#JustIn காலி முகத் திடலில் போராட்டம் நடாத்தும் இடத்திற்குள் நூற்றுக்கணக்கான இராணுவம் நுழைந்து அங்கு பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
பலர் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல். #LKA
#Breaking#Srilanka மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட தரப்பினருக்கு வெளிநாட்டு பயணத் தடையை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.#LKA
#Srilanka
பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க வழிவிட தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.#LKA#EconomicCrisisLK
#JustIn#Srilanka புதிய அரசை அமைப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி பங்களிப்பு வழங்கும் என மைத்ரிபால சிறிசேன பிரதமருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். #LKA#SriLankaEconomicCrisis
#Breaking உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு வடக்கு , தெற்கு, மத்திய பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #LKA#SrilankanCrisis
#Srilanka “அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் போது ; அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை கவலையளிக்கின்றது” என கனடா நாட்டின் தூதுவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.#LKA
#France இன்று ஞாயிற்றுக்கிழமை (24 ஏப்ரல்) நடைபெற்று முடிந்த இரண்டாவது சுற்று பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தற்போதைய இளம் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்,
58 வீதமான வாக்குகளை பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் #FranceElection2022
#Srilanka அனைத்து பல்கலைகழக மாணவ ஒன்றியத்தினர் விஜேராமவிலுள்ள பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ;#LKA#EconomicCrisisLK
#Srilanka இன்று (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5kg சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5,175 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.#LKA#EconomicCrisis