சென்னை மெட்ரோ Phase 2 வில் ஒன்றிய அரசின் Contribution என்பது வெறும் 11.7% தான்.
35.2% தமிழ்நாடு அரசினுடையது.
53.1% சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடனாகப் பெறுவது.
இந்த கடனை வாங்கித் தருவதற்கு கேரண்டி கையெழுத்து போடுவது மட்டுமே ஒன்றிய அரசு.
கேரண்டி கையெழுத்து போடுறதுக்கும் ஒரு பெரிய மனசு வேணும்பானு வெற்றிக் கொடி கட்டு படத்தில் வடிவேலுவைப் பார்த்து சொல்வார்கள் இல்லையா, அந்த பெரிய மனசுடன் ஒன்றிய அரசு 53% கடன் தொகையை தன் கணக்கில் சேர்த்துக் கொண்டு 65% தொகையை ஒன்றிய அரசே தருவதாக பொய் பிரச்சாரம் செய்கிறது.
ஆனால் கேரண்டி கையெழுத்து போடுபவருக்கு இருக்கும் சட்ட சிக்கல் கூட இங்கு ஒன்றிய அரசுக்கு இல்லை.
ஏனென்றால் கடனை திருப்பி கட்டப் போவது CMRL நிறுவனம். அந்த நிறுவனத்தால் கட்ட முடியவில்லையென்றால் கடனை தமிழ்நாடு அரசுதான் ஏற்க வேண்டும் என்பதே நிபந்தனை.
ஆரம்பத்திலிருந்து ஒன்றிய அரசு தான் தரும் 11% தரவும் முடியாது, கடனும் வாங்கித் தர முடியாது என்று கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் இழுத்தடித்தது. 2016 ல் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு 2024 அக்டோபர் மாதத்தில்தான் நிதி தருவதற்கு ஒன்றிய அரசு சம்மதித்தது.
2021ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, ஒன்றிய அரசு நிதி தராவிட்டாலும் இந்த திட்டம் தாமதமாகக் கூடாது என்பதற்காக மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து சுமார் 12,000 கோடியையும், வெளி நிறுவனங்களிடம் 6000 கோடி கடன் வாங்கியும் 18,000 கோடி செலவில் பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ பணிகளை துரிதப்படுத்தி முடித்தது.
ஒன்றிய அரசிடம் பணத்தை கேட்கும்போது நிர்மலா சீதாராமன், இது மாநில அரசின் திட்டம் இதற்கு நாங்கள் எதற்கு பணம் தர வேண்டும் என்று ஆணவத்துடன் பதில் சொன்னார். அதே ஆணவத்துடன் தான் கோவை, மதுரை மெட்ரோக்களையும் ஒன்றிய அரசு மறுத்து வருகிறது.
ஆனால் இன்று இந்த மெட்ரோவை மோடியும், விஜயும் கொடி அசைத்து திறந்து வைக்கிறார்கள். மோடி தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக இந்த மெட்ரோவை அர்ப்பணித்ததாக பாஜக மற்றும் தவெக இரண்டு கட்சிகளும் சென்னை முழுதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
ஸ்டிக்கர் ஒட்டுவது என்பது இதுதான்.
சென்னை மெட்ரோவின் வரலாற்றை திமுகவின் பெயரை மறைத்துவிட்டு யாராலும் எழுத முடியாது.
Vivekanandan Ramadoss
@im_vandy
@vasanthandco_in Answers:
1. Superstar Rajinikanth
2. Vasanth & Co. was founded in 1978, which means it has completed 48 years of its journey as of 2026
3. "Tiger" Muthuvel Pandian
Location: Sivakasi
Thanks for the opportunity @vasanthandco_in
ஒரு கட்சியை பிடிக்கவில்லை என்பதற்காக அந்தக் கட்சி மக்களுக்கு செய்த அனைத்தையும் மறந்து விடக்கூடாது
இந்த மண்ணில் கல்வி வளர வேண்டும் ஏழை வீட்டுப் பிள்ளைகளும் முன்னேற வேண்டும்
பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற வேண்டும்
சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களும் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் ...இந்தக் கொள்கைகளுக்காக திராவிட இயக்கம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது
கை ரிக்ஷா ஒழித்தது, பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை உள்ளாட்சி அமைப்பு ல இட ஒதுக்கீடு, ஐடி பாலிசி,TIDEL PARK, நுழைவுத் தேர்வு ரத்து, முதல் தலைமுறை பட்டதாரி க்கு ஸ்காலர்ஷிப், உரிமைத் தொகை,விடியல் பயணம், நான் முதல்வர்,புதுமைப் பெண்,தமிழ் புதல்வன்
மக்களோட உளவியல் 😭💛
நாம் தமிழர் கட்சி,CPI ,CPM கட்சிகள் நடத்திய போராட்டங்களின் விளைவால்
அரசாங்கம் எடுத்த நடவடிக்கையால்
தாராபுரம்,மதுராந்தகம் பகுதி மக்கள் ஏதோவொரு வகையில் நிச்சயம் பலன் பெற்றிருப்பர்
ஆனால் அந்த இரண்டு தொகுதியில்
அக்கட்சிகள் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா ?
தாராபுரம் மதுராந்தகம்
NTK-5268 NTK-2709
CP1 -1157 CPM-1986
போராட்டம்,உழைப்பு,அர்பணிப்பு என
எதைப்பற்றியும் பொருட்படுத்தாத இந்த
கேடுகெட்ட சமூகத்திற்காக இனி போராடாதீர்கள்,குரல் கொடுக்காதீர்கள்
என சொன்னால் @tncpim@cpofindia
மற்றும் @NaamTamilarOrg என்னை தான்
திட்டுவார்கள்
இருந்தாலும் பரவாயில்லை சொல்கிறேன்
தயவுசெய்து இனிமேல் போராட
வீதிக்கு ஒரு போதும் வராதீர்கள்
கோரிக்கை முழக்க போராட்டமெல்லாம்
மக்களுக்கு இளக்காரமாக தெரிகிறது
நல்லா ஜிகு ஜிகுன்னு ட்ரஸ் அணிந்து ரெண்டு பாட்டுக்கு செம்மையா நங்கு நங்குன்னு டான்ஸ் ஆடுங்க
அது போதும்
மக்களுக்கும் அது தான் வேண்டும்
அடுத்த முறை அதிக வாக்குகளை நிச்சயம்
பதிவு செய்வார்கள்
துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி
பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!
நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு தொகுதியிலும் மிகக்கடுமையாகத் தேர்தல் பணியாற்றிய தொண்டர்கள், முன்னணியினர், உடன்பிறப்புகள், கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஐந்தே மாதத்தில் திணிக்கப்பட்டதுதான் இந்த இடைத்தேர்தல். வாக்களித்த மை அழிவதற்கு முன்னால் மக்களின் விருப்பத்தை அழித்துவிட்டு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை விட்டு விலகி, அடுத்த நிமிடமே ஆளும் கட்சியில் சேர்ந்தார்கள். அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை நடந்தது. அதனால்தான் இந்த இடைத்தேர்தல் நடந்தது.
பதவி விலகிய இருவரையே வேட்பாளர்களாக அறிவித்து, தேர்தலைச் சந்தித்தது ஆளும்கட்சி. அதிகார பலம், ஆட்சி பலம், பணபலம், போலீஸ் பலம் ஆகியவற்றைப் பக்கபலமாக வைத்து த.வெ.க. இந்தத் தேர்தலை எதிர்கொண்டது. சினிமா கவர்ச்சி பலத்தை மட்டுமே நம்பி அரசியல் களத்தில் குதித்து - பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும் குதிரை பேரங்களின் மூலமாக முதலமைச்சர் ஆகியுள்ள விஜய், இந்த இடைத்தேர்தலிலும் ரீல்ஸ் காட்சிகளே கைகொடுக்கும் என்று நம்பினார்.
டீ குடித்தார், டிராக்டர் ஓட்டினார், முருங்கைக்காய் பறித்தார், தெருத்தெருவாகப் போனார். எந்தவொரு இடைத்தேர்தலுக்கும், ஒரு முதலமைச்சர் பதவியில் இருப்பவர் இப்படித் தெருத்தெருவாகப் போனது இல்லை. இந்த இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றால்தான் தனக்கு இனி அரசியல் வாழ்க்கை என்ற முடிவோடு செயல்பட்டார். நான்கு நாட்கள் இரண்டு தொகுதியிலும் இருந்துள்ளார் முதலமைச்சர். வெளியூரில் இருந்து இறக்கிவிடப்பட்ட ஆட்கள், அவர் போகும் சாலைகள் அனைத்தும் வைக்கப்பட்ட பேரிகேட், கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள், அமைச்சர்களுக்கு மட்டும் எவ்வளவு செலவு செய்துள்ளேன் என்று ஆளும்கட்சி வேட்பாளரே அளித்த வாக்குமூலங்கள் இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது இந்த வெற்றியை அடைய த.வெ.க. எவ்வளவு பதற்றத்தில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள். கட்சி, தேர்தல், மக்கள் பணிகள் என்றால் என்னவென்று முதலமைச்சர் விஜய் இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண விரிவாக்கம், தாய்மாமன் தங்கமோதிரம், அண்ணன் சீர் போன்ற திட்டங்களை அவர் அறிவித்தார். இதுவே தேர்தல் நடத்தை விதிகளை மீறியதுதான். இப்படி பல்வேறு விதிமீறல்களைச் செய்தே இந்த முடிவை த.வெ.க. பெற்றுள்ளது.
என்னைப் பொறுத்தவரையில் துரோகத்துக்கு இடைக்கால வெற்றி கிடைத்துள்ளது. அதே நேரத்தில் பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!
ஜி.பே.யில் பணம் - பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். ஊரையே விலை பேசினார்கள் என்பதை இந்த ஆட்சியை ஆதரிக்கும் கட்சிகளே ஒப்புக்கொண்டு பேட்டி கொடுத்த காட்சிகளையும் நாம் பார்த்தோம். தேர்தலுக்கு முந்தைய இரவு வெளியான வீடியோவில் கோடிகளைக் கொட்டிச் செலவிட்டதை வேட்பாளரே ஒப்புக்கொள்ளும் காட்சிகளையும் பார்த்தோம். தூய சக்தியின் வேடத்தை இது அம்பலப்படுத்தியது.
திரைமறைவில், இன்னும் சில கட்சிகளின் வாக்குகளை வாங்கப் பொய்ச்செய்தியைப் பரப்பினார்கள். ஒட்டுமொத்த அமைச்சரவையும் இரு தொகுதிகளுக்குள் மூன்று வார காலம் முடங்கியது. துரோகம் செய்த வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் காவல்துறையினரைக் கொண்டு மிரட்டப்பட்டார்கள். 17 வயது இளைஞரைக் கூட கைது செய்தார்கள்.
'ஆளும்கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் தொகுதிக்கு எதையும் செய்யமாட்டோம்' என பிளாக்மெயில் செய்து வாக்கு வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அரசு ஊழியர்களையும் வாக்குப்பதிவின்போது மிரட்டி ஆதரவாகப் பணியாற்ற வைத்தார்கள். 'சூரியனுக்கு வாக்களிக்கச் சொன்னால் விசிலுக்கு அழுத்தச் சொன்னார்கள்' என்று ஒரு மூதாட்டி வெளிப்படையாகப் பேட்டியே அளித்தார்.
இப்படி, தன் அதிகார பலம் முழுவதையும் இடைத்தேர்தலுக்காகத் தவறாகப் பயன்படுத்தியது த.வெ.க. அரசு.
5 நிமிடப் பேச்சிலேயே அனைத்தையும் விஜய் மாற்றிவிடுவார் எனக் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம் நான்கே மாதங்களில் கிழிந்து தொங்கிவிட்டது. ஆட்சிக்கு வந்த இத்தனை குறுகிய காலத்தில் இப்படி ஒரு சரிவு எந்த முதலமைச்சருக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை.
கல்லாப்பெட்டிக் கூட்டணிக் கட்சிகள் என விமர்சித்த கட்சிகளையே, இப்போது தன்னோடு இணைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்த நிலையிலும், அனைத்தையும் மீறி, ‘எப்படியாவது வெற்றி பெற்றால் போதும்’ என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளும் வகையில்தான் இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
என்ன செய்தும், தி.மு.க. மீதான மக்களின் நம்பிக்கையை எதுவும் செய்ய முடியவில்லை. தி.மு.க.வை மட்டுமே குறிவைத்துப் பேசினார் முதலமைச்சர். ஆனால், தி.மு.க.வின் செல்வாக்கை அவரால் அசைக்க முடியவில்லை.
இதில் மிகவும் முக்கியமானது, துர்நாற்றமெடுக்கும் துரோக சக்தியான த.வெ.க.வுக்கு எதிராகக் களம் கண்ட அனைத்துக் கட்சிகள் பெற்ற வாக்குகளும் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் என்பதுதான்! அவைதான் பெரும்பான்மை! இந்த அரசு மீண்டும் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குதிரை பேரம், எம்.எல்.ஏ. ஷாப்பிங், பழிவாங்கும் நடவடிக்கைகள், அருவருப்பான பேச்சுகள், அசிங்கமான சைகைகள், ரீல்ஸ் எடுப்பதில் மட்டும் கவனம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு இனியாவது மக்கள் பணிகளில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் கொள்கை - இலக்கு என பயணிக்கும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
களத்தில் கடும் போட்டியைக் கொடுத்து, ஆளும்கட்சியினரை அச்சத்தில் அலையவிட்ட கழக உடன்பிறப்புகளுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோளோடு தோள் நின்று உழைத்த அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தோழர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
சினிமா கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டு, அதன் மூலமாக மக்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வந்து கார்ப்பரேட் மாஃபியாக்கள் சிலரின் கைப்பாவையாக ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் விஜய்யின் முகத்திரையைக் கிழிக்கும் பரப்புரைப் பயணத்தை நாம் தினம்தோறும் தொய்வின்றித் தொடர்வோம். தமிழ்நாட்டுக்கு விரோதமான சக்திகளின் பிடியில் அவர் சிக்கி இருக்கிறார். அதை மக்கள் விரைவில் முழுமையாக உணர்வார்கள்.
எம்ஜிஆர் வள்ளலா மாறின காரணம் தன்னுடன் இருந்த ஜேப்பியார் போன்ற தனிநபர்களுக்கு ஏரி, குளங்களை இலவசமாக எழுதி வைத்தது..
#கலைஞர் பொதுமக்களுக்கான திட்டங்களாக கொண்டு வந்தவர் சமத்துவபுரம், கலைஞர் காப்பீடு, விவசாயிக்கு மானியம், கல்வியில் இட ஒதுக்கீடு மூலம் பொதுமக்களை முன்னேற்றினார்..🖤❤️
ஒரு சமூகத்தைச் சேர்ந்தவரை அமைச்சராக்குவது எளிது; ஆனால், அந்தச் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாத்து, சட்டப் போராட்டங்கள் மூலம் இடஒதுக்கீடு வழங்கி, அதிகாரத்தில் பங்கு தருவதுதான் உண்மையான சமூகநீதி! ⚖️🔥
நன்றி - @Minnambalamnews@aloor_ShaNavas#MinorityRights#SocialJustice #ReservationRights
கைகேயி விரும்பிய மாற்றம் கம்பனே கூறிய நகர் நீங்கு ..!
ராமன் காட்டிற்கு செல்ல முயலும் போது யாரெல்லாம் அழுதார்கள் என்று அழகாய் வரிசைபடுத்தி கூறுவான், அதில் "
கிள்ளையொடு பூவை அழுத; கிளர்மாடத்து
உள்ளுறையும் பூசை அழுத; உருவறியாப்
பிள்ளை அழுத
ஆவும் அழுத; அதன் கன்று அழுத; அன்று அலர்ந்த
பூவும் அழுத; புனல் புள் அழுத; கள் ஒழுகும்
காவும் அழுத; களிறு அழுத; கால் வயப் போர்
மாவும் அழுத;-அம் மன்னவனை மானவே.
என்பான்..!
அதாவது, கைகேயி விரும்பிய மாற்றத்தால் ராமன் காட்டிற்கு செல்லுவான் அப்போது, கிளி அழுதது , மாடு அழுதது, அன்று மலர்ந்த மலர் அழுதது, புள் அழுதது ,யானை அழுதது, இவ்வளவு ஏன் மாடத்தில் அமர்ந்திருந்த அந்த பூனையும் அழுதது என்று கம்பன் வரிசைபடுத்துவான்..! ராமன் வனவாசம் சென்ற பின்னர் எப்படி கோசல நாட்டு வளங்கள் மங்கத் துவங்கியதோ , அது போன்று தான் தமிழ்நாட்டு வளமும் நீங்கள் இல்லாமல் மங்கத் துவங்கியது ..!
ரசிக வெறியால் தமிழ்நாடு பின்நோக்கி செல்லுமே தவிர ஒரு போது மாநிலத்தின் உயர்ந்த ஆளுமையை நிலைநிறுத்த முடியாது..!
அன்று செவிலியர்களை தூண்டி விட்டு நடத்திய நாடகம், இன்று ஒரு புரட்சியாய் வெடிக்கப் போகிறது..!
அன்று மின்வெட்டே இல்லை என்றபோதிலும் ,நம் மீது பழியை வாரி இறைத்தவர்கள் இன்று மின்சாரம் இன்றி பரிதவிக்கிறார்கள்..!
அன்று தொழில்நிறுவனங்கள் நன்றாக செயல்பட்டபோதிலும், சிலரின் தூண்டுதலால் அங்கு பணிபுரியும் சில ஊழியர்களை கொண்டு ஆட்சியின் மீது அவதூறை வாரி இறைத்தனர். இன்று, தொழில் நிறுவனங்களே இல்லாத சூழல் நிலவுகின்றது..!
அன்று மகளிர் இலவசப் பயணத்தை இழிவாக நினைத்தவர்கள் இன்று மகளிர் இலவச பயண விரிவாக்கத் திட்டம் என்ற பெயரில் மக்களை வாட்டுகின்றனர்..!
அன்று நான் முதல்வன் திட்டத்தில் அடிதட்டு மாணவர்களின் கல்வியை உயர்த்தி பிடித்த போது நம்மை ஏளனம் செய்தவர்கள் தான் , இன்று பாரதிதாசனையும் படிக்க விடாமல் செய்கின்றனர்..!
அன்று சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது என்று சொன்னவர்கள் தான் இன்று சட்ட ஒழுங்கில் சாவு மணி அடித்து விளையாடுகின்றனர்..!
அன்று கவின் ஆணவக்கொலையை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திய ஆணவக்காரர்கள் தான் இன்று குற்றவாளிகள் மீது பதியப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து வெளியே நடமாடச் செய்தனர் ..!
அன்று நம்மை பார்த்து ஊழல் வாதிகள் என்று சொன்னவர்கள் தான் இன்று அதிமுக எம்.எல்.ஏக்களை விலை கொடுத்து வாங்கி வாக்கிற்கு பணம் கொடுத்து இடைத் தேர்தலை சந்திக்கின்றனர்..!
மக்களோடு மக்களாக இருக்கும் நம்மை பார்த்து , எங்கள் முகத்தை பார்த்தாலே வாக்குகள் குவியும் என்ற ஆணவத்தையும், இன்று அவர்களே வீதி வீதியாய் தெருத் தெருவாய் செல்கின்றனர்..!
அன்று நம்மை பார்த்து விழாக்காலங்களில் பேருந்தை முறையாக கையாளவில்லை என்று கூக்குரலிட்டவர்கள், இன்று விழாக்காலத்தை மறந்து விடுதியில் குத்தாட்டம் போடுகின்றனர்..!
அன்று நம் ஆட்சியில் லஞ்சம் பெருகியது என்றார்கள் , இன்று வழக்கறிஞர் பதவிக்கும் பணம் வேண்டும் என்கின்றனர்..!
அன்று ஏதோ ஒரு வக்கிர புத்திகாரன் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திட்டால் அய்யோ அம்மா என்றனர்..! இன்று சொந்தகட்சி காரனே பாலியல் வன்கொடுமை செய்திட்டால் அதை கடந்து போகின்றனர்.
போதையில்லா தமிழ்நாடு என்றனர் இன்று துறைசார்ந்த அமைச்சரே பவுடரை இடித்து கொண்டிருக்கின்றார் ..
காலம் ஒரு நல்ல நண்பன் தனக்கான சூழலை வெளிபடுத்திய பின்பு தான் உண்மையான தலைவனை நிலைநிறுத்தும்..!
தலைவர் ஸ்டாலின் ஒரு தலைவன் மட்டுமல்ல அரைநூற்றாண்டாய் செதுக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் தத்துவக் கோட்டை ..!
விருமாண்டி படத்தில் நெப்போலியன் ஒரு வசனம் சொல்லுவர் " பொய் ஜெயிச்சதா நினைக்காத , கடைசியில உண்மமையும், சத்தியம் மட்டும் தான் ஜெயிக்கும், அது வரைக்கும் நான் நிம்மதியா தூங்கிடுவேன்..! உன்னால அது முடியுமா? மனசாட்சி தான் டா கோர்ட்டு அதுக்கப்புறம் தான் இதெல்லாம்" என்று சொல்லுவார் ..!
அதுபோல தான் ஒரு நல்ல தலைவனை இழந்த மக்கள் தூக்கமின்றி துயரமுறுவார்..!
வள்ளுவரின் வாய்மொழியோடு இம்மடலை நிறைவு செய்கின்றேன்..!
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு."
-குறள் (544)
நாட்டின் குடிமக்களை அரவணைத்து செங்கோல் ஆட்சி ஆளும் ஒரு மாநிலத்தின் மன்னனின் காலுக்கடியில் இந்த உலகமே நிலைபெற்று நிற்கும்..!
#எங்கள்கருப்பர்_நகரத்தின்_பிறைசூடாமன்னன் 🔥🔥🔥🔥
2021 - 2026 ஆட்சிக்காலத்தில் திமுக அரசு நிறைவேற்றிய டாப் 100 திட்டங்கள் :
1.மகளிர் உரிமைத் தொகை ரூ.1000
2.மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்
3.காலை உணவுத் திட்டம்
4.புதுமைப்பெண் திட்டம் ரூ.1000
5.தமிழ்ப்புதல்வன் திட்டம் ரூ.1000
6.நான் முதல்வன் திட்டம்
7.கல்லூரிக் கனவு திட்டம்
8.சிகரம் தொடு திட்டம்
9.உயர்வுக்குப் படி திட்டம்
10.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
11.வெற்றி நிச்சயம் திட்டம்
12.தோழி விடுதிகள்
13.மகளிருக்கான இட ஒதுக்கீடு 40%
14.சுய உதவிக் குழுக்கள்
15.பெண்குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி
16.மக்களைத் தேடி மருத்துவம்
17.அன்புச்சோலை மையங்கள்
18.கலைஞரின் கனவு இல்லம்
19.தாயுமானவர் திட்டம்
20.அன்புக் கரங்கள் திட்டம்
21.கல்லூரி கனவுத் திட்டம்
22.சமூகநீதி விடுதிகள்
23.அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி
24.சிறகுகள் திட்டம்
25.பாலின வள மையம்
26.இல்லம் தேடிக் கல்வி
27.கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி
28.அகழ்வாராய்ச்சிகள், அருங்காட்சியகம்
29.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்
30.திருக்கோயில்களில்குடமுழுக்கு (4180)
31.மதநல்லிணக்கம்
32.பெண்கள் பாதுகாப்பு
33.மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்
34.தமிழ்நாடெங்கும் டைடல் & மினி டைடல் பூங்கா
35.சிப்காட் தொழிற்பூங்காக்கள் (30)
36.திசைதோறும் திராவிடம் திட்டம்
37.கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை
38.கலைஞர் நூற்றாண்டு நூலகம்
39.உள்ளடக்கிய கல்வி திட்டம்
40. உள் ஒதுக்கீடு 7.5%
41.கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் மின்சாரம்
42.விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் மின்சாரம்
43.விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு
44.சிறுதானிய திருவிழாக்கள்
45.சிறுதானிய உணவுப் போட்டிகள்
46.மீன்பிடி குறைவுகால நிவாரணம் ரூ.6000
47.தொல்குடித் திட்டம்
48.தமிழ்நாடு ஹஜ் இல்லம்
49.முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்
50.இன்னுயிர் காப்போம் - நம்மைக் காப்போம் 48
51.ஊட்டச்சத்தை உறுதி செய்
52.மாபெரும் தமிழ்க் கனவு
53.விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு
54.அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
55.கலைஞர் கைவினைத் திட்டம்
56.நலம் கக்கும் ஸ்டாலின்
57.உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
58.முதல்வரின் முகவரி திட்டம்
59.முதலமைச்சர் சிறு விளையாட்ரங்கம்
60.மாவட்டத்துக்கு ஒரு மாதிரிப் பள்ளி
61.வேர்களைத் தேடி திட்டம்
62.தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம்
63.கலைஞர் சர்வதேச குத்துச்சண்டை மையம்
64.ஒலிம்பிக் அகாடமி
65.நம்ம ஊரு விளையாட்டுத் திடல்
66.சிற்பி திட்டம்
67.முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை (CMRF) திட்டம்
68.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
69.ஆலயங்களில் அன்னைத் தமிழ்
70.அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள்
71.பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள்
72.பரவலான வளர்ச்சி
73.டைடல் & மினி டைடல் பூங்காக்கள்
74.முதலீடுகள்12 இலட்சம் கோடி
75.வேலைவாய்ப்பு
36 இலட்சம் நபர்களுக்கு
76.பொருளாதார வளர்ச்சி 11.19%
77.முதலமைச்சர் கோப்பை போட்டிகள்
78.கோவை செம்மொழி பூங்கா
79.மதுரை ஜல்லிக்கட்டு அரங்கம்
80.விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை
81.அத்திக்கடவு - அவினாசி நீரேற்றும் திட்டம்
82.பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்
83.மாதிரிப் பள்ளிகள்
84.மாணவர் சிறப்பு பேருந்து திட்டம்
85.பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
86.நமக்கு நாமே திட்டம்
87.கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
88.TABCEDCO குழுக் கடன் திட்டம்
89.முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
90.தீவனப் பயிர் சாகுபடி முன்னோடித் திட்டம்
91.நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
92.பிங்க் ஆட்டோ
https://t.co/ykpnDbNyxJ வகுப்பறைகள்
94.தொல்குடி திட்டம்
95.மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வு
96.உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை
97.உணவுப்பூங்கா
98.மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி
99.அறிவுசார் நகரம்
100.நீங்கள் நலமா திட்டம்
CM சார்…
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்! இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா…?
1. பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா?
2. அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து, இனி தினமும் அறிவித்துவிட்டு 8 மணிநேரம் மின்வெட்டு என்பதை நோக்கித் தமிழ்நாடு நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா?
3. அசையாத மரமொன்று விழுந்தது கீழே என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க நீங்கள் மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே? ஒரு தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளே குற்றம்சாட்டுவதற்குப் பதில் என்ன?
4. இத்தோடு, குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா?
தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே!
அன்பார்ந்த மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களே!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரான எனக்கு, தங்களது பொன்னான வாக்குகளை அளித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிட ஒரு வாய்ப்பினை வழங்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@mkstalin@Udhaystalin@arivalayam@dmk_youthwing@DMKITwing@PEN_Offl
#MKStalin #UdhayanidhiStalin #DMK #DMKitwing #Maduranthakam #இடைத்தேர்தல்
Udhayanidhi at his satirical best👌confident, fearless and completely unfazed.
No matter how much criticism or smear campaigning comes his way, he doesn’t seem bothered. That confidence and composure are signs of a leader in the making.