உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞராக இருந்து சமூகநலனுக்காகவும் சமநீதிக்காகவும் எத்தனையோ வழக்குகளில் வாதாடி வென்ற திருமதி. வி.மோகனா அவர்கள், அந்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவே பதவி ஏற்கிறார். இப்படி வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் தமிழ்ப் பெண்மணி இவரே என்பதில் தமிழகம் பெருமை கொள்கிறது.
உச்சநீதிமன்ற மாண்பமை நீதிபதி வி. மோகனா அடைந்திருக்கும் உயர்வு, தத்தம் துறைகளில் அந்தரங்கசுத்தியோடு ஈடுபடும் எவருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்கும். அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.
சூலூர் அருகே 10 வயது நிரம்பிய சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மனம் கொதிக்கச் செய்கிறது. குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். தங்கள் செல்லமகளுக்கு நிகழ்ந்த கொடுமையை எண்ணி உருக்குலைந்து போயிருக்கும் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
India has overcome wars, shortages, and global crises before - through unity and shared sacrifice. This moment calls for the same national spirit again. 🇮🇳
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்.
@CMOTamilnadu
தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டம்... National overseas scholarship scheme.. Last date to Apply : 02-06-2026 .. Details @
https://t.co/9OI8XXLQON
ஜோதிடருக்கு முதலமைச்சரின் சிறப்புப் பணி அதிகாரியாக அரசுப்பணி வழங்கியது கண்டனத்திற்குரியது.
பலதரப்பிலிருந்து எதிர்ப்பு வந்ததும் பணி அறிவிப்பை திரும்பப்பெற்றது வரவேற்புக்குரியது.
@CMOTamilnadu@TVKVijayHQ
நீட் நுழைவுத் தேர்வுக்காக இரவு பகலாகப் படித்த 22 லட்சம் மாணவர்களின் உழைப்பும் கனவும் குற்றக்கும்பல்களால் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலுக்குப் பொறுப்பேற்கப் போவது யார்?
இதுவரை ஒரு நீட் தேர்வு கூட முறைகேடு புகார்கள் இல்லாமல் நடந்ததாக எனக்கு நினைவில்லை. இதனால்தான் கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டுமென போராடிக்கொண்டிருக்கிறோம்.
நீட் எனும் அநீதியான தேர்விலிருந்தும் அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடமிருந்தும் இந்திய மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார்.
மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும்.
வாழ்த்துகள்.
@CMOTamilnadu
திணிப்பை தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்...!!
”மத்திய அரசின் சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு இருப்பதால்தான் இன்று முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடல், தேசிய கீதம் அதன் பிறகு 3வது பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது என்று கவர்னர் விளக்கமளித்துள்ளார்( அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா @AadhavArjuna அவர்களின் பதிவின்படி)
மத்திய உள்துறை அமைச்சகம் 06-02-2026 அன்று வெளியிட்டுள்ள உத்தரவில்(வந்தேமாதரம் இசைக்கப்படுவது தொடர்பாக) மாநிலத்தின் பாடல் கடைசியில்தான் இசைக்கப்படவேண்டும் என்று எந்தக் குறிப்பும், அறிவுறுத்தலும் இல்லையே ?
தமிழகத்தின் உணர்வுப்பூர்வமான விவகாரமான “மொழி” தொடர்பான நிலைப்பாடுகளில் கவர்னர் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
திணிப்பை தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி திரு. விஜய் @TVKVijayHQ அவர்களின் தலைமைத்துவத்தில் தமிழ்நாடு சிறக்கட்டும். புதிய உயரங்களை அடையட்டும்.
என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிறைச்சாலைச் சுவர்களுக்குள் சிதறாத கவனத்துடன் பயின்று, +2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள 238 சிறைவாசிகளுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக எமது மனமார்ந்த பாராட்டுக்கள்!
இந்தக் கல்வி வெற்றி உங்கள் வாழ்வில் ஒரு புதிய தொடக்கமாக அமையட்டும். நல்வாழ்விற்கான உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
வாழ்த்துகளுடன்,
மக்கள் நீதி மய்யம்.
@ikamalhaasan@maiamofficial
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#12thResult
#ExamResult
+2 தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவ, மாணவிகளுக்கும்... விரைவில் தேர்ச்சி பெற உள்ளோருக்கும் வாழ்த்துகள்.
மாணவ சகோதர, சகோதரிகளே... இப்போது நீங்கள் வாழ்வில் முக்கியமானதொரு காலகட்டத்தில் அடியெடுத்து வைக்கிறீர்கள். எந்தக் கல்லூரி, எந்தப்படிப்பு என்பதைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள். எந்தப் படிப்பு latest ஆக உள்ளது, எதைப் படித்தால் நிறைய சம்பளம் கிடைக்கும், நண்பர்கள்-உறவினர்கள் வற்புறுத்தினார்கள் என்பதையும் தாண்டி... உங்கள் கனவு என்ன, லட்சியம் என்ன என்பதை மனதில் நிறுத்தி படிப்பையும், கல்லூரியையும் தேர்ந்தெடுங்கள்...
Follow your passion...
வெற்றி நிச்சயம்...
PM SHRI பள்ளிகள்---ஒரு பார்வை!மாநில உரிமைகளுக்கு சவாலாக அமையக் கூடிய PM SHRI!
PM SHRI யின்
சாதகங்கள் என்று சொல்லப்படும் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், பசுமைப் பள்ளிகள், தொழில்சார் கல்விக்கு முக்கியத்துவம் மற்றும் NEP 2020-ன் கீழ் மாதிரிப் பள்ளிகளாக உருவாக்கம் ஆகியவை ஏற்கனவே
*ஸ்மார்ட் வகுப்பறைகள், புதிய கட்டிடங்கள், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் & தமிழ்ப் புதல்வன், இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், அதிநவீன லேப்டாப்கள் சுருக்கமாகச் சொன்னால், உட்கட்டமைப்பில் நவீனமயமாக்கல் மற்றும் மாணவர்களின் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்தல்* என தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளவை.
இவற்றை, ஏதோ புதிதாக அறிமுகப்படுத்துவது போன்ற ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.
இதன் ஊடே பொதிந்து கிடக்கும் சவால்கள் :
1. 60:40 நிதிப் பங்கீடு - மாநிலங்களுக்கு நிதிச் சுமை.
2. மொழி மற்றும் பெயர் மாற்றம் தொடர்பான மத்திய-மாநில கருத்து வேறுபாடுகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு.
3. தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளால் மற்ற அரசுப் பள்ளிகளிடையே ஏற்படக்கூடிய பாகுபாடு.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்றும் அவ்வாறே இருக்க வேண்டும்.
ஒன்றிய அரசு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கட்டுப்படுத்தவும், மாநில உரிமைகளில் தலையீடு செய்யவும் தொடங்கியுள்ளது.
ஆனால், எந்தச் சூழலிலும் மாணவர்களின் கல்வி உரிமையிலும் மாநில உரிமையிலும் சமரசம் செய்யக்கூடாது என்பதே ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலாக இருக்கிறது.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#ThreeLanguagePolicy
#PMSHRI
#FascistBJP
ஆட்சி அமைக்கும் அளவுக்கு @TVKVijayHQ க்கு பெரும்பான்மை இல்லை என்று "லோக்பவன்"(கவர்னர்) அறிவிப்பு..
அப்படியானால்.... 118 ஆதரவு எம்.எல்.ஏக்களை ”லோக் பவனுக்கு” வரச்சொல்லி அடையாள அணிவகுப்பு நடத்தி - ஆதார் கார்டு சரிபார்த்து - பயோமெட்ரிக் முறையில் கைரேகை, கருவிழி சரிபார்த்த பின்புதான் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பேன் என்கிறாரா கவர்னர் ?
பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றமே..
‘ லோக்பவன்” அல்ல...
மக்களின் தீர்ப்பு,
உச்சநீதி மன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் கவர்னர் செயல்படவேண்டும்.
”ராஜ் பவன்” என்பதை
”லோக் பவன்” என்று,
பெயர் மாற்றினீர்கள்..
"ராஜா" மனப்பான்மையை எப்போது மாற்றுவீர்கள் ??