நேற்று புதுச்சேரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த எங்களது கழகத் தலைவர், திராவிட பேரரசர் @mkstalin அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளைப் பெற்ற மகிழ்ச்சியான தருணம்.
#mkstalin4tn🖤❤️ #udhayanna🖤❤️ #udhay4youth
இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளரும், மாண்புமிகு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பாசமிகு அண்ணன் சின்னவர் @Udhaystalin அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளையும் அன்பையும் பகிர்ந்து கொண்ட இனிய தருணம்.
#UdhayanidhiStalin#Udhay4Youth
தங்கள் வீட்டுப் பிள்ளையாக, அண்ணனாக, தம்பியாக எப்போதும் அளவில்லா அன்பைப் பொழியும் நமது சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் மீண்டும் போட்டியிடுகிறோம்!
அமையவிருக்கும் #திராவிடமாடல் 2.0-வில் இன்னும் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொகுதி மக்களுக்குக் கொண்டுசேர்க்க, அயராது உழைப்போம்!
வெல்வோம் ஒன்றாக!
#ChepaukTriplicane #DMK4TN #VoteForDMK
முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட சில பகுதிகளில் புதிய நகர் பெயர் பலகைகள் அமைக்கும் பணிக்கான பூஜை சமீபத்தில் என் முன்னிலையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, இந்தப் பணிகள் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு தற்போது விறுவிறுப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பணிகள் தாமதமின்றி விரைவாக நிறைவு பெறுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.
தொகுதி மக்களுக்கு இடங்களை எளிதில் அடையாளம் காணவும், பகுதி வளர்ச்சிக்கும் உதவும் வகையில் இந்த நகர் பெயர் பலகைகள் அமைக்கப்படுகின்றன.
.
.
.
.
.
.
#MudaliarpetMLA
#No1MudaliarpetConstituency
#PYDMK
#PUDUCHERRYMLA
முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஜெயமூர்த்தி ராஜா நகர் விரிவு, வேல்ராம்பட்டு, திருப்பூர் குமரன் நகர், இன்ஜினியர்ஸ் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டநாளாக நிலவி வந்த குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் புதிய ஆழ்துளை கிணறு, குழாய் மின்னிறைப்பி மோட்டார் பம்ப் செட், மின்னாக்கி தொகுப்பு மற்றும் நீர் ஊந்து குழாய் அமைக்கும் பணிகளுக்கு ரூ.35,22,000 மதிப்பில் அரசாணை பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று எனது தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தொகுதி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
.
.
.
.
.
.
#MudaliarpetMLA
#No1MudaliarpetConstituency
#PYDMK
#PUDUCHERRYMLA
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழகத்தில் இந்தியாவிற்கே முன்னோடியாக பல புதிய திட்டங்களை செயல்படுத்தி திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்கள் மற்றும் கழக இளைஞரணி செயலாளரும், இளைஞர்களின் நாளைய நம்பிக்கை நட்சத்திரம் மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களின் அன்பால் ஈர்க்கப்பட்டு, புதுச்சேரி மாநிலத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.
புதுச்சேரி கழக இளைஞரணியில் நடைபெற்ற இந்த இணைப்பு விழா, கழக இளைஞரணி மாநில துணை செயலாளர் சகோதரர் திரு. பிரபு கேஜேந்திரன் அவர்களின் முன்னிலையில், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அண்ணன் திரு. இரா. சிவா அவர்களின் வழிகாட்டுதலுடன், எனது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் புதுச்சேரி மாநில திமுக பொருளாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் திரு. செந்தில்குமார் அவர்கள், புதுச்சேரி மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்கள், காலாப்பட்டு தொகுதி பொறுப்பாளர் சகோதரர் திரு. செந்தில் அவர்கள், காலாப்பட்டு தொகுதி செயலாளர் திரு. சத்தியவேல் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
.
.
.
#MudaliarpetMLA
#No1MudaliarpetConstituency
#PYDMK
#PUDUCHERRYMLA
#DMKFORPY
#DMKYW
#DMKYOUTHWING
புதுச்சேரி நகராட்சி முதலியார்பேட்டை, ஜெயமூர்த்தி ராஜா நகர் விரிவு, இளங்கோ விதி, கற்பகம் வீதி, அமிர்தம் வீதி மற்றும் பாரதியார் வீதி (இரண்டாவது குறுக்கு வீதி) பகுதிகளில் சாலை மற்றும் வாய்க்கால் வசதி மேம்பாட்டுப் பணிகள் ரூ. 27.47 லட்சம் செலவில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில், பாராளுமன்ற உறுப்பினர் திரு வை. வைத்திலிங்கம் அவர்கள் தலைமையில், எனது முன்னிலையில் இப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்த விழாவில் துறை அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
.
.
#MudaliarpetMLA
#No1MudaliarpetConstituency
#PYDMK
#PUDUCHERRYMLA
முதலியார் பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜோதி நகர் பகுதியில் நீண்ட நாட்களாக சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதனை கருத்தில் கொண்டு, எனது தீவிர முயற்சியின் பேரில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, புதிய சாலை அமைப்பதற்கான அரசாணை பெற்று, எனது தலைமையில் பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டன.
தற்போது அந்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்பதை ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும் தரமான முறையிலும் முடிக்க வேண்டுமென அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
.
.
.
#MudaliarpetMLA
#No1MudaliarpetConstituency
#PYDMK
#PUDUCHERRYMLA
முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஜெயமூர்த்தி ராஜா நகர் விரிவாக்கப் பகுதியில் புதிய வாய்க்கால் அமைப்பதற்காக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தேவையான அரசாணை பெற்றதைத் தொடர்ந்து ரூபாய் 94 லட்சம் மதிப்பீட்டில் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை என் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் துறை அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
.
.
.
#MudaliarpetMLA
#No1MudaliarpetConstituency
#PYDMK
#PUDUCHERRYMLA
முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட சுந்தர்ராஜ் வீதி, தியாகிகள் வீதி மற்றும் தெய்வநாயகம் வீதி ஆகிய பகுதிகளில் ரூ.15.75 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூஜை எனது தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தொடர்புடைய துறை அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும், பணிகளை தரமாகவும் விரைவாகவும் நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன்.
.
.
.
#MudaliarpetMLA
#No1MudaliarpetConstituency
#PYDMK
#PUDUCHERRYMLA
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், தமது 73-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, குடும்பத்தினருடன் கேக் வெட்டி மகிழ்ந்த நிகழ்வில் பங்கேற்றோம்.
இந்திய ஒன்றியத்தின் ஒப்பற்ற நம் தலைவர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தோம்!
இந்திய கூட்டாட்சி தத்துவத்தின் உறுதியான குரலாகவும், மாநில உரிமை முழக்கத்தின் சமகால முகமாகவும் திகழும் கழகத் தலைவர், தமிழ்நாட்டின் மண்–மொழி–மானத்தை காக்க அயராது உழைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#HBDCMMKStalin #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
இந்திய கூட்டாட்சி தத்துவம் - மாநில உரிமை முழக்கத்தின் சமகால முகம். ஆதிக்கத்திற்கு அடிபணியாத கொள்கை உறுதியாலும், அயராத உழைப்பாலும், மக்கள் மீது கொண்ட பேரன்பாலும், தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்கும் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin
அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
கழகத் தலைவர் தலைமையில், 2026-ல் மீண்டும் #DravidianModel ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#HBDCMMKStalin #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்