From whistles in packed theatres to tears in our eyes today...😭💔
We grew up watching you, cheering for you, and believing in your journey na..🥹
#Jananayagan may be your last film,
but you'll always be our Thalapathy. ❤️
Thank you for everything @actorvijay na 😭🫂
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயக��்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற ���ிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுற���ச் சிக்க��்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
‘செயலே சொல்’ என்று அடரமைதியுடன் செயல்படுபவர், மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். ஆனால், ஆளுநர் உரை நிகழ்த்தும் நாளன்றுகூட முதல்வர் பேச வேண்டுமென அதி உயர் அறிவுடன் பேட்ஜ் அணிந்து வந்தனர், அவதூறு க��க எம்.எல்.ஏ.க்கள். அதுவும் யார் தலைமையில்?
நக்கல் நையாண்டியும் குள்ளநரி பேரமும்தான் அரசியல் என்று நம்பும் ஒட்டகபேர உதயநிதி தலைமையில்.
நடக்காத ஒன்றினை நடந்ததாக வதந்தி வாந்தி எடுக்கும் தி.மு.க., இப்போது ஒட்டக பேரம் நடத்தி, நம் வெற்றித் தலைவரின் மனசாட்சி உள்ள மக்களாட்சியைக் கவிழ்க்க முயன்றது, முச்சந்திக்கு வந்துவிட்டது.
நம் வெற்றித் தலைவரின் மக்களரசுக்கு நாள் குறித்த நரித் தந��திரக்காரர்கள் இப்போது எங்கே ஒளிந்துகொண்டுள்ளனர்? நானே முதல்வர் என்று நாகூசாமல் பேசிய நயவஞ்சகக்காரர்கள் எங்கே ஒளிந்துகொண்டுள்ளனர்?
வாயத் திறங்க என்று சொல்லி வன்மம் பொழிந்த உதயநிதி, ஊரு விட்டு ஊர் இல்லை நாடு விட்டு நாடா? எங்கே போய் உறங்கிக் கொண்டிருக்கிறார்? வதந்தியை வாந்தியாக எடுத்தவர், இப்போது வாயைத் திறந்து ஒட்டகபேர உண்மையை உரக்கப் பேசுவாரா?
தீயசக்தி தி.மு.க.வின் ஊழல் வண்டியின் சாரதிகளும், திகார் கூஜாக்களும் தங்கள் நாராச வாயைத் திறந்து பேசுவார்களா? அதற்குத் தகுதிதான் உண்டா?
இந்த ஒட்டகபேரக் கூட்டத்தைத் தமிழக ம���்கள் ஓட ஓட விரட்டப் போவது உறுதி.
#உதய்பேரம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (25.6.2026) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்பில் 127 கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்துத் தொடங்கி வைத்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 29A வழித்தட புதிய பேருந்தில் பயணம் செய்தார்.
#CMJosephVijay
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியதுமே உதறல்நிதிக்கு பாய்ண்ட் கிடைக்காமல் பதறத் தொடங்கிவிட்டார். பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியுடன் ஆளுநர் உரை தொடங்கியதில் சட்டமன்ற நிகழ்வை டிவியில் பார்த்தபோதே கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வேர்க்கத் தொடங்கி இருக்கும்.
தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றதைக் கண்டு, ஃப்ராடு கட்சி திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டது.
ஒவ்வொரு திட்டமாக அறிவிக்கப்பட்டது தொடங்கி, உச்சமாக, சமூக நீதிக் கணக்கீட்டு ஆய்வாகச் சாதிவாரிக் கணக்கீட்டு ஆய்வு, Caste சர்வே நடத்தப்படும் என்ற அறிவிப்பில், ஒட்டுமொத்தத் திமுகவிற்கும் உள்நாக்கு வரை உலர்ந்துபோய் விட்டது.
ஊழலில் ம��ழ்கித் திளைத்த திமுகவுக்கு உதறலே எடுத்துவிட்டது. Sick ஆன ஆட்சி நடத்தியவர்கள், ஸ்டிக்கர் ஆட்சி என்பதுதான் சிரிப்பிலும் சிரிப்பு. நீதிக்கட்சி தொடங்கி, காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோரால் மேம்பட்ட
மதிய உணவுத்திட்டத்தை ஒட்டியே காலை உணவுத் திட்டம் என்ற பெயரின் ஸ்டிக்கரை ஏனோ
மறந்துவிட்டனர், உளறல்நிதி அண்ட் கோவினர். Party Fund என்ற பெயரில் family fund சேர்த்த பதறல்நிதி, இனி அது கிடைக்காது என்பதால் பித��்றத் தொடங்கிவிட்டார்.
பா.ஜ.க.விடம் பயந்து நடுங்கி அட��பணிந்து கிடக்கும் அமுக்கமான திமுக, நம்மைப் பார்த்து அவதூறாகப் பேசுவதும் புதிதன்று.
சட்டம் ஒழுங்கு டிஜிபிகூடப் போட வக்கற்று இருந்த திமுக அரசால் எடுக்க முடியாத கடும் நடவடிக்கைகளை எடுத்துவரும் மக்கள் விரும்பும் முதல்வர், தமிழ்நாடு முதலமைச்சர், நம் வெற்றித் தலைவர் ஆட்சி மீது அவதூறுகளை அள்ளி வீசினால், மக்கள் மன்றத்தில் திமுக முற்றாக மறக்கப்படப் போவது உறுதி.
மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. நெ.மரிய வில்சன் அவர்கள், தலைம���ச் செயலகத்தில், தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையினை வெளியிட்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @MarieWilson_TVK |
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று விரிவாக்கம் செய்யப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்
இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினருடன��� கலந்துரையாடினார்
#CMJosephVijay
ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்து, சிறையிலடைத்து, விரைந்து நடவடிக்கை எடுத்ததை நாடே அறியும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கவே இயலாது. காரணம், இது மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவரின் அரசு. இன்னும் சொல்லப் போனால் இது மாடர்ன் மனுநீதிச் சோழன் அரசு. தப்பு செய்தவர் யாராக இருந்தாலும், எத்தகைய நிலையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவது உறுதி. அதே சமயத்தில் குற்றத்தில் சம்பந்தப்படாதவர்கள் பாதிக்கப்படாத வகையில் நியாயமான நடவடிக��கை எடுக்கப்படும் என்பதும் உறுதி.
நியாயமான நீதியை வழங்காமல் மனசாட்சியைக் குப்பையில் வீசிவிட்டு, குப்புறப் படுத்துக் கிடந்த பவளவிழா பாப்பா அரசன்று இந்த அரசு. உண்மை என்பது உப்புக்குக்கூட இந்த உதறல்நிதியிடம் இருக்காது என்பது உயர்தனி உண்மை. இருந்தாலும் அண்ணா பல்கலைக்கழகக் கொடூரச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சதிகாரர் ‘யாரந்த சார்?’ என்று இப்போதாவது அல்லது எப்போதாவது உளறல்நிதி, உண்மைநிதியாகப் பேசத் தயாரா?
பொள்ளாச்சி படுபயங்கரச் சம்பவத்தில் பச்சோந்தி போல நிறம் மாறி, நீதியைக் குழிதோண்டிப் புத��த்த தீர்ந்துபோன சக்தி போலவா நமது அரசு இருக்கிறது? இல்லவே இல்லை.
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நமது அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்பது மக்களுக்கும் நன்றாகவே தெரியும். மக்களுக்கு நமது அரசின் மீது இருக்கும் இந்த நல்ல புரிதலைப் பார்த்து, தாங்க முடியாத பொறாமையில்தான் தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் புகைச்சல் விட ஆரம்பித்துள்ளன.
அறிவாலயத்தில் எழுதப்படும் அறிக்கைக்க���க் கண்ணை மூடிக்கொண்டு, தவளை போலத் தாவித் தாவித் தவழ்ந்துபோய் தத்தோம் ததிங்கினத்தோம் இசைக்கிறது தீர்ந்துபோன சக்தி.
அறிவாலய மியூசிக்கிற்கு அடிமையாகி, உடான்ஸ் டான்ஸ் ஆடும் ஆளாக மாறி, மக்கிப்போன தீர்ந்துபோன சக்தியும், தீர்ந்துபோன சக்தியின் தீம் மியூசிக்கிற்குக் கீபோர்ட் வாசிக்கும் கிறுக்குநிதியும் பொறாமையில் புகை விட்டுப் பொய்ப்புலம்பல் புகார் வாசிப்பது ஏனென்று மக்களுக்���ே தெரியும்.
ஆட்சி அதிகாரம் பறிபோன ஆத்திரத்தில் இருக்கும் சித்தரஞ்சன் சாலையின் சிநேகத்தால் சிலுவம்பாளையத்திலும் கபீம் குபீம் காமெடி அரசியல் மற்றும் காண்டு அரசியலின் கத���ல் சத்தம் கேட்பது வாடிக்கையாகி விட்டது. மே 4ஆம் தேதியில் இருந்து இவர்களின் இயல்பும் இரவுபகலும் தலைகீழாக மாறிவிட்டதால் தடுமாற்றத்தில் தவறான தகவல்களையே தந்துகொண்டுள்ளனர். இப்படியே செய்துகொண்டிருந்தால், இவர்கள் இருவரின் கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும் என்பதில் சந்தேகமே இல்லை.
போக்குவரத்துத்துறை தொடர்பான கோரிக்கைகள், புகார்கள் மற்றும் சேவைகளுக்கான அமைச்சரின் அலுவலகத் தொடர்பு எண்
90926 80999
நேரம் : காலை 10 முதல் மாலை 5 மணி வரை
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
சொன்னதைச் செய்தார்!
மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் சொன்னதைச் செய்துகாட்டுபவர்!
ஒரே கட்சி ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் வசம் வைத்திருக்கும் நிலையை மாற்றி, மக்களுக்கான ஜனநாயக ஆட்சியில் அனைத்துத் தரப்பின��ின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்று அதைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளார்.
தேர்தலுக்கு முன்பாகவே, தங்களை நாடி வரும் மற்றும் தங்களுடன் கை கைகோர்க்க நினைக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு தகுந்த மரியாதையையும், அதிகாரத்தில் சம பங்கையும் உறுதி அளித்துள்ளார். அதிகாரம் ஒரு இடத்தில் குவியாமல், தரைமட்ட தொண்டன் வரை, கூட்டணிக் கட்சிகள் வரை பரவலாக்கப்பட வேண்டும்.
சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது தான் தலைவரின் பாணி என்பதற்கு இதுவே ஆகச்சிறந்த உதாரணம். மாநாட்டு மேடையில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் கொடுத்த வாக்குறுதியை, தனது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் அவர் பிரதிபலித்து வருகிறார்.
"ஆட்சியில் பங்கு" என்பது வெறும் வார்த்தை ஜாலம் என்று நினைத்தவர்களுக்கு மத்தியில், "சொன்னதைச் செய்வார், செய்வதையே சொல்வார்" என்பதற்கு இணங்க, தலைவர் வி���ய் அவர்கள் விக்கிரவாண்டியில் விதைத்த கொள்கை விதையை இப்போது செயலாக மாற்றி வருகிறார். இது தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் பாதையை மாற்றியமைக்கும் ஒரு புரட்சிகரமான நகர்வாகும்.
*சேலம் மத்திய மாவட்ட கழக முக்கிய அறிவிப்பு*
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.C. ஜோசப் விஜய் அவர்களால் வாய்ப்பளிக்கப்பட்டு ,மக்களால் கிடைக்கப்பெற்ற இந்த சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட என்னை, பலர் மர���யாதை நிமிர்ந்தமாக சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
அவ்வாறு எடுக்கப்படும் புகைப்படங்களை சிலர் சமூக வலைதள செய்தி பக்கங்களிலும், தங்களது முகநூல் பக்கங்களிலும் *“தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து கொண்டனர்”* என்ற வகையில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இதுபோன்ற செய்திகள் அதிகாரப்பூர்வமானவை அல்ல என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.
உண்மையாக ��ழகத்தில் இணையும் நபர்கள் குறித்த தகவல்கள், கழகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்கள் அல்லது செய்தித்தாள்கள் வாயிலாக முறையாக அறிவிக்கப்படும். அதுவே உண்மையான மற்றும் அதிகாரப்பூர்வ தகவலாக கருதப்பட வேண்டும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,.
*விஜய் தமிழன் ஆ. பார்த்திபன் MLA.,*
_சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி_
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் ��வர்களின் 181-வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (20.05.2026) காலை சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஒட்டுநர்களுக்கு வழங்கினார்கள்.
#CMJosephVijay