மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கேள்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் இதயக்கனியாக, ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கும் கொடை வள்ளலாக, உலகமெங்கும் வாழும் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக, மக்கள் செல்வாக்கை மாபெரும் அரசியல் சக்தியாக மாற்றிய பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினம் இன்று.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்து, எண்ணிலடங்கா மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தியதோடு, தனது பேச்சாற்றலாலும், அறிவாற்றலாலும் தமிழகத்தைத் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றிக் காட்டிய மூன்றெழுத்து மந்திரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் காட்டிய பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம்.