மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. C.ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்,
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்.
@CMOTamilnadu#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
@CMOTamilnadu
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவினால் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய விழைவதுடன்,
உயிராபத்து விளைவிக்கும் இரசாயனங்களைக் கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், அலட்சியம் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி. @ikamalhaasan அவர்கள்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும், பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதும் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.
உயிராபத்து விளைவிக்கும் ரசாயனங்களைக் கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அலட்சியம் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்யவேண்டும்!!
மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்!
நேற்றைய சட்டமன்றக் கூட்டத்தின்போது இரங்கல் தீர்மானங்கள் வாசிப்பு, மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசின் தனி தீர்மானத்தின் மீதான விவாதங்கள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன.
ஆனால் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கவர்னர் உரையின் மீதான விவாதங்களுக்கு நேரலை தரப்படவில்லை. சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் இருக்கிறது. ஆகவே, இனிவரும் நாட்களில் சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. மேலும், நேரடி ஒளிபரப்பு குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி வருவதை நினைவு கூர்கிறோம்.
வெளிப்படைத் தன்மையோடு செயல்படவிரும்பும் தவெக அரசு இதனை உடனடியாகச் செயல்படுத்தும் என்று நம்புகிறோம்.
A.G.மெளரியா, I.P.S., (ஓய்வு)., @MouryaMNM
துணைத் தலைவர்,
மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
மேகதாதுவில் அணை கட்ட தன்னிச்சையாக முனையும் கர்நாடக அரசுக்கு எதிராக,
தமிழ்நாடு சட்டமன்றத்தில், தனித்தீர்மானத்தை கொண்டு வந்த, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும்,
ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும்,
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்களின் பாராட்டுக்கள்.
@CMOTamilnadu
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தன்னிச்சையாக முனையும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது.
தமிழ்நாட்டின் நீர் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேகதாது விவகாரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு அனைவரும் ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன்.

Happy Birthday, Rahul ji.
You’ve walked the length of India, carrying a message of love, secularism, and progress, reminding us that politics must connect, not divide.
Keep walking, keep listening.
@rahulgandhi

ஆளுநர் உரை: எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்!
தங்கள் அரசின் அடிப்படைப் பணிகள் என்னவாகயிருக்கும் என்பதன் தொகுப்பாகத்தான் ஆளுநர் உரை அமைந்துள்ளது. உரையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்த அரசானது கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருதல், உச்சநீதிமன்றத்தின் அமர்வை சென்னையில் அமைத்தல், உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்குதல் போன்ற நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற முழுமூச்சுடன் பாடுபட வேண்டும். பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ‘‘தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம்’’ என்ற முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது.
ஒன்றிய அரசானது தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதிப்பகிர்வை சட்ட ரீதியாகப் போராடிப் பெறுவதற்கு சட்ட வல்லுனர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும் என்பது அவசியமானதொரு நடவடிக்கையாகும். அதேசமயத்தில் நிதிப்பகிர்வு உள்ளிட்ட ‘‘கூட்டாட்சி மற்றும் மத்திய மாநில உறவுகள்” குறித்து மறுஆய்வு செய்து தீர்வுகளைத் தருவதற்காக 2025ல் தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. திரு.குரியன் ஜோசப் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் வழங்கிய பரிந்துரைகளை தவெக அரசு பரிசீலித்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
நகரமயமாதல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் குடிநீர், உள்கட்டமைப்பு உள்ளிட்ட சில திட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக கூடுதல் நிதி மற்றும் கிராம சபைகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படுவது, உள்ளாட்சித் தேர்தல் குறித்து எந்தக்குறிப்பும் இல்லாதது வருத்தமளிக்கிறது.
ஆளுநர் உரையில் காவிரிப்பிரச்னை, போதை கலாச்சாரம் ஒழிப்பு, பாலியல் வன்முறை போன்றவற்றைக் கையாள்வதில் மென்மையான போக்கே காணப்படுகிறது. இவற்றில் கடுமையான நிலைப்பாட்டை - செயல்பாட்டை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரை என்பதால் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஆளுநர் உரை நிறைவேற்றவில்லை.
ஆ. அருணாச்சலம் MA., BL., @Arunachalam_Adv
பொதுச்செயலாளர்,
மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதும் நிரம்பாத பெண்குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும் கொடூரமான காயங்களால் இறந்தே போனதும் மனித குலத்தையே தலைகுனியவைக்கும் அவலம்.
நாகரிகம் அடைந்த சமூகம்தானா நாம் என்கிற கேள்வியை முகத்திலறைந்தாற்போல் எழுப்புகிறது இந்த துயரச்சம்பவம்.
இனியொரு சம்பவம் இப்படி நடக்காதிருக்க தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாக செயலில் இறங்கியாக வேண்டும்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலுடன்,
பெரம்பூர் மநீம மாவட்டத்தில் கோடைக்கால தாகம் தீர்க்கும் பொருட்டு பொதுமக்களுக்கு நீர்மோர், பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
மாவட்டச் செயலாளர் திரு. V. உதயகுமார் @udayakumarmnm அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவிற்கு,
கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம் @sentharu அவர்களும், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் @imayilvagan அவர்களும் தலைமை வகித்தனர்.
மேலும் இவ்விழாவில் மாவட்டச் செயலாளர்கள் (இராயபுரம்) திரு.மாறன், (R.K. நகர்) திரு. பூ.கோவிந்தராஜ்,
மாவட்ட அமைப்பாளர்கள் திரு. இராஜபுத்திரன் (சமூக ஊடக அணி), திரு. ரகு (தொழிலாளர் அணி),
திருமதி. அம்ருதா மோகனா (விவசாய அணி), திரு. T.R.சதிஷ் (நற்பணி அணி),
மாவட்டத் துணைச் செயலாளர் திரு. K.T.வெங்கடேசன் (திரு.வி.நகர்), மாவட்ட பொருளாளர் திரு. ஆனந்த், கொளத்தூர் நகரச் செயலாளர் திரு.ராஜேந்திரன், நம்மவர் தொழிற்சங்க பேரவை மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு.யுவராஜ் ஆகியோருடன் பெரம்பூர் - திரு.வி.க நகர் மநீம மாவட்டங்களின் செயலாளர்கள், அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
🎬 Lights, camera, diplomacy! “Thrilled to meet acclaimed actor and filmmaker @ikamalhaasan!” — Canada’s Minister-Counsellor Geoffrey Dean discussed unlocking new opportunities in creative collaboration and co-productions with #KamalHaasan in #Chennai.
Congratulations to Shri @narendramodi ji on becoming India’s longest continuously serving elected Prime Minister. In a diverse democracy like ours, sustained public trust is a significant feat. May our collective focus remain on India’s progress and the welfare of our fellow citizens.

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், திரு. C. ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்கள்,
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கியதை வரவேற்றார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.