இமை மூடாமல் பாரடி.....
உன் இருவிழிகளில் நான்
என் உயிர் வரை நீ.....
உன் கருவிழியில் என் உருவம்
பத்திரமாக உன் இமை காக்கும்
மறந்தும் இமை மூடாதே
உன்னில் நான்.......
இமை மூடிய விழியில் உன்னை பார்ப்பேன்......
காரணம் ஏதும் இன்றி காற்றாய் உன்னில் கலப்பேன்.......
காதல் கொண்டு உந்தன் கரம் கோர்ப்பேன்.......
உறவே நீதானே
எந்தன் உயிரும் நீதானே.....
முதலும் இன்றி முடிவும் இன்றி
முழுவதுமாய் உன்னில் சேர்வேனே......
மௌனத்தின் ஆழம்
உன் பார்வை உணர்த்துகிறது
பேசாத உதடுகள்
உன் பெயர் சொல்ல துடிக்கிறது.....
இடைவெளி குறைவுதான்
வார்த்தைகளை தேடி
தூரத்தில் அலைகிறேன்... ....
என் செய்வேன்.,..
என் அழகே....
கடலாய் நானிருக்க
நதியா வந்தால்....,..
கடல் இனிக்கும்
காதல் சுவைக்கும்...
நீ நானாகவும், நான் நீயாகவும்
உருவகமாய் வாழ்ந்த இறந்த காலம்......
நினைவுகளை மீட்டெடுக்க
உவமைகளை தேடும் என் நிகழ்காலம்....
இருள் படர்ந்த என் எதிர்காலம் ....
வெளிச்சம் தரும் காதல் எனும்
மின்மினிபூச்சி.
நான் காத்திருக்கிறேன்
காலத்தை இழக்க விருப்பமில்லை...
நான் விழித்திருக்கிறேன்
தூக்கத்தோடு சன்டையிட ஆசையில்லை....
நான் சுவாசிக்கிறேன்
காற்றின் சூட்டை உணரவில்லை....
நான் நடக்கிறேன்
பாதைகள் உருவாக்கும் எண்ணமில்லை.....
நான் பேசுகிறேன்
மௌனத்தின் பொருள் உணராமல் இல்லை.....!