சாதி ஒழிப்பை சாத்தியப் படுத்த வேண்டுமானால், முதலில் சர்க்காரோடு போராட வேண்டும் . ஏனெனில் சாதியின் பெயரால் பட்டியல் தயாரித்து வைத்துக் கொண்டு சாதிவாரியாக சலுகைகள் செய்து வருவதன் மூலம் சாதிகளை வளர்ப்பது சர்க்கார் தான் !!
- பசும்பொன் தேவர் திருமகன்!!
Heartiest congratulations to our Hon. PM Thiru @narendramodi avl on becoming the longest-serving elected Prime Minister in India’s history, completing 4,399 days in office today.
May the almighty bless him with immense strength and good health in continuing his service to our nation.
மண்ணின் மணத்தையும், மக்களின் உணர்வுகளையும் திரையில் செதுக்கிய மகத்தான கலைஞர் பாரதிராஜா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் மேடைமணி சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்.
திராவிட கட்சி செய்வது தேச துரோகம் !! - பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
திலகர் திடலில் கூட்டம் நடைபெறுகிறது என்றால் , அவர் பெயரைச் சொல்ல இவர்களுக்கு கோபம் வருகிறது . "வட இந்தியர்" என்று சொல்லி, அவர் பெயரைப் போடாமல் "சந்தை திடலில் நடை பெறுகிறது "என்று போடுகிறார்கள் .
ஜின்னா எந்த வகையில் வட இந்தியர் இல்லை; எந்த வகையில் ராபின்சன் என்ற வெள்ளைக்காரன் உங்களுக்கு வேண்டியவன். திலகர் பெயர் மாத்திரம் உங்களுக்கு கசப்பாக இருப்பானேன் ? இது இந்த நாட்டு அரசியலுக்கு விரோதமாக நீங்கள் செய்யும் தேச துரோகம் அல்லவா ?
#Medaimani
தமிழ் வைத்து அரசியல் செய்யும் கூட்டம் !!
தமிழ் என்பதன் பெயராலும், தமிழ் உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்கிற பெயராலும், தமிழன் நாகரீகத்தை கெடுக்கக்கூடிய போராட்டங்களை நடத்துகிறது ஒரு கூட்டம் . நிலைமை பாழாகி இருக்கிற காலம் இது . சுயநலத்தால் வாழ நினைக்கிறவர்கள் மக்களை மோசம் செய்கிறார்கள் !!
- பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
#Medaimani
தேர்தல் திருவிழா - தேவர் அறிவுரை 4
பல சங்கடங்களைச் சமாளித்து, கடமையைக் கைவிடாத வீரப் பரம்பரைக்கு வெற்றிவாகை விரைவில் வரும் - ஆண்டவன் கெட்டவர்களை நல்லவர்களாக்கி எல்லோரையும் வாழவைப்பான் !
#Medaimani
தேர்தல் திருவிழா - தேவர் அறிவுரை - 3
வோட்டுப் போடுகிற வகையில் மக்கள் எதையும் எதிர்பார்க்காதீர்கள். அது மகாபாவம் ! ஒரு கிராமத்தில் திருவிழா என்றால், இரண்டு ரூபாய் எடுத்துக்கொண்டு போய் பார்க்கிறீர்கள் . ஜல்லிக்கட்டு என்றால் 4 ரூபாய் எடுத்துப் போய் வேடிக்கை பார்த்து வருகிறீர்கள் . சினிமாவுக்கு 5 ரூபாய் செலவிட்டு போய் பார்த்து வருகிறீர்கள் . ஆனால் தேர்தலில் வோட்டுப் போடுவதற்கு மட்டும் யாராவது பணம் தருவார்களா என்று எதிர்பார்க்கலாமா ?
உங்கள் தலைவிதியை 5 வருடங்களுக்கு ஒப்புவிக்கும் ஒரு கடமையல்லவா, ஓட்டுப்போடுவது !!
#Medaimani
தேர்தல் திருவிழா - தேவர் அறிவுரைகள் - 2
காசுக்காக காத்திராமல் நமது சொந்த தேசியத் திருவிழாவாக நினைத்து கொண்டு அவரவர் வசதி தூரத்துக்கு தக்கவாறு சொந்த பணத்திலிருந்து இரண்டோ , மூன்றோ எடுத்துக் போய் செலவிட்டு வோட்டுப் போடுங்கள். அதுதான் நல்ல மக்களுக்கு அடையாளம் !!
#Medaimani
தேர்தல் திருவிழா - தேவர் அறிவுரைகள் :
ஏழைகள் வயிறார உண்டும் அளவிற்கு விலைவாசிகளை கட்டுப்படுத்தி வைத்துள்ள நாட்டில்தான் சமூகம் நிலைக்கும் . இங்கு ஏழைகளை வறுமையின் வாய்ப்படுத்தி, அவர்கள் ஓட்டுகளை தமக்குப் பயன்படுத்தும் வேலைகள் தான் வெற்றிகரமாக நடக்கின்றன !!
#Medaimani
அரசியலை பற்றி தேவர் கூறியது !!
"பலர் வாழ சிலர் தியாகம் செய்து கஷ்டப்படுவது" புனிதமான அரசியல், இந்த அடிப்படையில் தான் நாம் கடந்த காலத்தில் பாடுபட்டோம். ஆனால் அந்த புனித அரசியலை அப்படியே மாற்றி, சிலர் வாழ, பலர் மாய வேண்டும் என்ற அநாகரிக்க கதிக்கு கொண்டு போய் விட்டார்கள் !!
காமராஜர் முதல்வர் ஆன பிறகு, அவர் போட்டியிட்ட இடைத்தேர்தலில் நடந்தவை !!
வோட்டுக்கு பணம் , பணக்காரர்களின் அட்டூழியம் , எதிர்க்கட்சி முடக்கம் போன்ற பல நடந்த தேர்தல் !!
இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்
தலைவர்களில் ஒருவராகிய திரு. K.R.
சுந்தரம் Ex. MLA (குடியாத்தம்) அவர்களிடம்
மேடைமணி ஆசிரியர் எடுத்திட்ட பேட்டி!!
1952 பொதுத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் A.J. அருணாசல
முதலியார் வெற்றி பெற்றார். அவர் நூல் வியாபாரி. கம்யூனிஸ்ட்
சார்பில் Dr. G. கண்ணபிரான் போட்டியிட்டார். அதில்
காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அவரது வெற்றியை ஆட்சேபித்த
கேஸ் போட்டோம். காரணம், அவர் அரசாங்க நூல் வியாபாரி.
கேஸில் எங்களுக்கு வெற்றி கிடைத்தது. எனவே, 1954-ல்
இடைத்தேர்தல் வந்தது. ராஜாஜி - காமராஜ் பிரச்சனை உள்ள நேரம்
அது. பெரும்பகுதி காமராஜரை ஆதரித்தது. காமராஜ் C.M. ஆன நேரம்.
அப்போது, காமராஜை எதிர்த்து நிற்க திராவிட கட்சிகள்
முன்வரவில்லை. கம்யூனிஸ்டுகள் தான் Contest.
அப்போது சென்னை ராஜஸ்தானி. அப்போதுள்ள
அனைத்து பணக்காரர்களும், மில் முதலாளிகளும்
காமராஜூக்கே சப்போர்ட்! கேரளாவிலிருந்து
மாதவமேனன், ஆந்திராவிலிருந்து N.G. ரெங்கா,
அப்போது அவர் P.S.P. கட்சி. அவர் காமராஜூக்கு
ஆதரவு. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாடார்
கம்யூனிட்டி முதலாளிகள், T.V.S. சிம்சன், கோயமுத்தூர் G.K.
சுந்தரம், பூண்டி வாண்டையார், ஆம்பூர் ஆணைக்கார் சுக்கூர்
பாய், பேரணம்பேட்டு பாய் போன்ற பெரும் பணக்காரர்கள் எல்லாம்
காமராஜூக்கு Full Support. பேரணம்பேட்டு பெரிய பங்களாவில்
தான் காமராஜ் தங்குவார். குடியாத்தத்தில் திருமகள் மில்ஸ் ஓனர்
K.A. சண்முக முதலியார் ஆகிய அனைத்து வசதி படைத்தவர்களும்
அவருக்கு சப்போர்ட். கம்யூனிஸ்ட் கட்சி 1948 முதல் 1951 வரை தடை செய்யப்பட்டது
மிகக் குறைந்த வசதிகளுடன் தான் நாங்கள் போட்டியிட்டோம்.
வால் போஸ்டர்கள் ஒட்டினால், இரவோடு இரவாக கிழித்து
விடுவார்கள். பேனர் கட்டினால், மறுநாள் பேனர் இராது. அந்த
அளவுக்கு ஜனநாயக விரோத போக்கு அன்று இருந்தது. தேர்தல்
Incharge ஆக தமிழ்நாடு கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினரான C.
சுப்பிரமணிய சர்மா இருந்தார். நான் முழுப் பொறுப்போடு வேலை
செய்தேன். அப்பொழுதே எங்களின் தேர்தல் கூட்டத்திற்கு 5000
அல்லது 6000 பேர் வந்தனர். திருவலம் முதல் வாணியம்பாடி
வரை முழு மூச்சாக வேலை செய்தோம். இப்போது அது மூன்று
தொகுதிகளாயிற்று. (பேரணாம் பட்டு, குடியாத்தம், காட்பாடி) என்
தலைமையில் கேரளாவைச் சார்ந்த ரமணி பேசிக் கொண்டிருந்தார்.
காங்கிரஸ்காரர்களின் கார்களை மேடையைச் சுற்றி நான்கு பக்கமும்
நிறுத்தி, மைக்கில் அலறினார்கள். ரமணி பேசியது மக்களுக்கு
அறவே கேட்கவில்லை. திரு. ரமணி பேச்சை நிறுத்திவிட்டு,
10 நிமிடம் கொடுத்து விட்டு பேசாமல் மேடையில் உட்கார்ந்தார்!
‘போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தாவிட்டால், நாங்கள்
அவர்களை அப்புறப்படுத்த நேரிடும்’ - எனக் கூறினர். உடனே
போலீஸார் அவர்களிடம் சென்று பேசி, அவர்களை அந்த இடத்தை
விட்டு வெளியேறச் செய்தனர்.
தொடரும் ....