று நம்புகிறேன். பாஜக ஆளுநர் மாளிகை வழியாக அரசியல் செய்வதை உடனே நிறுத்தவேண்டும். மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தவெக தலைவர் திரு.விஜய் அவர்களை உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்.
The President of Tamizhaga Vettri Kazhagam (TVK), Thiru C Vijay, has formally requested the Indian National Congress (INC) to extend its support for forming a government in Tamil Nadu. The people of Tamil Nadu, especially the youth, have delivered a very clear, strong and overwhelming verdict for a secular, progressive and welfarist government that believes in constitutional principles. They have chosen the Tamizhaga Vetri Kazhagam (TVK) led by Mr. Vijay to form the next government.
The Indian National Congress stands for, and is the founding political party for, secular, progressive and welfarist politics in India. It is our constitutional duty to respect, uphold and help fulfil this mandate of the people of Tamil Nadu. Accordingly, the Tamil Nadu Congress Committee and the Congress Legislative Party (CLP) has decided to extend its full support to the TVK to form the government.
Our support shall be conditional upon the TVK keeping out from this alliance any communal forces that do not believe in the Constitution of India.
This alliance between the TVK and the Tamil Nadu Congress will strive to bring back Perunthalaivar Kamaraj's glory days of Tamil Nadu, with a strong commitment to Thanthai Periyar's social justice ideals and Dr. BR Ambedkar's constitutional ideals in the years and decades to come.
This alliance - founded on mutual respect, appropriate share, and shared responsibility between the two parties is not only for the formation of this government, but also for future elections to the local body organisations, the Lok Sabha and the Rajya Sabha.
Mr. Vijay and Shri Rahul Gandhi jointly pledge to respect this historic verdict of the people of Tamil Nadu for a secular and progressive government, and to fulfil the dreams and promises of the people especially the youth of Tamil Nadu.
Thiru @girishgoaIN
AICC In charge Tamil Nadu
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
My sincere thanks to the Honorable Leader of the Opposition in the Lok Sabha for the call and kind wishes! We shall remain committed to excellence in public service, and preserving the cultural ethos of our state which requires collective cooperation. Beyond politics, we shall prioritize for the welfare of the people of Tamil Nadu.
Thank you, Hon'ble @PMOIndia, for your greetings. The well-being of our people remains our only goal.
Transcending politics, we shall focus on the State's progress and the welfare of people of Tamil Nadu. We look forward to the Union Government’s support in this endeavor.
I spoke to Thiru Vijay and congratulated him on TVK’s spectacular result.
This mandate reflects the rising voice of youth which cannot, and will not, be ignored.
My heartfelt thanks to the Congress workers of Tamil Nadu and Puducherry for their hard work and support.
I reiterate that the Congress party will continue to protect and serve the people of Tamil Nadu and Puducherry.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு எங்களது நன்றி. மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்குப் பாராட்டுகள்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், அதன் மக்கள் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.