தமிழகத்தில் சிறிய கட்சிகளின் ஆதரவு இல்லையென்றால் பெரிய கட்சிகள் கூட சிறிய கட்சிகளாக மாறிவிடும் என்பது எங்கள் நிலைப்பாடு
ஆனால் திமுகவின் நிழலையே சார்ந்து பிழைத்து,அவர்களின் அடிமையாகவே மாறி,அடிமை இரத்தம் ஓடுபவர்களுக்கு திமுக பெரிய கட்சியாகத்தானே தெரியும்!
https://t.co/C7d4P7AYm2
தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த 17 போராளிகளின் 26-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் வீரவணக்கம் செலுத்திய போது.
#தாமிரபரணி_படுகொலை
இந்தியாவிற்கு வேண்டுமானால் 1947ல் சுதந்திரம் கிடைத்திருக்கலாம்
ஆனால் தேவேந்திர குல வேளாளர்களுக்கு @PTpartyOfficial வருகைக்குப் பின்னரே உண்மையான சுதந்திரம் கிடைத்தது
திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என எவருமே தேவேந்திரர்களின் ஒடுக்குமுறைக்கு ���திராக குரல் கொடுத்ததே இல்லை!
புதிய தமிழகம் கட்சியின் 7 வது மாநில மாநாடு - 2026 தேர்தல் பரப்பரை மற்றும் புதிய தமிழகம் கட்சி கிளை துவக்க விழா நிகழ்ச்சி
ராஜபாளையம் தேசிகாபுரம் பகுதியில் நடைபெற்று வருகிறது.!
புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு, 2026 சட்டமன்ற தேர்தல் பரப்புரை
தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் இரண்டாம் கட்ட சுற்றுப்பயண விபர கால அட்டவணை வெளியீடு!
நடிகை சரோஜா தேவி அவர்கள் மறைவு – புதிய தமிழகம் இரங்கல் செய்தி.!
.................................................................
தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் 60 வருடங்களுக்கு மேலாக ஆபாசத்திற்கும், அருவருப்பிற்கும் இடம் கொடுக்காமல் நடித்து முத்திரை பதித்தவர் நடிகை வி. சரோஜாதேவி அவர்க���். அவர் தனது 87 ஆவது வயதில் மரணமெய்திவிட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களை "ப" வடிவில் அமர்த்தும் முடிவு தவறானது.
மாணவர்களுக்கு கழுத்து வலி மற்றும் கண் பார்வை பிரச்��ினைகளை உருவாக்கும்.
எனவே அம்முடிவை கைவிடவேண்டும்!
மடப்புரம் அஜித் குமார் உள்ளிட்ட அனைத்துக் காவல் நிலையச் சாவுகளைக் கண்டித்தும், விரைவு நீதிமன்றம் மூலம் விசாரணையைத் துரிதப்படுத்தவும், விசாரணை கைதின் போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை அமல்படுத்தவும் வலியுறுத்தி 09.07.2025 அன்று மதுரையில் புதிய தமிழகம் கட்சி சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்!
....................................................................................................
கல்வி, தொழில், மருத்துவம், மற்றும் போக்குவரத்து போன்ற வசதிக் குறியீடுகளில் தமிழ்நாடு நீண்ட காலமாக முன்னணி மாநிலமாக இருந்து வருகிறது. அகன்ற - நீண்ட நெடுஞ்சாலைகள்; வானுயரக் கட்டிடங்கள் என இன்னும் பல நவீன வசதிகளில் பிற மாநிலங்களைக் காட்டிலும் முன்னேறி இருந்தாலும், எளிய மக்கள், பழங்குடியினர், விளிம்புநிலை மக்கள், பெண்கள், மற்றும் நலிந்த பிரிவினரிடம் நடந்து கொள்ளும் விதத்திலும், மனிதநேயக் குறியீடுகளிலும் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கேள்விப்படாத ஒடுக்குமுறைகள், தீண்டாமைக் கொடுமைகள், மற்றும் சாதி மாறித் திருமணம் செய்து கொண்டவர்களை அவர்களது பிள்ளைகளேயாயினும் கூட கொலை செய்யும் கேவலமான மனிதநேயமற்ற செயல்கள் மற்றும் காவல் நிலையச் சாவுகள் தமிழ்நாட்டின் மோசமான அடையாளங்களாக உள்ளன.
ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட காவல்துறை, அவர்களை எதிர்ப்பவர்களை ஒடுக்குவதற்காகவே உருவாக்கப்பட்டது. "இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்" என்பது அன்றைய ஆட்சியாளர்களின் குறிக்கோளாக இருந்தது. அன்றைய சூழலில் கூட சம்பந்தமில்லாத மக்கள் துன்புறுத்தப்பட்டதாகப் பெரிய குற்றச்சாட்டுகள் எழுந்ததில்லை. ஆனால் சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும், இந்திய மக்களுக்காக உருவான சட்டத்தை அமலாக்க வேண்டிய காவல்துறை சட்டப்படி செயல்படுவவில்லை என்ற குறைபாடுகள் எங்கும் நிலவுகின்றன.
1993 ஆம் ஆண்டு சிதம்பரம் காவல் நிலை��த்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கணவனைப் பார்க்கச் சென்ற பத்மினி என்ற ஆதி திராவிட/ பறையர் ��மூக பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். மனித உரிமைப் போராளியும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான தார்குண்டே மதுரையில் காவல்துறையால் தாக்கப்பட்டார். 1995 ஆம் ஆண்டு கொடியங்குளம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் காவல்துறையால் சூறையாடப்பட்டன. 1999 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று, 17 தோட்டத் தொழிலாளர்கள் தாமிரபரணி ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து எ���்தனையோ காவல்நிலைய சாவுகள்.! இவைகளுக்கெல்லாம் காரணமான எந்தக் காவல்துறை அதிகாரிகளும், தண்டிக்கப்படவில்லை. மாறாக பதவி உயர்வும், பிற சன்மானங்களுமே வழங்கப்பட்டன.
2019 ஆம் ஆண்டு சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோர் காவல்துறையினரால் கொல்லப்பட்டனர்; இன்று வரை தீப்பு வரவில்லை. 2024 மார்ச் மாதம் சங்கரன்கோவிலில் முருகன் தான் ஓட்டிச் சென்ற வேனில் வைத்தே காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அதில் சமந்தப்பட்ட காவலர்கள் இன்று வரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் திருப்புவனம், மடப்புரம் காளியம்மன் க��வில் காவலாளி அஜித் குமார் நகை திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. நீதி எப்போது கிடைக்கும் என நிச்சயமில்லை. அவர்மீது குற்றம் சுமத்திய நிகிதா என்பவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைக் கைது செய்வதற்கு முன் பின்பற்ற வேண��டிய 11 கட்டளைகளை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. ஆனால் இந்தக் கட்டளைகளை எந்தக் காலத்திலும் தமிழகத்தில் எந்தக் காவலரும் பின்பற்றுவதில்லை.
வருங்காலங்களில் இதுபோன்ற காவல் நிலைய மரணங்கள் நிகழாமல் தடுத்திடவும், நடைபெற்ற சம்பவங்களுக்கு பாரபட்சமற்ற முறையில் விசாரணைகளை விரைவு நீதிமன்றங்கள் மூலம் மேற்கொள்ளவும், காவல்நிலையங்களை ஆளும்கட்சியினரின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க ���லியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஜூலை 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - வள்ளுவர் சிலை அருகில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.! புதிய தமிழகம் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் ப���ருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
05.07.2025
காவல்துறை கொலைகளை மறைக்கு local திமுகவினரும் அரசு அதிகாரிகளும் பேரம் பேசுவது இந்த ஆட்சியின் Standard Operating Procedure.
கடந்த ���ண்டு சங்கரன்கோவிலில் காவலர்களால் முருகன் கொலை செய்யப்பட்டபோது திமுக MLA மக்கள் மத்தியில் பணம் பேரம் பேசும் வீடியோ.
இப்போதுவரை FIR பதிவு செய்யவில்லை