2026-ல தவெக கிட்ட தோல்வியுற்ற திமுக, தன் இணைய கூலிகளை வச்சு சோசியல் மீடியால புது கதைய கிளப்ப ஆரம்பிச்சுட்டாங்க. 'நாம ஏன் தோத்தோம்?' அப்படின்னு கொஞ்சம் கூட நேர்மையா சுயபரிசீலனை (self-critic) பண்ணி பார்க்காம, TVK-வ சமாளிக்கிறதுக்காகவே இல்லாத கதையையும் பொய்யையும், புரட்டளையும் பரப்பிட்டு இருக்காங்க. இவங்க என்ன சொல்றாங்கன்னா:
1 இந்த சோசியல் மீடியா influencers ஆலதான் நாங்க தோத்துட்டோம்.
2 TVK-க்கு பின்னாடி RSS / BJP தான் இருக்கு. பிஜேபி உள்ள வந்துரும் ப்ரோ.
ஆனா கொடுமை என்னன்னா, இந்த கதைய நம்ப வைக்கிறதுக்காக, அதே RSS / BJP-கிட்ட இருந்து கத்துக்கிட்ட அதே மட்டமான உத்தியை இவங்களும் அப்படியே பாலோ பண்றதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு.
தவெக அரசின் ஆன்மீக அரசியல்:
"மாற்று அரசியல், முற்போக்கு" என்ற முழக்கங்களோடு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவர்களின் தவெக அரசு, தற்போது எடுத்து வரும் முடிவுகள் அனைத்தும் அப்பட்டமான வலதுசாரி மற்றும் மதவாத அரசியல் திருப்திப்படுத்தும் போக்கையே காட்டுகின்றன.
முந்தைய திமுக ஆட்சியில், 2024 மார்ச் 8-ம் தேதி https://t.co/OEezG0BtxH.135 மூலம் கள்ளழகர் கோவிலின் உபரி நிதியில் இருந்து ₹40 கோடியை ஒதுக்கி, உணவகங்கள், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், VIP காட்டேஜ்கள் உள்ளிட்ட வணிகத் திட்டங்களை (Iconic Project) அனுமதித்தது. இதே போன்று ₹246 கோடி மதிப்பிலான 46 திட்டங்களை (29 திருமண மண்டபங்கள் + 17 வணிக வளாகங்கள்) கொண்டு வந்தது.
ஆனால் ஜனவரி 2026-ல் மதுரை மேல் நீதிமன்றக் கிளை (Madras High Court) இந்த GO-வை முழுமையாக ரத்து செய்தது. கோயில் பணம் அரசுக்குச் சொந்தமில்லை, அது தெய்வத்தின் நம்பிக்கை நிதி என்றும், வணிக நோக்கத்துக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் தெளிவாக உத்தரவிட்டது.
இந்த நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி தவெக அரசு இப்போது அந்த 46 திட்டங்களையும் ரத்து செய்துள்ளது. "கோயில் பணம் கோயிலுக்கு மட்டுமே" என்ற பாசிச சித்தாந்தத்தின் குரலை தவெக அரசு கையில் எடுத்துள்ளது.
இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன?
இந்திய அறக்கட்டளைச் சட்டங்களின்படி, கோயில் நிதிகளை கல்வி, மருத்துவம், அன்னதானம், ஏழைகளின் வாழ்வாதார மேம்பாடு போன்ற சமூகப் பொதுநலன் பணிகளுக்குப் பயன்படுத்தலாம். முந்தைய அரசின் திட்டங்கள் பல இத்தகைய சமூக நோக்கம் கொண்டவையாக இருந்தன.
ஆனால் தவெக அரசு, நீதிமன்ற உத்தரவை முழுமையாக ஏற்று ரத்து செய்வதற்கு பதிலாக, உச்ச நீதிமன்றத்தில் SLP (Special Leave Petition) தாக்கல் செய்து மேல்முறையீடு செய்திருக்கலாம். அதைவிடுத்து, ஆன்மீகக் குழுக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் உடனடியாக ரத்து செய்தது, மக்களின் நலனுக்கு எதிரானது.
மதச்சார்பற்ற முற்போக்குத் தமிழ்நாட்டில், பாஜக வின் அதே ஆன்மீகப் பெருமித அரசியலை வேறு ஒரு முகமூடியில் கொண்டுவர தவெக அரசு துடிக்கிறது. சாமானிய மக்களின் வறுமை, லாக் அப் மரணங்கள், கல்வி உரிமைச் சுரண்டல் போன்ற எதார்த்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத இந்த அரசு, ஆன்மீகத் துறையைத் "திருத்தியமைக்கிறேன்" என்ற பெயரில் வலதுசாரி பிம்பத்தைக் கட்டமைக்கிறது.
கோயில் நிதிகள் என்பது மக்கள் செலுத்தும் காணிக்கை. அது மக்களின் கல்விக்கும் நல்வாழ்விற்கும் பயன்பட வேண்டுமே தவிர, ஆன்மீகக் கட்டுமானங்கள் என்ற பெயரில் சில குறிப்பிட்ட அதிகார வர்க்கத்தின் கைகளில் மட்டுமே முடங்கிவிடக் கூடாது.
தவெக அரசு மாற்று அரசியல் என்ற பெயரில் தமிழ்நாட்டை வலதுசாரிப் பாதைக்கு இழுத்துச் செல்வதை முற்போக்குச் சக்திகள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது!
- @Vagabond_786
🚨🚨 அறிவிப்பு 🚨🚨
இந்த ID இனி பொதுவுடைமையாக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இனி இந்த ID-யில் பதிவாகும் கருத்துகள், "ஆவி" என்ற தனிநபரின் கருத்துகளாக அல்ல; ஒரு குழுவின் கூட்டுக் கருத்துகளாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
நன்றி.🙏🏾
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் அராஜக தாக்குதல் - கைது நடவடிக்கை!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!!
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென வலியுறுத்தல்!!!
போராட்டத்தைத் தடுப்பதற்கு ஆட்சியாளர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது!
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி #SFI சார்பில் சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரைக் காவல்துறையினர் தாக்குதல் நடத்தி, கைது செய்தது வன்மையான கண்டனத்திற்குரியது.
🚨did I miss anything!!🚨
தூங்கி எந்திரிச்சு பார்த்தா இந்த "வாஷிங் பவுடர் நிர்மா" என்ற பாடல் பத்தி எல்லோரு பேசிகிடே இருக்காங்க...
எனி ரீசன், நான் எதாவது மிஸ் பண்ணிட்டேனா 🤔🤔🤔... கைஸ் மைண்ட் எக்ஸ்பிளைனிங் 🫰🏾
@kuthoosi1988@LeagueRed58401@raamkumaar@Kokki_Boys@cringe_mama
என்ன யா TVK தலைமை, தொண்டர்கள், அப்புறம் அவங்களோட சப்போர்ட்டர்ஸ் எல்லாம் TVK கட்சியை என்ன ' WASHING POWDER NIRMA 'னு நினைச்சுட்டாங்களா??
ADMK-ல இருந்தும் மத்த கட்சிகள்ல இருந்தும் வர்ற முன்னாள் அமைச்சர்களையும், MLA-க்களையும் bucket ல முக்கி எடுத்தா... அவங்க அப்படியே 'தீய சக்தில' இருந்து 'தூய சக்தியா' மாறிடுவாங்களா?
கட்சியை பலப்படுத்துறோம்ங்கிற பேர்ல நடந்துட்டு இருக்கு.
ஆனா ஆரம்பத்துல என்ன சொன்னாங்க? 'நாங்க சிஸ்டத்தை மாத்தப்போறோம், புது மாற்றத்தைக் கொண்டு வரப்போறோம்'னு சவால் விட்டாங்க.. ஆனா, இப்படியே பழைய சிஸ்டத்துல இருந்த தலைவர்களையே உள்ள இழுத்துட்டு இருந்தா, அப்புறம் எப்படி தங்களை ஒரு 'மாற்றம்'னு சொல்லிக்க முடியும்? அவங்க வச்சிருக்க அந்த 'தூய சக்தி' tag அப்படியே மங்கிப் போயிடாதா?
கூடவே இதனால ஆரம்பத்துல இருந்தே VMI-ல (விஜய் மக்கள் இயக்கம்) உழைச்சுட்டு வர்ற உண்மையான TVK தொண்டர்களோட எதிர்காலம் தான் பாதிக்கப்படும். ஏன்னா, ADMK-ல இருந்து வர்ற இந்த முன்னாள் அமைச்சர்களும், MLA-க்களும் அதே பதவிகளுக்காகத்தான் இங்கேயும் போட்டி போடுவாங்க. அப்போ காலம் காலமா கட்சிக்காக உழைச்சவங்களுக்கு எப்படி நல்ல பொறுப்புகள் கிடைக்கும்??
https://t.co/8upo2Zl2qH
@Kokki_Boys களுடன் எந்த உறவும் இல்லை என TVK boys முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வந்து இருக்கிறது.
அரசியலில் விமர்சனமே ஆயுதம். பாட்டாளி வர்க்கத்தின் போர்க்களத்தில் ஆயுதமே விமர்சனம்..
இப்போது வரைக்கும் விமர்சனமே ஆயுதமாக பயன்படுத்தப் படுகிறது. ஆனால் அந்த விமர்சனம் விஜயை defame செய்வதாக இருக்கிறது என்று tvk பாய்ஸ் வருத்தப்படுகிறார்கள்.
இருக்கலாம், விஜய் ஒரு பிம்பம். அவர் தன்னை அவ்வாறு தான் தேர்தல் களத்தில் அறிமுகம் செய்து கொண்டார். ஏழை மக்களின் உருவமாக அவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்..
ஆனால் இப்போது, தலைமை செயலகத்தில் பூட்டிய அறையில் உக்காந்து கொண்டு மக்களை சந்திக்க பயந்து, பிரச்னைகளை எதிர் கொள்ள பயந்து ஆட்சி செய்கிறார்..
எனவே அவர் பிம்பத்தை உடைத்தாக வேண்டும்.
ஆமா, விஜய் ஒரு பொம்மை முதலமைச்சர் தான்.. அவரை பின்னால் இருந்து இயக்கும் நபர்கள் மிக மோசமான மாஃபியா கும்பல் ஆகும். தமிழ் நாடு அந்த மாஃபியா கும்பலிடம் மாட்டி கொண்டு இருக்கிறது.
கொக்கிகள் பேசும் போது கண்டும் காணாமல் இருந்தால் யாருக்கும் எந்த லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை.
கடலூர் மாவட்டம் அன்றாடம் மாணவர்களுக்கா, கல்விக்காக போராடிவரும் இந்திய மாணவர் சங்கத்தின் உறுப்பினர் பதிவு நடைபெறும்போது SFI மாவட்ட இணை செயலாளரை தாக்கிய
பண்ருட்டி காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்!
அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
ரீல்ஸ் வழியா தப்பு தப்பா பேசுனாலும், அவங்க பேசுறது கியூட் ஆஹ் இருக்கு என்பதால் மக்கள் விரும்பி இவங்களை பேமஸ் பண்ணி விட்டுட்டாங்க.
எனக்கென்னனா ஒரு மாசமா பிரபலமான இவர்களே... மீடியாவை சந்தித்து பேட்டி குடுத்துட்டாங்க.
பி. கு: இது ஒரு அரசியல் பதிவு அல்ல
தவெக : திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, ஆளும் திமுக அரசு சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை.
#SFI மாணவர்களின் போராட்டத்தில், பெண் மாணவியர்களை ஆண் போலீஸாரை வைத்து டீல் பண்ணுவது தான்...
தவெக அரசின் பெண் பாதுகாப்பு நடவடிக்கையா ?
சிங்க பெண் படை எங்கே ?
#அரசியல்_கேள்வி
📚 *"அரசியல் எனக்கு பிடிக்கும்" – புத்தக கலந்துரையாடல்*
தோழர்களுக்கு வணக்கம்!
"அரசியல் எனக்கு பிடிக்கும்" புத்தகத்தைப் பெற்ற அனைத்து தோழர்களையும் புத்தக கலந்துரையாடலில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
🗓️ தேதி: 21 ஜூன் (ஞாயிற்றுக்கிழமை)
🕖 நேரம்: மாலை 3.00 PM மணி
💻 இடம்: Google Meet
இந்த சந்திப்பில் புத்தகத்தின் முக்கிய கருத்துகள், உங்கள் வாசிப்பு அனுபவங்கள் மற்றும் கேள்விகள் குறித்து கலந்துரையாடப்படும்.
அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.
* கொக்கிகள்
====================
📚 *"அரசியல் எனக்கு பிடிக்கும்" – Book Discussion*
Dear Comrades,
You are invited to join the discussion meeting for *"அரசியல் எனக்கு பிடிக்கும்"*
📅 Sunday, 21 June
🕖 3:00 PM
💻 Google Meet
All participants who received the book are requested to join and share their thoughts.
*– Kokkigal*
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்தும், இத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் (SFI) நடத்திய ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில், மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டது காவல்துறை.
இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்.
https://t.co/3b0jseRt6A
தமிழ் நாட்டில் தவெக ஆட்சியின் எழுச்சி: ஜனநாயகத்திற்கான புதிய சவாலா?
தமிழக அரசியலில் கடந்த மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள தவெக (TVK) கட்சியின் அதிவேக வளர்ச்சி பல்வேறு அரசியல் மற்றும் சமூக விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக, வெறும் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கப்பட்ட ஒரு கட்சி இவ்வளவு விரைவாக ஆட்சியைப் பிடித்திருப்பது இயல்பான அரசியல் வளர்ச்சியா அல்லது திட்டமிட்ட அரசியல் பொறியியலின் விளைவா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.
இந்த விவாதங்களில் முக்கியமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னவெனில், சமூக ஊடகங்களை (Social Media) மிகத் தீவிரமான அரசியல் பிரச்சாரக் கருவியாக பயன்படுத்தி மக்களின் அரசியல் சிந்தனையை பாதிக்கும் வகையில் கருத்து உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதாகும். இந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், அது 2014 ஆம் ஆண்டு இந்திய அளவில் பாஜக மேற்கொண்ட டிஜிட்டல் பிரச்சார முறையின் ஒரு தமிழ் நாட்டுக்கேற்ற வடிவமாகக் கருதப்படலாம்.
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் தகவல் பரிமாற்றத்திற்கான சக்திவாய்ந்த கருவிகளாக மட்டுமல்லாமல், கருத்து உருவாக்கும் மற்றும் பொதுமக்களின் மனநிலையை வடிவமைக்கும் ஆயுதங்களாகவும் மாறியுள்ளன. இந்தச் சூழலில், அரசியல் விழிப்புணர்வு மற்றும் விமர்சனப் பார்வையை வளர்ப்பதற்குப் பதிலாக, உணர்ச்சிவசப்பட்ட தகவல் நுகர்வை ஊக்குவிக்கும் அரசியல் போக்குகள் உருவாகும் அபாயம் உள்ளது.
குறிப்பாக இளைஞர்கள் சமூக ஊடகங்களை முதன்மை தகவல் ஆதாரமாகப் பயன்படுத்தும் காலத்தில், தகவல்களை பகுத்தறிந்து மதிப்பிடும் திறனைக் குறைத்து, தயாரிக்கப்பட்ட அரசியல் கதையாடல்களை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகலாம். இது ஜனநாயகத்தின் அடிப்படையான அறிவார்ந்த குடிமக்கள் உருவாக்கத்திற்கே சவாலாக அமையக்கூடும்.
மேலும், உலகளவில் நவீன தாராளமய பொருளாதார அமைப்பு உருவாக்கியுள்ள சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கும் பெயரில் பல நாடுகளில் வலதுசாரி தேசியவாத மற்றும் பாசிசப் போக்குடைய அரசியல் சக்திகள் எழுச்சி பெற்று வருகின்றன. இதுகுறித்து பல அரசியல் அறிஞர்கள் மற்றும் சமூக ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்திய அளவில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். முன்னெடுத்து வரும் அரசியல் திட்டங்கள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், தமிழகத்தில் திடீரென மிகப் பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தவெக குறித்தும் இதே போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தமிழ் சமூகத்தின் பண்பாட்டு அடையாளங்களையும் உணர்வுகளையும் தன்னுள் இணைத்துக் கொண்டு, நவீன டிஜிட்டல் அரசியல் உத்திகளின் மூலம் வளர்ந்து வரும் இந்தக் கட்சி, எதிர்காலத்தில் தமிழக அரசியலை எந்தத் திசையில் கொண்டு செல்லும் என்பது தீவிரமாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஒரு ஜனநாயக சமூகத்தில் எந்த அரசியல் இயக்கத்தையும் விமர்சன ரீதியாக ஆய்வு செய்வது அவசியம். அதேபோல், தவெகவின் வளர்ச்சியையும் அதன் அரசியல் நோக்கங்களையும், சமூக ஊடகப் பயன்பாட்டையும், அதன் நீண்டகால விளைவுகளையும் மக்கள் பகுத்தறிவோடு மதிப்பீடு செய்ய வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. ஏனெனில், ஜனநாயகத்தின் வலிமை என்பது வெறும் தேர்தல் வெற்றிகளில் அல்ல; மக்களின் அரசியல் விழிப்புணர்விலும் விமர்சனச் சிந்தனையிலும் தான் இருக்கிறது.