சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
கழகத்தின் #GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.
கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?
நிர்வாகத்திறனற்ற #SofaModel அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.
கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன்.
தமிழ்நாட்டில் திரும்பும் திசை எங்கும் பாலியல் வன்கொடுமைகள் - கொலை - கொள்ளைகள் - கேள்விக்குறியாகி இருக்கும் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு என சீர்கெட்டு இருக்கும் சட்டம் ஒழுங்கைக் கண்டித்து,
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள், கழக சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேரவை வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து - பதாகைகள் ஏந்தி த.வெ.க. அரசுக்கு எதிராக முழக்கமிட்டார்கள்.
வேளச்சேரி-177 வது வட்டச்செயலாளர் அன்பிற்கினிய நண்பர் பொ.த.மதிவாணன் அவர்கள் முனைவர் பட்டம் பெற சமர்ப்பித்துள்ள “மருந்துத் தொழிலில் உலகமயமாக்களின் தாக்கம்”குறித்த ஆய்வு கட்டுரையின் பிரதியை இன்று நம்மிடம் தந்து மகிழ்ந்தார்…
சென்னை -காஞ்சிபுரம்- செங்கல்பட்டு- திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த கழக இளம் பேச்சாளர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சியை, அன்பகத்தில், இன்று நடத்தினோம்.
சமகால அரசியல் சூழலில் சமூக வலைதளத்தின் வாயிலாக, கழகப் பணி-மக்கள் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வது குறித்து,
கலந்துரையாடினோம்.
மேடைப்பேச்சு தொடங்கி, சமூகவலைதளம் வரை திறன் வாய்ந்த செயற்பாட்டாளர்களாக இளம் பேச்சாளர்கள் விளங்குவார்கள் என்ற நம்பிக்கையை, இந்தச் சந்திப்பு மீண்டும் உறுதி செய்தது.
@dmk_youthwing@uyirinummelana
பத்திரிகைச் செய்தி
இன்று (14-06-2026), சென்னை அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக மீனவர் இயக்கத்தின் தலைவர் திரு. அந்தோணி மைக்கேல் சாரத் அவர்கள், தனது தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் தனது இயக்கத்தை, கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது முன்னிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்தார்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி மேற்கு பகுதி கழகத்தின் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பரிசுகள் வழங்கி சிறப்பித்தோம்
#Masubramanian#கலைஞர்103#DMK4TN
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனையைக் காவல்துறை பெற்றுத்தர வேண்டும்.
வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த #SofaModel ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதை ஆவது கண்டிக்கத்தக்கது.
தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்துக்குப்புறம்பாக வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள் - பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார்.
சேலத்தில் 50 மேற்பட்ட பெண்களுக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் பாலியல் தொல்லை கொடுத்தது - ஆலந்தூரில் அவரது கட்சி பிரமுகர் கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறியது - சிங்கப்பெண் படையை உருவாக்கிய சில தினங்களில் சிவகங்கையில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை..
இப்படி தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு, வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டிருக்கிறது.
ஆட்சி அமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எந்த ஓர் உறுதியான நடவடிக்கையையும் எடுப்பது போல தெரியவில்லை.
அடுத்த கட்சி ஆட்களை Purchase செய்யும் நேரத்தில், கொஞ்சமாவது சட்டம் ஒழுங்கை protect செய்ய முதலமைச்சர் அக்கறை காட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் சீரழியும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற உடனே காவல்துறை அதிகாரிகள் அளவில் உயர்நிலைக் கூட்டத்தை நடத்தி, மண்டல - மாவட்ட அளவிலான காவல்துறை அதிகாரிகளுக்கு குற்றங்களைத் தடுப்பதற்கான கடுமையான உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும்.
இனியும் இது மாதிரியான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்தால், எங்கள் தலைவர் அவர்களின் அனுமதியைப் பெற்று, மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.கழகம் தயங்காது.
#StopSexualHarassment #LawAndOrder
மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் சென்னை தெற்கு மாவட்டத்தைச் சார்ந்த மீனவ அமைப்பைச் சார்ந்த 800 மேற்பட்டோர் இன்று கழகத்தில் இணைத்துக் கொண்டனர். @mkstalin#Masubramanian#ChennaisouthDMK
2026 தேர்தல் முடிவுகள் தொடர்பாக அமைக்கப்பட்ட திமுக கள ஆய்வுக்குழு உறுப்பினராக, புதுக்கோட்டை தெற்கு, மதுரை மாநகர் - மதுரை வடக்கு மற்றும் சிவகங்கை மாவட்ட தொகுதிகளைச் சேர்ந்த;
கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகளை நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துகள், ஆலோசனைகள், பரிந்துரைகள் ஆகியவற்றை விவரமாகவும் விளக்கமாகவும் கேட்டறிந்து தயாரிக்கப்பட்ட அறிக்கையினை;
அன்னைத் தமிழ் மண்ணை
அறிவாலயத்தில் இருந்தே
ஆண்டு கொண்டிருக்கும்..
திக்கெட்டும் புகழ் மணக்கும் திராவிடமாடல் திட்டங்களால் மக்கள் மனங்களில் சிம்மாசனமிட்டிருக்கும்..
தமிழ் கூறும் நல் உலகின்
சிங்க நிகர் திராவிட பேரரசர் அவர்களிடம் வழங்கிய பொன்னான தருணம்…🙏🏼🌅
@mkstalin@Udhaystalin
#உடன்பிறப்பின்_குரல்
#திமுக
கழகத் தலைவர் அண்ணன் திரு. @mkstalin அவர்கள் முன்னிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கழக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம்.
வெற்றி - தோல்வி எதுவாயினும் மக்கள் பணியே முதன்மையென்று நினைக்கும் நம் கழகத்தின் கொள்கைகளை உறுதியோடு பின்பற்றி பணிசெய்வோம். தமிழ்நாட்டுப் பெண்களின் உரிமைகளைக் காப்போம்.
செங்கல்பட்டு தொகுதியில் மாற்றுக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட சகோதரர் கஜேந்திரன் அவர்களின் தலைமையில் 1500 பேர் நமது தலைவர் @mkstalin முன்னிலையில் கழகத்தில் இன்று இணைத்துக் கொண்ட நிகழ்ச்சியில் நாமும் பங்கேற்றோம்.
திராவிடக் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதில் கழகமே உறுதியான இயக்கம் என்பதை உணர்ந்து நம்முடன் இணைந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
உடன்பிறப்புகளாய்
ஒன்றிணைந்து செயலாற்றுவோம்!
#DMK @thamoanbarasan