ஆண்டுக்கு 2.5 இலட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு இலவச எரிவாயு உருளை இல்லை.
அதாவது,
மாதத்துக்கு சுமார் 20,000 ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு இலவச எரிவாயு உருளைக்கானப் பணம் இல்லை.
அப்புறம்,
'சூப்பர் சிக்ஸ்' என வைத்திருக்கும் திட்டத்தின் பெயரை 'சூப்பர் த்ரீ' என மாற்றித் தொலைக்க வேண்டியதுதானே!
இன்று தென்காசி சட்டமன்ற தொகுதி ,கீழப்பாவூர் ஒன்றியம் மேலப்பாவூரில் புதிதாக வரவிருக்கும் மன மகிழ் மன்றத்தினை அனுமதித்தால் அருகில் உள்ள பள்ளிக்கும் , வழிபாட்டு தலத்திற்கும் செல்லும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் மற்றும் ஏற்கனவே இந்த ஊர் இந்தபகுதியின் காவல் நிலையத்தில் பதட்டமான கரும்புள்ளி கிராமமாக இருப்பதால் மன மகிழ் மன்றம் வருவதற்கு அனுமதிக்க கூடாது என பொதுமக்கள் சார்பாக நாம் தமிழர் கட்சியின் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.
மனித சமுதாயத்திற்கான நல்லவைகளை சாதிக்க துடிக்கும் மனிதனுக்கு இளைப்பாற நேரம் எது?
வெற்றிக்கு ரகசியங்கள் ஏதும் இல்லை
திட்டமிடல், தன்னம்பிக்கை,கடின உழைப்பு, தோல்விகள் தந்த பாடம், இதிலிருந்தே வெற்றி பிறக்கிறது.
#DailyQuotes#Tuesday#Motivational#Seeman#EngalDesamOfficial
தாய்மாமன் சீர், அண்ணன் சீர் எதுவும் வேண்டாம்; உழைப்பிற்கான பணி நிரந்தரம் மட்டுமே வேண்டும்
5 ஆண்டுகள் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் என்ற வாக்குறுதி என்னவானது? 10 முதல் 15 ஆண்டுகள் உழைத்தும் ஏமாற்றப்படும் அவலம்!
மீண்டும் வீதியில் இறங்கி போராடும் சென்னை தூய்மைப் பணியாளர்கள்.
🔗 https://t.co/7nsTuq5B14
#WomenEmpowerment #JusticeForSanitationWorkers #தூய்மைப்பணியாளர்கள் #ChennaiProtest #TamilNadu #EngalDesamOfficial
எங்க அந்த ஒரு லட்சம் கோடி முதலீட்டுக்கான தெளிவான வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் பார்க்கலாம்❗
சும்மா வாயில அளந்து விட்டுட்டு போறதையெல்லாம் நாங்க ஏத்துக்கணுமா❓
நாளை சட்டமன்றத்தில் அந்த வெள்ளை அறிக்கையை வெளியிட தயாரா❓ அமைச்சர் கீர்த்தனா அவர்களே @Keerthana4VNR
காவிரி விவகாரத்தில் விவசாயிகளின் அவலம், கர்நாடக எல்லையில் தமிழர்கள் மீதான அத்துமீறல் ஆகிய முக்கியப் பிரச்சனைகளைத் திசைதிருப்ப நடப்பது தான் தவெக - திமுக நாடகமா?
தமிழக அரசியல் தலைவர்களை கர்நாடகா அலட்சியமாக அணுகுகிறதா?
🔗 https://t.co/qbC69IDYPm
#TVK#DMK#TamilNaduPolitics #Vijay #CauveryIssue #DKShivakumar #KarnatakaPolitics #TamilNews #EngalDesam #TrendingTamil #PoliticalDebate
#EngalDesamOfficial
தமிழ்நாட்டில் நடந்த தென்மண்டல முதல்வர்கள் கூட்டத்தில் கர்நாடக மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் மேகதாதுவில் அணை கட்டும் முடிவை முழுக்க முழுக்க நியாயப்படுத்திப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். உச்சமாக, தமிழ்நாட்டுக்குப் பயனளிக்கக்கூடியத் திட்டமெனவும் அதனைக் கூறியிருக்கிறார்.
'மேகதாது' எனும் வார்த்தையைக்கூட அக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் ஏன் உச்சரிக்கவில்லை?
@JuniorVikatan எச்சரிப்பவர்களின் பெயர் "தம்பி"யா ஜூவி...??? எச்சரிக்கிறார்கள்னு போடத்தெறிந்த எச்சைக்கு யார் யார் எச்சரிக்கிறார்கள்னு பெயர்களைப் போடுவதில் என்ன சிக்கல்...? எப்ப பாரு மொட்டைக்காடுதாசி தானா🤦🤦
@_ITWingNTK@JuniorVikatan
‘50,000 கோடிக்கு மது விற்பனை செய்யும் அரசு போதையை ஒழித்ததை எப்படி நம்புவது... விஜய் மீது நம்பிக்கை இல்லை!’ - இடும்பாவனம் கார்த்திக், நாதக (‘தள்ளாடும் தமிழகம்...’ ஜூ.வி கவர் ஸ்டோரி)
👉 https://t.co/lD1P3GM8vx
#JuniorVikatan#Magazine
இன்று (21.08.2026) கோவில்பட்டி தொகுதி சார்பாக
நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் அவர்கள் ஒரு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர் மீது காவல்துறையினரால் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், கர்நாடகாவில் 3 அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்றதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Behindwoods விவாதத்தில் வெடித்த சர்ச்சை! நாஞ்சில் சம்பத்தின் பேச்சு & தமிழக அரசியல் களேபரம்!
விவாத அரங்கில் நடந்தது என்ன?
கொள்கை நிலைப்பாடு மற்றும் சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் முன்வைக்கும் விமர்சனங்கள்!
🔗 https://t.co/JkJnH6nKFv
#TamilNaduPolitics #NanjilSampath #IdumbavanamKarthik #BehindwoodsDebate #EngalDesamOfficial
நிறைவேற்ற வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் எவ்வளவோ இருக்க, கடன் வாங்கி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து (car) எதற்கு?
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து வழங்கப்படும் எனவும், அதோடு தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க் கூடுதலாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மகிழுந்து இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு மகிழுந்து வழங்கினால்கூட அதில் ஒரு நியாயம் உண்டு. ஆனால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 190 சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஏற்கனவே சொந்தமாக மகிழுந்து உள்ளதாகத் தங்களின் வேட்புமனுவில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நிலையில், புதிதாக இலவச மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன?
ஒரு மகிழுந்தின் விலை குறைந்தபட்சம் 30 இலட்சம் என்றாலும் 70 கோடி தேவைப்படுகிறது அதைத்தவிர, மாதம் ஒரு இலட்சம் ரூபாய் 234 உறுப்பினர்களுக்கும் வழங்குவதால் மேலும் ஆண்டிற்கு 28 கோடி ரூபாய் தேவை. இதுபோக எரிபொருள், வாகனப் பழுது என ஆண்டிற்கு பல நூறு கோடிகள் தேவைப்படுகிறது. அவையெல்லாம் யாருடைய வரிப்பணம்? இதுதான் மக்கள் பணத்தைத் தொடாத, வீணடிக்காத செயலா?
ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனப்படி 25000 ரூபாய் உட்பட, மாதம் ஒரு இலட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிற நிலையில், ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி கடன் வாங்கும் நிலையில் கூடுதலாக மாதம் ஒரு இலட்சம் ரூபாய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தேவை என்ன?
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நிதியமைச்சர் மரியவில்சன் உள்ளிட்ட பெரும் செல்வந்தர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன? அப்படியே உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் வாகனம் கேட்டால் உங்கள் சொந்த செலவிலோ உங்கள் கட்சி செலவிலோ வாங்கிக்கொடுங்கள். மக்கள் பணத்தை எடுத்து ஏன் தருகிறீர்கள்?
அனைத்துக்கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கினால் இனி எந்தக் கட்சி உறுப்பினர் உங்களை எதிர்த்து பேசுவார்? ஆட்சி நிர்வாகச் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை எப்படி சுட்டிக்காட்டுவார்கள்? அரசை விமர்சிக்காமல் இருக்கக் கொடுக்கப்படும் மறைமுக கையூட்டா? இதுதான் ஊழல் இலஞ்சத்தை ஒழிக்கும் முறையா?
விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்த நெல்லைப் பாதுகாக்க கிடங்குகள் இல்லை. வெட்டவெளியில் கொட்டி வீணாகிறது. அதனைப் பாதுகாக்க விவசாயிகள் கோரினால், வெறும் 10 கோடிக்கு தார்ப்பாய்களை தரும் தவெக அரசு, ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டு மகிழுந்து வைத்துள்ள தீயசக்தி, தூயசக்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சேர்த்து சொகுசு வாகனங்கள் வழங்க இத்தனை கோடிகளை வாரி இறைப்பது தேவைதானா?
மறைமுக மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என மக்கள் பாதிக்கப்படுகையில் அதைச் சரி செய்யாமல் அவர்களின் பணத்தை எடுத்து இந்த ஊதாரித்தனம் தேவை தானா?
தேர்தல் பரப்புரையில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் 2500 உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு பணம் இல்லை என்றீர்கள். இப்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மகிழுந்து வழங்க மட்டும் எங்கிருந்து பணம் வந்தது?
சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் சேவைக்கு வந்தார்களா? தங்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ள வந்தார்களா? மக்கள் உதவிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனியாக உதவியாளர் எதற்கு? அதற்குத் தனியே சம்பளம் எதற்கு?
அரசு அறிவிக்கும் எந்தவொரு திட்டத்தின் நன்மை தீமைகளையும் விவாதிப்பதற்கே சட்டமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது எனும் நிலையில், 110 விதி என்ற பெயரில் புதிய திட்டங்களைச் சட்டமன்றத்திலேயே அறிவித்துவிட்டு, அதைப்பற்றி யாரும் எவ்வித விமர்சனமும் செய்யக்கூடாது என்பதுதான் சனநாயகமா? விமர்சனம் செய்யக்கூடாது ஆனால் கேட்கவே கூசும் அளவிற்கு முதலமைச்சரைப் புகழ்ந்து மட்டும் பேசலாமா?
மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் இதுபோன்ற திட்டங்களைக் கைவிட்டு ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
மேடை நாடகமே வாழ்க்கையின் திருப்புமுனை!
தொலைக்காட்சி தொகுப்பாளினி & பரதக் கலைஞர் கிருத்திகா ஸ்ரஜத்,
கோமல் தியேட்டர்ஸ் உடன் இணைந்த தனது பயணத்தையும், 'அவள் பெயர் சக்தி' மற்றும் உலகளவில் 43 முறை மேடையேறிய 'திரௌபதி' நாடகங்கள் மூலம் கிடைத்த அங்கீகாரத்தையும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறார்!
🔗 பார்க்க : https://t.co/dDRKeU9Vuj
#KomalTheatres #TamilDrama #StageActor #TamilTheatre #ExclusiveInterview #என்றுதணியும் #DhariniKomal
அன்னைத் தமிழ்நிலத்தைக் காக்க ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நெற்கட்டான் செவ்வலில் போரிட்ட முதல் விடுதலைப் போராட்டவீரர் வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவனின் படையணியில் வீரமும், தீரமும் மிக்க படைத்தளபதிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர்.
எதிரிகளின் படைமுகாமிற்குள் ஒற்றை ஆளாகச் சென்று, அனைவரையும் அழித்து, வெற்றிவாகைச் சூடுவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்ததால் 'ஒண்டிவீரன்' என மக்களால் போற்றப்பட்டவர்.
பல போர்களில் வென்று வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து, போர்க்களத்திலேயே வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட மாவீரர்!
விடுதலைப் போராட்ட மாவீரர் வீரப்பெரும்பாட்டன் ஒண்டிவீரன் அவர்களின் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
100 நாள் ஆட்சியில், 6 காவல்நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை!
@CMOTamilnadu@TVKVijayHQ
மதுரை மேல அனுப்பானடி பகுதியைச்சேர்ந்த ஐயா பரமசிவம் அவர்களை, விசாரணை என்ற பெயரில் சிந்தாமணி காவல் நிலையததில் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதில் உயிரிழந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. 100 நாள் ஆட்சியில் அடுத்தடுத்து நடைபெறும் காவல்நிலைய மரணங்களை தடுக்கத்தவறி தவெக அரசு வேடிக்கைப்பார்ப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் படுகாயமடைந்து, தலையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வேளையிலும் ஐயா பரமசிவம் அவர்கள், அளித்துள்ள மரண வாக்குமூலக் காணொளி இதயத்தை உறையச்செய்கிறது. வாகனம் நிறுத்துவது தொடர்பான சிறு பிரச்னையில், தன்னுடைய மனைவி அய்யம்மாளுடன் காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்ற ஐயா பரமசிவத்தை, காவல் நிலையத்திற்குள் வைத்தே கடுமையாகத் தாக்கிய சிந்தாமணி காவல்துறையினர், தாக்குதல் குறித்து வெளியில் சொன்னால் கஞ்சா வழக்கில் குடும்பத்தையே சிறையில் அடைப்போம் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும், ஐயா பரமசிவத்தை மிரட்டியுள்ளது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமை. தூத்துக்குடியில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட விசாரணை சிறைவாசி அருணாச்சலத்தின் மரணத்தின் சுவடு மறைவதற்குள் அடுத்தடுத்து நடைபெறும் காவல் நிலைய மரணங்கள் தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் உள்ளதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.
தவெகவின் நூறுநாள் ஆட்சியில் ஆறு விசாரணை சிறைவாசிகளின் காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பது மாநில அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. முந்தைய திமுகவின் ஆட்சியில் நடைபெற்ற காவல்துறை மரணங்களின்போது ஆட்சியாளர்களுக்கு எதிராக சீறிய இன்றைய முதல்வரான விஜய் அவர்கள், தனது ஆட்சியில் நடக்கும் காவல்நிலைய மரணங்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று வருத்தமோ, ஆறுதலோ தெரிவிக்காதது ஏன்? தனது கட்சி கூட்டத்தில் வந்து உயிரிழந்த குடும்பத்தினருக்கே அரசு வேலை தருகின்ற முதல்வர் விஜய், தனது ஆட்சியில், தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினர் மக்கள் மீது நிகழ்த்திவரும் அடக்குமுறை கொடுமைகளால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்குத் துயர்துடைப்பு உதவியோ, அரசு வேலையோ வழங்க மறுப்பதேன்? இது வாக்குச் செலுத்தி, ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யப்படும் சனநாயகத் துரோகமில்லையா? ஆட்சியதிகாரமும், பதவி மமதையும் கண்ணை மறைக்கிறதா முதல்வரே? ஏழை எளிய மக்களின் அழுகுரல்கள் கேட்கவில்லையா? தான் ஆட்சிக்கு வந்தால் கடந்த திமுக ஆட்சியில் காவல்நிலைய மரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதியைப் பெற்றுத் தருவதாகத் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பேசிவிட்டு, உங்களது ஆட்சியில் பறிபோன உயிருக்கான நீதியைப் பெற்றுத்தராது இருப்பது முறைதானா முதல்வர் அவர்களே? கொடுங்குற்றம் புரிந்த குற்றவாளியாக, இருந்தாலும் அரிதினும் அரிதான வழக்குகளுக்கே மரணத்தைத் தண்டனையாக நீதிமன்றங்கள் விதிக்கின்றன. அப்படியிருக்க, காவல்துறை எதேச்சதிகாரப்போக்கோடு குற்றஞ்சாட்டப்பட்டவரின் மீது கோரத் தாக்குதல் தொடுத்து, அடித்தே கொன்று, மரணிக்கச் செய்வதை ஒருநாளும் ஏற்க முடியாது. எந்தக் குற்றமிழைத்தவராயினும் அவருக்கான தண்டனையை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுத்தர வேண்டுமே ஒழிய, காவல்துறையினரே குற்றஞ்சாட்டப்பட்டவரின் கை, கால்களை உடைப்பதும், உயிரைப் போக்குவதுமான கொடுஞ்செயல்கள் எந்தவொரு நாட்டிலும் நிகழக்கூடாத மனிதப் பேரவலம்!
ஆகவே, மதுரை சிந்தாமணி காவல்நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதில் கொல்லப்பட்டுள்ள ஐயா பரமசிவம் அவர்களின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலைவழக்கு பதிவுசெய்து, அதில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகையும் வழங்க வேண்டும். அடுத்தடுத்து நடைபெறும் காவல் நிலைய விசாரணை மரணங்கள் இனியும் தொடராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி