தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையை அளிக்கிறது.
கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே எங்கள் மீனவர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும். இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர்.
நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
தளபதி மேல் மக்கள் வைத்திருக்கும் அன்பு இன்றுநேரில் கண்டேன்.
@TVKPartyHQ
நமது சென்னை மத்திய தெற்கு சேப்பாக்கம் பகுதி தளபதி விலையில்லா விருந்தகத்தில் கிட்டதட்ட 40 அல்லது 50 நாள் உணவருந்திய முதியவர் எனக்கு ஹோட்டலில் வேலை கிடைத்து விட்டது நான் அங்கேயே மூன்று வேலை உணவு அருந்துகிறேன். அதனால் என்னால் முடிந்த பத்து பேருக்கு உணவு கொடுக்கல் என்று தான் வழங்கிய சம்பளத்தில் 500 ரூபாய் தளபதி விலையில்லா விருந்தகத்திற்கு கொடுத்தார்..
வாழ்க தளபதி புகழ்.
My heartfelt thanks to all the Political leaders, Film and Media industry friends, well-wishers, En Nenjil Kudiyirukkum my dear beloved @TVKPartyHQ members and followers from across the world for your overwhelming love and birthday wishes! Your support fuels my journey to serve the people. Let’s march together for a brighter future! #TVK #Grateful🙏
Deeply saddened by the tragic crash of Air India flight AI171 in Ahmedabad, carrying 242 people on board.
Heartfelt condolences to bereaved families. Praying for the speedy recovery of the injured.
இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்து, தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவர், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்கள். விடுதலைப் போராட்டக் களத்தில் அவரது போர்க்குணம் போற்றுதலுக்கு உரியது.
கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்த நாளையொட்டி, பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.