திருவாரூர் மாவட்டத்தில் செங்கல் சூளைத் தொழிலாளி, தனது வீட்டின் முன்பே மர்ம கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை நிலையில் கொலையைத் தடுக்க முயன்ற அவரது மனைவியையும் மகனையும் அதே கும்பல் கொடூரமாக வெட்டியிருப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
@CMOTamilNadu பதவியேற்றவுடன், "தமிழக மக்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவேன்" என மேடையில் வீரவசனம் பேசிய நிலையில் அதற்கு நேர்மாறாக ஆட்சிப் பொறுப்பேற்று 20 நாட்களில் பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் எத்திசையை நோக்கினாலும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் என முந்தைய இருண்டகால திமுக ஆட்சியின் தொடர்ச்சியாகவே தற்போதைய ஆட்சியும் உள்ளது.
நிர்வாகத்திறன் துளியும் இல்லாத, வெற்று விளம்பரங்களையும், 'ரீல்ஸ்களை' மட்டுமே நம்பி ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் இந்த '#பொய்க்கால்_குதிரை_அரசு, இனியாவது மாய உலகத்திலிருந்து வெளிவந்து, சட்டம்-ஒழுங்கைப் பேணிக்காத்து, வாக்களித்த தமிழக மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
"அடுத்த ஜென்மத்தில் விவசாயியாகப் பிறக்க ஆசைப்படுகிறேன்" என மேடையில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய @CMOTamilNadu, இன்று அதே விவசாயிகளை, தன் கீழ் உள்ள காவலர்களை ஏவி குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்திருக்கிறார்!
மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராகப் போராடிய விவசாயிகளை, காங்கிரஸ் கட்சி கோபித்துக் கொண்டால் தனது மைனாரிட்டி ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் கைது செய்கிறீர்களா?
விவசாயிகளை விட விளையாட்டு முக்கியம் எனக் கொச்சைப்படுத்தும் அமைச்சர்கள் ஒரு பக்கம்; போராடும் விவசாயிகளை அடக்குமுறை செய்யும் முதல்வர் மறுபக்கம். அதிகார மமதையில் ஆடினாள், மக்கள் சக்தியின் முன்னால் ஒருநாள் மண்டியிடத்தான் வேண்டும் என்பதை ஆள்பவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
“எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க வக்கில்லாமல் விழி பிதுங்கி நின்று, அரசு செய்ய வேண்டிய வேலைகளைப் பார்க்காமல் அற்பத்தனமாக குதிரை பேரம் எனும் மிகக் கேவலமான அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருப்பதை தமிழக மக்கள் முகம் சுளித்து அருவருப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை திசைதிருப்ப, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சரி, அதையாவது ஒழுங்காக செய்தார்களா என்றால், இல்லை!
எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு 2021-ம் ஆண்டு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ. 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து, 16.43 லட்சம் விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்தது. அது தான் ஒரு அரசாங்கம் விவசாயிகள் உணர்வுகள் அறிந்து மேற்கொள்ளும் செயல்.
ஆனால் இன்றைய அரசு செய்துள்ளது என்ன?
தேர்தல் அறிக்கையில் “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்” என்று அறிவித்து விட்டு, இப்போது நிலத்தை அளவுகோலாக எடுக்காமல், பணத்தை அளவுகோலாக வைத்து மிகப்பெரிய ஏமாற்று வேலையில் ஈடுபட்டு உள்ளனர்.
2021-ல் நாம் 12,110 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததையும், இவர்கள் இப்போது 2026-ல் வெறும் 2,044 கோடி ரூபாய் கடனை மட்டுமே தள்ளுபடி செய்வதாக கூறுவதையும் பார்த்தாலே விவசாயிகளுக்கு புரிந்துவிடும், இது எவ்வளவு பெரிய தில்லுமுல்லு என்று!
மண்ணில் கால் வைத்து, ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன்- விவசாயிகளை ஏமாற்றும் எந்த ஒரு அரசும் நிலைத்ததாக சரித்திரமே இல்லை!
சோறு போடும் விவசாயி கடவுளுக்கு நிகரானவன்! அந்த பச்சைத் துண்டு அணிந்த உழவர்களை ஏமாற்றாதீர்கள்; செய்வன திருந்தச் செய்யுங்கள் @CMOTamilNadu!
@AIADMKOfficial
95000 கட்ட தெரிந்த விவசாயிகளுக்கு மீதம் உள்ள 5000 ரூபாய் கட்ட தெரியாதா...💶💵
2006 திமுக ஆட்சியில் சுமார் 7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது...💶💵
2016 அதிமுக ஆட்சியில் சுமார் 12.02 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு
ரூபாய் 5318.73 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது...💶💵
2021 அதிமுக ஆட்சியில் சுமார் 16.43 லட்சம் விவசாயிகளுக்கு கூட்டு வங்கியில் பெற்றிருந்த
ரூபாய் 12,110 கோடி விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது...💶💷
5 ஏக்கராக்கு குறைவாக உள்ள விவசாயிகளிலும் அனைத்து விவசாய கடனும் ரத்து செய்யப்படும் ...
அதேபோல 5 ஏக்கருக்கு மேலே உள்ளவர்களுக்கு பாதி விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று சொல்லிவிட்டு...
ஆனால் இன்று வெறும் 2000 கோடி கடனை தள்ளுபடி செய்துவிட்டு 80% விவசாயிகள் பயனடைந்தனர் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்... 👎🏻👎🏻👎🏻
வாய திறந்து பேசுங்க
ஜோசப் விஜய்
தவேகவின் திருவண்ணாமலை வேட்பாளர் அருள் ஆறுமுகத்தின் பதிவு !
தவேக தலைவர் ஜோசப் விஜய்
உங்களுக்கு விவசாயத்தை பற்றி ஒண்ணும் தெரியாது
#பொய்க்கால்_குதிரை_அரசு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
தவெக ஆச்சரியக்குறிகளே! இப்பதான் First Time Government Form பண்ணி சீட்ல உக்காந்திருக்கீங்க.. அதுக்குள்ள 50 வருஷ வரலாறு இருக்குற அதிமுக-வ பாத்து விரல் நீட்டுறதா?
தலைமை செயலகத்துல சபாநாயகரை பாத்து முறைப்படி ராஜினாமா லெட்டர் குடுக்கலாம்..
ஆனா ராஜினாமா செஞ்ச அடுத்த நிமிஷமே உங்க அமைச்சரை பாத்து இணைப்பு விழா நடத்தக் கூடாது!
தார்மீகப் பொறுப்புன்னு சொன்னா சபாநாயகர் கிட்ட போயிருக்கணும், அமைச்சர எதுக்கு சந்திக்கணும்?
இதான் நீங்க சொல்ற சுயவிருப்பமா?
இல்ல,
பதவி + பவர் காமிச்சு பின்னால நடந்த Backdoor Deal-ஆ?
குதிரை பேரம் இப்போ க்ளியரா மக்களுக்கு வெட்ட வெளிச்சம் ஆகிடுச்சு பாஸ்!
தேர்தல்ல ஜெயிக்கிறதும் தோக்குறதும் சகஜம் தான்..
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்,
புரட்சித்தலைவி அம்மா காலத்துல இருந்து எத்தனையோ சரிவை சந்திச்சு ஃபீனிக்ஸ் பறவை மாதிரி மாஸா Comeback குடுத்த வரலாறு எங்களுக்கு இருக்கு.
கட்சி ஆரம்பிச்சு இப்பதான் 1st கியர் மாத்தியிருக்கீங்க.
உங்க கொள்கை என்ன,
நீங்க மக்களுக்கு என்ன பண்ணப் போறீங்கன்றத மட்டும் பாருங்க.
அதை விட்டுட்டு அரை நூற்றாண்டு காலமா மக்கள் மனசுல சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்க அதிமுக-வ சீண்டிப் பார்த்து Cheap Publicity தேடாதீங்க.
ஆட்சிக்கு வந்ததுல இருந்து இதுவரை நடந்த பிரச்சனைகள் எதுக்குமே மக்களை சந்தித்து பதில் சொல்ல கொஞ்சம் கூட துணிவில்லாத உங்க தலைவரை வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம் உங்களுக்கு.
இதெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது.
போங்க போங்க ..
போய் reels போட்டு விளையாடுங்க பாஸ்..
சொன்னது என்ன? செய்தது என்ன?
மாற்றம் என்பது
விவசாயிகளுக்கு ஏமாற்றம் தான்!
ஆட்சிக்கு முன்
5 ஏக்கர் வரை அனைவருக்கும் கடன் தள்ளுபடி என கூறிவிட்டு
இப்போது,
பல Filter-களை போட்டு யாருக்கும் உதவாத ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது
#பொய்க்கால்_குதிரை_அரசு !
விவசாயி வயிற்றில் அடிக்காதீங்க @CMOTamilNadu !
மதுரை கீழமாத்தூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த த.வெ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
மேலும், தாம்பரம் அருகே கல்லூரி மாணவியை தவறான முறையில் பார்த்த த.வெ.க நிர்வாகி கைது செய்யப்படுள்ளதாகவும், திருவொற்றியூரில் நள்ளிரவில் மின்துறை உதவிப் பொறியாளர் வீட்டின் கதவைத் தட்டி அச்சுறுத்தி ஆளும் த.வெ.க.வினர் மிரட்டியதாகவும் செய்திகள் வருகின்றன.
மேலும் சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று மழை பெய்த நிலையில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்திருந்தது. இன்று காலை ஓமலூரில் உள்ள இரயில்வே சுரங்கப் பாதையை காரில் கடக்க முயன்ற கணவன் மனைவி இருவரும் அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாக வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரை இந்த அரசு உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளாததால் இன்று நாம் இரண்டு விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம்.
சிறப்பான ஆட்சியை தருவேன், மாற்றம் கொண்டு வருவேன் என்று முதல்வர் வசனம் பேசினார். ஆனால் ஒவ்வொரு நாளும் விலை மதிப்பற்ற உயிர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியிலும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு மதுரை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வருகின்றன.
அதுபோக, ஆளுங்கட்சியினரின் மிரட்டல் அராஜகங்கள், குறிப்பாக அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் போக்கு என்பது தொடர்கிறது.
முந்தைய ஆட்சிபோல் தமிழகத்தில் இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல், செய்தியாளர் சந்திப்பு நடத்த முடியாத முதல்வர் தான் இப்போதும் வாய்த்துள்ளார். ட்விட்டர் மடைமாற்று அரசியலில் திமுக ஈடுபட்டது என்றால், இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியலில் இன்றைய ஆளுங்கட்சி ஈடுபடுகிறது. அவ்வளவு தான்!
“முதல்வர் கோட்டைக்கு வருகிறார்! கேரியரில் மதிய உணவு சாப்பிடுகிறார்! ஆஹா என்ன ஒரு மாற்றம் ?” என்று ஒரு தனி உலகத்தை இவர்கள் கட்டமைக்கும் வேளையில், தமிழ்நாடு ரத்தக்காடாக மாறி வருவது பற்றியும், தங்கள் கட்சியினர் பொறுப்புணர்வின்றி போடும் அதிகார வெறியாட்டம் பற்றியும் ஒருவார்த்தையாவது பேசுவார்களா?
உங்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்தால், அவர்களை காப்பாற்ற சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என்று இந்த முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
முதல்வர் கோட்டைக்கு வருகிறார்! கேரியரில் மதிய உணவு சாப்பிடுகிறார்! ஆஹா என்ன ஒரு மாற்றம் ? என்று ஒரு தனி உலகத்தை இவர்கள் கட்டமைக்கும் வேளையில், தமிழ்நாடு ரத்தக்காடாக மாறி வருவது பற்றி ஒருவார்த்தையாவது பேசுவார்களா?
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
தேர்தல் வாக்குறுதியில் முழு பயிர் கடன் தள்ளுபடி என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் நிபந்தனைகளைத் திணித்து ஒட்டுமொத்த குறு-சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சூறையாடும் இந்த அரசின் செயல், வெறும் பொய்க்கால் குதிரையாக நின்று ஏமாற்றும் வஞ்சகத் தனத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!!
#பொய்க்கால்_குதிரை_அரசு