சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு ‘ஆர்வம் ஐஏஎஸ்’ அகாடமியுடன் இணைந்து யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கு விண்ணப்பித்தவர்களுடன், பயிற்சி தொடங்குவது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (06,04,26) நடந்தது. மாணவர்களின் சந்தேகங்களுக்கு ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் தலைவர் சிபிகுமரன் விளக்கம் அளித்தார்.
இந்த மாதம் பயிற்சி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி பெற ஆர்வம் உள்ளவர்கள் பத்திரிகையாளர் மன்றத்தை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் கோரிக்கையை ஏற்று பத்திரிகையளார்களுக்கு வீட்டு மனை மற்றும் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பத்திரிகையாளர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகிகள் இன்று (13.03.2026) சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, பத்திரிகையாளர்களின் நலன் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம்.
இதைத்தொடர்ந்து, பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியத்தை 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் காப்பீடு அட்டை வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் மிக முக்கியமான கோரிக்கையான, பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருப்பது பத்திரிகையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளர்களின் நலனைக் கருதி சென்னை பத்திரிகையாளர் மன்றம் முன்வைத்த கோரிக்கைகளில் முக்கியமான கோரிக்கைகள் அனைத்தும் உடனே ஏற்கப்பட்டதுடன், மற்ற கோரிக்கைகளையும் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பத்திரிகையாளர்கள் சார்பிலும் அவர்கள் குடும்பத்தினர் சார்பாகவும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
@CMOTamilnadu@mkstalin
பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களோடு 2026 புத்தாண்டுக் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, அதன் உறுப்பினர்களுக்கு நாட்காட்டி, நாட்குறிப்பு ஆகியவற்றை வழங்கி, வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டோம்.
@MadrasJournos
கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா அருகே செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் அஜய் அஞ்சன், அபிஷேக், நவீன், சந்தோஷ் ஆகியோர் மீது, தர்மஸ்தலா கோவிலுடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த பத்திரிகையாளர்கள்…
Today, the Madras High Court Journalists Association felicitated me for my renomination to the Rajya Sabha. Since I began practising in High court in 1989, I have maintained a strong relationship with journalists, who have provided tremendous support to me both inside and outside the High Court.
#madrashc
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
@mkstalin@Udhaystalin@TNDIPRNEWS
தமிழக வெற்றிக் கழக ஆண்டு விழா நிகழ்வில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
@actorvijay@BussyAnand@TVKVijayHQ
'நீதிக்கான கூட்டணி'யின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான, பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் உணவு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மன்ற வளாகத்தில் 'உணவு விடுதி' அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அண்ணா பல்கலை மாணவி வழக்கில் பத்திரிக்கையாளர்களை சிறப்பு புலனாய்வுக் குழு துன்புறுத்தக் கூடாது என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வரவேற்பு
#AnnauniversityCase#MadrasHC@MadrasJournos#SparkMedia
FIR - ஐ வெளியிட்டவர்கள் விசாரிக்காமல், பத்திரிகையாளர்களை SIT விசாரித்தது ஏன்? நீதிமன்றம் கேள்வி. பத்திரிகையாளர்களிடம் SIT எழுப்பிய கேள்விகள் குறித்து நீதிமன்றம் அதிருப்தி. பத்திரிகையாளர்கள் மற்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் தொடர்ந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்
சென்னை பத்திரிகையாளர் மன்றம் 'கேரம் போட்டிகள்-2025'-ஐ செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் மருத்துவர் @drvasanth அவர்கள் போட்டியை தொடங்கி வைத்தார்.
நியூஸ் 18 தமிழ்நாடு நிர்வாக ஆசிரியர் @karthickselvaa, தி இந்து இணை ஆசிரியர் @vijaythehindu
உள்ளிட்டவர்கள் (1)
சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற சட்டரீதியான உதவிகளை மேற்கொண்ட மூத்த வழக்கறிஞர் திரு. பி.வில்சன் M.P அவர்களை மன்ற நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
@PWilsonDMK
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பொங்கல் விழா ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் அறுசுவை உணவுடன் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கலந்துகொண்டு சிறப்பித்த மூத்த பத்திரிகையாளர்கள் திரு.என்.ராம், திரு.நக்கீரன் கோபால் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி.
#Pongal2025