காவிரி விவசாயிகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் @UdhayStalin தலைமையில் தஞ்சையில் திரண்ட கழகம்!
உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் பெருகும்!
காவிரி பெருக்கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில் டெல்டா விவசாயிகள் ஆதங்கம் பெருக்கெடுக்கப் போராடி வருகின்றனர்!
விவசாயப் பெருங்குடி மக்களின் உணர்வுகளை உரக்கச் சொல்லும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழமைக் கட்சித் தலைவர்கள் @Jawahirullah_MH, @ThamimunansariM, @nellai_mubarak ஆகியோருக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தோழர்களுக்கும், பல்வேறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜூன் 12 வந்து சேர்ந்திருக்க வேண்டிய காவிரி நீர் ஆகஸ்ட் பிறந்தும் வரவில்லை.
ஆடி பதினெட்டில் பொங்கி வரும் புதுப்புனலை வரவேற்ற காவிரிக்கரையின் மைந்தர்கள் #விவசாயவிரோதிவிஜய் ஆட்சியின் சோம்பேறித்தனத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சரைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. அண்டை மாநிலத்தில் திரைப்படம் ஓடுவதற்காக நம் விவசாயிகளின் வாழ்க்கையையா அடகு வைப்பீர்கள்?
முழுக் கடன் தள்ளுபடி என வாழைப்பழம் போல வாக்குறுதி தந்து வெற்றி பெற்றுவிட்டு, விவசாயிகளை ஏமாற்றிய மோசடி ஆட்சியாக இந்தத் த.வெ.க. ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.
#MekedatuDam கட்டியே தீருவோம் என அடம் பிடிக்கும் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லத் துடியாய்த் துடிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று கர்நாடகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பற்றிய செய்திகளைப் பார்த்தாரா? இங்கு அதேபோல் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட முதலமைச்சருக்கு நேரமில்லையா?
விவசாயிகளைச் சந்திக்காமல் புறக்கணித்துவிட்டு, வேளாண் பட்ஜெட்டைத் திருப்பதிக்குத் தூக்கிக் கொண்டு சென்றால் உங்கள் பாவங்கள் போய்விடுமா?
நாக்பூரில் நம் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்குக் கூட கண்டனம் தெரிவிக்காமல், கள்ள மவுனம் காக்கிறார் திரையில் தன்னூத்து விவசாயியாக வேடம் தரித்தவர்.
விவசாயிகளை இனியும் வஞ்சிக்காமல் த.வெ.க. அரசு வாக்குறுதியளித்தபடி முழுக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும்.
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காற்றில் பறக்க விடாமல் தீவிரமாகச் செயல்பட வேண்டும். அதுவரை கழகத்தின் போராட்டம் தொடரும்!
நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதலமைச்சரால் தமிழ்நாட்டிற்கு இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது!
- மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @udhaystalin அவர்கள்
#விவசாயவிரோதிவிஜய்
Today, The Parliament has been treated to defame and defile the Constitution by enacting legislation for 'Vande Mataram' song as the National Song in full text as against the Constituent Assembly decision where only first two stanzas were approved and sung; since rest of the stanzas are against Muslims!.
Hope that this Constitutional fraud will not stand before the judicial scrutiny!.
மாண்புமிகு ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் திரு @AshwiniVaishnaw அவர்களை நேரில் சந்தித்து, திருச்சி மாரிஸ் தியேட்டர் பகுதி, திருச்சி சந்திப்பு மற்றும் லால்குடி–மணக்கால் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே மேம்பால (ROB) திட்டங்களை எவ்விதத் தொய்வுமின்றி விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தினேன்.
மேலும், லால்குடி மற்றும் சுற்றுவட்டார மக்களின் நீண்டநாள் தேவையை கருத்தில் கொண்டு, லால்குடி ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தேன்.
#railways #transport #lalgudi #trains #trichy #development #parliament #DMK #MKStalin #Udhayanidhi #Trichy #ArunNehru #Perambalur
நாடாளுமன்றத்தில் திமுகவின் எதிர்ப்பை மீறி தாக்கல் செய்யப்பட்ட வந்தே மாதரம் மசோதா அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது!
- திரு. @dmk_raja எம்.பி அவர்கள்
1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.
எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே #தமிழ்நாடு_நாள்!