சங்கீதம் 103:11
பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.
ஆமென்🙏
இஸ்ரவேலின் தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏
சங்கீதம் 32:7
நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா.)
ஆமென்🙏
ஸ்தோத்திரம் இயேசுவே 🙏
உபாகமம் 28:1
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால்,
உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
ஆமென்🙏
தேவனுக்கே மகிமை 🙏
ஏசாயா 44:21
யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை.
ஆமென்🙏
ஸ்தோத்திரம் இயேசுவே 🙏
நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு நாமம் தரித்தேன்.
ஏசாயா 45:5
நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.
ஆமென்🙏
ஸ்தோத்திரம் இயேசுவே 🙏