எரிகாற்று உருளை விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்!
வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிகாற்று உருளையின் விலையை இந்திய ஒன்றிய அரசு 29 ரூபாய் அளவிற்கு அதிகரித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. எவ்வித முன்னறிவிப்புமின்றி எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தியுள்ளது ஏழை எளிய மக்களை வாட்டி வதைக��கும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.
ஏற்கனவே ��ெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கட்டுக்கடங்காது நாளுக்கு நாள் உயர்வதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் மக்கள் செய்வதறியாது தவித்து நிற்கையில், எரிகாற்று உருளை விலையையும் உயர்த்துவது, இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான குடும்பங்களின் குருதியை உறிஞ்சும் கொடுஞ்செயலாகும்.
இந்திய ஒன்றிய அரசின் கையி��ிருந்த வாகன எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை தனியார் எரிஎண்ணெய் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் வகையில், கடந்த 2010ஆம் ஆண்டு சூன் மாதம் பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை காங்கிரசு அரசும், 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டீசல் விலை நிர்ணய உரிமையை பாஜக அரசும் மொத்தமாகக் கையளித்ததன் விளைவே தற்போது மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கு அடிப்படை காரணமாகும்.
1200 ரூபாய் அளவிற்கு விற்ற சமையல் எரிக���ற்று உருளையின் விலை கடந்த நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டுதான் 1000 ரூபாய்க்கு கீழாக குறைக்கப்பட்டது. தற்போது அதனை மீண்டும் 1000 ரூபாய் அளவிற்கு உயர்த்தும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் மாதந்தோறும் பாதிக்கும் அறமற்றச் செயலாகும்.
ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு எரிகாற்று உருளை விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும், எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் இந்திய ஒன்றிய அர���ே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
இத்தகைய நெருக்கடியானச் சூழலில் எரிகாற்று உருளை விலை உயர்வால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படாமல் காக்க, தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு, உடனடியாக தான் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து குடும்பங்களுக்கும் வருடத்திற்கு 6 எரிகாற்று உருளைக்கான செலவை முழுமையாக ஏற்க வேண்டுமெனவும் கேட்ட���க்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனையை அனுமதிக்கலாமே? என்று கேள்வி எழுப்பியுள்ள மாண்பமை நீதியரசருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி!
கடந்த ஏப்ரல் மாதம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பனை மரத்திலிருந்து கள் இறக்கிய விவசாயி மணிகண்டன் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கை விசாரித்த மாண்பமை மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதியரசர் புகழேந்தி அவர்கள் புதுச்சேரி, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் கள் விற்பனைக்கு அனுமதி உள்ளபோது, தமிழ்நாட்டில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது ஏன்? எனவும், கேள்வி எழுப்பியதுடன், கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனும்போது, தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அரசு ஏன்
அனுமதி வழங்கக்கூடாது? அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனைக்கு அனுமதிக்கலாமே? என்றும் கருத்துத் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் தருகிறது.
‘கள்’ உணவின் ஒரு பகுதி என்றும், சங்ககாலம் தொட்டே ‘கள்’ தமிழர் பண்பாட்டில் பயன்பாட்டில் உள்ளது என்றும் வலியுறுத்திவரும் நாம் தமிழர் கட்சி, பனை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ‘கள்’ விற்பனைக்குத் தமிழ்நாடு அரசு அன���மதிக்க வேண்டும் போராடி வருகிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் ‘கள்ளின் மருத்துவப் பயன் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ள மாண்பமை நீதியரசர் புகழேந்தி அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் கள் விற்பனையை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று போராடிவரும் பனை தொழிலாளர்கள் மற்ற���ம் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நெடுங்காலக் கோரிக்கை விரைவில் நிறைவேறட்டும்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
First full page advertisement for a government function by public money, same as like dravidian parties regime.
Vijay is not alternative rather he is elongation of dravidan political culture…
#TVKVijayFails
ஶ்ரீநாத் வெற்றிபெற்றது தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில். ஆனால், நன்றி தெரிவிப்பது திருச்செந்தூர் தொகுதியிலுள்ள புன்னக்காயல் கிராமத்தில்..
திருச்செந்தூர் தொகுதியில் வெற்றிபெற்றது திமுக.
வெளங்கும்!
திருப்பூர் பெருமாநல்லூர் சாலையிலுள்ள பூலுவப்பட்டி பகுதியில் உள���ள சாலையை சீரமைத்த நாம் தமிழர் கட்சியினர்..
தவெக அரசு என்ன புடுங்கிட்டு இருக்கு? @TVKVijayHQ
#NTK4Tamilnadu #TVKfails
தேர்தல் முடிவு வந்த பின் வந்த நாட்களில் ஒரே பாடலைத்தான் மீண்டும் மீண்டும் கேட்டு நான் மீண்டேன்..
அறுவடை நாள் படத்தில் வந்த "தேவன் கோயில் மூடிய நேரம்" என்ற பாடல்.. அல்ல, அல்ல.. தேவகானமே அது..
இருளில் இருக்கையில் வெளிச்சம் நோக்கி அந்த இசையே இழுத்துக்கொண்டு சென்றது.
உள்ளுக்குள் எழுந்த பிசாசின் கோவத்தை அதுவே சாந்தப்பட��த்தியது..
எதிர்காலம் எண்ணி உருவான நடுக்கத்தை தவிர்க்க அதுவே நம்பிக்கையாக இருந்தது..
அடங்காத பதட்டத்தை நடுவே வந்த ""ஏஏ
தந்தன தந்தன தந்தனா..ஆஆஅ..
தந்தான தந்தான தானன்னா நனா
தந்தானா தந்தனா ஹே.."" தான் அடக்கியது.
பாடல் முழுக்க பின்னால் தூரத்தில் கேட்கும் மணியோசை அதிகாலை தேவாலய அமைதியை உள்ளுக்குள் உருவாக்கியது.
பாடலில் முடிவில் "ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம் அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்" என்னும் பொழுது மேலெழுந்து வரும் மன உளைச்சலின் அழுத்தத்தை எல்லாம் ராகத்தின் வழியே சுத்தமாக துடைத்து இசைஞானஸ்நானம் பெற்றவனாக மீண்டவனானேன்..
என்ன செய்வது இளகிய இதயம் கொண்டவன் இளையராஜாவிடம் தானே தஞ்சமடையவேண்டும்..
இளையராஜா எனும் மீட்பரை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!!!
தனது மேலாளர் ஜெகதீஷ் பழனிச்சாமியின் புதுமனை புகுவிழாவில் இன்று காலை பங்கெடுத்திருக்கிறார் முதல்வர் விஜய்.
இன்றையதினம் தொடங்குவதாக இருந்த சிங்கப்பெண் அதிரடிப்படை திட��டம் நேற்றையதினம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட��ு இதற்காகத்தானா?
அரசுத்தரப்பில் ரத்து செய்யப்பட்டதற்கு விளக்கம் ஏதேனும் அளிக்கப்பட்டதா?
அன்பிற்கினிய நண்பர் @Madeshjournali1 அவர்களே! உங்களது அன்பை முழுமையாக அறிவேன். அதுபோலவே, நானும் உங்கள் மீது அன்புகொண்டிருக்கிறேன். அந்த நட்பும், உறவும் எப்போதும் இருக்கும். அது வேறு.
காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்/அமைச்சர் @drtkprabhu_TVK அவர்களை நெருங்கிப் பார்த்தபோதுதான் அவர் நல்லவரெனத் தெரிந்தது எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்! அவர் நல்லவரா? கெட்டவரா? எனும் முடிவுக்கும், மதிப்பீடுக்கும்கூட நான் செல்லவில்லை. அவரது அரசியலையும், அரசியலை அவர் அணுகும் முறையையும்தான் விமர்சிக்கிறேன்; எதிர்க்கிறேன்.
அப்புறம், நல்லவர் என அவரைக் கட்டமைக்க நடந்த PR Strategies, Narratives, Paid Interviews எல்லாவற்றையும் 'நன்றாக' அறிவேன். திரைக்கவர்ச்சியாலும், தனிநாயகப் பிம்பத்தாலும் வெற்றியை ஈட்டினாலும், சில தொகுதிகளில் தவெகவும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது. அதில் இந்த 'நல்லவர்' பிரபுவும் அடக்கம் என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன். காரைக்குடி தொகுதியில் நல்லவர் செய்த சாதிரீதியிலான அணிதிரட்டலையும், பணப்பட்டுவாடாவையும் மறுக்க முடியுமா?
போகட்டும்! கனிமவளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறார். வளக் கொள்ளையைத் தடுத்து, மண்ணின் வளத்தைக் காக்கும் வேலையைச் செய்யட்டும். முழுமையாக வரவேற்கலாம். அதனைவிடுத்து, ரீல்ஸ் மூலம் ஊரை ஏமாற்றும் அற்பத்தனம் வேண்டாம் என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து!
அப்புறம், ஈழப்பெருநிலத்தில் மாவீரர் தெய்வங்கள் செய்த இனமானப் பணிகளில் கோடியில் ஒரு துளியாவது செய்து, புலிக்கொடி போர்த்தப்பட்டு பூமிக்குள் செல்லுவதே எனது வாழ்வின் உயரமாகவும், உச்சமாகவும் கருதுகிறேன் என்பதைப் பணிவோடு தெர���வித்துக் கொள்கிறேன்.
Volvo பஸ் வரலன்னு கேட்டா, தமிழ்நாடு அரசுப் பஸ்ஸ பத்தி பேசுன்னு சொல்றாப்ல போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபன்.
Volvo பஸ்னால�� தனியார் பஸ்னு நெனச்சுக்கிட்டு இருக்காப்ல!
வெளுங்கும்!