1.திருடியே பரம்பரை திருடர்கள் ஆனவர்கள்.
2.வாங்கி வாங்கி வீங்கி போன வாய் சவடால் வீரர்கள்.
3. கொடுத்து பழகியவர், இன்னும் அதிகம் கொடுக்க நினைப்பவர்.
அவர், இவர், நம்மவர் யார்?
#tvtalk
பிறரின் நம்பிக்கையை மிதிப்பது மன்னிக்க முடியாத குற்றம் தான். இருந்தும் நான் தள்ளி நின்று பார்க்கிறேன் புண்ணிய பூமி என்றுமே மிதிபடுகிறது...!
என் பாத சுவடுகளில் பூக்கள் மலரவில்லை என்றால், நான் பூமியை மிதிக்க அருகதை அற்றவனா? எல்லா கட்டிடங்களும், எழும்பி நிற்பது பூமி மீதுதானே...!
ஆனது, போனது வயது,
துலாபாரம் போட்டு நின்ற
சில நினைவுகள்,
மகிழ்ச்சியுடன் கடந்தது என்னவோ சில நிமிடங்கள் தான்,
மனது மீண்டும் மீண்டும் அதையே எதிர்பார்க்கிறது,
காலம் எல்லோருக்கும் விரைவுந்து தான்,
விலை விற்பவனுக்கே அன்றி விடையத்திற்கு இல்லை...!
ஃபாரிட்
அரிசி மூட்டை தூக்கும் மனிதனுக்கு
வயிறு பசிக்கிறது,
ஒரு பிடி அரிசி இருந்தால் போதும் அவன் பசியை தீர்த்து விடலாம்,
ஐயோ பாவம் என்று ஆயிரம் வாய் சொல்லும்,
ஞாபகப்படுத்த விரும்புகிறேன் வார்த்தை ஒருபோதும் பசியை தீர்க்காது...!
ஃபாரிட்
ஆனது, போனது வயது,
துலாபாரம் போட்டு நின்ற
சில நினைவுகள்,
மகிழ்ச்சியுடன் கடந்தது என்னவோ சில நிமிடங்கள் தான்,
மனது மீண்டும் மீண்டும் அதையே எதிர்பார்க்கிறது,
காலம் எல்லோருக்கும் விரைவுந்து தான்,
விலை விற்பவனுக்கே அன்றி விடையத்திற்கு இல்லை...!
ஃபாரிட்
உனக்கும் எனக்கும்
ஒரே பிணி,
தீரா பிணி,
பகிர்ந்து உண்போம்
பட்டினி வேண்டாம்,
சில பருக்கைகள்
போதும் உனக்கு,
பிடி வேண்டும் எனக்கு,
ஆசையாய் வளர்த்த உன்னை,
வறுக்க இன்னும் நாள் இருக்கு,
அதுவரை உண்போம் ஒன்றாய்,
வா... கொத்தி தின்னு.
ஃபாரிட்
இன்று-என்றும்
திரும்ப வராது,
இன்று
மட்டும் நிஜம்,
இன்று
ஆரம்பம் பயணம்,
இன்று
தொடரும் நாடகம்,
இன்று
அதிசயம் நிச்சயம்,
இன்று
நாளைய நேற்று,
இன்று
நேற்றைய இன்று,
நன்றி,
ஃபாரிட்