தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளி தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை கண்டித்து கடந்த 31-05-2026 ஞாயிறு அன்று சைதாப்பேட்டையில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஊடகங்களுக்கு அளித்த செய்தி.
யூடியூப் இணைப்பு:
https://t.co/gjL7L0RG3m
மே பதினேழு இயக்கம்
9884864010
தாய்த்தமிழ்தேசத்தில்
அன்னைத் தமிழுக்கே முதலிடம். அன்னிய மொழிச்சடங்குகளை அனுமதியோம்.
ஆளுநர் எனும் கங்காணியினை கண்டிக்க ஒன்றுதிரள அழைக்கிறோம்..
'வேடிக்கை பார்க்கும் தமிழினமே,
வீதிக்கு வந்து போராடு!'
எனும் முழக்கத்துடன் நண்பர்களை அழைத்துக்கொண்டு போராட்டத்தில் இணைவீர்.
இடம்: சைதை, பனகல் மாளிகை அருகில்
நேரம்: காலை 10:00 மணி
நாள் : 31-05-2026
மே பதினேழு இயக்கம்
9884864010
தமிழீழ இனப்படுகொலைக்கான 17ம் ஆண்டு நினைவேந்தல்!
இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை மெழுகுவர்த்தி ஏற்றி நினைவேந்துவோம்.
நாளை மாலை 4:30 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஒன்றுகூடுவோம்!
மே பதினேழு இயக்கம்
9884864010
இனப்படுகொலைக்கு உள்ளான தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழ் மக்களின் இன்னலுக்கு தீர்வு காணும் வகையில், தமிழ்நாட்டு அரசிற்கு பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திருமிகு ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தீர்மானம் நிறைவேற்றிட கோரிக்கை வைக்கிறது மே பதினேழு இயக்கம்!
@CMOTamilnadu@actorvijay@TVKVijayHQ@BussyAnand@AadhavArjuna
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை அரசே ஏற்று நடத்திடுக! தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவுச் சின்னம் எழுப்பிடுக! - மே பதினேழு இயக்கம்
ஈழத் தமிழர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமைக்காக போராடியதால் கடந்த 2009ம் ஆண்டு ஈழ மண்ணில் கொத்துக்கொத்தாக சிங்கள-பௌத்த பேரினவாத இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு தற்போது வரை நீதி கிடைக்கவில்லை. தமிழக வெற்றிக் கழகம் தற்போது தமிழ்நாட்டில் ஆட்சியமைத்துள்ள நிலையில், ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைத்திடும் வகையில் கடந்த 2013 ம் ஆண்டு அன்றைய அதிமுக அரசு நிறைவேற்றிய சட்டமன்றத் தீர்மானத்தை வழிமொழிந்து புதியதொரு சட்டமன்றத் தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டுமெனவும், தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்திடவும், இனப்படுகொலை நினைவாக கடற்கரையோரம் நினைவுச் சின்னம் ஒன்றை உருவாக்கிட வேண்டுமெனவும் மாண்புமிகு முதலமைச்சர் திருமிகு ஜோசப் விஜய் அவர்களிடம் மே பதினேழு இயக்கம் கோரிக்கை விடுக்கிறது.
சுதந்திர இலங்கையில் கால் நூற்றாண்டுக்கு மேலாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு மொழி, இனரீதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளான தமிழீழத் தமிழர்களின் அமைதிவழிப் போராட்டம் புறக்கணிக்கப்பட்டதால் தனித் தமிழீழமே ஒரேத் தீர்வு என்ற அடிப்படையில் போராடினர். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையில் தமிழீழப் பகுதிகளை கட்டுப்படுத்தி ஒரு நடைமுறை அரசாங்கம் (De facto State) சிறப்பாக நிர்வாகம் செய்தது. பின்னர் இந்தியா-அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவியுடன் கடந்த 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு தமிழீழத் தமிழர்களை இனப்படுகொலை செய்தது சிங்கள-பௌத்த பேரினவாத இலங்கை அரசு. இந்த இனப்படுகொலையில் 169,796 பேர் கொல்லப்பட்டனர்.
இனப்படுகொலையின் போது, இலங்கை அரசு உலகில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியும், வரையறுக்கப்பட்ட போர் விதிகளை மீறி மருத்துவமனைகளை மீது குண்டுகள் போட்டும், சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்றும் இனப்படுகொலை செய்தது. இலங்கை அரசு போர்க்குற்றம் செய்ததாக 2010ம் ஆண்டு டப்ளின் நகரில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து 2013ம் ஆண்டு பிரமேன் நகரில் நடைபெற்ற இரண்டாவது மக்கள் தீர்ப்பாயம், இலங்கை அரசு இனப்படுகொலை செய்ததை உறுதி செய்து அறிவித்தது. இந்த மக்கள் தீர்ப்பாயங்கள் ஐநா மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் உயரதிகாரிகளை நீதிபதிகளாகக் கொண்டது. மேலும், இனப்படுகொலையை விசாரிக்க ஐநா அமைத்த மூவர் குழு அறிக்கையும், ஐநா உள்ளக விசாரணையின் சார்லஸ் பெட்ரி அறிக்கையும் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையின் பேரவலத்தை எடுத்துக்காட்டியது.
மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் தொடர் போராட்டங்கள் மற்றும் 2013ம் ஆண்டு மாணவர்கள் எழுச்சியின் காரணமாக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக அரசு, 'தனித் தமிழீழமே ஒரே தீர்வு, தமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்திட வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானங்களை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றியது. தொடர்ச்சியாக ஜெர்மனியின் பிரேமன் நகரில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தில் பங்கேற்ற மே பதினேழு இயக்கம், அமெரிக்க-இங்கிலாந்து இலங்கையுடன் இணைந்து இனப்படுகொலையில் ஈடுபட்டதை உறுதி செய்ததோடு, இந்தியாவின் பங்களிப்பையும் அம்பலப்படுத்தியது.
2013 ம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான அரசு மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானங்களாக நிறைவேற்றி 13 ஆண்டுகள் ஆன நிலையில், தமிழ்நாடு அரசு அதனை மக்கள் மன்றத்தில் நினவூட்ட வேண்டிய அவசியம் உள்ளது.
ஆகவே,
• 'ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட 'இனப்படுகொலை' மீது சர்வதேச விசாரணை நடத்திட வேண்டும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை பாதுகாத்திடும் வகையில் 'ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு' நடத்திட வேண்டும், இனப்படுகொலை நிகழ்த்திய 'இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை' விதித்திட வேண்டும்' என 2013 ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தைப் போல, முழுமையான, சர்வதேச வழிமுறைகளை முன்மொழியும் வகையிலானத் தீர்மானங்களை தவெக அரசு, தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானங்களாக நிறைவேற்றிட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 தேர்தல் அறிக்கையில், தமிழ் அடையாளம் மற்றும் பெருமை எனும் பெருந்தலைப்பின் கீழ் 13வது வாக்குறுதியாக 'இலங்கைத் தமிழர்களுக்கான நீதி' என்பதில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில், மாண்புமிகு முதலமைச்சர் திருமிகு ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானமாக நிறைவேற்றிட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
இனப்படுகொலைக்கு உள்ளான தமிழீழத் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்பட்ட போதும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதை வரலாறுச் சொல்கிறது. மானுடகுலத்தின் மீதான தமிழர்களின் பற்றுறுதியை எடுத்துரைக்கும் வகையில் 'தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல்' நிகழ்வை தமிழ்நாடு அரசே நடத்திட முன்வர வேண்டும். உலகெங்கும் பலவேறு அரசுகள் இதுபோல நினைவு நிகழ்வை நடத்தி வருகின்றன. 'யூத இனப்படுகொலை', 'ஆர்மீனிய இனப்படுகொலை', 'ருவாண்டா இனப்படுகொலை', 'ஸ்ரெப்ரினிகா படுகொலை' எனும் நினைவேந்தல் பட்டியல் மானுடகுலத்தின் மீதான நம்பிக்கையை உறுதி செய்யும் நிகழ்வாக நடக்கிறது.
கனடா நாட்டில் வாழும் ஈழத்தமிழர்களின் கோரிக்கையை ஏற்று, கனடா நாட்டில் பல்வேறு மாகாணங்கள், 'தமிழர் இனப்படுகொலை'யைக் கண்டிக்கும் வகையிலும், நினைவுறுத்தும் வகையில் நிகழ்வுகளை நடத்துகிறார்கள். கனடா நாட்டில் இனப்படுகொலைக்கான நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் குடியேற்ற நாடாக இருக்கும் கனடா நாட்டில் நடைபெறும் இந்நிகழ்வுகள், தமிழர்களின் தாய்நிலமாகிய தமிழ்நாட்டில் நடக்காமல் தவிர்க்கப்படுவது தமிழ்நாட்டுத் தமிழருக்கு ஏமாற்றமளிக்கிறது.
கடந்த 16 ஆண்டுகளாக, ஆண்டுதோறும் மே மாதம் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வை மே பதினேழு இயக்கம் நடத்தி வருகிறது. இந்த தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்திட வேண்டும், இனப்படுகொலைக்கான நினைவுச் சின்னம் ஒன்றை தமிழ்நாடு அரசு எழுப்பிட வேண்டும் என்ற கோரிக்கைகளை கடந்த 2014 முதல் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறோம்.
அந்த வகையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு முதலமைச்சர் திருமிகு ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு,
• நடப்பு ஆண்டு முதல் இனப்படுகொலை நாளான மே 18-ஐ தமிழீழ இனப்படுகொலைக்கான நாளாக அறிவித்து, 'நினைவேந்தல்' நிகழ்வை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்திட முன்வர வேண்டும்
• அதனோடு, தமிழர் கடலாம் சென்னை மெரினா கடற்கரையில் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்பி பொதுமக்களுக்கு அளித்திட முன்வர வேண்டும்
ஆகிய எமது கோரிக்கைகளை பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்ள வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் திருமிகு ஜோசப் விஜய் அவர்களை மே பதினேழு இயக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!
மே பதினேழு இயக்கம்
15/05/2026
தமிழ்ச் சமூகத்திற்காக வாழ்வை அர்ப்பணித்த தோழர் நல்லகண்ணு, தோழர் சிவா திலீபன், தோழர் தேனிசை செல்லப்பா ஆகியோரின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு தாய்த்தமிழ் இயக்கம் சார்பாக இன்று (15-05-26 வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு செங்குன்றம் நேதாஜி இல்லத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார். வாய்ப்புள்ள தோழர்கள் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வென்ற போதும், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக உள்ள கேரள ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், தவெக தலைவர் திரு. விஜய் அவர்களை ஆட்சியமைக்க அழைக்காமல் தவிர்த்துள்ளார். பொறுப்பு ஆளுநரின் இந்த ஜனநாயக விரோத செயல் குறித்த மே 17 இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு 07-05-2026 வியாழக்கிழமை, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் உரையாற்றிய காணொலி.
யூடியூப் இணைப்பு:
https://t.co/vOjnKpyqOx
மே பதினேழு இயக்கம்
9884864010
மரியாதைக்குரிய மாநிலங்களவை உறுப்பினர், திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த பொறுப்பாளர், சிந்தனையாளர், திருமிகு பேராசிரியர் கான்ஸ்டன்டைன் அவர்கள், தமிழ் மொழிக்காக உயிர்க்கொடை அளித்த மொழிப்போர் ஈகியர் மறைந்த மே17 இயக்கத் தோழர் சிவா திலீபன் அவர்களின் குடும்பத்தை 05-05-2026 பிற்பகலில் நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார்.
தமிழ் மொழிக்கென 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் தேதி இன்னுயிர் ஈந்த தோழர் சிவா திலீபனின் குடும்பத்திற்காக பங்களிக்க வேண்டுமெனும் உயரிய தமிழின, தமிழ் மொழி உணர்வில், தான் மாநிலங்களவை உறுப்பினராக பெற்றுக்கொண்ட முதல்மாத வருவாயில் பெரும்பகுதியை தோழர் சிவா திலீபன் குடும்பத்தின் நலனுக்காக நன்கொடையாக சிவா திலீபனின் இணையர் தோழர் கீதா எனும் இசைமொழி அவர்களிடத்தில் கையளித்தார். உடன் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மே17இயக்கத் தோழர்கள் இருந்தனர். பேராசிரியரின் தமிழின உணர்விற்கு தலைவணங்கி, மே17 இயக்கம் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம்.
திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அனுமதிக்க வேண்டும்! மாறாக, ஆளுநர் அந்த வாய்ப்பை தடுக்கவோ தவிர்க்கவோ கூடாது!
ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் கைப்பாவையாக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கை மே 17 இயக்கம் கண்டிக்கிறது!
ஆட்சியமைக்க பெரும்பான்மையை ஆளுநரிடம் நிரூபிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாறாக சட்டமன்றத்தில் அக்கட்சி நிரூபிக்க வாய்ப்பை கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் எஸ்.ஆர். பொம்மை வழக்கில் தெரிவித்துள்ளது. ஆளுநரின் தனிப்பட்ட கணிப்பின் அடிப்படையில் ஒரு கட்சிக்கான பெரும்பான்மை குறித்து முடிவெடுக்கக்கூடாதென அந்த தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.
மேலும், 2018 கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் + ஜனதாதள (மதச்சார்பற்றது) கட்சிகளுக்கிடையே தேர்தலுக்கு பின்பான பெரும்பான்மையை கொண்ட கூட்டணி உருவாகியது. ஆனால் அக்கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்காமல், பெரும்பான்மை இல்லாமல் அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பாஜக கட்சியை ஆட்சியமைக்க அன்றைய கர்நாடக ஆளுநர் அழைத்தார். இந்த நடைமுறை பாஜகவிற்கு சாதகமாக நடத்தப்பட்டது. பாஜகவிற்கு 15 நாட்கள் பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதி கொடுத்தார் அன்றய கர்நாடக ஆளுனர். இந்த போக்கு சாத்தியமெனில், தமிழக வெற்றி கழகத்திற்கு அனுமதியளிப்பது எவ்வகையில் சாத்தியமில்லை? தமிழ்நாடு ஆளுனரின் ஆர்.எஸ்.எஸ், பாஜக சார்பு நிலையையே அவரது எதேச்சதிகார போக்கு காட்டுகிறது.
அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் ஆளுநரை
சந்தித்து ஆட்சியமைக்க கோருவது இவ்வகையில் அடிப்படை சனநாயக உரிமையாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பிருந்தும், அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்டிருக்கும் கட்சியான த.வெ.க. கட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் வாய்ப்பை ஆளுநர் உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால் இவ்வுரிமையை ஆளுனர் வேண்டுமென்றே தட்டிப்பறித்திருக்கிறார் என மே17 இயக்கம் குற்றம் சாட்டுகிறது.
1952ம் ஆண்டு அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் நடந்த தேர்தலில் தனிப்பட்ட பெரிய கட்சியாக வெற்றிபெற்ற இராஜாஜியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியமைக்கும் உரிமையை அன்றைய ஆளுநர் வழங்கினார். இது முறையற்ற வகையில் அமைந்தது. கூட்டணியாக பெரும்பான்மை பெற்றிருந்த கிசான் மஸ்தூர் பிரச்சார் சபா கட்சியின் டி.பிரகாசம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணியிடம் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை இருந்தும், தனித்த பெரிய கட்சியாக அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்டிருந்த இராஜாஜி ஆட்சியமைக்க அழைக்கப்பட்டார். தில்லி காங்கிரஸ் கட்சியின் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் விருப்பத்திற்கேற்ப கம்யூனிஸ்டுகள் ஆட்சி அமைப்பதை தடுக்கும் வகையிலான ஒரு தவறான முன்னுதாரணமாக ஆளுனரின் முடிவு அமைந்தது. ஆனால் 1971ல் அமைக்கப்பட்ட திரு ஷாய் பகவான் தலைமையிலான கவர்னர் கமிட்டி (Committee of Governors) வரையறுத்த வழிமுறைகளில், அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது எனும் வழிமுறையை சொன்னது. இந்த வழிமுறையை 1988ல் அமைக்கப்பட்ட சர்காரியா கமிசன், அதன் பின்பான எம்.எம்.பூன்ஜி கமிசன், அதன் பின்பு வந்த உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உறுதிப்படுத்தி உரிய வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளன. அவை தற்போது பின்பற்றப்படவில்லை.
மாநில உரிமைகளை நசுக்கும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக-தில்லி அரசின் முகவராக செயல்படும் ஆளுனரின் எதேச்சதிகார போக்கினை நாம் கட்சி-இயக்க எல்லை கடந்து கண்டித்தாக வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த கட்சிகளுக்கான ஆட்சியமைக்கும் வாய்ப்பை மறுப்பது சனநாயக விரோதம் மற்றும் மாநில அதிகாரங்களை ஒடுக்கும் செயலாகும். இது தவறான முன்னுதாரணமாக அமைந்து, இனிவரும் காலங்களில் அனைத்து கட்சிகளின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படலாம்.
அறிஞர் அண்ணா சொன்னதை போல ஆளுநர் என்பவர் மாநில அதிகாரத்தை கட்டுப்படுத்தும் பண்ணையாராக செயல்படுகிறார். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுனரும் எதற்கு எனும் கேள்வியின் நியாயம் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, மாநில உரிமைகளை நசுக்கும் ஆளுநரின் போக்கினை அனைவரும் கண்டிக்க முன்வர வேண்டுமென மே பதினேழு இயக்கம் கோரிக்கை முன்வைக்கிறது. இந்த எதேச்சதிகார போக்கை நாம் இன்று அனுமதித்தால் நாளை, எஞ்சியிருக்கும் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்படும். ஆளுநர் வாயிலாக ஒன்றிய பாஜக அரசு தனது அதிகாரத் திணிப்பை செய்வதும், மாநில உரிமை மீது தாக்குதல் தொடுப்பதையும் மே பதினேழு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்
06-05-2026
17 ஆண்டுகள் கடந்தும் போராடிக் கொண்டிருக்கிறது தமிழினம். முள்ளிவாய்க்காலில் தொடங்கிய மானுடகுல அழிவு பாலஸ்*தீன காஸா வரை நீண்டுகொண்டே செல்கிறது. நம் இனத்திற்கான விடியலாய், சுதந்திர தேசமாய் மலர்ந்து கொண்டிருந்த நாடு அழிக்கப்பட்ட போது, துணிந்து மறித்தவர்கள் விதையாகிப் போனார்கள். மரித்தவர்களின் இறுதி மூச்சுக்காற்று ஈ*ழத்திலிருந்து பெருங்கடல் வழியே நம்மை ஆரத்தழுவியது. 'வேண்டும் விடுதலை' எனும் முழக்கத்தை முள்ளிவாய்க்காலில் இருந்து ஏந்தி வந்தது அந்த சுவாசக்காற்று. உயிர்கொடையாளிகள் நமக்குக் கையளித்த விடுதலை நெருப்பை பேணிப்பாதுகாத்து முன்னகர்த்தும் கடமையை நினைவு கூர்வோம்.
கடந்த 16 ஆண்டுகளாய் கடற்கரையில், தமிழர் குருதி கலந்து வீசியடிக்கும் பேரலைகளின் முற்றத்தில் நினைவேந்துகிறோம். இவ்வாண்டும் மே மாதம் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை, மெழுகுவர்த்தி ஏற்றி நினைவேந்தல் செய்கிறோம். தமிழினத்தின் அயராத போர்க்குணத்தை உயர்த்திப் பிடிப்போம்.
குடும்பத்தோடும், நணர்களோடும் நினைவேந்த அவசியம் வாருங்கள். தமிழ்நாட்டின் உணர்வுப்பூர்வமான மாபெரும் நினைவேந்தல் நிகழ்வில் சாதி-மதம் கடந்து ஒன்றுகூடுவோம்.
மே பதினேழு இயக்கம்
திராவிடம்-தமிழ்த்தேசியம் இரண்டும் இரு கண்கள் என்ற கொள்கையை கொண்ட தவெகவை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். திராவிடம்-தமிழ்த்தேசியம் இரண்டையும் மறுக்கும் பாஜகவையும், திராவிடத்தை எதிர்த்து தமிழ்த்தேசியம் என்ற பெயரில் பார்ப்பன கடப்பாரையை எடுத்த நாதகவையும் தமிழர்கள் நிராகரித்திருக்கிறார்கள். திராவிடம்-தமிழ்த்தேசியம் நிராகரித்த அரசியல் தமிழ்நாட்டில் கிடையாது.
சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி, திமுக-அதிமுக தோல்வி, பாஜக-நாதகவை மக்கள் புறக்கணித்தது உள்ளிட்டவை குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சர்மிளா டாக்கீஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணல்.
நேர்காணல் இணைப்பு:
https://t.co/ILkzYBCAb9
மே பதினேழு இயக்கம்
9884864010
ஐயா 'தேனிசை' செல்லப்பா இயற்கையானாரே!
மறக்க இயலுமா அந்த மந்திர குரலை.
இளம்வயதில் தேனிசைச் செல்லபப எனும் பெயர் அறிமுகமாகும் முன்னர், அவரது குரல் தமிழீ.ழ*த்தை எமக்கு காட்டியது.
'..தமிழீழத்தின அழகு..',
'பச்சை வயலே... பனக்கடல் வெளியே...'
எனும் அவரது பாடல் எவரால் மறக்க இயலும்..
'நெருப்போடு என்னடா விளையாட்டு..'
'நஞ்சை மாலை கழுத்துகளே..'
என எம் நெஞ்சில் வீரமூட்டிய பாடல்,
'மாங்கிளியும் மரங்கொத்தியும்...' எனும் தாய்மண்ணிற்காய் ஏக்கம் நிறைந்த பாடல் குரலும்,
'.. நம்புங்கள் தமி*ழீ.ழம் நாளை பிறக்கும்..' என நம்பிக்கையூட்டிய பாடல் என அவரது கம்பீரக்குரல் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் ஒலிக்கும்போதெல்லாம் அங்கே தமிழ்த்தேசிய அரசியல் முழக்கம் எழுகிறதென அடையாளம் கண்டு கல்லூரி காலங்களில் தேடித்தேடி சென்று கவனித்த பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் நினைவுக்கு வருகின்றன.
அவரது குரலில் கரும்புலிகள் உயிர்ப்பெற்று தாய்நிலத்தில் உலா வருவதாய் தோன்றும். தமிழீழ அரசியல் தமிழினத்தின் உயிரோடு கலந்ததெனில், தேனிசை செல்லப்பாவின் குரல் அந்த அரசியலுக்கு உணர்வெழுச்சியை சேர்த்தது. மேதகுவின் புகழ்பாடி அவர் இசைத்த 'ராஜகோபுரம் எங்கள் தலைவன்...' பாடல்கள் உள்ளிட்டவை என்றென்றும் எம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும். மேதகுவால் வாஞ்சையோடு அரவணைக்கப்பட்ட கலைஞர். புலிப்பாடகர் என்றே அறியப்பட்ட தேனிசைச் செல்லப்பா அவர்களின் குரல் ஒலிக்காத தமிழ் நிலமில்லை எனலாம்.
'...சீருடை அணியாத போராளியாக களத்தில் நிற்பவர்..' என மேதகுவால் பாராட்டு பெற்றவர். ஐயா தேனிசை செல்லப்பா அவர்களின் இல்லத்திருமண விழாவிற்கு மேதகு நேரடியாக வாழ்த்துச் செய்தியை கொடுத்தனுப்பி இருந்தார். அத்தகைய நெருக்கத்தோடு புலிகள் சீறுடை அணியாத போராளி என பாராட்டு பெற்ற கலைஞன். தமிழ்நாட்டில் திராவிடர் இயக்க மேடைகளில் அவரது பாடல்களை கேட்டிருக்கிறேன். பாவேந்தர் பாடல்களை அவரது குரலில் கேட்பது தனி அனுபவம்.. 'கொ*லை வாளினை எடடா .. மிகக்கொடியோர் செயல் அறவே..' எனும் வரிகளை அவர் பாடுவதை நேரில் கேட்கும் சமயத்தில் பாவேந்தரையே நேரில் கண்டதாய் உணர்வோம்.
கடந்த 50 ஆண்டுகால தமிழர் அரசியலில் இரண்டர கலந்த பாசறைப் பாணர் ஐயா தேனிசை செல்லப்பாவின் குரல் என்றென்றும் தமிழர் வாழ்வில் ஒலித்துக்கொண்டிருக்கும். அவரது அரசியல் பணி, அயராத உழைப்பு, எழுச்சியான குரல், தமிழினப்பற்று காலத்தின் புத்தகங்களில் செதுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவரது குரலுக்கு மரணமேது. அவர் நம்முடன் வாழ்கிறார்.
சுதந்திரத் தமி*ழீழம் பிறக்கும் பொழுது அந்தக் குரல் நம்மை அங்கே வரவேற்கும்.
பாசறைப்பாணர் ஐயா தேனிசை செல்லப்பாவிற்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்.
திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்
தமிழ்நாட்டில் பாஜக நுழைந்தால் என்னாகும்?
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம்.
இந்த படத்தில் வரும் காட்சிகள் யாவும் உண்மையே. இதில் காட்டப்படும் காட்சிகள் இந்தியாவில் நடந்த நிஜ சம்பவங்களே. இது நம்மைப் பற்றிய படம். உங்கள் நண்பர்கள், உறவினர்கள் பார்க்க வேண்டிய படம். அவர்களுக்கு அனுப்பி வையுங்கள்.
இரங்கற் செய்தி
ஆற்றல்மிகு தோழர் ஆனந்த் (வயது 41) அவர்கள் நேற்று (19-04-2026 ஞாயிறு) நண்பகலில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். தோழர் ஆனந்த் சீரிய தமிழ்த்தேசிய சிந்தனை கொண்டவர். மே 17 இயக்கத்தில் தொடர்ச்சியாக வீரியத்துடன் செயலாற்றி வந்தவர். மதவெறி கும்பலை தமிழ்நாட்டிலிருந்து விரட்டிட வேண்டும் என்பதில் சிரத்தையுடன் செயல்பட்டவர். சமூகத்தின்பால் அவர் கொண்ட அன்பும், தமிழ்ச் சமூகத்திற்காக அவர் ஆற்றிய பணியும் மெச்சத்தக்கது. அவரது அறிவையும் ஆற்றலையும் நீண்டகாலத்திற்கு முழுமையான பெற இயலாமல் போனது என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. அவரது இழப்பு மே 17 இயக்கத்திற்கு மட்டுமல்லாது, தமிழ்ச் சமூகத்திற்கே ஏற்பட்ட இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு மே 17 இயக்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். தோழரது இறுதி வீரவணக்க நிகழ்வு இன்று (20-04-2026 திங்கள்) பிற்பகல் 3 மணியாளவில் சென்னை நெற்குன்றத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் அனைத்து தோழர்களும் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.
தொடர்புக்கு: 8056697247 / 9994512253
ஆங்கிலேயருக்கு எதிராக நேதாஜி-முத்துராமலிங்க தேவர் படை திரட்டிய போது, ஆங்கிலேயர்களுக்கு விசுவாசம் காட்ட, ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்த சாவர்க்கர் நேதாஜிக்கு எதிராக படைதிரட்டினார்.
தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசுப் பணிகளில் மோடி அரசு தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல் இந்தி பேசும் மாநிலத்தவர்களுக்கே பணி வழங்கியதை தட்டிக் கேட்காத பாஜக அடிமை எடப்பாடி அரசு, தமிழ்நாடு அரசுப் பணிகளில் தமிழ் தெரியாதவர்களும் சேரலாம் என்று சட்டமியற்றி தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்தது.