அழகும், அறிவும், அருளும் ஒன்றாய் கலந்த வடிவே முருகன்
எம் விழிகள் பருகிடும் பேரழகே
எம் விரல்கள் எழுதிடும் தேன் தமிழே
எழுவாய் திறவாய் உன் விழியை! வருவாய் தருவாய் பேரருளை
உருவாய் அருவாய் நீ இருப்பாய்
உயிரில் கருவாய் நீ பிறப்பாய்
தொடரும் வினையைதானறுத்து
வளரும் பிறையாய் வாழ்வளிப்பாய்!