இன்று சென்னை ரேலா மருத்துவமனையில் தழும்பில்லா ரோபோடிக் கல்லீரல் தான அறுவை சிகிச்சை மையத்தைத் துவக்கி வைத்தேன்.
மருத்துவ வளர்ச்சி அனைத்து மக்களுக்கும் சென்றடைந்து பிணிகள் போக்கப்பட வேண்டும். மருத்துவத்துறையின் கட்டமைப்பை வளப்படுத்தும் வகையில் திமுக அரசின் செயல்பாடுகள் அமையும்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 94 பேரில், 93 பேருக்கு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த ரூபாய் 1 லட்சம் மற்றும் வேறு வழக்கில் கைதாகி மரணமடைந்தவரின் தாய்க்கு ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.(1/2)