தூத்துக்குடி காங்கிரஸ் வளர வேண்டும் என்ற எண்ணத்தோடு பிறப்பில் இருந்தே காமராஜர் ஐயாவை வணங்கியவன் என்ற உரிமையோடு என் சொந்த கருத்தை தெரிவிக்கிறேன்..
கல்வித்தந்தை என்று அன்போடு அழைக்கப்படும் அண்ணாச்சி APCV சண்முகம் அவர்கள் கடந்த 60 ஆண்ட��களாக காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்து என்றென்றும் காங்கிரஸே என்று வாழ்ந்து வருகிறார்.
இன்று தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸில் இருக்கும் 90% பேர் பிறக்கும் முன்பே தன்னை கட்சியில் இணைத்து கட்சிக்காக உழைத்தவர் அவர்.
பெருந்தலைவர் ஐயா காமராஜரோடும், இந்திரா காந்தியோடும், ராஜீவ் காந்தியோடும், அன்னை சோனியா காந்தியோடும் இணைந்து கட்சிக்காக உழைத்தவர் அவர்.
தன் இளமைகாலத்தில் ஓய்வின்றி கட்சிப் பணியில் தன் வாழ்நாட்களை செலவழித்தவர் அவர்.
இன்று உடல் நலத்தாலும் வயோதிகத்தாலும் முன்பு போல உழைக்க முடியாவிட்டாலும் கட்சியின் வளர்ச்சிக்காக இன்றும் எதுவும் செய்ய தயாராக இருக்கும் சுயநலமற்ற மாபெரும் தலைவர்.
நாட்டிற்க��க போராடிய சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாக வாழ்க்கையை இன்று யாரும் நினைப்பது இல்லை. காரணம் நாம் அந்த கஷ்டங்களை அனுபவித்தது இல்லை. அதனால் அந்த வலிகள் நமக்கு தெரியாது.
அதைப்போலத்தான் அண்ணாச்சி அவர்கள் கட்சிப் பணிகளும்.
அவர் பட்ட கஷ்டங்கள் பல.
அனுபவித்த வேதனைகள் பல.
இன்றைய காங்கிரஸ் இயக்கம் அவருக்கான தகுந்த மரியாதையை கொடுக்க தவறி கொண்டே இருக்கிறது என்பதே வேதனையான உண்மை..
க��ட்டணி தர்மத்திற்காகவும் மாற்று கட்சியினர் அவருக்கு கொடுத்த ��தீத மரியாதைக்காகவும் மட்டுமே அவர் கூட்டணி கட்சிக்காக மிகவும் உழைத்தார் என்பதே உண்மை.
தூய்மையான கரங்களுக்கும், புனிதமான எண்ணங்களுக்கும் சொந்தக்காரரான நமது அன்பு அண்ணாச்சி A P C V சண்முகம் அவர்கள் நமது காங்கிரஸ் பேரியக்கத்திற்கு கிடைத்த மாபெரும் சொத்து என்பது அசைக்க முடியாத உண்மை.
நமது குடும்பத்தில் எவ்வாறு முதியவர்களை மதிப்போமோ, வணங்குவோமோ அதைப்போலவே நமது அண்ணாச்சி அவர்களை மதித்து வணங்கினால் நமது பேரியக்கம் நிச்சயமாக பலனடையும் என்பது மறுக்க முடியாத உண்மை.
தலைவர்களுக்காக கட்சியில் இல்லாமல் கொள்கைகளுக்காக கட்சியில் இருக்கும் அண்ணாச்சி போல ஒவ்வொரு தொண்டனும் இருந்தால் கட்சியில் ஒற்றுமை வளரும். அப்படி வரும் நிலையில் எந்த கொம்பனாலும் காங்கிரஸ் பேரியக்கத்தை அசைக்க முடியாது.
காங்கிரஸ் தலைமை நியமித்த ஒவ்வொருவரையும் நான் மதிக்கிறேன்..கட்சி கொட���த்த பொறுப்பை உணர்ந்து பணியாற்றுவேன்..
பதவியை பறித்தாலும் என் காங்கிரஸ்காரன் என்ற உணர்வை யாராலும் பறிக்க முடியாது.
ஒரு காங்கிரஸ் கட்சி மேலும் வலுவாக வேண்டும் என்ற ஏக்கமுள்ள லட்சக்கணக்கான தொண்டர்களில் ஒருவனாக இதை எழுதுகிறேன்..
காங்கிரஸ் பேரியக்கம் வாழ்க..
காமராஜரின் புகழ் ஓங்குக..
#லஞ்சம்தவிர்நெஞ்சம்நிமிர்
@manickamtagore