சிங்கவாகனத்தில் வீற்றிருக்கும் வீரத்தாயே
தீமைகள் அனைத்தையும் அழித்து
நன்மைகள் அனைத்தையும் அருளும்
பராசக்தி நீயே
என் வாழ்வின் ஒவ்வொரு நாளும்
உன் திருவடியை நினைத்து வாழும் வரம் தா
உன் அருள் நிழல் போதும் அம்மா
என் வாழ்க்கை முழுவதும் வசந்தமாகும்
ஓம் தும் துர்க்காயை நம.🌿🙏🌺
நாகம்மா
துன்பம் வந்து கதவைத் தட்டினாலும்❤️🩹
பயப்படாதே மகளே என்று கைகோர்க்கும் தாயே🤱
நாகம்மா
உன்னை விட எனக்குத் துணை யாருமில்லை👏
உன் திருவடியில் என் உயிரும்🛕 என் நம்பிக்கையும்🫶
என்றென்றும் சரணாகதி🙇♀️
ஓம் சக்தி ஓம் நாகபூஷணி அம்மன் திருவடிகளே சரணம்.🌿🙏🐍
எழுச்சியின் ஒளியாக விளங்கும்
என் நாகம்மா போற்றி🌿
மலர்ச்சியை தரும் மங்களமே🌺
புகழும் பெருமையும் பொழியும்
புண்ணிய வடிவே போற்றி🦜
என் குலதெய்வம் நாகபூஷணி அம்மை ஆச்சி🙇♀️
உன் திருவடிகளை நாளும் போற்றும் பாக்கியத்தை அருள்வாய்👏
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி.🌿🙏🌺
பொன் முகமாய் புன்னகைக்கும் நாகபூஷணி நாகம்மா
தாயே
அழைத்த நொடியிலே அருளோடு ஓடி வருவாய்
அன்பு நிறைந்த உன் கரங்களால் என்னை அணைத்திடுவாய்
நாகபூஷணி நாகம்மா
என் உயிரின் ஒளி நீயே
என் வாழ்வின் வழி நீயே
என்றும் உன் திருவடியே என் நித்திய சரணமம்மா
ஓம் சக்தி