மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நம் திராவிட மாடல் அரசு, மாவட்டந்தோறும் புத்தகக் காட்சி, பிரமாண்ட நூலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய நூலகக் கட்டடங்கள், இலக்கிய திருவிழாக்கள், எழுத்தாளர்களுக்கு விருதுகள், கனவு இல்லம், முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்பு திட்டம்… என எண்ணற்றத் திட்டங்களின் மூலம், அறியாமை இருளை அகற்றும் அறிவுப்பணியைச் செய்துவருகின்றது.
தொடர்ந்து வாசிப்பை ஊக்குவிப்போம்! அறிவுச்சமூகம் படைப்போம்!
நம்முடைய #ChepaukTriplicane தொகுதி, திருவல்லிக்கேணி பகுதி, 116 - ஆவது வட்டக்கழகத்துக்கு உட்பட்ட, canal தெரு பகுதியைச் சேர்ந்த 665 பேருக்கு பரிசுப் பொருட்களை வழங்கினோம். கழகமும் - கழக அரசும் என்றும் அவர்களுக்கு துணை நிற்குமென வாழ்த்தி மகிழ்ந்தோம்!
@Dayanidhi_Maran@nchitrarasu@madhanmohandmk@iamchsekar #Sasikumar
மாமல்லன் நீர்த்தேக்கம்: வளரும் சென்னையின் தேவை தீர்க்க ஒரு வரலாற்று முயற்சி!
கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் 342.60 கோடி ரூபாய் செலவில், 5,161 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள #மாமல்லன்_நீர்த்தேக்கம் எனும் மாபெரும் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.
நீர்ப் பாதுகாப்புக்காகப் பாடுபடும் 15 NGO-களின் அக்கறையை அங்கீகரித்து சிறப்பு விருதுகளையும் இவ்விழாவில் வழங்கிப் பாராட்டினேன்.
வான் பெய்து, நிலம் நனைத்து, கடல் சேரும் நீரைக் கரை கட்டி, நெடுவயல் நிறையவும் - மக்களின் தாகம் தணியவும் செயலாற்றுவோம்!
#MamallanReservoir
1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2011-ம் ஆண்டு வரை 43 அணைகள் கட்டப்பட்டிருக்கிறது. நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் நீர்நிலைகளை காப்பதற்கு தேவையான அனைத்தையும் செய்திருக்கிறார்.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#KalaignarForever #DMK4TN
“மனித இனம் தன்னுடைய சிந்தனைகளையும், தான் சேர்த்த அறிவு செல்வத்தை பிறருக்கும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்க்கக்கூடிய கருவி தான் புத்தகம்...
#MKstalin#bookfair#Nakkheeran
https://t.co/p0AQ48oTjA
தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய அளவிலான விருதுகள்!
இலக்கியங்களுக்கு எல்லை இல்லை; அவை நம்மை இணைக்கும் பாலங்கள் என எடுத்துக்காட்டும் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டேன்.
ஒன்றிய அரசின் அரசியல் குறுக்கீடுகளால், குறுகிய நோக்கத்தால் இந்த ஆண்டுக்கான #SahityaAkademi விருது அறிவிக்கப்படாமல் உள்ளது. இதற்குத் தக்க எதிர்வினையாக, இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, இனித் தமிழ்நாடு அரசே ஆண்டுதோறும் 'செம்மொழி இலக்கிய விருது' வழங்கும்!
திராவிடத்துக்கே உரிய முற்போக்கு விமர்சனப் பார்வையை முன்னிறுத்திப் பேசியதோடு, வாசிப்பினைக் கொள்கைச் செயல்பாடாக முன்னெடுக்கும் நமது #DravidianModel அரசின் முயற்சிகளையும் பாராட்டிய #InternationalBookerPrize வென்ற எழுத்தாளர் திருமிகு பானு முஷ்டாக் அவர்களுக்கு எனது நன்றிகள்!
@Anbil_Mahesh #CIBF2026
கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நம் சென்னை சங்கமத்தின் பகுதியாக, இன்று எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் Fashion Show நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தோம்.
பாரம்பரியமும் நவீனமும் ஒருசேர வடிவமைக்கப்பட்ட ஆடைகளில், நம் மண்ணின் கலைஞர்கள் புத்துணர்வும் உற்சாகமும் மேலிட பீடு நடை போட்டு வருவதைப் பார்த்ததில் மிகுந்த மகழ்ச்சி!
#ChennaiSangamam2026
“மகிழ்ச்சி… மகிழ்ச்சி” என்று அலங்காநல்லூரில் கூடியிருந்த மக்கள் ஆர்ப்பரிக்க இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு ஜல்லிக்கட்டைப் பார்வையிட்டேன்!
#வெல்வோம்_ஒன்றாக#Jallikattu#DravidaPongal
நம் தமிழைப் போல ‘பாரம்பரியமும் நவீனமும்’ ஒன்றிணையும் புள்ளியாக இருக்கும் சென்னை சங்கமம் கலைவிழாவின் பகுதியாக, கிராமியக் கலைஞர்கள் கலந்துகொள்ளும் FASHION SHOW, இன்றைய தினம் எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ளது.
இந்தத் தனித்துவமிக்க நிகழ்வை, அனைவரும் தவறாமல் காண வாருங்கள்!
#ChennaiSangamam2026
பல்லாவரம் கண்டோன்மெண்ட பூங்காவில் நேற்று நடைபெற்ற ‘சென்னை சங்கமம் - 2026’ நிகழ்வுகளைப் பார்வையிட்டேன். முதல்முறையாக பல்லாவரம் பகுதியில் நடைபெறும் சென்னை சங்கமத்திற்கு மக்கள் அளித்த ஆதரவு பெருமகிழ்ச்சியளிக்கிறது.
#ChennaiSangamam2026
நேற்றைய தினம், வள்ளுவர் கோட்டம் மற்றும் இராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற ‘சென்னை சங்கமம் - 2026’ கலைவிழாவின் நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது.
#ChennaiSangamam2026
I participated in the inaugural ceremony of the Chennai International Book Fair 2026, held today at Chennai’s Kalaivanar Arangam and organised by the School Education Department of the Government of Tamil Nadu. In its fourth year, the fair stands out as a platform to take Tamil literature to the global stage while also bringing the finest of world literature to Tamil Nadu.
The ceremony was attended by the Hon’ble Minister for School Education, Thiru. @Anbil_Mahesh; Hon’ble Minister for Primary & Secondary Education, Government of Karnataka, Thiru. @Madhu_Bangarapp; Additional Chief Secretary to the Government, Thiru. Chandra Mohan; Director of Public Libraries, Thirumigu. S. Jayandhi; Consul General of France, Thiru. Etienne Rolland-Piegue; and Vice President, Business Development, Frankfurt Book Fair, Thirumigu. Claudia Kaiser.
#CIBF2026
தமிழ் நிலத்தின் பெருமைமிகு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை ஜனவரி 17 ஆம் தேதி அலங்காநல்லூரில் திராவிட நாயகர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்பிக்க உள்ளார்!
அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த திராவிடப் பொங்கலாக அமையட்டும். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான வெற்றி பொங்கலாக நிறையட்டும்!
#திராவிடப்_பொங்கல்
#Jallikattu2026