மனநலம் பாதித்தவர்களின் மேம்பாட்டுக்காக சேவையாற்றி வந்த மருத்துவர் சாரதா மேனன் மறைந்த செய்தி கேட்டு துயருற்றேன். தன் மொத்த வாழ்வையும் ���ன நோயாளிகளைப் பேணவும் மறுவாழ்வு அளிக்கவும் அர்ப்பணித்துக்கொண்டவர். அஞ்சலிகள்.
நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகளுள் முதன்மையானவர்; சமத்துவம், சமூகநீதி பற்றிய நம் இன்றைய உரையாடல்களுக்குப் பாதை வகுத்துக்கொடுத்த பாபாசாகேப் அம்பேத்கரின் 65ஆவது நினைவுதினம் இன்று. அவரது நினைவுகளைப் போற்றுவோம்.
கோவையில் மேம்பாலத்திற்குக் கீழே மழை நீர் குளம் போல தேங்கியிருந்தது. சேறும் சகதியும் நிறைந்திருந்தது. மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் ஒன்று கூடி பாலத்தின் கீழ்ப்பகுதியை சுத்தப்படுத்தினார்கள். #தேடி_தீர்ப்போம்_வா
முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்.
Chennai pain & palliative care உச்சவலி நீக்கு மையத்தின் புதிய கிளையை தொடங்கிவைத்தேன். பெருவலியால் துடிப்பவர்களுக்கு நிவாரணமளிக்கும் இவர்களது சேவை போற்றுதலுக்குரியது.
இரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா’ நாவலை தமிழில் மொழிபெயர்த்த முனைவர். கா. செல்லப்பனுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்கி மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய முனைப்புடன் செயல்படும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக 'டார்ச்லைட்' சின்னம் வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
சாதிச் சழக்குகளுக்கும் மதவெறிக்கும் எதிராக ஒரு கருத்து நூறு ஆண்டுகளைத் தாண்டி ஊறு படாமல் நிற்கிறதெனில் அந்தக் கருத்தின் பெயர் பெரியார். ஒடுக்கப்பட்டோருக்காகவே சிந்தி���்த, செயல்பட்ட பெரியாருக்கு 143. வணக்கத்தோடு நினைவு கூர்கிறேன்.
ஜனநாயகத்தின் விழுமியங்களின் மீது ஆழமான பற்றுக்கொண்டவர், மாநில சுயாட்சிக்காக வாதிட்டவர்,வடக்கின் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடியவர்,சிக்கனமாக ஆட்சி நடத்தி கடன் இல்லாமல் நிர்வாகம் செய்யவேண்டுமென விரும்பியவர் அறிஞர் அண்ணா. அவரின் நினைவுகளைப் போற்றுவோம்.
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது.
9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.
கள���்தில் சந்திப்போம். வெற்றி நமதே.
ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களைப் பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?!
அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதை மநீம வரவேற்கிறது. இந்த மாற்றம் தனியார் துறையிலும் நிகழவேண்டிய ஒன்று. சமத்துவத்தை நோக்கிய பாதையில் தளர்வின்றி பயணிப்போம்.
ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், ��னிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!
தமிழ் நிலத்திற்கென பெரும் கனவுகளைத் தந்துவிட்டுச் சென்ற பாரதி, தமிழறிந்த ஒவ்வொருவரிலும் வாழ்கிறார். அவரவர் துறையின் பாரதியாக முயல்வதே பெரும்கவிஞனின் நினைவைப் போற்ற ஆகச்சிறந்த வழி.
சமீபத்திய சாலை விபத்துக்களில் இளைஞர்கள் பலியான கோரச் சம்பவங்கள் பதறவைக்கின்றன. போதையே காரணம் என்கிறார்கள். தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் இந்த போதைக் கலாச்சாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக முதல்வர் உடனடிச் செயல்பாட்டில் இறங்க வேண்டும்.
தமிழகத்தில் சமூகநீதி தழைத்தோங்க, தன் வாழ்நாளெல்லாம் உழைத்தவர் தந்தை பெரியார். அவரது பிறந்த நாள் ‘சமூக நீதி நாள்’ எனக் கொண்டாடப்படும் என்கிற அறிவிப்பு இந்த அரசு பெரியாருக்குச் செய்யும் நன்றி அறிவிப்பு. பாராட்டுக்குரிய செயல்.